Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all 1140 articles
Browse latest View live

கிளி - சிறுகதை

$
0
0
கிளி - சிறுகதை




இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட தரை. ஒரு பெரிய ஹோண்டா சிஆர்வி நிற்க ஒரு போர்டிகோ. அதன் தலையில் இரண்டடுக்கு வீடு. இவையெல்லாம் அடைத்த இடம் போக எஞ்சிய இடத்தில் அலங்காரத் தென்னை, ஒரு மாமரம், நிறைய பூச்செடிகள், க்ரோடான்ஸ் என வீட்டம்மாளின் ரசனை தெரிந்தது. தலைக்கு மேல் ஒரு கூண்டில் கிளி ஒன்று கீச் கீச் என்று கத்திக்கொண்டிருந்தது.

கூண்டுக்கு நடுவே மரத்தாலான சிறிய குச்சி ஒன்று திங்க விடப்பட்டிருக்க, அதன் மீது அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது.

வீட்டு காவல்காரனுக்கு ஐம்பது வயது இருக்கலாம். வாசலில் இரண்டு கான்ஸ்டபில்கள் அவனை மடக்கி அமர்த்தியிருக்க அழுதுகொண்டிருந்தான். போர்டிகோ வாசலில் சிமென்ட்டில் சரிவான தளம் சமீபத்தில் போடப்பட்டிருந்தது. அதன் மீது , யாரோ நடந்து சென்ற கால் தடம் கேட்டை நோக்கிய திசையில் தெரிந்தது.

சப் இன்ஸ்பெக்டர் தரணி உடன் வர, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், போர்டிகோ தாண்டி, வீட்டினுள் நுழைந்து, மாடிப்படியேறி முதல் மாடி சென்றார். உள்ளே ஒரு படுக்கை அறையில் ….ச்சு..

அந்த  வட்ட முகம், எந்த ஆணையும் அத்துமீற வைக்கும் அழகான வழவழ பிங்க் நிற உதடுகள், கருமையான நீண்ட தலை மயிர், பக்கவாட்டில் சரிய முயன்ற மார்புச் செழுமை என இத்தனை அழகையும் கொண்ட அந்த பதினேழு வயது இளம் பெண், அணிந்திருந்த நைட்டி  இடுப்பு வரை உயர்த்தப்பட்டு, தொடைகளின் இடையே……




ஒரு அழகான பெண்ணை எத்தனையோ விதமாக பார்க்க ஆண் மனம் ஏங்கித் தவிக்கலாம். பூமியின் எட்டாவது அதிசயத்தை, அவளது வனப்பை இப்படி ஒரு அவல நிலையில் பார்க்க கிடைத்த தருணத்தை என்னவென்று சொல்வதென்று அறியாதவராய் இன்ஸ்பெக்டர் ரஞ்சன், படுக்கையில் கிடந்த அவளது போர்வையை அவள் மேல் போர்த்தினார். அந்த துர்பாக்கிய நிலையிலும், அவலத்திலும் அவள் உடலின் வனப்பு, அவரின் மூளையில் ஒரு வக்கிர ஓநாயை விழித்தெழ வைத்தது.

எஞ்சிய வீட்டை நிறுத்தி நிதானமாக ஆராய்ந்தபடியே, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், பிற்பாடு, படியிறஙகி தரை தளம் வர, பின்னாலேயே தொடர்ந்தார் சப் இன்ஸ்பெக்டர் தரணி.

கேட் அருகே வந்த ரஞ்சனுக்கு மாடியில் பார்த்த பூலோக தேவதையின் உடல் வனப்பு கண்களை உறுத்தியது. கண்களை அகல விரித்து, மூடித்திறக்க, அந்த கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சார், இந்த சிமென்ட்ல கால் தடம் இருக்கு தான்.. வாசல் கேட்டை பாத்தாமாதிரி.. யாரோ நடந்து வெளியில போயிருக்காங்க.. ‘ என்றார் தரணி.

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘கால் தடத்தைப் பாக்கும்போது ஆம்பளைதான் சார்.. இளம் வயசா இருக்கலாம்.. நடந்து போய் ஒரு எட்டு மணி நேரம் இருக்கலாம் சார்..நேத்து அந்த வாட்ச்மேன் ரங்கன்கிட்ட‌ விசாரிச்சேன் சார்.. அவன் தான் சொன்னான், சிமென்ட் வேலை நேத்து பாத்திருக்காங்க.. ‘

‘குட் காட்ச் தரணி.. சீன் ஆஃப் க்ரைம்ல எவிடென்ஸா இதைக் குறிச்சி வச்சிக்கோங்க.. நம்ம இன்வெஸ்டிகேஷனுக்கு தேவைப்படும்’ என்றார் ரஞ்சன்.

இருவரும் காவல்காரன் ரங்கனை நெருங்கினார்கள். ரங்கன், இப்போது தலையில் கைவைத்தபடி சோகமாய் அமர்ந்திருந்தான். சற்று தள்ளி கைகளைப் பிசைந்தபடி ஒரு பெண் நின்றிருந்தாள்.

‘என்னய்யா, எத்தனை வருஷமா இங்க வாட்ச்மேனா இருக்க?’ அதட்டலாக கேட்டார் ரஞ்சன்.

‘பத்து வருஷமா சார்’

‘குடும்பம் இருக்கா?’

‘ஒரே ஒரு பொண்ணு சார். பேரு ரம்யா. பொஞ்சாதி செத்துப்போச்சி. இந்த வீட்டுக்கு வேலைக்கு வரதுக்கு முந்தியே சார்’

‘சார், அந்தப் பொண்ணு ரம்யாவையும் சொல்லி வரவச்சிட்டோம்.. அதோ நிக்கிது சார்’ என்று சற்று தள்ளி நின்றிருந்த பெண்ணைக் காட்டி காதருகே கிசுகிசுத்தார் தரணி. அந்தப் பெண் விசித்து அழுது கொண்டிருந்தது.

‘தரணி, அந்த பொண்ணை நீங்க விசாரிங்க.. ‘

ரஞ்சன் ஆணையிட, தரணி, அந்தப் பெண் ரம்யாவை நோக்கிச் செல்ல,

‘ நேத்து இங்க என்ன நடந்தது?’ என்று தன் கேள்வியை ரங்கனிடம் வீசினார் ரஞ்சன்.

‘சார், எங்க ஓனர் ப்ரகாஷ் திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்கு பொஞ்சாதியோட போயிருக்காரு சார். அவரோட ஒரே பொண்ணு அஞ்சலிக்கு இஸ்கூல்ல எக்ஸாம் சார்..அதுனால அது போவலை சார்.. என் அக்கா பையன் குமாரு கார்பென்டர் சார். எங்க ஓனர், கேட்டாண்ட சிமென்ட் தளம் போட குமாராண்ட‌ சொல்லிருந்தாரு சார். அவனும் நேத்து வந்தான். வேலையை எட்டு மணி கிட்ட முடிச்சிட்டு அவனும் போயிட்டான் சார்… ஆனா அப்பால தான் சார் நான் கவின்ச்சேன்.. இருட்டுல சிமென்ட்ல நடந்து போயிருக்குறான்.. வீட்டுக்கு வந்தானான்னு என் பொண்ணுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன் சார். வரலைன்னு சொன்னா.. அப்பால நான் அவனுக்கு போன் போட்டு சொன்னேன் சார்.. ராவைக்கு சரி பண்ண முடியாது.. அதுனால காலைல வந்து மறுக்கா போடறேன்னு சொன்னான் சார்..’

‘ நீ அவனுக்கு கால் பண்ணும்போது நேரம் என்ன?’

‘எட்டு மணி இருக்கும் சார்’

‘சரி மேல சொல்லு’

‘அதுக்கப்புறம், அஞ்சலியம்மா தூங்கிட்டாங்களான்னு பாத்துட்டு கீழ கதவை சாத்திட்டு நான் இங்க கேட்ல வந்து உக்காந்துட்டேன் சார்..’

‘அப்புறம் அந்த பொண்ணு இறந்துட்டான்னு உனக்கு எப்படி தெரியும்?’

‘சார், காலைல சிமென்ட் வேலை பாக்க குமாரு வந்தப்போ, சிமென்ட் மிக்ஸ் பண்ண தண்ணி கேட்டான் சார்.. மோட்டார் சுவிட்ச்சு மாடில இருக்கு சார்.. அதை ஆன் பண்ண் மாடிக்கு போனப்போ தான் சார் பாத்தேன். கோயில் சிலை மாதிரி இருக்கும் சார் அந்த பொண்ணு.. அத்தை அந்த கோலத்துல……’

ரங்கன் மீண்டும் விசித்து அழுதான்.

அப்போது தரணி அருகே வர, தரணியும், ரஞ்சனும் தனியே ஒதுங்கினார்கள்.

‘சார், அந்த பொண்ணு ரம்யாகிட்ட பேசினேன் சார். எட்டு மணிக்கு ரங்கன், குமாரு வீட்டுக்கு வந்தானான்னு கேட்டு ஃபோன் பண்ணிருக்கான்.. அப்போ குமாரு சிமென்ட்ல கால் வச்சி கலைச்சிட்டதா சொல்லிருக்கான் சார்’

‘ஆமா, ரங்கனும் அதே தான் சொன்னான்’

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா…’ என்றுவிட்டு நிறுத்திய தரணியை,

‘சொல்லுங்க தரணி’ என்று ரஞ்சன் மேற்கொண்டு பேசப் பணிக்க,

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா, அந்தப் பொண்ணை அந்த ரங்கன் தான் கொன்னிருக்கணும் சார்’

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘சார், அவனுக்கு பொண்டாட்டி பத்து வருஷம் முந்தியே செத்துப்போச்சி.. அப்படீன்னா, அவனுக்கு அப்போ வயசு நாப்பது இருக்கணும். அந்தப் பொண்ணு தனியா இருந்திருக்கு. சோ, அவன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி கடைசியில அது கொலையாகியிருக்கணும் சார்’

‘மோட்டீவ் ஓகே.. ஆனா, அதுக்காக எவிடென்ஸ் இல்லாம அந்தப் பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்கான்னு சொல்ல முடியாது தரணி.. ஃபாரென்ஸிக் ரிப்போர்ட் வரட்டும்..அந்தப் பொண்ணோட பாடியை அடாப்ஸிக்கு அனுப்பியாச்சா?’

‘ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும், நீங்க பாத்ததுமே அனுப்பியாச்சு சார்’

‘ஓகே.. அப்படீன்னா ஃபாரென்ஸிக் ரிப்போர்ட்ல தான் க்ளியர் பிக்ச்சர் கிடைக்கும்’

‘ஆமா சார்.. கொடுத்து வச்சவன் அந்த ஃபாரென்ஸிக் டாக்டர் சார்.. அந்த பொண்ணு என்னா ஒடம்பு சார் அதுக்கு, சிலுக்குக்கு கூட அப்படி ஒரு உடம்பு இருக்கலை சார்…..’

‘தரணி.. அந்த பொண்ணு பாவம் பதினேழு வயசுல சாவு.. எத்தனை கனவு கண்டிருக்கும் அது.. காதல் கூட பரிச்சயமாச்சோ இல்லையோ..பாவம்..செத்துப் போன பொண்ணை பத்தி இப்படி பேசுறது….’

‘சார், நீங்க வேற.. பாவம் புண்ணியமெல்லாம் இந்தக் காலத்துல ஏது சார்.. போன வாரம் அந்த கற்பழிப்பு கேஸ் பாத்தோமே.. பதினைஞ்சு வயசு தான்.. கொலை பண்ணினவன் பலவந்தப்படுத்தினப்போ அவ இணங்கலைன்னு கொன்னுட்டான்..  அடாப்ஸில அவளுக்கு பால்வினை நோய் கன்ஃபர்ம் ஆயிருக்கு.. நம்ம நல்ல மனசுக்கு நாம பாவம் பாக்குறோம்தான் சார்.. ஆனா, உண்மை இதுதான்’ என்றார் தரணி.

ரஞ்சனுக்கு யோசனையாக இருந்தது.

தரணி சொல்வது உண்மை தான்.. அந்த பதினைந்து வயதுப் பெண் மூர்க்கமாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்திருந்தாள்.. தாக்கியவன் வன்புணர்ச்சி செய்ய முயன்று, அதற்கு அந்தப் பெண் இணங்காததால், ஆத்திரத்தில் உயிர் போகும் அளவு தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்தான். அவளது அடாப்ஸி ரிப்போர்டில், அவளுக்கு பால்வினை நோய் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு பால்வினை நோய் எதுவும் இருக்கவில்லை. அவன் அவளை கற்பழிக்கவும் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு பால்வினை நோய் இருந்திருக்கிறது.. பதினைந்து வயதில்.. அப்படியானால் அவள் வேறு ஒரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.. அவனிடமிருந்து அவளுக்கு பால்வினை நோய் தொற்றியிருக்க வேண்டும்..

பால்வினை நோய் தொற்று இருக்கிறதெனில் அவன் எத்தனைக்கு பெண் பித்தனாக இருந்திருக்க வேண்டும்? அப்படி ஒரு ஆணிடம் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு என்ன விதமான பழக்கம் இருக்க முடியும்? அந்த பெண்ணின் பெற்றோர்களின் அழுகுரலுக்கு செவி சாய்த்து,  பதினைந்து வயதுப்பெண்ணின் மானம் போய் விடக்கூடாது என்ற ஸ்திதியில், அவளது குடும்ப மானம் கப்பலேறிவிடக்கூடாதென்கிற ஸ்திதியில் அவளுக்கு பால்வினை நோய் இருந்த விவகாரம் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கொலை விவகாரம் வெளியே வந்த போது, மீடியாவால் மிகவும் உரத்து தமிழகமெங்கும் பேசப்பட்டது. ஃபாதர் டிவி, கலைஞி டிவி, மாயா டிவி என ஒரு டிவி விடாமல் ஒரு விவாத மேடை விடாமல் இந்த விவகாரம் தமிழகமெங்கும் உரத்து பேசப்பட்டது.

ஒரு பெண், அதுவும் இளம் பெண் கூக்குரலிட்டால் என்ன ஏதென்று கூட அறியாமல், பாய்ந்து வந்துவிடுகிற சமூகம் தானே இது. உண்மையில், மூர்க்கமாகத் தாக்கியவன் ஒரு வகையில் தப்பித்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். அவளைப் புணர்ந்திருந்தால் அவனுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். ஒரு வேளை அந்தப் பெண் தனக்கு பால்வினை நோய் இருப்பதை அறிந்தே இருந்திருக்கலாம். பதினெட்டு வயதடைய, தனக்கு பால்வினை நோய் தந்தவனையே மணக்க முடிவு செய்திருக்கலாம். அல்லது மானத்துக்கு பயந்து தற்கொலை செய்ய முனைந்திருக்கலாம். மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை. எதையும் அறியாமல் தானாக வந்து தலையை கொடுத்து கொலைப்பழியில் மாட்டிக் கொண்டு விட்டான்.  அந்தப் பெண் வேண்டாம் என்று சொன்னபோதே விலகிப்போயிருந்தால், கொலைப்பழி இல்லை. வேறொரு நல்ல பெண்ணாகப் பார்த்து காதலித்து கரம் பிடித்து வாழ்ந்திருக்கலாம். இனி ஆயுள் முழுவதும் சிறை.

இவர்களைப் பொருத்த வரை , ‘பெண்’ என்றாலே பரிசுத்தம். எல்லாப்பெண்ணும் பரிசுத்தம். அது கூட, பெண்ணின் வகையான பரிசுத்தம் இல்லை. ஆணின் வகையான பரிசுத்தம். அப்பழுக்கில்லை. இந்த நினைப்பு அந்த பெண்ணுக்கான சுதந்திரத்தை தடை செய்வதையே புரிந்துகொள்ளாத மூர்க்கமான நம்பிக்கை. முட்டாள்தனமான நம்பிக்கை. ஒரு பெண், தன்னிடம் அண்டுபவனை ‘வேண்டாம்’ என்று சொல்கிறாளானால், தான், அவனுக்கு பொருத்தமான இணை இல்லை என்கிற நினைப்பாகக் கூட இருக்கலாமென்கிற எளிய சிந்தனை இல்லை. பெண்ணை பெண்ணாகப் பார்த்தால் தானே, இப்படியெல்லாம் சிந்தனை கொள்ள. பெண்ணை பெண்ணாக பார்க்க இயலாத மனப்போக்கின் விளைவு.

ஃபாரென்சிக் ரிப்போர்ட்டுடன் தரணி ஓடி வர, சிந்தனை கலைந்தார் ரஞ்சன்.

‘ நான் சொன்னேன்ல.. அந்தப் பொண்ணு கொலை செய்யப்படுறதுக்கு முன்னாடி கொலையாளி அவளை கற்பழிச்சிருக்கான் சார்..’

‘ஓ..ஓகே.. ஆனா, இப்பவும் கற்பழிச்சது அந்த ரங்கன் தான்னு சொல்லணும்னா, டி என் ஏ டெஸ்ட் எடுக்கணுமே?’

‘ஒரு சந்தேகத்துல அதையும் செய்யச் சொல்லிருந்தேன் சார்.. அதுகூட ரெடி.. அந்த பொண்ணு உடம்புல இருந்த செமன்ல இருக்குற டி என் ஏ வும், ரங்கனுடையது நூறு பர்சென்ட் ஒத்துப்போகுது சார்’

‘ஓ..அப்போ என்ன சொல்ல வரீங்க தரணி?’

‘சார், ரொம்ப சிம்பிள் சார்.. நேத்து வேலைக்கு வந்தவன் 8 மணிக்கு வெளியில போயிட்டான்.. அதுக்கு எவிடென்ஸ், ரங்கன் பொண்ணும், அந்த சிமென்ட் தளமும் தான்..  அதுக்கப்புறம் இந்த வீட்டுல இருந்தது ரங்கனும், அந்தப் பொண்ணும் தான்…  அந்தப் பொண்ணு தனியா இருக்கிறதை பயன்படுத்தி ரங்கன் அவளை கெடுத்துட்டான்.. வெளியில சொல்லிடுவாளோன்னு கழுத்த நெரிச்சு கொலை பண்ணியிருக்கான் சார்..அதுக்கு ப்ரூஃப், அந்த பொண்ணோட பெண்ணுருப்புல அந்த ரங்கனோட விந்தணுதான்…’

தரணியிடமிருந்து ஃபாரென்சிக் மற்றும் அடாப்ஸி ரிப்போர்ட் வாங்கி ஆழமாக சற்று நேரம் பார்த்துவிட்டு, ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சரி.. நீங்க ரிப்போர்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா ஃபைல் பண்ணிட்டு இருங்க. நான் இதோ வந்திடறேன்’ என்றுவிட்டு ரிப்போர்ட்களுடன் அகண்டார் ரஞ்சன்.

ரஞ்சன் நேராக காவலாளி ரங்கனின் வீட்டை விசாரித்து அடைந்தார். அங்கே ரம்யா இருந்தாள். வீட்டை கவனமாக நோட்டமிட்டவருக்கு ஹாலில் ஒரு மூலையில் ஒரு மூட்டை கண்ணில் பட்டது.

‘என்ன இது?’

‘பழைய துணிங்க. லாண்டரிக்கு போடுறதுக்கு.. குமாரு வந்து எடுத்துட்டு போவான்’

‘குமாரா?’

‘ஆமாங்க.. அவன் லாண்டரியும் பண்ணுவான். அவன் தான் எங்க வீட்டுக்கு லாண்டரி’ என்றாள் ரம்யா.

‘அவன் வீடு எங்க?’

‘பக்கத்துலதான்’

‘காட்டறியா?’

ரம்யா வழிகாட்ட, அருகாமையில் இருந்த குமாரின் வீட்டை அடைந்த ரஞ்சன் அங்கே மேஜையில் இருந்த சில மெடிக்கல் பில்களை எடுத்து வைத்துக்கொண்டார்.

குமாரின் விட்டை விட்டு வெளியேறி, அந்த மெடிக்கல் பில்லுக்கான மருந்துக்கடையில் விசாரித்துவிட்டு கொலை நடந்த வசந்த விகாருக்கு  வந்தடைந்த ரஞ்சன், தரணியை அழைக்க, தரணி விரைப்பாய் வந்து நின்றார்.

‘தரணி, அந்த குமாரை கஸ்டடியில எடுத்தாச்சா?

‘எடுத்தாச்சு சார்’

ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அதன் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

மாலை நான்கு மணி அளவில் கையில் ரிப்போர்டுடன் வந்தார் தரணி. ரஞ்சன், ரிப்போர்டை வாங்கிப் பார்த்துவிட்டு,

‘தரணி, நேத்து எட்டு மணிக்கு அப்புறம் இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?’ என்றார்.

‘ரெண்டு பேர் சார். ஒண்ணு அந்த ரங்கன், இன்னொன்னு அந்தப் பொண்ணு அஞ்சலி’

‘எப்படி சொல்றீங்க?’

‘ஃபுட் மார்க்ஸ் சார். சரியா கேட்டை பாத்த திக்குல இருக்கு. எட்டு மணிக்கு  புதுசா போட்ட சிமென்ட் தளத்து மேல நடந்து போயிருக்கான். கால் தடம் அவனோடதுதான். ஃபாரென்சிக்ல ஃப்ரூஃப் ஆயிடிச்சு’

‘ஒரு சமயம் அவன் பின்பக்கமா நடந்திருந்தா?’

சற்று நேர யோசனைக்கு பிறகு,

‘அவன் வீட்டுக்குள்ள போயிருக்கலாம் சார்’

‘எக்ஸாக்ட்லி.. குமார் வெளியில போகலை.. வீட்டுக்குள்ளதான் போயிருக்கான்.. ராத்திரி முழுக்க இந்த வீட்டுக்குள்ள தான் இருந்திருக்கான்.. அவனுக்கு அஞ்சலி மேல ஒரு கண்ணு.. அவளை அனுபவிக்க திட்டம் போட்டிருக்கான்.. இந்த வீட்டுக்கு சிமென்ட் வேலைக்கு போகுறதுக்கு முந்தி மருந்துக்கடையில ஆணுறை வாங்கியிருக்கான். அவனுக்கு கல்யாணம் ஆகலை.  காலைல குமார் தான் முதல்ல வந்திருக்கான்..’

‘ஓகே சார்.. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனுடைய செமன் ட்ரேசஸ் இருக்கிறதா நிரூபிக்கப்பட்டிருக்கே சார்..அது எப்படி?’

‘அதை அவனே சொல்வான்.. இழுத்துட்டு வாங்க அவனை’ என்றார் ரஞ்சன்.

சப் இன்ஸ்பெக்டர் தரணி பணிக்க, இரண்டு கான்ஸ்டபுல்கள் குமாரை இழுத்து  வந்தார்கள். ரஞ்சன் கையிலிருந்த லத்தியை எடுத்து,  குமாரின் நடுவயிற்றில் வேகமாக குத்த, ‘அம்மாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்ற கூவலுடன் அலறி விழுந்தான் குமார்.

‘சொல்றா. ராத்திரி ஏன் இந்த வீட்டுக்குள்ள பதுங்கின? அவளை கற்பழிச்சது நீ. கொன்னது நீ.  ஆனா, பழியை ரொம்ப புத்திசாலித்தனமா வாட்ச்மேன் ரங்கன் மேல போட்டுட்ட. அதுக்கு ரங்கன் வீட்டுல லாண்டரிக்கு துணி எடுத்தது உனக்கு வசதியாப் போயிடிச்சு.. அது எப்படின்னு  என் கொல்லீக் தரணிக்கு புரியிறா மாதிரி இப்ப நீ சொல்லப்போற.. இல்லைன்னா இதே லத்தி உன் வாய் வழியா குடல் வரைக்கும் போகும்’ என்றார் ரஞ்சன்.

அடிவயிற்றில் விழுந்த அடியால், மூச்சுத் திணறிய குமார் மெல்ல நிதானித்து,

‘அஞ்சலி மேல எனக்கு ஒரு கண்ணு சார். ரொம்ப நாளா நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். அன்னிக்கு சிமென்ட் வேலை பாக்க என்னை கூப்பிட்டாங்க.. வீட்டுல ஓனர் இல்லை. அஞ்சலி தனியா இருந்தா. அதுதான் சமயம்ன்னு நான் மருத்துக்கடையில ஆணுறை வாங்கிக்கினேன். பத்து வருஷமா பொஞ்சாதி இல்லாம இருந்தாரு ரங்கன் சித்தப்பா. அவரு ராத்திரியில லுங்கியில கஞ்சி விடுவாறுன்னு தெரியும்.. லாண்டரிக்கு எடுத்தப்போ தண்ணி ஊத்தி, அவரோட விந்துவை சேகரிச்சேன்.. அதை அப்படியே ஒரு ஆணுறையோட மேல் பாகத்துல தடவிக்கிட்டேன்… அன்னிக்கு நான் வெளியே போயிட்டேன்னு எவிடென்ஸ் உருவாக்க, சிமென்ட் தளத்துல நானா பின் பக்கமா நடந்து வீட்டுக்குள்ளாற போய் பதுங்கிட்டேன்.. நடு ராத்திரி எந்திரிச்சு, அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அவளை கத்தியை கழுத்துல வச்சி ரேப் பண்ணினேன். அப்புறம் எங்க உண்மையை சொல்லிடுவாளோன்னு கழுத்தை நெரிச்சு கொலை பண்ணினேன். அப்புறம் காலைல சிமென்ட் வேலை பாக்க வரா மாதிரி வந்துட்டேன்’ என்றான் குமார்.

‘வாவ்.. ரஞ்சன் சார்.. சூப்பர் ப்ரேக்த்ரூ சார்..எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?’

‘அந்தக் கிளிதான் காட்டிக்கொடுத்தது. குமார் மேல சந்தேகம் வந்தது. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனோட செமன் எப்படின்னு குழப்பம் இருந்தது? குமாரோட வீட்டுல நோண்டினப்போ, கிடைச்ச மெடிக்கல் பில்ஸ வச்சு மெடிக்கல் ஷாப்ல விசாரிச்சப்போ, அவன் ஆணுறையும் வாங்கினதா சொன்னாங்க. ஒரு பேச்சுக்கு குமார் அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அஞ்சலியை பலவந்தப்படுத்தினான்னு வச்சிக்கிட்டா, அப்போ செமன் ட்ரேஸ் ரங்கனோட எப்படி மேட்ச் ஆகுதுன்னு ஒரு கேள்வி வருது. குமார்தான் ரங்கன் வீட்டுல சலவைக்கு துணி எடுக்குறான்னு விசாரணையில‌ தெரிஞ்சது..சோ,  ஒரு ஆணுறையோட மேல்பக்கத்தை ஒருத்தர் ஏன் இப்படி பயன்படுத்தியிருக்கூடாதுன்னு யோசிச்சேன்.. குமார் மாட்டிக்கிட்டான்’ என்றார் ரஞ்சன்.

– ராம்பிரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=28109)

குறும்படக் கதை - 1

$
0
0


குறும்பட இயக்குனரும், நண்பருமான Arul Siva ஒரு நாள் 'கிளி துப்பு துலக்க உதவுவது போல் ஒரு துப்பறியும் கதை சொல்ல முடியுமா? குறும்படமாக எடுக்கலாமென்று இருக்கிறேன்'என்றார். அவருக்கென எழுதியது தான் இந்தக் கதை.


இந்தக் கதையின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் (Climax Twist), எங்கேனும் உண்மையிலேயே நடக்க, இனி வரும் காலங்களில் மிகப்பல சாத்தியக்கூறுகள் (Probability) உள்ளது. அல்லது எனக்கே தெரியாமல் ஏதேனும் திரைப்படத்தில் கூட இடம்பெறலாம்.

ஆனால் இந்தக் கதையால் நான் சமூகத்துக்கு சொல்ல வரும் விஷயம் என்னவெனில்,

1. செமன் ட்ரேசஸ் (Semen Traces) இருப்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. ஒருவரை மாட்ட வைக்க இக்கதையில் வருவது போல செயற்கையாகக் கூட ஆதாரம் (Evidence) உருவாக்க முடியும்.

2. அடாப்சி (Atopsy) செய்யும் மருத்துவர்கள், செமன் ட்ரேசஸைக் (Semen Traces) கொண்டு தாங்களாகவே இன்னார்தான் குற்றவாளி என்று முடிவு செய்ய இயலாது. நான் எப்போதும் சொல்வது போல், தவறான மதிப்பீடுகள் குற்றவாளியை, நிரபராதியாகவும், நிரபராதியை குற்றவாளியாகவும் காட்டும் திறன் பெற்றவை.

3. செமன் ட்ரேசஸ் (Semen Traces) மேட்ச் ஆகிவிட்டது என்றுவிட்டாலே, வழக்கறிஞர்கள் 'தோற்றுவிட்டோம்'என்று தலை கவிழ வேண்டியதில்லை. அடுத்த கட்டமாக, மீண்டும் அப்பீல் செய்யலாம். ஆதாரம் செயற்கையாக எப்படி உருவாக்கப்பட்டது என்கிற கோணத்தில் வழக்கை தொடரலாம்.

2015ம் ஆண்டு எப்படி இருந்தது?

$
0
0
2015ம் ஆண்டு எப்படி இருந்தது?



அமேரிக்காவின் Atlanta வில் வேலை பார்க்கத்துவங்கி முழுதாக ஒரு வருடம் 2015 ம் வருடத்தில் தான் முடிந்தது. சரியாக சொல்லவேண்டுமானால், 2014 செப்டம்பர் 3ம் திகதியே அமேரிக்கா வந்தாகிவிட்டது. Atlanta நான் இருந்த நிலையிலேயே என்னை அப்படியே ஒரு குழந்தைபோல சுவீகரித்துக்கொண்டது எனலாம். அழகான அமைதியான நகரம். Florida, Colorado, Texas என்று சுற்றித்திரிந்திருக்கிறேன். முக்கியமாக Florida இருமுறை சென்று வந்திருக்கிறேன். முதல் முறை Panama Beach க்கும், இரண்டாவது முறையாக சென்ற வாரத்தில் Universal Studios, Orlando எனப்படும் உலகின் நம்பர் 1. தீம் பார்க்கிற்கும். அதுபற்றி வேறொரு கட்டுரையில் எழுத மிகப்பல சமாச்சாரங்கள் இருக்கின்றன.

2015ல் தான் கல்கியில் (24.05.2015) என் முதல் கவிதை வெளியானது. அதற்கு கல்கி ஆசிரியர் குழுவுக்கும், தோழர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனந்த விகடனில் (14.10.2015) எனது கவிதை 2015ல் வெளியானது இதுவே முதல் முறை. அதற்கு ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும், தோழர் ராகோத்தமன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உடன் பிறந்த அண்ணனின் திருமணத்திற்கு வர முடியாமல் போனதுவும், வரலாறு காணாத வெள்ளத்தை அருகேயிருந்து பார்ப்பதற்கும், வெள்ள நிவாரண பணிகளில் உளமார ஈடுபடும் வாய்ப்பை தவற விட்டதும் 2015 ம் வருடத்தின் இழப்புகளாக தெரிகின்றன.


1. எல்லா ஆண்டுகளையும் போல, இந்த ஆண்டும் எனது absent minded தனங்களை ஒரு மெல்லிய புன்னகையுடன் கடந்து போகும், எனது நண்பர்களுக்கு எனது நன்றிகளும், இனிமேலும் பொறுத்துக்கொள்ள விண்ணப்பமும்.

2. சிறுவயதில் தசைகள் முறுக்கேறுகையில், ஒரு heroயிச மனநிலை வரும். அது ஒரு zeroயிஸ மனநிலை என்பதை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கற்றுத்தரும் இந்த இலக்கியத்துக்கு எனது நன்றிகள்.

3. ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், அந்த ஆண்டில் நிகழ்ந்தவைகளை சீர்தூக்கிப் பார்க்கையில் எனக்கு தோன்றுவது 'எனக்கு ஒன்றும் தெரியவில்லை'எனபதே. 2016 ம் ஆண்டும் அதே தான் நிகழ இருக்கிறது என்பதை அறிந்தே துவங்க இருக்கிறேன் என்பதுவும் ஒப்புக்கொள்ள சலிக்காத உண்மை தான்.

4. Being very Expressive என்பது எனது ப்ளஸ் அல்ல. அது எனது மைனஸ்களுள் ஒன்று என்பதை இந்த 2015 ஆண்டும் நிரூபித்திருக்கிறது.

5. 'உன் கோபம் நியாயம் தான்.. எனக்குதான் முதல்ல புரியல்லை.. சாரி'
இந்த வாக்கியத்தை 2014ல் என்னிடம் சொன்னவர்களைவிட, 2015ல் என்னிடம் சொன்னவர்களின் எண்ணிக்கை லேசாக குறைந்திருக்கிறது.

6. யாரோ தொடர்ந்து முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் யார் என்று கண்டறிய நேரத்தை செலவிட்டு அதனால்,  தொடர்ந்து முன்னோக்கி நகர்வதில் சுணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாதென, முதுகில் குத்துபவர்களை சட்டை செய்யாமல் பயணிப்பதால், அவர்கள் உருவாக்கும் வசவு வார்த்தைகளுக்கு (Pre-Conceived Idea), அசாதாரணமான சில Productivity களை மட்டுமே இந்த ஆண்டும் பதிலாக தந்திருக்கிறேன். Productivity யை உற்று கவனிப்பவர்களுக்கு, என் innocence புரியும் என்கிற நம்பிக்கையில். வசவுகளை (Pre-Conceived Idea)கவனித்து விலகிச் செல்பவர்களின் நட்புகள் இழப்பாகவும், Productivity களை கவனித்து என்னை அண்டுபவர்களை மதிப்பாகவும் எடுத்துக்கொள்வது இந்த 2015ம் ஆண்டிலும் தொடர்ந்து நடந்திருக்கிறது.

6.a. வசவு வார்த்தைகள் (Pre-Conceived Idea) சொன்னவர்கள் எல்லோரிடமும் சில குறிப்பிட்ட பொதுவான‌ குணாதிசயங்கள் இந்த 2015ம் ஆண்டும் கவனிக்க கிடைத்தது.

அ. அவர்கள் யாருமே புத்தக வாசிப்பாளர்கள் இல்லை.
ஆ. மற்றவர்களது வசவு வார்த்தைகளின் (Pre-Conceived Idea) முகவரிகளிலேயே என்னை அணுகியிருக்கிறார்கள்.
இ. வெற்றியாளர்களாக அவர்கள் யாரும் இல்லை.
ஈ. செக்கு மாடு போல இயங்கும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.
உ. குறை சொல்லியே பிழைப்பவரகளாக இருக்கிறார்கள்
ஊ. குழு மனப்பான்மையாளர்களாக இருக்கிறார்கள்.
எ. வெற்றியாளருக்கும், பண்பாளருக்குமான வித்தியாசம் தெரியாதவர்களாக, வெற்றியாளராக இருப்பவர்களே நல்லவர்கள் என்கிற பேதைமை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
ஏ. அடுத்தவர்களை பார்த்து அப்படியே காப்பி அடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

7. 'நான் ஒரு மோசமான observer'என்பதை இந்த 2015ம் ஆண்டும் நிரூபித்திருக்கிறது. நேரத்துக்கு புரிந்திருக்க வேண்டிய விஷயங்கள், எனக்கு மட்டும், தாமதமாகவே புரிந்திருக்கின்றன. இந்த தாமதங்களால் நான் இழந்தவைகள் ஏராளம். அந்த வகையில் நான் நிறையவே மக்காகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை தொடர்ந்து 2015ம் ஆண்டும் நிரூபித்திருக்கிறது.

சாதகங்கள்:
அ. எழுத்துக்கு இது நல்ல கருப்பொருளாக, கச்சா பொருளாக உதவுகிறது.
ஆ. இயல்பிலேயே குறுக்குவெட்டாக எந்த விஷயத்தையும் அணுக முடிகிறது.

பாதகங்கள்:
அ. சில நட்புகள் வாய்க்கவில்லை
ஆ. நட்புகள் வாய்க்காததால் அவைகள் காதலாக முதிர்வடையும் வாய்ப்பும் இல்லை.

8. மிகப்பல நண்பர்களை அடைவது என்கிற இலக்கு இந்த ஆண்டும் திருப்திகரமாக நான் எட்டவில்லை என்றே தோன்றுகிறது. அடுத்த ஆண்டேனும் அதை எட்டவேண்டும் என்பதில் தீவிரம் காட்ட வேண்டிய நிர்பந்தங்களை 2015ம் ஆண்டும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது. நண்பர்கள் அமையாததின் காரணங்கள்,

அ. ஜா.ஜா.
ஆ. பலர் புத்தகம் வாசிப்பதில்லை.
இ. தண்ணி, தம் பழக்கம் இல்லை.
ஈ. எனது மூளை பொறுந்தும் துறைகள்
உ. வழமை போல, என் Productivity மூலமாக என்னை பார்க்கும் முன்னரே வசவு வார்த்தைகளுக்கு (Pre-Conceived Idea) பலியாகி விலகிப் போனவர்கள்.
ஊ. சாம்சங் காலாக்ஸி, வால்மார்ட், அமேசான் வலைதளங்கள், மென்பொருள் தொடர்பான‌ புத்தகங்கள், தொலைக்காட்சி,  மில்ஸ் & பூன்ஸ் நாவல்கள், newspaper போன்றவைகளை நான் புத்தகங்கள் என்றே சொல்வதில்லை.
எ. நவீனத்துவ கோட்பாடுகள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அதை advantage ஆக மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர்கள்.
ஏ. செய்கிற தவறுகளை நியாயப்படுத்த மட்டும், நவீனத்துவ உலகின் கோட்பாடுகளை பயன்படுத்திக்கொள்பவர்கள்.
ஐ. நவீனத்துவ கோட்பாடுகளையும், வெற்றிக்கான வழிமுறைகளையும் தெரிந்துவைத்துக்கொண்டு, செய்கிற தவறை, தவறே இல்லை என்று வாதம் செய்பவர்கள்.
ஒ. தெரியவராத காரணம்.

9. திருமணம் என்பதின் மேல் தொடர்ந்து 6வது முறையாக இந்த 2015ம் ஆண்டும் மிகப்பல பயங்களை தந்திருக்கிறது. அச்சம், மிக மிக அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. காரணங்கள்:

அ. "நாம எப்படி இருக்கோமோ, அதுக்கு opposite ஆ தான் நமக்கு அமையும்"என்கிற பிரபலமான சொலவடை.
ஆ. 'இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாடி பொறந்திருக்கணும்'என்று எனக்கே அடிக்கடி தோன்றுவது.

10. 'துளி கூட அதிர்ஷ்டம் இல்லாதவன் நீ.....  ஐந்து அணாவாக இருந்தாலும் நீ உழைத்து தான் உருவாக்க வேண்டும்.. 'என்று என் ஜாதகம் சொல்வதையே, ஒவ்வொரு வருடத்தையும் போல, இந்த 2015 ம் வருடமும் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது.

11. என் Positive களே தொடர்ந்து இந்த 2015ம் ஆண்டும் Negative களாக என்னைச் சுற்றி இயங்கி, தங்கள் பங்கிற்கு எனக்கு குழி வெட்டியிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இது நடப்பதால் இப்படி நடப்பது இது எத்தனையாவது ஆண்டு என்கிற கணக்கு கூட நினைவில்லாத இன்னுமொரு ஆண்டு 2015ம் ஆண்டு. உதாரணம்: உடற்பயிற்சி

12. உழைத்து உழைத்து உருவாக்கியவைகளை, அடுத்தவர் கால்களில் இடறி சேற்றில் விழுவதை நானே என் கண்களால் பார்க்கும் அவலம் இந்த ஆண்டும் தொடர்வது, பயமுறுத்தும் ஏமாற்றங்களுள் ஒன்று.

13. எந்த ஆண்டையும் போல இந்த ஆண்டும் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டேன்.. அதற்கு காரணங்கள்
அ. எல்லோருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருப்பதில்லை.
ஆ. எனக்கு மொக்கை போட வரவில்லை.
இ. ஈகோ
ஈ. அடுத்தவர்கள் மனதை துளியூண்டேனும் காயப்படுத்திவிடுவோமோ என்கிற அதீதமான எச்சரிக்கை உணர்வு நிலை. இதனால், 'கலாய்த்தல்'என்கிற அற்புதமான‌ கலாச்சாரம் சுத்தமாக வரவில்லை.
உ. தெரியவராத காரணம்.

14. கசப்பான அனுபவங்கள்: என் சமையலை நானே சாப்பிடும் துர்பாக்கியம் இந்த 2015ம் ஆண்டு முழுவதுமே இருந்தது.

15. நாவல்கள்: இந்த 2015ம் ஆண்டில் இரண்டு நாவல்கள் எழுதினேன். இரண்டுமே 'ஒப்பனைகள் கலைவதற்கே'அளவிற்கு திருப்தியாக இல்லை.

16. இந்த 2015ம் ஆண்டும் , பலரிடமிருந்து கேட்க நேர்ந்த பொதுவான வாக்கியங்கள்:

அ. 'நீங்க அடிதடி, ரெளடியிசம்'எல்லாம் பண்ணுவீங்களா பாஸ்?'
ஆ. 'உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கு.'
இ. 'காசு குடுத்தா எது வேணா போடுவான் பத்திரிக்கையில'
ஈ. 'உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா பாஸ்?'
உ. ''புக்கை பாத்தாலே தூக்கம் வருது பாஸ்'
ஊ.. உங்க அளவுக்கு எல்லார்கிட்டருந்தும் எதிர்பார்க்காதீங்க'
எ. 'நீங்க எதையும் ரொம்ப ஆழமா யோசிக்கிறீங்க. மத்தவங்க அவ்ளோ யோசிக்க மாட்டாங்க.'


இந்த 2015ம் வருடமும் கேட்க நேர்ந்த‌ பெரும்பான்மை பெண்கள் சொன்ன பொதுவான வாக்கியங்கள்:

அ. 'you are a good guy. உனக்கு நிச்சயம் நல்ல லைஃப் அமையும். அமையணும்'
ஆ. 'உனக்கு wife ஆ வரப்போற பொண்ணு ரொம்ப லக்கி'
இ. 'உங்களுக்கு தேவைக்கு மேல  தெரிஞ்சிருக்கு. உங்க அளவுக்கு எல்லாரையும் எதிர்பார்க்காதீங்க‌'.
ஈ. 'you are a good guy. you will get a better choice'.
உ. You look good.

17. யாரேனும், நான் இருக்கிறேன் என்பதற்காக, யூட்யூபில் ஒரு மொக்கை வீடியோவை காட்டி, "செம கவிதை பாஸ்"என்றால் எனக்கு மிக மிக அயர்ச்சியாக இருக்கும்.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உருப்படாத ஈகோவுடன் சண்டை போடுவது என்று? இந்த வருடமும் அப்படியாக நிறைய அனுபவங்கள் என்னைச் சுற்றி நிகழ்வது தொடர்ந்தது... வேறு வழியில்லை.. வயிற்றுப்பிழைப்புக்கு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் என்றாகிவிட்டது.. சகித்துக்கொள்கிறேன்.. ஆனால், போகிற இடமெல்லாம் இவர்களே தான் இருக்கிறார்கள் என்பதில் இந்த ஆண்டும் அளப்பரிய ஆயாசம்.

இத்தனை அனுபவங்களுடன், 2015ம் ஆண்டை பூர்த்தி செய்தாயிற்று. இனி, 2016ம் ஆண்டை  எப்போதும் போல் உற்சாகத்துடனும், சுய உத்வேகத்துடனும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

தாரை தப்பட்டை – விமர்சனம்

$
0
0

தாரை தப்பட்டை – விமர்சனம்

ராம்ப்ரசாத்

விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு…………………………….
முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம்.
ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் நமக்கே காதல் வந்து விடுகிறது. அப்படி காதல். ஆனால், சன்னாசி எவனோ ஒரு டிரைவரை நம்பி சூறாவளியின் காதலை உதாசீனப்படுத்துகிறான். அதாவது சமூகத்தின் படி நிலைகளில் கட்டக்கடைசியாக நிற்கும் ஒருத்தியின் காதலை, அதே படியில் நிற்கும் சன்னாசி புரிந்துகொள்ளவில்லை.. புறம் தள்ளுகிறான். கேட்டால், எங்கோ எவனோடோ சந்தோஷமாக இருக்கட்டும் என்கிற எண்ணமாம். எங்கோ எவனோடோ இருந்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா? காதலனுடன் பசியோடே கிடப்பதும் போராடுவதும் கூட சுகம் தானே.. இதை புரிந்துகொள்ளாதவனாக சன்னாசியை ஏன் காட்ட வேண்டும்? அல்லது விளிம்பு நிலை மனிதர்கள் உண்மையிலேயே இப்படித்தான் மந்த அறிவுள்ளவர்களாக, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முட்டாள்தனமாக யோசிப்பவர்களாக  இருப்பார்கள் என்று காட்ட விழைகிறாரா கதாசிரியர்?


தன்னை நம்பாத சன்னாசி, தன் காதலை நம்பாத சன்னாசி மாறாக, எவனோ ஒரு டிரைவரை நம்புகிறான்.
உண்மையில் தாரை தப்பட்டை தமிழ் நாட்டு பெண்களுக்கு ஒரு பாடத்தை சொல்வதாகவே நினைக்கிறேன். அது, முட்டாளை நம்பிச்செய்யும் காதலால் சேற்றில் விழுந்து நாறத்தான் வேண்டியிருக்கும் என்பதுதான் அது.
அந்த வகையில் தாரை தப்பட்டை ஒரு நல்ல கருத்தை சொல்வதாகவே நான் நினைக்கிறேன். ‘ நான் கடவுள்’, ‘பரதேசி’ போன்ற படங்களுக்காவது உழைக்க நிறைய இருந்தது. இந்த ஓட்டை விழுந்த கதையை படமாக்க இரண்டு வருடங்கள் ரொம்ப ரொம்ப அநியாயமாகப்படுகிறது.
விபசாரம் ஆதி தொழில்.
வாடகை தாய்மை, தற்போதைய நவீன யுகத்தின் தொழில். இங்கே அமேரிக்காவில், இதற்கு நல்ல பேமென்ட் உண்டு. எனக்கு தெரிந்து ஒருவர் அம்முறையை பயன்படுத்தி பிள்ளை பெற்றுக்கொண்டார். விலை நூறு ஆயிரம் டாலர்கள்.
இதே போல் முகம் சுளிக்க வைக்கும் வாழ்வியல்கள் இன்னமும் நம்ம சுற்றி அனுமதித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்வானேன். ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை சுத்தம் செய்யவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் மனிதர்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகிறார்கள். வேலையை செய்ய ஆள் எப்போதும் இருந்தால், மாற்றத்துக்கான தேவை எப்படி உதிக்கும்? ஒரு மாற்றத்துக்கான விதையை தருவிக்கும் தேவையை உருவாக்க, அந்த வேலையை நிராகரிக்கவேண்டிய பொறுப்பு தங்களிடம் இருப்பதை உணராத அந்த மந்த மூளைகள் மீது வெறுப்பு வருகிறது. எவனாவது கொடி பிடித்து, கோஷம் போட்டு, தொண்டை தண்ணீர் வற்ற கத்தி மாற்றத்தை கொண்டு வந்தால், அங்கே வந்து சப்பனாங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டு, அடுத்த மாற்றம் வரும் வரை மறுபடி செக்கு மாடாகிவிடுவார்கள்.
இங்கே அமேரிக்காவில் லேபர் பெரும் பிரச்சனை. நான் லண்டனில் வேலை பார்த்தபோது ப்ளம்பர் வேலை செய்பவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள் என்றார்கள். ஒருமுறை வந்தால் சுமார் நூற்றைம்பது பவுண்டுகள். ஒரு மாதம் வேலை செய்தால், நிச்சயம் ஒரு கணிணி பொறியாளரை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் வர மாட்டார்கள். வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே. இதை கருத்தில் கொண்டு தான் அமேரிக்காவில் இந்த வருடத்திலிருந்து அடுத்த பத்து வருடங்களுக்கு லேபர் விசாக்களின் எண்ணிக்கையை நானூறு சதவீதம் அதிகப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் ஆள் கிடைப்பது அத்தனை சுலபமில்லை.
அமேரிக்கா அமேரிக்காவாக இருப்பதற்கும் , ஜப்பான் ஜப்பானாக இருப்பதற்கும், இந்தியா இந்தியாவாக இருப்பதற்கும் ஸ்திரமான காரணங்கள் இருக்கிறது.
விளிம்பு நிலை மனிதர்கள் மாற்றத்தை எதிர் நோக்குகிறார்கள் தான். ஆனால் அந்த மாற்றத்துக்கான தேவையை உருவாக்குவது குறித்தான யாதொரு சிந்தனையும் அற்றுத்தான் இருக்கிறார்கள்.
அதை மறைமுகமாக அதுவும் ஒரு விபத்தாய் குத்திக்காட்டியதற்காய் தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய படமாக ஆகிறது. நான் அனைவரும் பார்க்க வேண்டிய கதையின் ஓட்டை இது.
– ஸ்ரீராம்


#ந‌ன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=31513 )

தலித்

$
0
0
தலித் 


இளவரசன் கொலை, கோகுல்ராஜ் கொலை மற்றும் இப்பொது ரோஹித் வெமுலாவின் தற்கொலை என்று தொடர்ச்சியான தலித் மரணங்கள்  நினைவுகளை கிளர்ந்தெழச்செய்கின்றன...

தலித் இனம் ஒரு சமூகத்தால் பன்னெடுங்காலமாய் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதுதான். புறக்கணிக்கப்படுகிறது தான். தொடர்ந்து பன்னெடுங்காலமாய் செக்கு மாடுகளாக அடிமைகளாக பயன்படுத்துவதற்காய் ஆதிக்க சாதிகளால் கல்வி, அறிவு, சிந்தனாமுறை போன்றவைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் தான்.

அரசு தரும் சலுகைகளால் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிப்பு அவர்கள் ரத்தத்தில் ஊறத்துவங்கியிருக்கிறது. அது ஊறி வரவேண்டும். விதையில் முளைவிட்டு வேர்விட்டு விழுதாகி, மரமாகி கிளைவிட்டு பல்கி படரவேண்டும்.



மாற்றத்தை ஒரே நாளில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கு பல காலம் ஆகும். பல நிலைகளை அது கடக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் காலம் ஆகும். அதுவரை பிழைத்திருக்க வேண்டும்..

இளவரசன், கொகுல்ராஜ், இப்பொது ரோஹித் வெமூலா  இப்படி படிப்பு வாசனை ரத்தத்தில் ஊறி, முளைவிடும் முன்னரே அழிக்கப்பட்டால் மாற்றத்துக்கான காலம் எப்படி வரும்? அதற்காகவேனும் தலித் சமுதாய மக்கள் தற்கொலை செய்வதையோ, காதலில் நேரத்தை வீணடித்து உயிரை விடுவதையோ நிறுத்த வேண்டும்.

தலித் இனத்திற்கு நட்புகள் என்னும் அஸ்திரங்களின் துணை இருக்காது. அக்கம்பக்கத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நாள் கிழமைக்கு அழைக்க மாட்டார்கள். பெண் தர மாட்டார்கள். பெண் எடுக்க மாட்டார்கள். கண் இல்லாத காதலுக்கு கூட தலித் என்றால் கண் வந்துவிடும். காதலுக்கு கண் இல்லை என்று சொல்லிக்கொண்டே நைச்சியமாக தலித்களை மட்டும் பார்த்து கவனித்து ஒதுக்கிவிடுவார்கள். அதையும் மீறி காதல் பூத்தால் இருக்கவே இருக்கிறது சாதி அரசியல்? அதை கிளப்பிவிட்டு கிடைக்கிற கேப்பில் போட்டுத்தள்ளிவிடுவார்கள். தனி குவளையில் தேனீர் தருவார்கள். பிணத்தை ஊர் சுற்றி எடுத்துச்செல்ல நிர்பந்திப்பார்கள். நடுரோட்டில் பெண்ணை துகிலுரிப்பார்கள்.

தலித் இன மக்கள் படிக்க வேண்டும். ப‌டிப்பு ஒன்று மட்டுமே பிரம்மாஸ்திரம். நட்புகள் தராத வசதிகள், வாய்ப்புகள், செளகர்யங்களை அடைய படிப்பு மட்டுமே ஒரே பிரம்மாஸ்திரம். படிப்பு முளை விட வேண்டும். ரத்தத்தில் ஊற வேண்டும். வேர் பிடிக்க வேண்டும். விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிழல் தர வேண்டும்.

தலித் இன மக்கள் தங்களுக்கு ஆதிக்க சாதி தரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு படிப்பு ஒரு நல்ல மார்க்கம்.

சவால்களை சமாளிக்க மார்க்கங்கள் உண்டு.  காதல் இப்போதைய தேவை அல்ல. படிப்பு தான் தேவை

1. நட்புகள், சுற்றம் புறக்கணிப்பதால் விவரம் தெரியவில்லையா?

தலித் சமூகம் மறைந்து மறைந்து வாழ்வதால், இன மக்கள் சூழ வாழும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. மற்ற ஆதிக்க சமூகத்தினருடனேயே வாழ வேண்டி இருக்கும். அப்படி வாழ்ந்தால் புறக்கணிப்பு என்றேனும் நடந்தே தீரும். புறக்கணிக்கப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டால், பல விஷயங்கள் தெரிய வராது. தகவல்கள் இல்லாமையால், சிந்தனை வராது. அதுதான் செக்குமாடாவதற்கு முதல் படி. அதை முதலில் அடித்து உடைக்க வேண்டுமன்றால், புத்தகங்கள் வாசிக்க வேண்டும்/ இலக்கியம் படிக்கலாம். அனுபவங்களை எழுத்தாக்குகிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு அனுபவம். ஒரு வாழ்க்கை. அதை படித்தாலே ஆயிரம் பேருடன் பழகிய அனுபவம் கிடைத்துவிடும். சமூக கட்டமைப்பு புரியும். அதில் நீந்தி கரையேறுவது எப்படி என்று யோசிக்க முடியும். நாற்பது நொள்ளை மனிதர்களை காட்டிலும் , நான்கு நல்ல புத்தகங்கள் சால சிறந்தது. விவரம் தெரிந்துகொள்ளுங்கள். நான்கு பேருக்கு விவரம் சொல்லுங்கள்.  தலித் இன மக்கள் படிக்கவேண்டும். புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அது ஒன்றே தான் திறவுகோல்.

2. விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்களா?

தனி நபராக விளையாடலாம். ஜிம் இருக்கிறது. உடலுக்கு வலு சேர்க்கலாம். வியர்வை விளையாட்டில் தான் வெளியேறும் என்றில்லை. ஜிம்மில் கூட வெளியேறும்.

3. வீடு தர மறுக்கிறார்களா?

படியுங்கள். ஒரே மூச்சாக படியுங்கள். படித்து முன்னுக்கு வந்து வீடு கட்டுங்கள். வாடகைக்கு விடுங்கள்.  அடுத்தவர்களுக்கு வீடு கொடுக்கலாம்.

ஆதிக்க சாதிகளின் மீது கோபம் இருந்தால், அடித்து துவைத்தால்தான் கோபத்தின் வடிகால் என்றில்லை. செத்து மடிந்தால் தான் என்றில்லை. தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. எவன் கையிலாவது அடிபட்டு உயிர்விட்டு தியாகி பட்டம் வாங்க வேண்டும் என்றில்லை.

வைராக்கியம் என்றொரு வார்த்தை இருக்கிறது. படிப்பை பாதியில் விடுவது, மாற்றத்துக்கான ஏனைய தலித்களின் உழைப்பை மட்டுப்படுத்திவிடலாம். சோர்வடையச்செய்துவிடலாம். ஒருவரின் தவறால் பிறரது போராட்டம் இலக்கற்று போய்விடவோ, சுணங்கிப்போகவோ கூடாது.


மனம் இருந்தால் மார்க்கமுண்டு.



    - ஸ்ரீராம்

கொலை நகரம்

$
0
0
கொலை நகரம்



ஐடி நகரமான பங்களூரு இப்போது கொலை நகரமாகியிருக்கிறது.. ஒன்றல்ல..இரண்டல்ல‌.... நான்கு கொலைகள்..

1. கோகுல் இப்போது பங்களூரில் அமிதாப் பச்சனை விட மிக பிரபல்யமான பெயர். முன்னாள் காதலியை அடைய தடையாக இருந்த மனைவியை போட்டுத்தள்ளிவிட்டு அந்த கேஸிலிருந்து தப்பிக்க அந்த மனைவியின் கள்ளக்காதலனுடனான நிர்வாண புகைப்படத்தை பயன்படுத்திக்கொண்டது, முன்னாள் காதலியின் கணவனை அப்புறப்படுத்த அவனது பெயரில் சிம் வாங்கி அதன் மூலமாக பங்களூரு ஏர்போர்டிற்கு வெடிகுண்டு புரளி கிளப்பியது என சுஜாதா, ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் கதைகளில் கூட வராத அளவிற்கு கிரிமினலாக யோசித்து மாட்டிக்கொண்டவர். கொலையான அனுராதாவும் சற்றும் சளைத்தவரல்ல போலிருக்கிறது. வேலை பார்த்த கல்லூரியின் மாணவருடனே கள்ளக்காதல். இத்தனை கலவரத்துக்கு இடையிலும் கோகுலுக்கும் அனுராதாவுக்கு ஒரு பெண் குழந்தை வேறு. இதையெல்லாம் செய்கையில், எல்லோரையும் போல‌ அலுவலகத்தில் அரட்டை அடித்து வேலையும் செய்திருக்கிறார் கோகுல் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது.

இனிமேல் ஏதேனும் கம்பெனியின் நேர்முகத்தேர்வில் மல்டி டாஸ்கிங் பற்றி கேள்வி வந்தால், கோகுல் பற்றி பேசலாம் என்று இருக்கிறேன்.. ஒரு உதாரணமாகத்தான் ஹிஹிஹிஹி.... அவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும்.

2. ஷில்பா ரெட்டி தனது கணவனை, போட்டுத்தள்ளிவிட்டு அப்பா அம்மா உதவியுடன் பிரேதத்தை அப்புறப்படுத்தியிருக்கிறார். ஊருக்கு செல்வதாக கிளம்பியவர் வந்து சேர்ந்துவிட்டாரா என்று உறவினருக்கு கால் செய்து கேட்கப்போக, மாட்டிக்கொண்டுவிட்டார். எப்படி என்கிறீர்களா? சாதாரணமாக அப்படியெல்லாம் போன் செய்து கேட்கமாட்டாராம். லவ்வை என்றைகாவது செய்தாலும் பிரச்சனைதான் போல. கன்சிஸ்டென்சி வேண்டுமய்யா...கன்சிஸ்டென்சி..

அந்த உறவினர் செம கில்லாடி. இதையெல்லாம் நோட் செய்திருக்கிறார் பாருங்கள், ஜொள்ளு விடாமல்.

3. விஜயலஷ்மி, கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

4. பிரபலமான நிறுவனத்தில் மனிதவளப்பிரிவில் வேலை செய்பவர் தனது மனைவியை கொலை செய்திருக்கிறார். அந்த பிரபலமான நிறுவனம் இன்__சிஸ் என்கிறார்கள். (சிறிது நாட்களுக்கு முன்பு அந்த நிறுவன கேன்டீனில் வேலை பார்த்த பெண்ணை கேன்டீனிலேயே வைத்து கேன்டீன் ஊழியர்கள் இருவர் மானபங்கம் செய்ததாக தகவல் வந்தது. பிற்பாடு அந்த பெண் அந்த நிறுவனத்தின் பணியாளர் அல்ல என்றும் சொன்னார்கள்.இது நடந்த இடம் புனே.)

வேலை பார்க்கும் இடம் கோயில் என்பார்கள்.. இந்த கோயிலில் மட்டும் ஏன் இப்படி? போகட்டும்...

துணையுடன் வாழ்வது என்பது மிக அதிக அளவில் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிற ஒன்று. எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்றே போல் அமைந்துவிடுவதில்லை. செல்லமாக வளர்க்கப்படும் பலர், வாழ்க்கையின் கஷ்டங்கள் தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். தான் செய்வதன் உண்மையான அர்த்தம் தெரிந்து இவர்கள் காரியங்கள் செய்வது போல் தோன்றவில்லை. பெரும்பாலும், பக்கவிளைவுகள் பற்றி எந்த தெளிவும் இன்றியே பல விஷயங்களை செய்துவிடுவார்கள்.

திருமணத்தில் இவர்கள் துணையாக அமைந்துவிட்டால் பொறுத்துத்தான் போக வேண்டி வரும். மன்னிப்பவர்களால் தான் இந்தியாவில் கலாச்சாரம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. பேசித்தீர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் என்று வந்துவிட்டால் அவர்கள் முன் சண்டையிட்டுக்கொள்ள தயக்கம் வரும். குழந்தைகள் கூட பெற்றோரின் அக மன ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வார்கள். சில பிரச்சனைகளை விட்டுக்கொடுத்தால் கடந்து போய் விடலாம். சில பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலே தானாக கடந்து போய்விடும்.

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கிறது.

அது காதல்!!..

துணையை கன்னாபின்னாவென்று காதலிக்க வேண்டும். துணையாக வருபவருக்கே நம்மை கஷ்டப்படுத்த தோன்றாது. தானே விட்டுவிடுவார்கள். இந்த பிரம்மாஸ்திரம் ஏவி பழக வேண்டும். அவ்வளவே. இதிலும் வழிக்கு வரவில்லை எனில், வேறு என்ன செய்ய? தலை எழுத்து.

இருக்கவே இருக்கிறது, குழந்தைகள். அவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவதில் முழுக்கவனத்தை திசை திருப்பி விட வேண்டியதுதான். எல்லோருக்கும் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைப்பதில்லை. பூரணமான வாழ்க்கை யாருக்குமே அமைவதில்லை. எல்லோருக்குமே ஏதோவோர் குறை இருக்கவே செய்கிறது. எல்லா விதத்திலும் அதிர்ஷ்டசாலி யாருமில்லை. வாழ்ந்தால் கொண்டாட்டமான வாழ்க்கையைத்தான் வாழ்வேன் என்று நமக்கு நாமே முடிவுசெய்துகொள்ளுதல் ஒரு விதத்தில் சுயத்தையே எப்போதும் கொண்டாடுவதன் குறியீடு. சுயநலம். சுயநலம் மட்டுமே. நம்மை பற்றி நாமே எப்போதும் பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பதன் அடையாளம் அது. முதல் ராங்க் வாங்கினாலோ, ஒரு ப்ரமோஷன் வாங்கினாலோ, நம் திறமைக்கு கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுதல். அப்படி நினைத்துத்தான் சகலத்தையும் மண்டையில் ஏற்றிக்கொண்டு திரிகிறோம். தலைகால் தெரியாமல் ஆடுகிறோம். எனக்கு போய் இதுவா? என்று கேட்கிறோம். உண்மையில் நேரம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் தான் அதற்கு அர்த்தம். வேறு ஒரு மண்ணும் கிடையாது.

நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவாவது வேண்டும்.

அதைவிட்டுவிட்டு கொலை, கொள்ளை என்று கிளம்பினால் எதற்குமே முடிவு இருக்காது. நாம் படித்ததும் வேலைக்கு சேர்ந்ததும் கொலை செய்ய அல்ல. தலைக்கு மேல் போனால், எப்படியோ போகட்டுமென விவாகரத்து செய்துவிட்டு அமைதியாக அவரவர் வேலையை பார்க்கலாமே? இரண்டாவதாக திருமணம் கூட செய்யலாம். இன்றைய தேதிக்கு ஏகத்துக்கும் மண முறிவுகள் ஏற்படுகிறது. எல்லாம் இந்த பாழாய்ப்போன ஈகோ, சுய நலம், யார் வெல்வது என்கிற போட்டி, முதிர்ச்சியின்மை.
இரண்டாவது திருமணத்திற்காய் ஏகப்பட்ட பேர் வெயிட்டிங். (இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கெல்லாம், பத்தாவது படிக்கையிலேயே இரண்டாவது காதல் வந்துவிடுகிறது. ஆக முதல் திருமணமே டெக்னிக்கலாக மூன்றாவதோ, நான்காவதோ தான்)

முதல் திருமணத்தில் தான் டெளரி, ஜாதி, ஜாதகமெல்லாம். இரண்டாவதில் எதுவுமே யாரும் பார்ப்பதாக தெரியவில்லை. ஜாதி, ஜாதகமெல்லாம் பணால். மனப்பொறுத்தமுள்ள துணை கிடைத்தால் போதுமென்று சரண்டராகிறார்கள். இதை முதலிலேயே செய்திருக்கலாம். விதி யாரை விட்டது?


எமோஷனல் கனெக்ஷன்

$
0
0
எமோஷனல் கனெக்ஷன் (Emotional Connection)


நான் முன்பு தங்கியிருந்த ரூமில் என்னையும் சேர்த்து ஏழு பேர். நான் மட்டும் தான் தமிழன். மற்றவர்கள் தெலுங்கர்கள். இருந்தாலும் நானும் அவர்களுடன் அவர்களுக்கு இணையாக மாட்லாடிக்கொண்டிருந்தேன்.

இங்கே அமேரிக்காவில் நீங்கள் தனியாக ரயிலில் பயணித்தால் கூட பயணிக்கும் ஒரு தெலுங்கர் முதலில் நம் இருப்பிடம், சம்பளம் குறித்தெல்லாம் வாஞ்சையுடன் விசாரிப்பார். "அடடா! மனுஷன் என்னமா பழகுறார்"என்று நீங்களும் சிவாஜி சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு பேசினீர்களெனில் ஆப்பையா தான்.

விவரம் தெரியாமல் நான் எழுதும் உருப்படாத எழுத்து பற்றி கொஞ்சம் அதிகமாகவே பீற்றிக்கொண்டேன். ஒரு நாவல் எழுதினால் எவ்வளவு கிடைக்கும் என்றார். சல்லிசாக சொல்லிவிட்டால், 'இதுக்கா எழுதுற?'என்று கேட்டு அசிங்கப்படுத்திவிடுவாரோ என்று பயம். கொஞ்சம் கெத்தாக இருக்கட்டுமே என்று ஒரு நாவல் எழுதினால் 15000 கிடைக்கும் என்று கூசாமல் பொய் சொல்லிவிட்டேன். அதற்கப்புறம் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில். அந்த கொல்டி அதற்கப்புறம் தான் உடும்பு போல் பிடித்துக்கொண்டான். நோண்ட ஆரம்பித்தான். ஒரு நாவல் எழுத எத்தனை காலம் ஆகும் என்றான். தூண்டிலிடுகிறானாம்.

இந்த முறை அலட்டினால் மறுபடி வேறு கேள்வி கேட்பானோ என்று அஞ்சி உண்மையை சொல்லிவிடுவோம் என்று ஒரு ஆறு மாதம் எடுக்கும் என்றேன். அதற்கு என்னை ஒரு பார்வை பார்த்தான் பாருங்கள்!!.. நம்மூர் ரயிலாக இருந்தால் அப்படியே வெளியே குதித்திருக்கலாம். இந்த ஊர் ரயிலில் கதவு வைத்து அடைத்திருப்பார்கள். அதற்கும் வழியில்லை.

ஆறு மாதத்திற்கு 15000 தானா. அப்படியானால் ஒரு மாதத்துக்கு 2500 கூட வராதே என்றான். அடப்பாவி!! ஒரு நாவலுக்கு தேவியின் கண்மணியில் ரூ.3000 தான் தருகிறார்கள் என்கிற உண்மையை சொல்லியிருந்தால் புழுவை விட கேவலமாக பார்த்திருப்பானோ என்று தோன்றியது.


"இங்கே நீ மெனக்கெட்டு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் அதிகமாக வேலை பார்த்தால் சர்வ நிச்சயமாக 500 டாலர்கள் அதிகமாக சம்பாதிக்கலாம்"என்றான். 500 ஆ? அப்படியானால், இந்திய ரூபாயின் 40000 ஆச்சே. என்ன அது என்றேன். அரை மணி நேரம் காதை அறுத்து, ரத்த விலாராக ஆக்கிவிட்டான்.  ஏற்கனவே நிறைய பேரிடம் இது போல் மொக்கை போட்டு அனுபவமிக்கவன் போல.  என் பாச்சா பலிக்கவில்லை. வகையாக மாட்டிக்கொண்டேன். மூத்திர சந்துக்குள் வைத்து கும்மாத குறைதான். எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்.

விஷயம் வேறொன்றுமில்லை. நம்மூரில் MLM என்பார்களே. அதேதான்.

தப்பிவிட்டேன் என்று சொன்னேனல்லவா? அது பிற்பாடு வகையாக மாட்டத்தான் என்பது அப்போது புரிந்தது.

என் ரூம்மேட்டில் ஒருவன் அவனிடம் வகையாக விழுந்திருக்கிறான்.  ஒரு வார இறுதியில் போனவன், இத்துப்போன பல்பொடி, அரை டஜன் ப்ரோடீன் மருந்துகள் என்று ஒரு பெரிய பை நிறைய வாங்கிவந்துவிட்டு, "நீ நண்பன் தானே.. என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளேன்.. எனக்கு பாயிண்ட் கிடைக்கும்"என்றான். எல்லாமே உடலுக்குள் எடுத்துக்கொள்ளும் வகையான ஐடம். எப்படி சிக்கியிருக்கிறேன் பாருங்கள்!!

நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல் பேசிப்பார்த்தேன். அவன் விடுகிறார்போல் தெரியவில்லை. கடவுள் மீதும், "நோ சொல்ல நினைக்கையில் யெஸ் சொல்லாதே"என்கிற தத்துவத்தின் மீது பாரத்தை போட்டு, ஒரேயடியாக, முடியாது என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்!!

அன்றிலிருந்து பிடித்தது சனியன். ரூமில் எந்த உதவியும் செய்வதில்லை. நான் இல்லாதபோது புற முதுகில் பேசுவது, வேண்டுமென்றே பொதுவாக பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவாமல் போட்டு வைப்பது, போய் சொன்னால் உடனே வருவதாக சொல்லிவிட்டு தூங்கிவிடுவது அல்லது தூங்குவது போல் நடிப்பது, இரவில் தூங்கும்போது வேண்டுமென்றே சத்தமாக குரட்டை விடுவது என்று ஆரம்பித்துவிட்டான்.

பொதுவாக நம்மில் எல்லோருமே பரஸ்பரம் எமோஷனல் கனெக்ஷன் மற்றவர்களுடன் கொண்டிருப்போம். அதில் சாதகமும் இருக்கிறது பாதகமும் இருக்கிறது.

பாதகம் இதுதான். நம்மையும் அவர்கள் போகும் போக்கில் இழுக்க முயற்சிப்பார்கள். நாம் இணங்கவில்லை என்றால், அவ்வளவுதான். தாளித்து சட்னி ஆக்கிவிடுவார்கள். இந்த எழவெடுத்த எமோஷனல் கனெக்ஷனை மெயின்டெயின் செய்கிறேன் பேர்வழி என்று கடனாளி ஆனவர்கள், வழி மாறி போனவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்.

சிறார் குற்றவாளிகள் பலரிடம் பேசியபோது கிடைக்கும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றன. சமீபமாக இங்கே அமேரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு தண்டனை வழங்க கோர்டுக்கு அழைத்து வந்தார்கள். குற்றவாளியின் பெயர் அர்தர் பூத். ஜட்ஜான மின்டி க்லேசர், பூத்தின் சரித்திரத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, கோர்டிலேயே ஒரு குறிப்பிட்ட பள்ளியின் பெயரைச் சொல்லி 'நீங்கள் அந்த பள்ளியின் படித்தீர்கள் தானே'என்று சொல்ல, மைக்ரோ நொடியில் மிண்டி க்லேசரை அடையாளம் கண்டுகொண்டு 'ஓ மை காட்'என்று திரும்பத்திரும்ப சொல்லி பூத் அழ, தண்டனையை வாசித்த க்லேசர் பள்ளி நாட்களில் பூத் அமைதியான, படிப்பாளியான அதே நேரம் பெண்பிள்ளைகள் விளையாட விரும்பும் ஒரு பையனாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.




பூத்தை கேட்டபோது, 'தவறான நண்பர்களின் சேர்க்கை'யால் குற்றவாளி ஆனதாக விளக்கினான். தவறான நண்பன் என்று தெரிந்தவுடன் விலகியிருக்கலாமே என்றதற்கு, 'விலகினால் விலக்கிவைத்துவிடுவார்கள்'என்றானாம்.

எமோஷனல் கனெக்ஷனில் தற்காலத்தில்  பாதகமே அதிகம். பள்ளி, கல்லூரி, பணி இடங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஒன்று சேர்ந்து படிப்பார்கள். இல்லையெனில் படிப்பவனையும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். யாரும் தனிப்பட்டு படித்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யவே combined study என்பதெல்லாம்.

பணி இடங்களில் நான் கவனித்திருக்கிறேன். நம்மை தனித்து இயங்கவே அனுமதிக்க மாட்டார்கள். தொந்திரவு செய்வார்கள். உடன் இருக்கவே விரும்புவார்கள். அதற்கு அர்த்தம் அன்பு, பாசம் என்பதெல்லாம் இல்லை. 'இவன் நம்மைவிட அதிகமாக எதுவும் செய்துவிடக்கூடாது'தற்காப்பு நடவடிக்கை தான் அது. உடன் வர முடியவில்லை என்றால் ஃபோனில் அழைத்து பேசிக்கொண்டே இருப்பார்கள், தூங்கும் வரை. கூட இருப்பவனை உருப்படாமல் செய்வதற்கு இவர்கள் உழைக்கும் உழைப்பே அலாதி.

அதையும் டபாய்த்துவிட்டு நாம் ஏதாவது புத்தகம் படிக்க அமர்ந்தாலோ, அல்லது கிறுக்குவதில் நேரமெடுத்துக் கொண்டாலோ, உடனே கட்டம் கட்டிவிடுவார்கள். குழுவாக சேர்ந்துகொள்வார்கள். பாராமுகம் இருக்கும். நம்மை தவிர்த்துவிட்டு இயங்க துவங்குவார்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், ஏழரை சனி தான்.

ஒரு கட்டத்தில் நீங்கள் முடிவு செய்யவேண்டி இருக்கும். பூத் செய்த தவறை நீங்க செய்யாதிருக்க வேண்டுமானால், விலகி போவதையும், தனிமரமாவதையும் தவிர வேறு வழி இருக்காது. வேறு விதமாக நட்புகளை நாட வேண்டி வரும்.

பூத் அந்த கட்டத்தில், மிகச்சரியாக தவறான மனிதர்களை தேர்ந்தெடுத்தபோது, மின்டி க்லேசர் மிக்கச்சரியாக சரியான நட்புகளை தேர்ந்தெடுத்திருப்பதைத்தான் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக பார்த்துக்கொண்ட அந்த நொடி குறிப்புணர்த்துகிறது.

நட்புகள் வேண்டும் தான். ஆனால் தற்கால சூழலில், எமோஷனல் கனெஷன் ஒரு அபாயத்திற்கு இட்டுச்செல்லும் வசீகரமான பிணைப்பு. நல்ல நட்புகளுக்கு எமோஷனல் கனெக்ஷன் ஒரு பிரச்சனை அல்ல. நல்ல நட்புகள் எமோஷனல் கனெஷனை தாண்டி நீடிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

நம்மால் முடிந்த வரை நல்ல நட்புகளை மற்றவர்களுக்கு தரலாம். ஆனால், நாம் தனியாக இருப்பதை குறையாக அவர்கள் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

'நீ தனியாக இருக்கிறாய்.. உனக்கு பழகத்தெரியவில்லை..அதனால்தான்'என்றெல்லாம் ஆரம்பித்தால், இன்னும் விவரம் தெரியவரவில்லை என்று பொருள். எங்கேனும் சிக்கி சின்னாபின்னமாகும் போது தெரியும் என்று விட்டுவிடவேண்டியதுதான்.

ஆனால் காலம் எல்லோரையும், எல்லாவற்றையும் நிரூபிக்கும் தன்மையானது. எமோஷனல் கனெக்ஷன் பார்த்து குழு அமைத்தவர்களை காலம் நீருபிக்கும். அர்தர் பூத் போல. நாம் சரியான பாதையில் தான் சென்றிருக்கிறோம் என்பதை காலம் நிரூபிக்கும். மின்டி க்லேசர் நீதிபதியாக உயர்ந்தது போல.

காலம்!!

அது எப்போதும் விழித்திருக்கிறது. எல்லாவற்றையும் பார்த்திருக்கிறது.


  - ஸ்ரீராம்

அட்ஜஸ்ட்மென்ட்

$
0
0
அட்ஜஸ்ட்மென்ட்


கள்ளக்குறிச்சி அருகே கிணற்றிலிருந்து பிணமாக மூன்று கல்லூரி மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. SVS என்னும் யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் மாணவிகளாம் அவர்கள். எம்.ஜி. ஆர் மருத்துவக் கல்லூரியின் கீழ வருகிறது இந்த கல்லூரி. விசாரித்தால் ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் அந்த கல்லூரி மீது. சரியான லேப் வசதிகள் இல்லை. மாணவர்கள் தங்க ஹாஸ்டல் வசதிகள், நூலகம், விளையாட்டுத்திடல் என்று எல்லா அம்சங்களிலும் குறை.

இந்த ரீதியில் நிறைய சொல்லலாம். நர்சிங் காலேஜுகளில் இப்படி நிறைய நடக்கிறதாக புகார் வருகிறது. அந்த வகை புகார்கள் அவ்வப்போது வருவதும் பிற்பாடு சமூகத்தின் மற்ற செய்திகளில் அவைகள் காணாமல் போவதும் வாடிக்கையாகிவிடுகிறது.

இரண்டு தரப்பிலும் குறை இருக்கிறது. இத்தனை குறைகளை உடைய கல்லுரியை ஏன் அங்கீகரித்து சான்றிதழ் வழங்க வேண்டும்?.

சென்ற மாதத்தில் 18 மாணவர்களை இந்தியாவிலிருந்து அமேரிக்காவுக்குள் வரவிடாமல் தடுத்திருக்கிறார்கள். கேட்டால் அவர்கள் சேர இருந்த கல்லூரிகள் Blacklisted கல்லூரிகளின் வரிசையில் வருகிறதாம். இந்த பொறுப்புணர்வு நம்மூருக்கு எப்போது வருமென்று ஏக்கமாக இருக்கிறது. ஆனால் நம்மூரில் இதையே வேறுவிதமாக பார்ப்பார்கள். 'அட்ஜஸ்ட்'செய்துகொள்ள தெரியவில்லை என்பார்கள்.

இத்தனை மொன்னையான கல்லூரியில் ஏன் சேர வேண்டும் என்று கேட்பது எளிது. நிதர்சனம் அத்தனை எளிது அல்ல. முதலாளிகளால் முதலாளிகளுக்கான கட்டப்பட்ட கல்லூரிகளின் படி நிலைகளில், ஏழை குடும்பங்களின் எதிர்கால கனவுகளுக்கு இவ்வகை கல்லூரிகள் தான் கைக்கு எட்டுகின்றன. அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்? எங்குதான் போவார்கள்? இன்னும் சொல்லப்போனால், நகரங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் யாரும் கிராமங்களுக்கு வருவதில்லை. தப்பும் தவறுமாக நகரங்களில் மருத்துவம் பார்த்தே, பிரச்சனைகள் வந்தால் உறவுக்கார‌ மருத்துவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்து நகர்ப்புறங்களிலேயே திரிகிறார்கள்.

இம்மாதிரி மூன்றாம் தர கல்லூரிகளில் படித்தவர்கள் தான் கிராமங்களுக்கு விரும்பி சேவை மனதுடன் வந்துகொண்டிருந்தார்கள். இப்போது அதற்கும் பொல்லாப்பாகிவிட்டது.

இம்மாதிரி மொன்னை கல்லூரிகளில் பல பெண்கள் தெரிந்தே தான் சேர்கிறார்கள். அவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையே , காத்திருந்து அடுத்த வருடத்தில் சேரலாமென்றால், அதற்குள் மாமன் மகனையோ, தூரத்து சொந்தக்காரனையோ கட்டிவைத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க எங்கேனும் நுழைந்தால் போதுமென்றும் கூட இப்படியான மொன்னை கல்லூரிகளில் சீட்கள் நிரப்பப்படுகின்றன‌ தான்.

இதையெல்லாம் சொன்னால், நம்மூரில் 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. விதி துரத்துது'என்பார்கள்.. இப்படி சொல்வதனால் ஒரு சமூக பிரச்சனை தனிமனித பிரச்சனையாகி மேலும் நாலு பேரை காவு வாங்குகிறது. இல்லையென்றால், அங்கீகாரமில்லாத கல்லூரி என்பது இன்றைக்கு நேற்று பிரச்சனையா? கடந்த பத்து வருடங்களாக இதுதான் தலையாய பிரச்சனை.

கையை விரித்துவிடும் மன நிலை புற்றீசல் போல பரவிக்கிடக்கிறது. "இவ்வளவுதான் பண்ண முடியும்.. வேணும்னா வா"என்கிற மனநிலையோடுதான் எல்லோரும் எல்லாமும் இயங்குவது போல் தெரிகிறது...

"என் சுதந்திரத்துல தலையிடாம‌ என்னை தொந்திரவு பண்ணாம நீ என்ன வேணா பண்ணிக்கோ'என்கிற கணவன் /மனைவிகள்,
"இவ்வளவுதான் பாடம் எடுக்க முடியும்.. எப்படியோ மார்க் வாங்கிக்கோ"என்கிற ஆசிரியர்கள்,
"சேமிப்பு எதுவும் இல்லை.. வேணும்னா கட்டிக்கோ"என்கிற மணமகள் / மணமகன்கள்,
"இவ்வளவு தான் வசதி... இஷ்டம்னா வேலை பாரு"என்கிற அரசு பணிகள்,
'இங்க இவ்வளவு தான்.. வேணும்னா பிரைவேட் ஆஸ்பிட்டல் போ'என்னும் மருத்துவமனைகள்
இப்படி எங்கே திரும்பினாலும் ஒரே விதமான டெம்ப்ளேட் வாசகங்களை நாம் கேட்கலாம். அடிப்படை ஒன்றே ஒன்று தான். Lack of Responsibility.

Responsibility is missing at each and every level.

இப்படியான சூழல்களில் அட்ஜஸ்ட்மென்ட்களைத்தான் செய்யச்சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள். "குறை தன்னில் இல்லாதபோது ஏன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் ?"என்கிற கேள்வி யார் கேட்டாலும் அவர்கள் இந்த சமூகத்துக்கு வேண்டாதவர்களே. கழற்றிவிட்டு விடுவார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் என்பது ஒரு வியாதி. It is contagious. அட்ஜஸ்ட்மென்ட் அதிகம் செய்கிறவர்கள் தான் அட்ஜஸ்ட் செய்ய நிர்பந்திக்கிறார்கள். அட்ஜஸ்ட் செய்யாதவனை, புறக்கணிப்பது, கட்டம் கட்டி ஒதுக்குவது, இப்படி குழுமனப்பான்மை கொள்கிறார்கள்.

அதற்காக அட்ஜஸ்மென்டே கூடாது என்பதல்ல என் வாதம்.

அட்ஜஸ்ட்மென்ட் தேவைதான். ஆனால், அட்ஜஸ்ட்மென்டிலேயே தான் எல்லாமும் என்றால் அது சரியல்ல. குறைந்தபட்சம் 'இன்னது குறை.. இதனால் இன்னின்னது இருக்காது..இன்னின்னது இருக்கலாம்.. நீங்கள் அர்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும். அட்ஜஸ்ட் செய்தால் இன்னின்ன பிரச்சனைகள் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். கையாள முடியும் என்று தோன்றினால் எடுத்துக்கொள்ளுங்கள்'என்கிற வெளிப்படையான பேச்சாவது வேண்டும்.

அதேபோல் பணப்பரிமாற்றம், குடும்ப உறவுகள், காதல் மற்றும் திருமண உறவுகளில் பெரும்பாலும் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. பின்னாளில் பல பிரச்சனைகளை அது வரவிடாமல் தடுத்துவிடும். துணையின் மீது மாபெரும் நம்பிக்கையை கட்டமைக்கும் சக்தி அதற்குண்டு. நம்பிக்கை என்கிற மந்திர வார்த்தை இருந்தாலே காதல் தன்னால் வந்துவிடும்.

இங்குதான் பெரும்பாலான பிரச்சனையே. வெளிப்படையாக சொன்னால் வரமாட்டார்கள் என்று சொல்வதில்லை. இந்த இடம் வரை கட்டுக்குள் இருக்கும் விஷயம் இங்குதான் விபரீதமாகி விடுகிறது.

மூன்று உயிர்கள் போய்விட்டது. அதுவும் பெண்கள். உயிர்களை உருவாக்கக்கூடிய வித்து உள்ள உயிர்கள் போய்விட்டது. உயிர் என்னும் அதிசயத்தை உருவாக்கக்கூடிய வித்து போய்விட்டது.

இனிமேல் என்ன பேசி என்ன பயன்?

நெட்வொர்க்கிங்

$
0
0
நெட்வொர்க்கிங் (Networking)



நேற்று Walmart போக வேண்டி இருந்தது. வரும்போது Uber புக் செய்தேன். எவளாவது  மெக்ஸிக்கோகாரி வருவாள் என்று எதிர்பார்த்தால்........ம்ஹும்... நமக்கு எப்பவுமே அடிக்காத அதிர்ஷ்டம் இப்போது மட்டும் அடித்துவிடவா போகிறது?... தலை எழுத்து...

ஜான் என்று ஒரு கென்யாக்காரன் வண்டி ஓட்டினான். இங்கே ஐந்து  மணி தாண்டினால், அத்தனை மாடல் கார்களையும் சாலைகளில் வரிசையாக பார்க்கலாம்.. மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய கார்கள் கூட இன்ச் இன்ச்சாகத்தான் நகரும். ஆதலால் பேசிக்கொண்டே வந்தோம்.

'அமேரிக்கா பிடித்திருக்கிறதா? இங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தார்களா?'என்றான்.

'ஆமாம்.. சுலபத்தில் கிடைக்கிறார்கள்..அதைவிட சுலபமாகவே விட்டுவிட்டு போய் விடுகிறார்கள்'என்றேன். சிரித்தான்.

'ஆம், நானும் கவனித்திருக்கிறேன். எனக்கு இந்தியர்களையும், இந்தியாவையும் மிகவும் பிடிக்கும்'என்றான். இவன் செய்தித்தாள்களே வாசிக்க மாட்டான் போல என்று நினைத்துக்கொண்டேன். இந்தியாவை பற்றி இப்படி விவரம் தெரியாதவர்களிடம் பெருமை பேசினால் தான் உண்டு என்று தோன்றியது. ஆச்சர்யம் என்னவென்றால் 1972 களில் இடி அமீன் சற்றேரக்குறைய 90000 ஆசியர்களை (பெரும்பான்மை இந்திய குஜராத்திக்கள்) வலுக்கட்டாயமாக உகாண்டாவை விட்டு வெளியேற்றியது நிகழ்ந்தது. அந்த உகாண்டாவுக்கு பக்கத்து நாடுதான் கென்யா. அவனது பேச்சில் இது தெரிந்திருப்பதான எந்த அறிகுறியும் இல்லை. வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் பற்றி பேசப்பட்டால் இன்றளவும் குறிப்பிடப்படும் சம்பவம் இது. இவன் மறந்துவிட்டானோ என்னவோ!!

ஐடியில் இருப்பவர்கள் தவிர்ந்து பெரும்பாலான அமேரிக்கர்களுக்கு இந்தியா என்றொரு நிலப்பரப்பு இருப்பது கூட தெரிந்திருப்பது போல் தெரியவில்லை.

இந்த கென்யாக்காரனுக்கு எப்படி தெரிந்தது? அவன் வாயையே கிண்டி தெரிந்துகொள்வோம் என்று தொடர்ந்து பேசினேன். அவனுடைய மனைவி வேலை பார்க்கும் அலுவலகத்தில், நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். முதலாளி ஏதேனும் வேலை சொல்வானாம். அதை எப்படி செய்வது என்று யாருக்குமே தெரியாதாம். ஆனால், அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மட்டும் அரை மணி நேரம் கழித்து அந்த வேலையை கச்சிதமாக‌ செய்து முடித்துவிடுவார்களாம். எப்படி என்று நோண்டினால், தெரிந்தவர்களுக்கு ஃபோன் போட்டு பேசி தெரிந்து கொண்டுவிடுவார்களாம்.

நெட்வொர்கிங் நன்றாக செய்கிறீர்கள் என்றான். "அது ஒன்றுதான் செய்வோம்.. உள்குத்து ஃப்ரீ"என்று நுனி நா வரை வந்துவிட்டதை அடக்குவதற்கும் போதும் போதுமென்றாகிவிட்டது.

'ஏன் அதையே நீங்களும் செய்வதற்கென்ன?'என்றேன்.

'கென்யாவிலோ வேறெந்த நிலப்பரப்பிலோ இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இயல்பு இல்லை. தெரியவில்லை என்று நண்பர்களிடம் போனால், தெரியாமல் ஏன் ஒரு வேலையை எடுக்கிறாய் என்று வண்டி வண்டியாக அட்வைஸ் தான் செய்வார்கள். சொல்லித்தர மாட்டார்கள்'என்றான்.

'இந்தியாவில் வேலை சுத்தம். எந்த இந்திய பொருளை வாங்கினாலும் ரொம்ப நாளுக்கு வருகிறது. அதே போல் மருத்துவம் இந்தியாவில் தரமாக அதே நேரம் சல்லிசாக கிடைக்கிறது. என் உறவில் ஒருத்தி, ஒரு சர்ஜரிக்காக இந்தியா சென்றாள். போகும்போது நாய் மாதிரி இருந்தாள். இப்போது அவளை பார்த்தால் எனக்கே ஆசை வருகிறது'என்றான்.

"டாலரிலும் யூரோவிலும் fees கொடுத்தால் அப்படித்தான் சர்வீஸ் செய்வோம், இதையே ரூபாயில் கொடுத்துபாரடா "என்று மறுபடி நா வரை வந்துவிட்டது.

பெரும்பான்மை (இந்தியாவுக்கு வர வாய்ப்பு கிடைக்காத) மேற்கத்தியவர்களுக்கு  இந்தியா என்றால் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள், அமைதியானவர்கள், குடும்பமாக இருப்பவர்கள், காரமாக உணவுவகைகள், அதிக நேரம் சமையலில் செலவு செய்பவர்கள்  எட்செட்ரா எட்செட்ரா தான் பொது பிம்பம். இந்த பிம்பம், அமேரிக்காவின் சிலிக்கான் வேலியில் கடினமாக உழைக்கும் இந்திய மூளைகளை, குறிப்பாக தமிழ் மூளைகளை பார்த்து அவர்கள் கட்டமைத்துக்கொண்டது எனலாம். (இங்கே தற்போதைய நிலவரத்தில் தமிழர்களை விட தெலுங்கர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றாலும் முக்கால்வாசி போலிகள் தெலுங்கர்களாக இருக்கிறார்கள் என்பது பொது அரங்கில் இந்திய மூளைகள் பற்றி மேற்கத்தியவர்களுக்கு இருக்கும் எண்ணத்தை பன்மடங்கு கீழிறக்குவதாகத்தான் இருக்கிறது).

இந்த பொது பிம்பத்தோடு தப்பித்தவறி இந்தியாவில் சுற்றுலா வந்து தலையிலடித்துக்கொண்டு போய் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று இந்தியாவை தூற்றுபவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்பதுவும் உண்மைதான். 'ஸ்லம்டாக் மில்லியனேர்'படம் அதை உலகம் முழுக்க செய்துவிட்டது.

பிற்பாடு, அவனே "சைனாக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள்.. சைனாவின் பொருட்களில் தரம் இருப்பதில்லை... நெடு நாள் வருவதும் இல்லை.. "என்றான்... சட்டென இலங்கை பக்கம் தனது போர்க்கப்பலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சீனாவின் நினைப்பு வந்தது.... 'ஆமாம் ஆமாம்...  எங்கள் ஊரில் போலி பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு சைனா பஜார் என்று தான் பெயர் வைப்போம்'என்று என் பங்குக்கு வத்திவைத்துவிட்டு அவனுக்கு கேட்காமல் மனதுக்குள் "ஜெய்ஹிந்த்!!!"சொல்லிக்கொண்டேன்.

நம்மவர்கள் அமேரிக்கா வந்தால், கடின உழைப்பாளிகளாகவும், அமைதியாகவும் ஆவதற்கும், உள்ளூரில் ஒருவன் காலை இன்னொருவன் வாருவதற்கும் ஒரு காரணம் இருப்பதாகவே படுகிறது.

"அடுத்தவன் ஏமாற்றமாட்டான்"என்று நம்பிக்கை வருகையில் நம்மவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக நேர்மையானவர்களாக இருப்பதாகத்தான் படுகிறது. உள்ளூரிலேயே  (பெண்கள் விஷயம் தவிர) ஏனைய எல்லா விஷயங்களிலும், "அடுத்தவன் ஏமாற்றமாட்டான்"என்கிற எண்ணம் வலுப்பெறுகையில் அவனவன் வேலையை அவனவன் செய்துவிட்டு தன் போக்கில் செல்வதை பார்த்திருக்கிறேன்.

ஏமாற்றம் இல்லை என்கிற நம்பிக்கையை விதைக்க வேண்டி இருக்கிறது. அவ்வளவுதான்.

வல்லரசாகிவிடுவோமா தெரியாது.. ஆனால் சைனாவை தூக்கி சாப்பிட்டு விடலாம்.. இப்போதைக்கு நம்முடன் போட்டி போடும் ஒரே எதிரி சைனா தான். பாகிஸ்தானை ஒரு ஜோக்கராகத்தான் பார்க்கிறேன்.. அது ஒரு கொசு. வாஸ்து பார்த்து, சனி மூலையில் ஒரே ஒரு பாம் போட்டால் மொத்த பாகிஸ்தானும் காலி. அதுவும் தவிர, உலக அரங்கில் இந்தியா அமைதியான, ஜனநாயக நாடென்று தொடர்ந்து நிறுவ பாகிஸ்தான் என்கிற கொசுவின் லேசான கடி அவ்வப்போது தேவை. அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும், எல்லையில் முட்டுச்சந்தாக பார்த்து ஒரு கன்னிவெடியை நாமே வெடிக்க வைத்துவிட்டு "பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறுகிறது"என்று நாமே சீன் க்ரியேட் செய்ய வேண்டும். அப்போதுதான் அமேரிக்கா அண்ணனிடமும், ரஷ்யா சித்தியிடமும் போய் தலை தொங்க போட்டு எமோஷனல் அட்வான்டேஜ் எடுக்க முடியும்..

இப்போதைக்கு வளர்ச்சி தான் தேவை.

திட்டம்

$
0
0
திட்டம்



எனக்கு காலையில் ஐந்தரை மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை. இன்சோம்னியா என்றெல்லாம் இல்லை.

அதனால், காலையில் ஆறரைக்கெல்லாம் அலுவலகம் வந்துவிட முடிகிறது. அலுவலகம் வந்தவுடம் முதல் 20 நிமிடங்களுக்கு செய்தித்தாள் மேய முடிகிறது. தினமலர், தினமணி இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. பிறகு அலுவலக வேலைகள் மாலை மூன்றரை மணி வரையிலும். செப்டம்பர் 2014ல் அமேரிக்கா வந்த நாளில் இருந்து, இன்று வரை இதே தான். ஆறரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடுவதால் மாலை மூன்றரைக்கெல்லாம் ஷட்டரை இறக்கிவிட்டு, ஜூட் தான்.

இதனால் நிறைய நேரம் கிடைக்கிறது.

நாலறைக்கு ஜிம் போனால் ஒன்றரை மணி நேரம் ஜிம்மில் இருக்கலாம். தடுக்கி விழுந்தால் Sandy Springs. அங்கே இருக்கிறது LA Fitness. அமேரிக்காவில் இது ஒரு ஜிம் சங்கிலி. இதே பெயரில் அமேரிக்க முழுமைக்கும் ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் சேர்ந்துவிட்டால், அதே ஐடி கார்டை வைத்து, அமேரிக்காவின் எந்த மூலைக்கு போக நேர்ந்தாலும் அங்கே அருகாமையில் இருக்கிற ஒன்றில்  நுழைந்துவிடலாம்.

உடை மாற்ற தனி அறைகளுடன் கூடிய பாத்ரூம், நீச்சல் குளம், கூடைப்பந்து, ஏரோபிக்ஸ், சைக்ளிங் என்று ஏகத்துக்கும் வைத்திருக்கிறார்கள்.

நாலரை மணிக்கு ஜிம் செல்வதில் ஒரு செளகர்யம் இருக்கிறது.

ஆறடி உயரத்தில், கூர்மையான மூக்கு, நீள்வாக்கில் முகம், சிறிய இதழ்கள் என்று ஒரு அமேரிக்க  பெண் ஜிம்முக்கு வருவாள்.. Cross Breed மோகத்தில் பரிசோதனைக்கூடத்தில் Penelope Cruz ஐயும், Maria Sharapova வையும் சேர்த்து பிசைந்து செய்துவிட்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு இருப்பாள். எட்ட நின்று வேடிக்கை பார்த்தபடி நம் வேலையை செய்யலாம். அதென்னமோ, இது மாதிரி மாடல்களை பார்த்துக்கொண்டே செய்தால் நேரம் போவதே தெரிவதில்லை. பின்வரும் அத்தனையையும் ஒவ்வொன்றும் தலா  இரண்டு செட்கள் என்று ஒன்றரை மணி நேரத்தில் கவர் செய்ய முடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Low back extension, unilateral row,bench press, torso rotation, dual pulley row, chin dip assist, dual pulley pull down, free motion row, seated row, seated leg press, incline press, vertical chest, hammer strength decline press, pec fly, chest press, kneeling leg curl, seated leg curl, leg extension, standing calf, prone leg curl, glute machine, triceps extennsion, seated dip, overhead tricep, abdominal crunch, isi lateral row, low row, isolayeral wide chest, incline press, decline press, hammer strength, ground base squat

இப்படி சொல்வதால் "நட்புக்காக"சிமரன் - சரத் ரேஞ்சுக்கு இருக்குமென்று நீங்கள் கற்பனை செய்தால் அதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல..

அந்த அமேரிக்க Cross Breed க்கு ஒரு பாய் ஃப்ரண்டு இருக்கிறான். ஆர்மியில் காலை உடைத்துக்கொண்டவன். விந்தி விந்திதான் நடக்கிறான். அவளுடன் அவனும் வருவான். இருவரும் சேர்ந்தே தான் உடற்பயிற்சி செய்கிறார்கள். இந்த இணைப்பு தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

ஆங்...ஆர்மி என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் நான் பயணித்த Uber ஓட்டியது ஒரு பழைய ஆர்மிக்காரன் தான். Trinidad ஐ சேர்ந்தவன். அவன் வாயை கிண்டியதில் நிறைய தகவல்கள் கிடைத்தன. இந்த ஊரில் ஆர்மியில் வேலை பார்த்தால் அவ்வளவு சலுகைகள் வசதிகள் தருகிறார்கள்.. அதற்கெனவே ஆர்மியில் வாலன்டியராக சேர்பவர்கள் இங்கே அதிகம்.. அது பற்றி வேறோரு சமயம் எழுதுகிறேன். திட்டம் பற்றி திட்டமிட்டதில் ஆர்மி பத்தி உள்ளே நுழைந்துவிட்டது பாருங்கள்!!...

நம்மூரில் ஜெனிலியா போல் பெண் இருந்தால், அவளது பாய் ஃப்ரண்டு கரிக்கட்டை போல் இருப்பான் . இவள் எலக்ரட்ரானிக்ஸும், கம்ப்யூட்டரும்  படித்தால், அவன் ஹோட்டல் வேலையும், பகுதி நேரமாக ஜிம்மில் ட்ரெயினராகவும் இருப்பான். இந்த இணைப்பை எல்லாம் புரிந்துகொள்ளவே முடியாதது போல் இருக்கும்.

ஆனால் இந்த Cross Breed ஐ புரிந்துகொள்ள முடிகிறது. ஒரே விதமான ஆர்வங்கள். பார்க்கப்போனால், இங்கே அமேரிக்காவில் ஜோடியாக பார்க்க முடிகின்ற எல்லாரிடமும்  பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது.

இந்த பின்னணியில் இந்த தேசத்தால் மட்டும் எப்படி ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் சர்வ சாதாரணமாக 60 தங்கங்கள் உளபட இரு நூற்று சொச்சம் பதக்கங்கள் வெல்லமுடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நம்மூரில் என்றால் "நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இரு.. ஒரு பொண்ணுக்கு உன்னை புடிக்கணும்.. காதலுக்கு கண் இல்லை பாஸ்.. எதையுமே பார்க்காம வரதுதான் காதல்"என்றெல்லாம் வண்டி வண்டியாக பேசி வெறுப்பேற்றுவார்கள். நாட்டின் பெரும்பான்மை குற்றவாளிகள் அத்தனை பேருக்கும் மனைவி என்று ஒரு பெண் இருப்பதும், அவர்களுள் மிகப்பலருக்கு கள்ளக்காதலிகள் இருப்பதுவும், நாடு முழுவதும் அறியப்பட்ட பல புகழ்பெற்ற இந்தியர்களான சல்மான் கான், கரன் ஜொஹர், மிலிந்த் சோமன், அப்துல் கலாம் போன்றவர்கள் தனியர்கள் என்பதையும் இங்கு யார் கண்ணுக்கும் பிரதானமாக தெரிவது போல் தெரியவில்லை. நிர்பயா கேஸில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்கிலிருந்து, சமீபத்தில் கைதான பங்களூரின் கோகுல் வரையான எல்லாருக்கும் மனைவி, கள்ளக்காதலி இருந்தார்கள் என்பதெல்லாம், இந்த இந்திய‌ தேசத்தை பொறுத்தவரை வெறும் செய்திகளே.

ஒலிம்பிக் வந்தால் ஒட்டுமொத்த 180 கோடி மக்களின் மானமும் கப்பலேறுவதைக் கூட கலாய்த்துவிட்டு போவார்கள்.. அமேரிக்கா அமேரிக்காவாக இருப்பதற்கும், இந்தியா இந்தியாவாக இருப்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன...

எதையோ பேசத்துவங்கிவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன் பாருங்கள்!!!

ஜிம் முடித்ததும் ரூமுக்கு வந்தால், எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவலுக்கு புதியதாக எதையேனும் கிறுக்குவதிலும், ஏற்கனவே கிறுக்கியதை சரி பார்ப்பதிலும் இரவு எட்டாகிவிடுகிறது. அப்புறமென்ன, மறு நாள் மதிய உணவுக்கு தயார் செய்து இரவே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு கோப்பை பால் குடித்தால் மணி 9 ஆகிவிடுகிறது. அதோடு எனது நாளும் முடிந்துவிடுகிற‌து. படுக்கப்போய்விடுவேன்.

மொத்தத்தில் ஒவ்வொரு நாளின் நேரக்கழிதலிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு திட்டம் இருக்கிறது. இதனால் பல விஷயங்களை ஒருங்கிணைக்க முடிகிறது. ரொட்டீன் என்றெல்லாம் இல்லை. நேரம் கிடைக்கையிலெல்லாம், அறையில் தங்காமல், கோயில், ட்ரக்கிங், சினிமா, ஷாப்பிங் என்று அறை நண்பர்களுடன் போய்வருவதும் உணடு.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது தானே நம் எல்லோரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்

திட்டமிடுதல் பலவகையிலும் பலனளிக்கிறது. நிறைய Productive ஆக இருக்க முடிகிறது.

வழி மாறி போவதற்கும், திசை மாறி போவதற்கும் மிகப்பல விஷயங்கள் இருக்கும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இந்த திட்டமிடல் நம்மை கட்டுக்குள் வைக்கிறதாக நான் எண்ணுகிறேன்.

ஏதோ நண்பர்களுடன் போனோம், வந்தோம், ஏதேதோ அர்த்தமில்லாமல் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் பேசினோம்.. நான்கைந்து புகைப்படங்கள் எடுத்து முக நூலில் பகிர்ந்தோம் இலக்கின்றி நாட்களை கடத்தினோம், திரும்பி பார்த்தால் ஒரு வருடத்தில் என்னென்ன செய்தோம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் திணறினோம் என்றில்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் கூடுகிறது.. சார்த்தர் சொல்லும் ஒரு Essence கிடைக்கிறது...

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடைய ஒரு இலக்கு இருக்கிறது. அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதற்கும் நம் ஒவ்வொரு நாளுக்கும் இருக்கும் தொடர்பை அவதானிக்க முடிகிறது. ஆதலால், கறை மட்டும்தான் நல்லது என்றில்லை ஐயா... திட்டமும் நல்லதுதான்....

காலம்

$
0
0
காலம்


பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. எங்கள் குடும்பத்தில் ஒரு ஐந்து வருடங்கள் முன்பு வரை ஒருவர் மாற்றி ஒருவர் பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தோம்.. அதனால் எல்லா வருடங்களிலும், இந்த மாதங்களில் , அடிவயிற்றில் பந்துகள் உருளத்துவங்கிவிடும்...

இப்போது அப்படி இல்லை.. எங்கள் குடும்பத்தின் கடைசி தங்கை பொறியியல் சேர்ந்தாகிவிட்டது என்பதால் குடும்பமே இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறது. காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது? காலம் என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருகிறது.

மகாபாரதத்தை சிறுவயதில் டிவியில் பார்த்திருந்தால் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். துவக்கத்தில் காலம் கதை சொல்வது போல் இருக்கும். (பாண்டவர் - கெளரவர் போரின்போது, திருதிராஷ்டிரனின் மந்திரி ஞானக்கண்ணில் பார்த்து கதை சொல்வார் என்பது வேறு விஷயம்).

If there is one which is immortal, it is Time என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்..

அந்த வாக்கியம் கொஞ்சம் தத்துவ செரிவுடன், கொஞ்சம் அமானுஷ்ய தன்மை வாய்ந்ததாக வேறு இருக்கவும் நானும் கூட அவ்வப்போது அதை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களிடம் பீதியை கிளப்பியிருக்கிறேன்

எல்லாம் பாழாய்ப்போன அந்த யூக்லீடியன் ஜியாமெட்ரியை படிக்கும் வரை தான். படித்த பிறகு ........................ நாசமாய் போக...

சுருக்கமாக சொல்வதானால், Time is Mortal. காலம் இறக்கக்கூடியது தான். இன்னும் சொல்லப்போனால், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் நீளவும், சுருங்கவும் கூடியது.

காலம் பிரச்சன்னமான பிறகு தான் அண்டங்களும், கோள்களும் பிறந்தது என்கிறது வேத வானியல். வெவ்வேறு பால்வெளியில் காலம் சுருங்கவும், நீளவும் செய்கிறதாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நினைத்தால் புல்லரிக்கிறது. மனிதர் மூளையையே உடம்பாக வைத்திருந்திருக்கிறார்.

'உனக்கேன் இந்த வேலை? யூக்லீடியன் ஜியாமெட்ரியை ஏன் நோண்டினாய்?'என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு இங்கிருந்தே கேட்கிறது... நோண்ட காதலி என்று யாரும் இல்லையே... வேறு எதைத்தான் நோண்ட.. சும்மா ஒண்ணும் நோண்டவில்லை...

எம்.பி.ஏ கணிதத்தில், முக்கோணத்திற்கு பருமன் அதாவது வால்யூம் இருக்கிறது என்று இருக்கிறது. அதை யோசிக்கையில், திடீரென்று முக்கோணம் குறித்து ஒரு வாதத்தில் கடுப்பாகி, நான் ஒரு நண்பனை அடிக்கப்போக, பெரிய தகராறு ஆகிவிட்டது. அவன் பக்கத்து பள்ளியிலிருந்தெல்லாம் ஆள் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். இது நடந்தது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில். பனகல் பூங்கா எதிரால் இருக்கிறதே. அதே தான்.. அப்போதெல்லாம் அது நந்தவனம்..பார்க் அல்ல.. பஸ் ஸ்டாப்... ஏனெனில் அந்தப்பக்கம் சாரதா வித்தியாலயா மேல் நிலைப்பள்ளி வேறு... மாலை மூன்று மணி தாண்டினால், பச்சை பசேல் என்று (இப்போதும் பார்க் அல்ல.. பள்ளி பெண்களைத்தான் சொன்னேன்..ஹிஹிஹி) ஒரே தாவணிக்கனவுகள் தான்...

பார்த்தீர்களா, பேசிக்கொண்டே வேறு எங்கோ வந்துவிட்டேன்.. மனம் என்னும் குரங்கு லம்போர்கினி கார் எல்லாம் வைத்துக்கொண்டு, லைசன்சு இல்லாமல் ஓட்டும் போல... கண் இமைக்கும் நேரத்தில் கன்னாபின்னாவென்று எங்கெங்கோ போய்விடுகிறது...

முதலில் இரண்டு கோணங்கள் மட்டுமே இருந்தது.. இது நடந்தது கணிதத்தின் ஆரம்ப கட்டங்களில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்கிற ரேஞ்சுக்கு கிரேக்க கணித மேதை யூக்லிட் இருந்திருக்கிறார். அவருடைய கணிதமே நாம் ஆரம்பத்தில் பயன்படுத்திய கணிதம் என்கிறார்கள் இதுவரை ஏரியாவுக்கான ஃபார்முலா மட்டுமே மனனம் செய்ய வேண்டி இருந்திருக்கும். கணித பேப்பரை ஜமாய்த்துவிடலாம். அப்போது உருவானது முக்கோணம். இதுவும் யூக்லிடின் கைவண்ணம் தான். மூன்று கோணங்கள் , அதாவது x, y, z வந்துவிட்ட பிறகு தான் வால்யூமெல்லாம் வந்தது. அதுவரை கூட ஓகே.. ஓரளவுக்கு மார்க் வாங்கி தேறிவிடலாம்.. ஃபார்முலாவில் கூடுதலாக வால்யூம். அவ்வளவுதான். கொஞ்சம் முக்கினால் நினைவுக்கு வந்துவிடும்.

இந்த மனிதர் ஐன்ஸ்டைன் வந்தார் பாருங்கள்...கூடவே அத்தனை சனியையும் கூட்டி வந்துவிட்டார்.. ஆறாவது கிரகமாக, தன் போக்கில் சுற்றிக்கொண்டிருக்கும் சனியை பூமிக்கே கூட்டிவருவதில் இந்த மனிதருக்கு அப்படியென்ன ஆர்வம் என்று தெரியவில்லை... இந்த ஆள் வந்ததுக்கப்புறம் தான் எல்லா குழப்பமும்.. இவர் சிலவற்றை சொல்லப்போக யூக்லீடியன் ஜியாமெட்ரி புஸ்ஸாகிவிட , அதை தூக்கி பரணில் போட்டுவிட்டார்கள்...

அதன்பிறகு சர்வமும் ஐன்ஸ்டைன் மயம்... முக்கோணத்திற்கே பருமன் அதாவது வால்யூம் வந்துவிட்டது. குழப்பமோ குழப்பம்.

அதுவரை முக்கோணத்துக்குள் உள்பாகை மொத்தம் 180 மட்டுமே என்று ஸ்திரமாக நம்பி மார்க் வாங்கியவர்கள், அரியர் வைக்க‌ ஆரம்பித்தார்கள். எப்படி?



பூமி பந்து போல் இருக்கிறதாம். அதில் ரயில் தண்டவாளம் போல் ஒட்டவே ஒட்டாத கோடுகள் வரையவே முடியாதாம். ஏனெனில் அந்த இரண்டு கோடுகளும் சென்று ஹெமிஸ்பியரில் முட்டிக்கொள்ளுமாம். ஆதலால் முக்கோணத்தின் உள்பாகை 180க்கும் குறைவாக இருக்கலாமாம். விளங்கிச்சு.

ஆக மொத்தத்தில் கணித பாடம் என்று சொல்லி சரித்திர பாடம் தான் எடுக்கிறார்கள்.

இந்த ஐன்ஸ்டைன், யூக்லீடியன் போன்றவர்களெல்லாம் மோசமானவர்கள்... இவர்களுக்கு வருகிறது என்பதற்காக நோண்டி எழுதிவைத்துவிட்டு போய்விட்டார்கள்.. நாம் அரியர் வாங்கிக்கொண்டிருக்கிறோம்...அரியர் கிளியர் செய்து , அமேரிக்கா வந்ததற்கு தண்டனையாக என் இத்துப்போன சமையலை நானே சாப்பிட வேண்டி இருக்கிறது...

இதை செய்வதற்கு பேசாமல் மாடு மேய்க்க போயிருக்கலாம்... மாடுகளை மேய விட்டுவிட்டு கண்ணில் பட்ட பெண்ணை சைட் அடித்து, கையில் கிடைத்த பழங்களை உண்டுவிட்டு, மல்லாக்க படுத்து, நட்சத்திரங்களை எண்ணி...

அடச்சீ.. மறுபடி கணக்கேவா... இந்த வெட்கங்கெட்ட மூளை மேய்ந்தால் புத்தகங்களைத்தான் மேய்வேன் என்று அடம்பிடிக்கிறது...

இறுதியாக‌ உங்களுக்கு நான் சொல்லிகொள்ள விழைவது யாதெனில், இனிமேல்  யாரிடமும் 'எனக்குன்னு ஒரு காலம் வரும்'என்று சொல்லாதீர்கள்.. அந்த காலம் வராமலே போகலாம்... அது அதை அவ்வப்போதே பைசல் பண்ணிவிடவேண்டும்..

அட்ஜஸ்ட்

$
0
0
அட்ஜஸ்ட் 


ஹிஹிஹி... தூக்கம் வரவில்லை.. கொஞ்சம் பழைய செய்திகளை புரட்டிக்கொண்டிருந்தேன்.. பின்வரும் செய்தி கண்ணில் பட்டது.. அகால வேளை என்பதால் இது பட்டதா தெரியவில்லை.. (பாருங்கள்.. அகால வேளை என்றால் ஒரு Zarine Khan அல்லது ஒரு Vidya Balan... அட!! அட்லீஸ்ட் ஒரு Keerthi Suresh ஆவது கண்ணில் பட்டிருக்கலாம் தானே..எனக்கென்று ஏந்தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை.. கடவுளே.. டிநகரில் அந்த பாலத்தினோரம் உள்ள கடையில் தான் கண்ணாடிக்கு ஆர்டர் தந்தேன்.. என்ன செய்வினை வைத்தானோ படுபாவி..)

பங்களூரில் ஒரு தம்பதி திருமணமான மூன்றே மாதங்களில் பிரிந்திருக்கிறார்கள். காரணத்தை கேட்டால் நீங்கள் சிரிப்பீர்கள். பெண்ணுக்கு வளர்ப்பு நாய்கள் மீது பிரியம். நான்கு நாய்கள் வைத்திருந்திருக்கிறார். கல்யாணத்திற்கு பிறகு படுக்கையிலும் நான்கு நாய்களுடனே தான் தூங்குவேன் என்றிருக்கிறார். ஒரு நாள் , ரெண்டு நாள் என்று ஹாலில் சோபாவில் தூங்கி பொறுத்துப் பார்த்திருக்கிறார் கணவர். மூன்று மாதத்திற்கு பிறகும் அதே நிலை என்றவுடன் பிரிந்துவிட்டார்.

இறுதியாக நாயா? புருஷனா? என்று ஜட்ஜ் கேட்டாராம். நாய் தான் என்றாராம் அந்தப் பெண். போகிற போக்கில் கன்னத்தில், கணுக்காலில் நக்குவது, ஒரு கால் தூக்கி ஒண்ணுக்கடிக்கும் திறமையெல்லாம் அவருக்கு வரவில்லை என்று சொல்லாமல் விட்டாரே...

ஒருவகையில் எனக்கு இந்த பிரிவினை ஓகேவாகத்தான் படுகிறது. அட்ஜஸ்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு சின்னூன்டு வன்மத்தை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து, அதை கொஞ்சம் கொஞ்சமாக வளர விட்டு, ஐந்தாறு வருடங்களில், பங்களூர் கோகுல் போல் கொலையில் முடிந்து கொலை குற்றவாளி ஆவதற்கு, பேசிப்பார்த்து பிரிந்துவிடுவது எத்தனைக்கோ மேல்.

(பங்களூர் கோகுலா?. என்று கேட்பவர்கள், கோகுல் பற்றி பின்வரும் இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்...)

http://ramprasathkavithaigal.blogspot.com/2016/01/blog-post_23.html

இக்காலத்தில், ஜாதி , ஜாதகம், குடும்ப அந்தஸ்து போன்ற இத்துப்போனதுகள் ஒரு விவாகரத்தில் தான் முழுமையாக துடைத்தெறியப்படுகின்றன. இவை ஏதும் இல்லாமல், விவாகரத்துக்கு பிறகு அடுத்த துணையை தேடிக்கொண்டு ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம். ஆதலால் கொலை வரை போகாமல் விவாகரத்தில் முடிவது ஓகே தான்.

இன்னொரு வகையில் அந்த ஆணை கொஞ்சம் மரியாதையுடன் பார்க்க தோன்றுகிறது. மனைவியுடன் இணக்கமில்லை என்றவுடன், அதையே காரணமாக வைத்து, பிற பெண்களிடம் தன்னை பரிதாபத்திற்குரிய ஆடவனாக காட்டிக்கொண்டு, அதன் மூலம் முறை தாண்டி சென்றுவிடாமல், ஒத்துவரவில்லை என்றவுடன் நேர்மையாக பிரிய முடிவு செய்திருக்கிறார். அதாவது முறையாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டால் மட்டுமே இன்னொரு பெண்ணுக்கு முறைப்படி தகுதியாக முடியும் என்கிற முறைப்படுதலுக்கு உட்பட்டிருக்கிறார்.

தெளிவான முதிர்ச்சியான அணுகுமுறை. இந்த மனிதருக்கு தனிப்பட்ட முறையில், ஆக்கப்பூர்வமான ஆர்வங்கள் , திறமைகள் இருக்குமோ என்று தெரிந்துகொள்ள ஆவல் எழுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் ஏன் இப்படி நடக்கிறதோ தெரியவில்லையே ஆண்டவனே என்றெல்லாம் அதற்கு ஒரு Spiritual அடையாளம் தந்து புலம்புவதற்கு பதிலாக‌
இப்படி ஒரு சூழல் வரப்போய்த்தான், அந்த ஆணின் இந்த முறைப்படுதலுக்கு உள்படுவது என்கிற உன்னத நோக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதில், அடுத்த தளத்துக்கு நகர்வதற்கான அர்த்தங்கள் கிடைப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

உண்மையை சொல்லப்போனால், இப்படிப்பட்ட வாய்ப்பு இல்லாலொழிய, இன்றைக்கு மனிதர்களின் நிஜ முகங்களை காணக்கூடிய வாய்ப்பை நாம் யாருமே பெருவதற்கில்லை எனலாம். அதாவது , நிஜ முகம் ஒரு அசம்பாவிதத்தில் தான் தெரிய வருகிறது என்பது சோகத்திலும் சோகம்.. அத்தனைக்கு போலி முகங்களுடன் தான் எல்லோருமே வளைய வருவது போல் இருக்கிறது. இத்தனை திட்டமிட்டு ஒரு முறைப்படுதலுக்கு உட்படும் ஆண் நான்கு சுவற்றுக்குள் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தியிருப்பார் என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கிற அதே நேரத்தில், அப்படியே கொடுமைப்படுத்தியிருப்பாரேயானால் நாய் தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தைரியம் உள்ள ஒரு பெண், அதை போலீஸுக்கு கொண்டு சென்றிருக்கலாம். அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதுவும் யோசிக்க வைக்கிறது.

இப்போதெல்லாம் லேசாக கத்தினாலே கையடக்கமாக வைத்திருக்கும் மொபைலில் ரெக்கார்டு செய்துவிடுகிறார்கள். டெக்னாலஜியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். மூளை இருப்பவரக்ளுக்கேற்ப டெக்னாலஜியின் பயன்பாடு வளையும். பயபுள்ளைக... இதுக்குத்தான் காமிரா, மிக் எல்லாம் பாத்துப்பாத்து வாங்குதுக போல. ரொம்ப விவரமாத்தான் இருக்காய்ங்க..

அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றுதான். ஆனால், இது போன்ற விஷயங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள அனேகம் பாடங்கள் கிடைக்கிறது தான்.

இறுதியாக ஒன்று.

ஹ்ரித்திக் ரோஷன் போல் ஒரு ஆண் தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்பலாம் தான். ஆனால், எத்தனை பெண்களால் தனது பிள்ளையை ஹ்ரித்திக் ரோஷன் போல் வளர்த்து ஆளாக்க முடியும்? எதிர்பார்ப்பு என்பதற்கு இது தான் எல்லை என்று நான் நினைக்கிறேன். தோன்றியதை எல்லாம் அல்லது விரும்பியதை எல்லாம் எதிர்பார்ப்பதற்கில்லை. எதிர்பார்ப்புகளுக்கு தர்க்க ரீதியிலான சாத்தியக்கூறுகளை அளவிடவில்லையெனில், ஒரு எதிர்பார்ப்பு நம்மை குழிக்குள் கூட தள்ளிவிடக்கூடும்.

தலித் - சுய அழிப்பு

$
0
0
தலித் - சுய அழிப்பு



விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கும் அந்த இருவருமே தலித் தான். இருவருமே ஐ.டியில் வேலை செய்பவர்கள். திருமணமான அடுத்த நாளிலேயே அந்த பெண் மொபைலும் கையுமாக இருந்திருக்கிறார். துவக்கத்தில் ஏதோ கேம் என்று நினைத்தவருக்கு அடுத்த நாளில் மனதில் பொறி தட்ட நோண்டியிருக்கிறார். விஷயம் வெளியே வந்துவிட்டது.

விஷயம் இவ்வளவு தான். அந்த பெண் நள்ளிரவில் சில ஆண்களுக்கு மேஸேஜ் செய்திருப்பது கண்டுபிடித்திருக்கிறார். அதை தொடர்ந்து அந்த பெண்ணின் அரை டஜன் முன்னாள் கலாபக் காதல்களையும் கண்டுபிடித்திருக்கிறார். இதிலென்ன என்கிறீர்களா? விரசமான மேஸேஜ்கள் அந்தப்பக்கமிருந்து வர, இந்தப்பக்கம் அந்த பெண் அதை ஊக்குவிப்பது நடந்திருக்கிறது.

இதிலும் என்ன என்கிறீர்களா? மீண்டும் முதல் வாக்கியத்தை படியுங்கள். "விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கும் அந்த இருவருமே தலித் தான்."

தலித் சமூகம் மறைந்து மறைந்து வாழ்வதால், இன மக்கள் சூழ வாழும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. மற்ற ஆதிக்க சமூகத்தினருடனேயே வாழ வேண்டி இருக்கும். அப்படி வாழ்ந்தால் புறக்கணிப்பு என்றேனும் நடந்தே தீரும். புறக்கணிக்கப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டால், பல விஷயங்கள் தெரிய வராது. தகவல்கள் இல்லாமையால், சிந்தனை வராது. அதுதான் செக்குமாடாவதற்கு முதல் படி. அதை முதலில் அடித்து உடைக்க வேண்டுமன்றால், புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.

தலித் சமூகத்தில், படித்து முன்னுக்கு வருபவர்களே சொற்பம். இள ரத்தங்களில் பாதி பேர் இளவரசன், கோகுல் ராஜ் போல் வயதுக்கோளாறில் சிக்கி மாள்பவர்கள். எஞ்சிய பேர் ரோஹித் வெமுலா போல், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்காமல் தூக்கில் தொங்கிவிடுபவர்கள். மற்றவர்கள், தலித் சமுதாயத்தை அடிமைகளாக பயன்படுத்திக் கொள்ள உயர் ஜாதிகள் அவர்களுக்கு பழக்குவித்த‌ செக்கு மாட்டு , மற்றும் மந்த புத்திக்கு பலியானவர்கள். அவர்களுக்கு படிப்பு வராது. புத்தகத்தை பார்த்தாலே உறக்கம் வரும். எஞ்சிய கொஞ்சம் பேர் மட்டுமே படித்து, பட்டம் பெற்று, அரசாங்கத்திலும், தனியார் தொழில் துறைகளிலும் வேலையில் அமர்பவர்கள்.

ஆனால் இதிலும் பிரச்சனை என்னவென்றால், அந்த கொஞ்சம் பேரிலும் ஒரு சிலருக்கு காதல் வந்து வேற்று ஜாதிப்பெண்களை மணந்துகொள்வார்கள். அது கூட அந்த வேற்று ஜாதி பெண்களின் Liberal thinking தான்.

ஆக, நன்கு படித்த வேலையில் இருக்கிற கை நிறைய சம்பாதிக்கிற மணமகன்கள் தலித் சமூகத்தில் மிக மிக சொற்பம். அதேபோலத்தான் தலித் பெண்களின் நிலையும். இதில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதாலும் , கல்வியை சார்ந்தே சமூகமும், அவர்களது வாழ்க்கை முறையும் கட்டமைக்கப்பட்டிருப்பதாலும் விகிதாசார ரீதியில் தலித் சமூகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட சற்றே கூடுதல் தான்.

இந்த பெண்களின் பெரிய பிரச்சனை, அவர்களுக்கு இணையாக படித்த தலித் மணமகன்கள் கிடைப்பதே. ஆரிய கலப்பு நிறத்தின் அடிப்படையிலான அழகியல் அதாவது "சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்"ரீதியிலான அழகியல் மலிந்த நம் சமூகத்தில், சமூக அடையாளமான திராவிட நிறம் பெரும்பாலும், தலித் பெண்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறது. அப்படியே ஈர்த்து வேற்று ஜாதி ஆண்களுடன் காதல் வந்தாலும் அது கல்யாணம் வரை பிழைப்பது சொற்பம்.

இந்த பின்னணியில் தலித் மணமகள்களுக்கு, தகுதியான மணமகன்கள் இந்த தலித் சமூகத்தில் இல்லை என்பதுதான். பொறியியல் படித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணுக்கு ஏசி மெக்கானிக் படித்தவனை கட்டிவைப்பார்கள். வெறு வழியில்லை. இந்த பின்னணியில் தான் மேற்சொன்ன மிக மிக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்த‌ பெண், தனக்கு ஆகப்பொறுத்தமாக இருக்கிற, படிப்பு, வருமானம், குடும்ப பின்னணி என எல்லாவற்றிலும் பல படிகள் மேலே இருக்கிற பையனுக்கு மனைவியான ரெண்டாவது நாளே தலித் சமூகத்தை மட்டம்  தட்டும் வேற்று ஜாதி பையனுடன் அகால வேளையில் கடலை போட்டிருக்கிறார்.

பையன் சரியாக இருந்தால், பெண் தவறாக போக வேண்டியில்லை, கணவனிடம் இல்லாததை தேடித்தான் மனைவி வேறு ஆண்களை நாடிச் செல்கிறாள் என்பன போன்ற வாதங்கள் இங்கே எழ வாய்ப்பே இல்லை. ஏனெனில், பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த இந்த திருமணத்தின் இரண்டாவது நாளில் இருந்தே இவரது நடத்தையில் சந்தேகமுற்று கண்காணிப்பு வளையத்துக்கு வந்திருக்கிறார் இவர்.

மாட்டிக்கொண்ட பிறகு கேட்டதற்கு "ஐ.டி துறை கலாச்சாரமாம்"அது. அதை மணமகன் புரிந்துகொள்ளவில்லையாம். மணமகனுக்கு பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும் இல்லையாம். பரந்த மன‌ப்பான்மையை விளக்கு பிடித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் யாருக்கும் இல்லை. பரந்த மனப்பான்மையை நிரூபிக்க வெகுபல தளங்கள் இருக்கின்றன. அந்த வாதத்திலும் மிக பெரிய ஓட்டை. இவர் கடலை போட்ட அந்த ஆண்கள் யாரும் இவர் வேலை பார்க்கும் ஐடி துறையே இல்லை. ஒருத்தர் மார்கெட்டிங், இன்னொருவருக்கு சவுதியில் வேலையாம். இன்னும் ஒருவன் தோழியின் கணவன். இத்தனைக்கும் இந்த பெண்தான் இவர்கள் ஒட்டுமொத்த 2000 பேர் கொண்ட குடும்பத்தில் ஐ.டியில் நுழைந்த முதல் பொறியியல் பட்டதாரி. வேலூரில் உள்ள ஆக்சிலியம் பள்ளியில் படித்தவர். பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்பதால், மகள் என்ன செய்திருக்கிறாள் என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனும்போது மகள் சொல்வதையே அப்படியே நம்பியிருப்பதோடு நில்லாமல், மகளை சப்போர்ட் வேறு செய்கிறார்கள். கேட்டால், "ஆணாதிக்கமாம். பெண் சுதந்திரத்திற்கான போராட்டமாம்.. மகளின் போராட்டத்திற்கு துணை நிற்கிறார்களாம்."..

விளைவு, விவாகரத்தில் இழுபறி.

தலித் சமூகத்திற்கு ஏதய்யா சுதந்திரம்? நாடே ஒன்று கூடி ஒடுக்குகிறது தலித் சமூகத்தை.. இதில் என்னய்யா பெண் சுதந்திரம் வேண்டி இருக்கிறது? தலித் சமூகத்தில் ஆண் மட்டும் என்ன சுதந்திரமாகவா சுற்றுகிறான்? இரட்டை குவளை அவனுக்கும் தானே தரப்படுகிறது?. வளர்ச்சி அல்லவா இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த குறிக்கோளாக இருக்க வேண்டும்? அடையாளம் அல்லவா குறிக்கோளாக இருக்க வேண்டும்? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், ஆண் பெண் இருவருமே அடிமைகளாகத்தானே நடத்தப்படுகிறார்கள். இதில் என்ன சுதந்திரம்? யார் சுதந்திரம்? யாரிடமிருந்து சுதந்திரம்? இப்படியெல்லாம் தலித் சமூகத்துக்குள்ளிருந்து குரல் கேட்டால் வேடிக்கையாக இருக்கிறது.

நன்றாக படித்து, அமேரிக்கா போன்ற வெளி நாடுகளில் பணி செய்ய வாய்ப்பு கிட்டியதும் அதோடு ஆரிய ரத்த அழகியல் அளவீடுகளில் மயங்கி வேறு ஜாதி பெண் பின்னால் செல்லாமல், ஜாதிப் பெண்ணுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு முன்னேறிய தலித் ஆண் நினைக்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது இந்த பெண்ணும், இவரது குடும்பமும் செய்வது. வளர்ந்து வரும் ஒரு சமூகத்தின் இளைய தலைமுறை, தன் மீது தானே சேற்றை வாரி போட்டுக்கொள்ளுதல் தலித் சமூகத்தில் நிகழ்வது , தலித் சமூகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இது ஒரு வளரும் சமூகத்தை பின்னடைய மட்டுமே செய்யும்.

இத்தனைக்கும் இந்த பெண்ணை கட்டியபோது, வருமையையும், அந்த பெண்ணின் அக்காளையும் காரணம் காட்டி, வரதட்சணையே இல்லை என்று பேசியிருக்கிறார்கள். இந்த மணமகன் பெருந்தன்மையாக அதையும் பரவாயில்லை என்றிருக்கிறார். (இது அவர்களை பொறுத்தவரை "பரந்த மனப்பான்மை"கணக்கில் வராது போலும்) உண்மையை சொன்னால், அப்படி அந்த மணமகன் வரதட்சணையை பெரிது படுத்தியிருந்தால், இன்றைக்கு இவர்கள் விவாகரத்திற்கு நிற்க வேண்டி வந்திருக்காது.


இதையெல்லாம் பார்க்கையில், தங்கள் இனத்தை பற்றி மற்ற ஜாதிக்காரர்களின் எண்ணப்பாடுகளை மாற்ற வேண்டிய கட்டாயமோ, கடமையோ தங்களுக்கு இருப்பதாக பெரும்பான்மை தலித்களின் எண்ணப்பாடுகளில் இருப்பதாக தெரியவில்லை.  எங்கோ ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தவிர ஏனைய அனைவரும் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது. நாம் யார்? சமூகத்தின் நம் நிலைப்பாடு என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை எதிர்க்க வேண்டும்? யாரை ஊக்குவிக்க வேண்டும்? யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? என்கிற எந்த விதமான தெளிவும் இருப்பதாக தெரியவில்லை.

ரோஹித் வெமுலா, இளவரசன், கோகுல் ராஜ் போன்றவர்களின் இறப்பு, இன்றைய இளைய தலைமுறை தலித்கள் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதாகவோ , அதை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டிருப்பதாகவோ தெரியவில்லை. உண்மையில், அரசாங்கத்தின் ரிசர்வேஷனை பயன்படுத்தி மேலே வந்துவிடும் இவர்கள், மற்ற ஜாதிக்காரர்களை பார்த்து அவர்களுக்கு சமமாக நடிக்க துவங்கிவிடுவதில் தான் எஞ்சிய காலத்தை கழிப்பதாக தோன்றுகிறது.

வெளி நாடுகளில் படிக்கவும், வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்த சொற்ப அளவிலான எண்ணிக்கையே உள்ள தலித் சமுதாய இளைய தலைமுறை, பிற ஜாதி இளைய தலைமுறையுடன் ஒட்டி உரசி எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களை மட்டுமே சமூக பங்களிப்பாக காட்டுவதோடு நிறுத்திக்கொள்வதும் நடக்கிறது. இன்னும் ஒரு படி மேல் போனால், ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பல தலித் பெண்கள் வேற்று ஜாதி ஆண்களுடனான நட்பை, வாழ்க்கைத்துணையாக வர இருக்கும் ஆண் அங்கீகரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக டிமான்ட் வைப்பதுவும் நடக்கிறது. அதாவது அடக்குமுறை செய்பவனின் நட்பை, ஏற்க சொல்லி ஒடுக்கப்பட்ட இனத்து பெண் தனது துணையான அதே ஒடுக்கப்பட்ட இனத்து ஆணை நிர்பந்திப்பது. வேடிக்கையாக இருக்கிறதல்லவா? இவர்களுக்கெல்லாம் இளவரசன், கோகுல்ராஜெல்லாம் ஏலியன் போல் தெரிவான் போல.

இன்னமும் தென்மாவாட்டங்களில் இரட்டை குவளை முறை புழக்கத்தில் இருக்கிறது. இன்னமும் தலித் என்று தெரிந்தால் நகரங்களில் வீடு தர மறுக்கிறார்கள். பணி இடங்களில் தலித் பெண்கள் அவமானப்படுத்த படுகிறார்கள். பல கிராமங்களில் தலித் பெண்கள் ஒதுங்கக் கூட இடமிருப்பதில்லை. தலித் வீடுகளில் சாவு விழுந்துவிட்டால் பிரேதத்தை ஊரைச்சுற்றித்தான் எடுத்துசெல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகளையெல்லாம் ரிசர்வேஷனை பயன்படுத்தி மேலே வந்துவிட்டு, அமேரிக்கா, ஐரோப்பா , சிங்கப்பூர், சவுதி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி நிமித்தம் சென்று விடும் இவர்கள் சிந்தித்து பார்ப்பது போல் தோன்றவில்லை.

இது, மேல் ஜாதி ஆண்களுடன் சோஷியலிசம் பழகி, அவர்களுக்கு இணையாக தலித் ஆண்களிடம் எதிர்பார்ப்பதில் போய் நிற்கிறது. விளைவு, திருமணங்களில் ஏக குழப்பம். இப்படியாக மேலே வந்துவிட்ட பெண்கள் திருமண தளத்தில் இன்னபிற மேல்ஜாதி பையன்களையே அளவீடாக கொண்டு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். உதாரணமாக, மூன்றாவது தலைமுறையாக மெத்த படித்து பொருளாதாரத்தில் மேம்பட்ட தலித் பெண்கள் சிலர், பையன் 26 வயதில் இரண்டு டிகிரி படித்து, வெளி நாட்டு விசா வைத்திருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு வைக்கிறார்கள். பல தலித் சமூகங்களில் இன்னமும் சொற்பமாக படித்து தேறி மேலே வரும் இள நிலை பொறியியல் பட்டதாரிகள் தான் குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அச்சாணியாக இருக்கிறார்கள் என்னும் போது தலித் சமூகத்தில் இரண்டு டிகிரியுடன் அமேரிக்க விசா என்பதெல்லாம் பையனின் அப்பா எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று கண்டீஷன் போடுவது போல் இருக்கிறது.

திருமணங்களில் எல்லோருக்குமே எதிர்பார்ப்புக்கேற்ற துணை கிடைப்பதில்லை. பல்வேறு சமரசங்களுக்கு பிறகுதான் , பல்வேறு இழப்புகளுக்கு பிறகு, பல்வேறு பொறுத்தமின்மைகளுக்கு பிறகு தான் துணை நிச்சயம் செய்யப்படுகிறது. அப்படியிருக்கையில், இப்படியெல்லாம் வாழ்க்கைக்கு தேவையற்ற நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வைத்துக்கொண்டு துணை தேர்வில் இறங்கினால் எப்படி விளங்கும்?

இந்த தவறுகளுக்கெல்லாம் இவர்களின் பெற்றோர்களைத்தான் முதல் குற்றவாளிகளாக நான் பார்க்கிறேன். வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு இவர்கள் ஜாதி அடையாளம், இன அழிப்பு முதலானவைகளை பதிய வைப்பதில் இவர்கள் காட்டும் அலட்சியமே இதற்கு முழு முதற் காரணம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. செல்லமாக வளர்க்கிறேன் பேர்வழி, அல்லது சமூகத்தில் அவலம் தெரியாமல் வளர்க்கிறேன் பேர்வழி என்ற இவர்களது வளர்ப்புமுறை தான் இத்தனை குழப்பங்களுக்கும் ஆதார மூலமாகிவிடுகிறது.

மலிந்து வரும் தனியார் நிறுவனங்கள், உலகமயமாக்கம், ஐடி போன்றவைகளின் மயக்கத்தில் இளைய தலைமுறை சுகத்தில் மட்டுமே திளைத்து, பொறுப்புக்களையும், கடமைகளையும் தட்டிக்கழிப்பது வாடிக்கையாகிவிட்டால், இது போன்று விவாகரத்தில் போய் நிற்காமல் வேறென்ன செய்யும்?

இந்த பெண் எப்படியும் தவறு தன்னுடையது என்று வெளியில் போய் சொல்லப்போவதில்லை. தன்னை நியாயப்படுத்த அந்த ஆணின் பெயரைத்தான் ரிப்பேராக்கப் போகிறார். இவர் பெண் என்பதாலேயே இந்த சமூகமும் இவர் சொல்வதை நம்பியும் விடலாம்.  அப்படி நம்புகையில், தலித் சமூகத்துக்குள் இருக்கும் இந்த உள்குத்துக்கலெல்லாம் மறைந்து 'பெண் சுதந்திரம்'என்பது மட்டுமே துருத்தித்தெரியும்.

உண்மை என்று ஒன்று இருக்கிறது. இறைவன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.

மொத்தத்தில் தலித்களுக்கு, வேற்று ஜாதிக்காரர்கள் பெரிதாக எந்த கொடுமையும் செய்ய வேண்டியதில்லை போலிருக்கிறது. ஒருவர் மேல் ஒருவர் சேறு பூசி, ஒருவர் பெயரை இன்னொருவர் கெடுத்து அந்த கொடுமைகளை தலித் சமுதாயத்தில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் செய்துகொண்டுவிடுவார்கள்.

பிள்ளையார் பிடிக்க குரங்கு

$
0
0
பிள்ளையார் பிடிக்க குரங்கு



என்னிடம் ஒன்றிரண்டு பேர் உண்மையாகவே குறும்படம் எடுக்க‌ கதை கேட்டிருக்கிறார்கள். முதலில் கலாய்க்கிறார்கள் என்று கூட தோன்றியது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு கல்லூரி மாணவர்களின் குறும்பட முயற்சியை பார்த்துவிட்டு, அந்த 'இயக்குனரை' (ஹிஹிஹி.... காமிரா தூக்கிவிட்டாரல்லவா? அப்படியானால் இயக்குனர் தானே... ஹிஹிஹி) அவரது ஆவடி வீட்டில் சந்தித்தேன்...

பேச்சினூடே "எனக்கும் குறும்படம் எடுக்க ஆசை.. ஆனால், தோதாக வேளை வரவில்லை"என்றேன்.. அதற்கு அவர் நக்கலாக என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள், அந்த நொடி மட்டும் 'வாலி'அண்ணன் அஜித் போலாகி அவர்களின் அசையாத உதடுகள் என்ன சொல்லின என்று கூட புரிந்தது. 'உடனே ஆரம்பிச்சிடுவீங்களே...ஓவர் சீன்ரா.. அடக்கி வாசி'இதுதான் அதன் சுருக்கமான ட்ரான்ஸ்லேஷன்...

பிற்பாடு நான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், அந்த அசம்பாவிதத்தை அரங்கேற்றினார்..அவர் எடுத்த குறும்படம் ஒன்றை போட்டுக்காட்டினார். சண்டை, பைக் ஸ்கிட் என்று சினிமாத்தனமாக இருந்தது.. யாரோ ஒன்றிரண்டு பேர் உண்மையாகவே நடிக்க போராடியிருந்தார்கள்.. ரூமில் அவரும், அவரது நண்பரும் மற்றும் நானும் மட்டும் தான். வீட்டில் வேறு இந்தாள் வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லியிருக்கவில்லை என்பது அப்போது நினைவுக்கு வந்து மொபைலை பார்த்தேன். மொபைல் பேட்டரி லோ ஆகி மூர்ச்சையாகியிருந்தது... எனக்கு பக்கென்று ஆகிவிட்டது... என்ன இருந்தாலும் அவர்களது ஏரியா.. ஒரு விசில் போட்டால் அன்றைக்கு அவர்களுக்கு சப்பாத்தி நாந்தான்.. விடிந்த பிறகும் கூட கும்மி எடுக்கலாம். நான் ஜிம் போவதெல்லாம், சும்மா கிரிக்கெட் விளையாட செட் கிடைக்காமல், solo வாக விளையாட மட்டுமே.. அது, நாலைந்து செல்ஃபிக்கு மட்டும் தான் லாயக்கு என்பது என் மனக்கணக்கு.. அடிதடிக்கெல்லாம் ஒத்துவராது. அவ்வளவுதான்.

ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை... உடனே சரண்டர்!!. மனதுக்குள் அர்ஜுன அர்ஜுனா சொல்லிக்கொண்டே குறும்படம் சூப்பரோ சூப்பர் என்று சொல்லிவிட்டேன்.

அப்படி சொல்லிவிட்டாலும் உண்மையில் அவரை கொஞ்சம் பாவமாகத்தான் பார்த்தேன். அந்த குறும்படம் எப்படியும் ஒரு ஐம்பதாயிரத்தை தொட்டிருக்கும்.. செலவு அப்பா அம்மாவிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும்.. ஓல்டு மாங்க்கிலும், ஆஃப் பாயில்லிலும் போயிருக்க வேண்டிய பணம்.. குறும்படமாகி, காமிராமேன், ம்யூசிக் டிரைக்டர், கிராபிக்ஸ் என்று ஒரு சிலருக்கு வேலை தந்திருக்கிறது.. அதற்காக சந்தோஷப்படலாம்..

ஆனால், திரைப்படம் என்றால் நாலு ஃபைட், ஒரு காதல், கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் என்று ஃபார்முலாவாகிவிட்டதாகத் தெரிந்தது.

மற்றபடி, கல்லூரி பையன்கள் காமிராவும் கையுமாக ஆஃப்பாயில், ஓல்டு மாங்க் பணத்தை செலவு செய்வதில் சில லாபங்கள் இருக்கவே இருக்கின்றன. போஸ்ட் ப்ரொடக்ஷன் என்கிற பெயரில் கல்லூரிகளில் சென்று திரையிடுவது, அதை வீடியோ பண்ணி இளசுகள் மத்தியில் ஒரு குட்டி ஹீரோ ஆவது, அதன் மூலம் எதில் செட்டில் ஆகுறோமோ இல்லையோ, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் லாபங்கள் இருக்கவே இருக்கின்றன.

காலேஜில் ஹீரோவாக சுற்றுபவனை ஹீரோ  சான்ஸ் என்று சொல்லி நைச்சியமாக பேசி கூட்டி வந்து நடிப்பு என்கிற பெயரில் பாலாவின் பிதாமகனாக்கி அசிங்கப்படுத்தலாம். தினமும் கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் லெக்ச்சரரின் பெயரில் ஒரு செந்தில் உருவாக்கி கவுண்டமணி கணக்கில் உதைத்து புண் பட்ட மனதை ஆற்றிக்கொள்ளலாம். ரொம்ப நாளாக சுற்றியும் மடங்காத ஃபிகரை, ஹீரோயின் ஆக்கி, ஃபோன் நம்பர் வாங்கி, நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் நுழைய lifetime membership வாங்கலாம்.

கூத்து என்னவென்றால், சிலர் பணத்தை லவட்டுவது, குறும்படம் எடுத்து திரையிடுவதுமென இதை செய்வதையே தொழிலாக்கிவிடுவார்கள். கூட்டமும் இவர்களை சுற்றித்தான் சேரும். ஏனெனில் இவரால் பலருக்கு வேலை கிடைக்கிறதல்லவா? வெளியிலிருந்து பார்ப்பதற்கு, வெகு பிஸியான ஆள் என்கிற தோற்றம் வரும் பாருங்கள்... லக் என்றால் அதுதான் லக்.. அதென்னமோ முக்கால்வாசி பெண்களுக்கு இவரைத்தான் பிடிக்கும்.. அவரின் செல்போனை நோண்டினால் அத்தனை ஆண்கள் பெயர்களிலும் கலர் கலர் பெண்களாக இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி ரியாலிட்டி என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த கூட்டத்தில், புகழ் போதை அல்லது கவர்ச்சி உந்த ஒரு ஆர்வத்தில் முதல் குறும்படம் எடுப்பவர்கள் பலருக்கு, எடுத்தவுடன் ஆர்வம் போய்விடும். இரண்டாவது ரவுண்டில் அந்த எண்ணிக்கை டகாலென்று பாதிக்கும் கீழ் வந்துவிடும். சினிமாவின் உண்மையான இலக்கணங்கள் யாருக்கு இயல்பாக வருகிறதோ அவர்கள் மட்டுமே இறுதி சுற்றுவரை போவார்கள்.. அந்த நிலைக்கு வருவது ஒரு சிலர் தான். உண்மையான போட்டியே இங்குதான் துவங்கும். இந்த இடம் வரை வரவே பல சுற்றுகளை கடந்தாக வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் பேராசை முகம்.

இந்த இடம் வரையிலான இந்த செயற்கை அல்லது மாய, முதலாளித்துவம் கட்டமைக்கும் இத்துப்போன போட்டியை மேற்கொள்ள ஒரு தகுதி இருக்கிறது. அது, அரைகுறை.

ஆம். இந்த இறுதிச்சுற்று வரையிலான சுற்றுகளுக்கு நீங்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக வந்தால், இந்த சுற்றுகளின் செயற்கைத்தனத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற வேண்டி இருக்கும். அல்லது வெளியேற்றிவிடுவார்கள். ஒன்றுமே தெரியாமல், ஒவ்வொரு சுற்றிலும் ஏதேனும் கற்றுக்கொள்ளும் புத்தி உள்ளவர்கள் தான் இறுதி சுற்று வரை வர முடியும். அதாவது லேசான மந்தத்தனம் வேண்டும். எல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு தெரிந்துகொண்டதாக நடிக்க வேண்டும். பெண்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துவிடும்.

எனக்கெல்லாம் தெரிந்ததை தெரியாததாக காட்டி நடிக்க வேண்டிய தேவையே இல்லை.. எதுவுமே தெரியாது.. அதனால் தான் எனக்குள்ளும் ஒரு குறும்படம் எடுத்துதான் பார்ப்போமே என்று தோன்றியிருக்கிறதென்பது எனது மிக ஆழமான நம்பிக்கை.

ஆனால் எல்லாவற்றுக்கும் நேரம் ஒத்துழைக்க வேண்டும். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாய் முதல் முறை குறும்படம் எடுக்க தோன்றியபோது ஹாங்காங் அனுப்பிவிட்டார்கள். இரண்டாவது முறை குறும்படம் எடுக்க தோன்றி அமேரிக்கா வந்துவிட்டேன். இப்போது ஏதேனும் வெளி நாட்டுக்கு போகவேண்டுமானால், குறும்படம் எடுக்க முயற்சிக்கத்துவங்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால், என்ன செய்தால் குறும்படம் எடுக்க முடியும் என்றுதான் விளங்க மாட்டேன் என்கிறது..

வேலை

$
0
0
வேலை


"திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா?"என்று கேட்டார் தோழி ஒருவர்.

"உங்களுக்கோ, உங்கள் குடும்பத்துக்கோ தேவைப்பட்டால் தயவுசெய்து செல்லுங்கள்"என்றேன்.

'இதெல்லாம் ஏன் கேட்கிறார்? அது அவர் உரிமை'என்றெல்லாம் பேச வேண்டியதில்லை. வேலை என்பது குடும்பத்தின் தேவைகளையும், கணவன் மனைவி என்கிற இரு மனிதர்களின் விருப்பங்களையும் பொறுத்தது. இன்னதுதான் சரி, இன்னது தவறு என்றெல்லாம் பொதுப்படையாக சொல்லிவிட முடியாது.

பல குடும்பங்களில், கணவனிடமிருந்தும், மாமியார் நாத்தனார்களிடமிருந்தும் தப்பிக்கவே பெண்கள் வேலையில் சென்று ஒதுங்க நேரிடுகிறது. சேமிப்பையும், குடும்பத் தேவைகளையும் காரணம் காட்டி, குண்டான் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல், சதா நான்கு சுவற்றுக்குள் பெண்களை அடைத்து வைப்பதே குடும்பத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுதான்.

பெண்களும் வேலைக்கு செல்வதால் சில நன்மைகள் இருக்கின்றன.

வாழ்க்கை பற்றி அவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்கும். எந்த பிரச்சனையிலும் அவரிடமிருந்தும் கூடுதலாக கருத்துக்களை பெற முடியும். ஒண்டி ஆளாக ஆணே மண்டையை குடாய்ந்து பி.பி ஏற்றிக்கொள்ள வேண்டி இல்லை. ஆண் விட்ட இடத்தில் பெண் பிடித்துவிடலாம். அது ஒட்டுமொத்தமாக குடும்பத்தின் பயணத்தை சுலபமாக்கும். எந்த விஷயத்திலும் ஆணுக்கு ஒரு கோணம் இருப்பது போல் பெண்ணுக்கும் இருக்கலாம். அந்த கோணங்கள் தெரிந்தால், எதையும் மேலதிகமாக புரிந்துகொள்ள முடியும்.

கணவனுக்கு மனைவிக்கும் பூசல்கள் வர மிகப்பல வாய்ப்பிருக்கிறது, மனைவியை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தால், முன் தினம் நடந்த பூசலை பற்றியே யோசித்து, அதையே வெவ்வேறு கோணத்தில் அடுத்த நாள் பெரிதாக்கலாம். அலுவலகம் என்று போய் வந்தால், பூசல்கள் கரைந்து போக வாய்ப்பிருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே ஆரோக்கியமான மன நிலை நீடிக்கிறது. சேர்ந்து இயங்க முடிகிறது.

நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்படும் பெண்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கணவரே பூர்த்தி செய்ய வேண்டியவராகிவிடுகிறார். அது ஒரு ஆணுக்கு சுமக்க அதீதமான பலுவாகிவிடுகிறது.  மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில், அந்த பலு அவருக்கு இல்லை. வாழ்க்கை லேசாகலாம்.

சில பெண்கள் ஆரம்பித்தில் இருந்தே சார்ந்து வாழ பழகியிருக்க மாட்டர். தனித்து இயங்குகையில் தான் அவர்களது முழுத்திறமையும் வெளிப்படும் என்றிருக்கலாம். அப்படியிருப்பவர்களை துணையுடன் அதீதமாக சார்ந்து இருக்க வைப்பது ஒரு வித மன நோய்க்கு எளிதாக கொண்டு சென்றுவிடலாம்.

என்னேரமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால், நல்ல புரிதலும், காதலும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் சலிக்கும். வெறுப்பு வரலாம். வேலை, அலுவலகம் போன்றவைகள், இந்த சலிப்பை வராமல் தடுக்க வல்லது.

நேர்மையாக பதிய வேண்டுமெனில், பணியிடங்களில் பாலியல் தொந்திரவுகள், வேலைக்கு சென்றுவிடும் நேரத்தில் கணவரை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுவது, அதீதமான வேலை பலுவால் உடல் நலம் குன்றுதல் போன்ற அசெளகர்யங்களும் நேர்கிறது தான். இந்த அசெளகர்யங்களுக்காகவும் பெண்கள் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க பிரியப்படுவதும் நடக்கிறது.

பொதுவில் எதுவும் சொல்வதற்கில்லை.

ஆதலால் வாழ்க்கை என்கிற வார்த்தைக்கு பல விளக்கங்களை சொல்ல முடியும். தெரிய வராத உண்மைகளும், தெரிந்த பொய்களும் தான் வாழ்க்கை என்றும் கூட இப்போதெல்லாம் வாழ்க்கை என்கிற வார்த்தைக்கு விளக்கம் தரப்படுகிறது.

கணவனோ மனைவியோ, துணையை அப்படியே ஏற்றுக்கொள்வது உத்தமம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அதில் எல்லாமும் அடங்கி இருக்கிறது.


அமேரிக்கத்தனம் - ஒரு பக்க கதை

$
0
0
அமேரிக்கத்தனம் -  ஒரு பக்க கதை


அமேரிக்காவின் டாலஸ் நகரில், ப்ளானோவில் அமைந்த அந்த மத்திம ரக தங்கும் விடுதியின் லிஃப்ட் கதவு திறக்க, அவள் வெளியே வந்தாள்.

அவள் அணிந்திருந்த உடைகளில், நீல நிற ஜீன்ஸும், கருப்பு நிறத்தில் மார்பை மறைக்க பிரயத்தனப்படும் டிசர்ட்டும் மட்டுமே எல்லோரு கண்களிலும் பட்டது, அவை இரண்டுமே அவள் உடலை இருக்கிப் பிடித்ததினால் இருக்கலாம் என்று மறைந்த ஃப்ராய்டு உயிரோடு இருந்திருந்தால் , தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கக்கூடும்.

ரிசப்ஷனை அண்டிய அவள், பேசிய ஆங்கிலத்தில் தெளிவான அமேரிக்கத்தனம்.

தங்கியிருந்த அறையை காலி செய்கிறாள் என்று தோன்றியது. அவள் கையிலிருந்த கோச் கைப்பையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அமேரிக்காவில் , இந்த ப்ராண்ட் பை மிகப்பிரபலம். இந்த குறிப்பிட்ட கோச் கம்பெனி பைகளை கண்டால், கொள்ளையடிக்க முயற்சிக்கும் அமேரிக்கர்கள் அனேகம்.

சுண்டு விரலில் சுழற்றிக்கொண்டிருந்த சாவியை எடுத்து அவள் கிள்ள, கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால், பார்க்கிங் ஏரியாவில் தரையோடு தரையாக படுத்திருந்த ஒரு பி.எம்.டபிள்யு அழகாக கண்சிமிட்டியது.

விடுதிக்கென பையிலிருந்து எடுத்து வழித்த பாங்க் ஆஃப் அமேரிக்கா வங்கியின் க்ரெடிட் கார்டு ஆகட்டும், அமேரிக்காவின் புகழ்பெற்ற சிக்சில்க் ரக மேல் துணியாகட்டும் , அணிந்திருந்த ஆக்லே ரக கண்ணாடியாகட்டும், ஜிம்மி சூ ரக பாதணியாகட்டும் அணைத்திலும் அமேரிக்கத்தனம்.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு, கண்ணாடி கதவுகளைக் கடந்து, போர்டிகோ தாண்டி, கண்சிமிட்டிய பி.எம்.டபிள்யுவின் கதவை அவள் திறந்து உள்ளே லாவகமாக அமர்ந்து, கால்களை உள்ளே இழுக்கையில் தான் அதை கவனித்தேன்.

வலது காலில் மட்டும் ஒரே ஒரு .......... கொலுசு...


 - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

இந்த வார குங்குமம் இதழில் என் குறுங்கதை

$
0
0
ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள்.
லவ் என்கிற தலைப்பில் காதலர் தினத்திற்கென நான் எழுதிய குறுங்கதையொன்று இந்த வார குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது.
பணி நிமித்தம் அமேரிக்காவில் இருப்பதால், நண்பர்கள் யாரேனும் இந்த இதழில் கதை வெளியான பக்கத்தை பிரதியெடுத்து அனுப்ப இயலுமா?




குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை

$
0
0
08-பிப்ருவரி-2016 தேதியிட்ட இந்த வாரம் குங்குமம்இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை.
எனது குறுங்கதையை தேர்வு செய்து வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



குலைக்கிற நாய்

$
0
0
குலைக்கிற நாய்



இப்போது வடபழனி சிக்னல் அருகே SRM கல்லூரியின் அலுவலகம் மற்றும் மருத்துவமனை இயங்கும் கட்டிடங்கள் அப்போது TCS லீசில் இருந்தது. நான் TCS சேர்ந்த‌போது அங்கேதான் முதல் ப்ராஜெக்ட் தந்தார்கள். இன்ஷூரன்ஸ் என்று நினைக்கிறேன்.

அப்போது தெரிந்தவர்கள் சிலருக்கு Java கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் குறுஞ்செய்தியில் சந்தேகம் கேட்பதும் அதற்கு நான் பதில் சொல்வதுமாக இருப்பேன். எல்லாம் நாம் கற்ற வித்தை மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்றுதான்.

அங்கே சென்று சேர்ந்ததும் என்னை ஏற இறங்க பார்ததுவிட்டு, நான் தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பவதையும் கவனித்துவிட்டு, அவர்களுக்குள்ளாக ஒரு கணக்கு போட்டுவிட்டு,  என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. எனக்கு ஏகப்பட்ட girl friend இருப்பதாக முடிவே செய்துவிட்டார்கள்.

உண்மையில் நான் ஒரு உதறல் கேஸ்.. 12த் வரை ராமகிரருஷ்ணா ஆண்கள் பள்ளியில் தான் படித்தேன். ஆண்களுடனேயே வளர்ந்ததால் பெண்களுடன் பேசி பழக்கமே இல்லை. 12 வரை நான் பேசிய இரண்டு பெண்கள் என் அம்மா, என் தங்கை. பெண்களுடன் பேசுவது என்றாலே அப்போதெல்லாம் நாக்கு தந்தி அடிக்க ஆரம்பித்துவிடும். இது ஏதேனும் ஃபோபியாவா தெரியவில்லை. ஃப்ராய்டை கேட்டால் சில பெயர்கள் சிக்கலாம்.

ஆனால், நம்மில் எல்லாருக்குமே மனதோரம், நம்மை இந்த பக்கம் நான்கு பெண்களும் அந்த பக்கம் நான்கு பெண்களும் சூழ கொண்டாட ஆசை இருக்கும் தானே. நமக்குள் தினம் தினம் நமக்கு பிடித்த பெண்கள் நம்மை கொண்டாடுவது போலத்தானே கற்பனை செய்துகொள்வோம். பதின்ம வயதில் இதை சொல்லவா வேண்டும்? நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை என்பதால் நம்மை அப்படியே மன்மதன் போல் எந்த குதிரையையும் அடக்கி சவாரி செய்யும் ஜாக்கி போலத்தானே கற்பனை செய்வோம்.

அப்படி ஒரு உதறல் கேஸாக இருந்த என்னை அவர்கள், மன்மதன் ரேஞ்சுக்கு பேசத்துவங்க, அதுவரை கண்ட கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கிடைக்க துவங்க, சும்மா தானே என்று நானும் அதை உள்ளூர ரசிக்கத்துவங்க, செம ஜாலி தான்.

இத்தனைக்கும் யார் அந்த பெண் என்று அவர்களுள் யாரும் இறுதிவரை எந்த கேள்வியும் எழுப்பாமலேயே என்னை ஒரு மன்மதன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்க, முதலில் உள்ளூர ரசித்தவன், பிறகு போதை அதிகமாகி, ஜுரம் என்று லீவு போட்டால் கூட அடுத்த நாள் போய், "கேர்ல் பிரண்டுடன் டேட் போயிருந்தேன்"என்று பந்தா பண்ண ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்!!

காதலுக்கு என்னை என்சைக்லோபீடியா ஆக்கிவிட்டார்கள். அதிகம் பேச நேர்ந்தால் எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அவர்கள் என்ன பேசினாலும் கேட்டுக்கொள்வதோடு சரி. அதிகம் போனால் ஒரு புன்னகை.

அதாவது இதெல்லாம் எனக்கு தூசாம். பெண்கள் விஷயத்தில் நான் பலே கில்லாடியாம். அப்படி ஒரு பில்டப்.

நான் திறமையாக சமாளித்தேனா அல்லது அவர்கள் ஒரு மொன்னையா தெரியவில்லை. நம்பிவிட்டார்கள். அவ்வளவுதான். வெறுங்கையை மூடியே வைத்தால் என்னமோ இருக்கிறது என்று தோன்றுமே. அதுபோல மெளனமாக அதிகம் பேசாமல் ஒரு ஞானி ரேஞ்சுக்கு  அவர்கள் பேச்சுக்கு புன்னகைப்பதும், அப்படியே ஏதேனும் பேச நேர்ந்தாலும் ஒரு கைதேர்ந்தவன் போல தத்துவார்த்தமாக "உன் வேலையை நீ பாரு.. பொண்ணு தானா வரும்"என்றெல்லாம் ரஜினி பட டயலாக்குகளையே வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்லி ஒரு இரண்டு வருடத்தை தள்ளினேன்.

கடைசிவரை குட்டு வெளிப்படவே இல்லை. இரண்டாம் வருடத்தின் முடிவில், லண்டன் செல்ல விசா கிடைத்தது. உண்மையை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அதுவரை கட்டிக்காத்த இமேஜ் சட்டென போய்விட்டால்!! அதனால் சொல்லவே இல்லை. ஆனால் அப்போதைக்கு அது எபிசோட் 1 தான் என்று தெரியாது.

என்னுடன் வேலை செய்த ஒருவரும் லண்டன் வந்தார். அவரிடமும் வண்டி வண்டியாக பில்டப் கொடுத்து வைத்திருந்தேன். அவர் என்னை விட கேனையா தெரியவில்லை. அவரும் யார் அந்த பெண்கள் என்று கேள்வி கேட்காமலேயே நம்பிவிட்டார். நம்பியதோடு நிற்காமல் லண்டனில் புதிய நண்பர்களிடத்தும் அதே பாட்டை பாட ஆரம்பித்துவிட்டார். விளம்பரம் தானே கிடைக்கும் போது ஏன் தடுக்க வேண்டும்!! அவ்வளவுதான். எபிசோட் 2. துவங்கியது. எந்த பிரச்சனையும் வரவில்லை என்பதால், என் வெட்டி அரிதாரத்தை நான் கலைக்கவே இல்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.லண்டனில் தங்கியிருந்த போதும் நண்பர்கள் மத்தியில் இதே இமேஜ் தான். சின்ன புகழ். அடுத்தவர்களின் கவனம் நம் மீது விழுவதை உள்ளூர ரசிப்பது. ஏதோ வயதுக்கோளாறு.

தளத்தில் குட்டி காதன் மன்னன் என்று ஒரு இமேஜ் வேறு. ஒரே பாப்புலாரிட்டி தான். கேண்டீன் போனால் திரும்பி பார்ப்பார்கள். ஹலோ சொல்வார்கள். டிரஸ் சூப்பர் என்பார்க‌ள். பெண்களை approach செய்ய ஐடியா கேட்ப்பார்கள். "சொல்லித்தெரிவதில்லை மன்மதகலை"என்றெல்லாம் மறுபடி கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதில் தந்தே எஸ்கேப் ஆனேன்.  இத்தனைக்கும் girl friend வைத்திருக்கும் பலர் செய்யும் ஜிம்மிக்ஸ்களான,  ஒரு நாள் girl friend  இடுப்பில் கைப்போட்டு கூட்டி வந்து நண்பர்களிடம் காட்டி நண்பர்களை வெறுப்பேற்றுவது, நண்பர்களுடன் வெளியே செல்கையில் தனியே ரூம் போடுவது என்று எதையுமே நான் செய்திருக்கவில்லை (இருந்தால் தானே இதெல்லாம் செய்ய) எனும்போது அவர்கள் எப்படி நம்பினார்கள் என்பது தான் உச்சகட்ட ஆச்சர்யம்.

 ஏதாவது பேசினால் வாயையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். லீவு போட்டால் அடுத்த நாள் என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள அவர்கள் செய்யும் ஜிம்மிக்ஸ்களை பார்த்தால் செமையாக சிரிப்பு வரும். உள்ளுக்குள் ரசித்துகொண்டே கம்மென்று உட்கார்ந்திருப்பேன். பெண்கள் விஷயத்தில் ஒரு உதறல் கேஸாக இருந்துகொண்டு, இரண்டு வருடங்கள், 'காதல் மன்னன்'ஆக கொஞ்சம் புகழோடு தெனாவட்டாக திரிந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அப்போது மேஸேஜ் அனுப்பியது எனது உறவில் ஒரு தங்கை. இப்போது அவர் ஒரு கணிணி நிறுவனத்தில் கணிணி பொறியாளராக வேலையில் இருக்கிறார்.

உண்மையில் நான் ரொம்ப Introvert.. நான் பணிபுரியும் பணிபுரிந்த இடங்களில் என்னை யார் என்றே தெரியாதவர்கள் அனேகம். பெரும்பாலும் நான் தனியனாகவே தான் இருந்திருக்கிறேன். நான் வேலை செய்யும் தளத்தில் ஒரு பத்து குழுக்கள் இருந்தால், நான் எந்த குழுவிலும் சேராதவனாகவே இருந்திருப்பேன். இப்போது அமேரிக்காவிலும் அதே கதை தான். என் அலுவலகத்தில் சற்றேரக்குறைய ஒரு 70 இந்தியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் சொற்பம். ஒன்றிரண்டு பேரை தவிர ஏனைய யாரையும் எனக்கும் தெரியாது, அவர்களுக்கு என்னையும் தெரியாது. என்னை பொறுத்த மட்டில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்திருக்கின்றன‌. காரணங்களுள் சில சமூக பிரச்சனைகள் சார்ந்தது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், புறக்கணிக்கப்படுவதின் மீது பயம். அச்சம். அவ்வளவுதான்.

பாதகமாக ஏதுமில்லை. எந்த பெண்ணின் பெயரையும் கெடுக்கவில்லை. யாரையும் முன்னிருத்தி அசிங்கப்படுத்தவில்லை. சாதுரியமாக மெளனம் சாதிக்க வேண்டிய இடத்தில் மெளனமாக இருந்துவிட்டேன். மற்றதை அவர்களே பார்த்துக்கொண்டார்கள்.

கிசுகிசு பேச எல்லோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது. பணி நேரத்தில், பணி சுமையை இறக்கி வைக்க, ரிலாக்ஸ் செய்ய , நட்பு வளர்க்க, கிண்டல் கேலி செய்ய, வம்பிழுக்க என கிசுகிசுவுக்கு பற்பல பயன்பாடுகள் இருக்கின்றன. வாய்க்கு அவலாக ஏதேனும் தேவைப்படுகிறது. உள்ளிருக்கும் குப்பை கசடுகளை வெளியேற்ற இந்த கிசுகிசு பயன்படுகிறது. கிசுகிசுக்கப்படுவதில் உள்ள போதை என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிட்டியது.

என்னிடம் உள்ள எது அவர்களை அப்படி நினைக்க வைத்தது என்பது இப்போதும் எனக்கு புரியாத புதிர் தான். இப்படி 'மன்மதன் அம்பு'போல் கிசுகிசுக்கப்பட்ட நேரத்தில் 70 சிறுகதைகளும் எண்ணற்ற கவிதைகளும் தான் எழுதியிருந்தேன் என்பது தான் உண்மை. இத்தனைக்கும் அப்போது நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் அலுவலக பணி வேறு இருக்கும். அந்த நான்கு வருட காலத்தில் கிசுகிசு என்பது எத்தனை போலித்தனமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஆதலால் கேட்கும் கிசுகிசு எதையும் நம்புவதே இல்லை.

மாறாக கிசுகிசுக்கப்படும் நபர் டெக்னிக்கலாக என்ன செய்துகொண்டிருக்கிறார், அந்த வேலையை செய்ய ஒருவருக்கு எத்தனை நேரம் எடுக்கும் என்பன போன்ற விவரங்களை ஆராய்வதுதான் உண்மையை கண்டுபிடிக்க சரியான அணுகுமுறை என்பதை அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டேன்.

ஒரு விஷயம் நிச்சயம். என்னை பற்றி கிசுகிசு இனிமேலும் சொல்ல யாராலும் முடியாது. ஏதாவது தெரிந்தால் தானே கிசுகிசுக்க. குலைக்கிற நாய் கடிக்காது ஐயா. கடிக்கிற நாய்க்கு பற்களும், முன்னங்கால்களும் Strong ஆக இருந்தே தீரும்...

டானிக்

$
0
0
டானிக்


என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. எனது ஆக்கங்களை இணையத்தில் யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தேடுவது.

இது எதனால் என்பதை விளக்க வேண்டுமானால் சில நிகழ்வுகளை சொல்லியாக வேண்டும்.

10 January 2010 ல் நான் எழுதி வெளியான‌ கதை இது... வ‌லைதளத்தில் தேதி சரிபார்த்துக்கொள்ளுங்கள்
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=1934:-3&catid=3:short-stories&Itemid=89

பிற்பாடு முரண் திரைப்படம் 30 September 2011 ல் வெளியானது... நீங்கள் பார்த்திருக்கலாம்.. மீதியை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன்...

இது ஒரு புறமிருக்க, August 2010 ல் நான் எழுதி வல்லமையில் வெளியான கதை இது.. வ‌லைதளத்தில் தேதி சரிபார்த்துக்கொள்ளுங்கள்
http://www.vallinam.com.my/issue20/story1.html

பிற்பாடு 15.April.2013 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் பக்கம் 11ல் 'கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை'என்ற தலைப்பில் வெளியான பெட்டிச்செய்தி இது...
http://ramprasathkavithaigal.blogspot.com/2013/04/fiction.html



இந்த ஒற்றுமைகளால் எனது ஆக்கங்கள் வேறெங்கெல்லாம் எப்படியெல்லாம் பரவிக்கிடக்கின்றன என்று தேடிப்பார்ப்பது வழமை ஆகிவிட்டது. அப்படி தேடியதில் "Valluvan Paarvai"என்கிற கூகிள் குழுமத்தில் நான் எழுதிய 'தனி மரங்கள்'சிறுகதையை தமிழ்செல்வி என்பவர் பகிர்ந்திருப்பதை இன்று தான் கவனித்தேன்...

https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/pHo6jEzAf7E

இதை பார்த்தவுடனே அவருக்கு ஒரு ஃபோன் போட்டு நன்றிகளை சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் இங்கும் அவருக்கு என் நன்றிகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்...

ஐந்து பேர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்... இதெல்லாம் ஒரு டானிக் தான்.. மற்றபடி தமிழ் எழுத்துலகத்தில் இயங்குவது என்பது ரொம்பவும் அயர்ச்சி தரக்கூடிய விஷயம். சீனியர் எழுத்தாளர்களின் புத்தகங்களே ஆயிரம் பிரதிகள் விற்றால் பெரிய விஷயம்...

நண்பர் ஒருவரின் வலைப்பூவை தினமும் 7000 பேர் வாசிக்கிறார்களாம்.. ஒரு பதிவுக்கு 3 - 5 பின்னூட்டங்களே வந்திருப்பதை பார்த்தேன்.. இத்தனைக்கும் அவர் வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு தினப்படி தமிழக மக்களின் வீடுகளுக்கே சென்று உதவிகள் செய்பவர்.. இத்தனை மெனக்கெடலுக்கு, என்னென்னவோ நடந்திருக்கவேண்டும்.. ம்ஹும்..

அவருக்கே அவ்வளவுதான் எனும்போது, இந்த ஐந்து பின்னூட்டம் ரொம்ப ரொம்ப பெரியதாக படுகிறது...

இதை பற்றி யோசிக்கையில் எனது தாத்தா நியாபகம் வருகிறது... அந்த காலத்தில் எங்கள் தாத்தா தான் ஜில்லாவிலேயே முதல் கிராஜுவேட்.. மயிலாடுதுறை அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியில் இருந்திருக்கிறார்.. ஆனால், ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவியும், அவர்களுக்கென டுடோரியல் காலேஜ் இலவசமாக நடத்தியும் அதற்கென கைக்காசு போட்டு ஆசிரியர்களை வேலைக்கு வைத்து சம்பளம் கொடுத்துமே நூறு ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டதாக அம்மா அடிக்கடி சொல்வார்கள்.. அன்றைக்கு எனது தாத்தா உதவியால் படித்தவர்கள் அதற்கு பிறகு நல்ல நிலைக்கு வந்துவிட்டதாக உறவுகளிலும் அக்கம்பக்கத்திலும் சொல்ல கேட்டிருக்கிறேன்... ஆனால், இன்றுவரை என் தாத்தா மூலம் பயணடைந்தவர்கள் யாரையுமே நான் இத்தனை வருடங்களில் கண்ணால் கூட கண்டதில்லை...

இதெல்லாம் சரிவராது என்றுதான் அமேரிக்கா வந்துவிட்டேன்... ஆணானப்பட்ட சுஜாதாவே வயிற்றுப்பாட்டுக்கு BHEL ஐ பிடித்துவிட்டு பொழுதுபோகத்தான் எழுதித்தள்ளினார்.. சுஜாதா தான், எனக்கு தல.. தலயின் ஏகலைவன் நான்...தல‌யின் ஃபார்முலா தான் நானும்...

முதலில் குடும்பம்...முன்னேற்றம்.. வயிற்றுப்பிழைப்பு... எழுத்தும் இலக்கியமும், நேரம் கிடைத்தால் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறேன்...

கிடைத்த நேரத்தில் செய்த‌ இலக்கிய பங்களிப்புக்கு இந்த பின்னூட்டங்கள் போதுமானதாகத்தான் தெரிகிறது... கிடைத்த நேரத்தில் பலனை எதிர்பார்க்காமல் முடிந்ததை செய்வோம்.. அப்படி செய்வதை ரசித்தும் அனுபவித்தும் செய்வோம்.. விளைவு இறைவனிடமும், இயற்கையிடமும்... இதுதான் ஃபார்முலா...

என்ன நான் சொல்வது?!
Viewing all 1140 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>