Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all 1140 articles
Browse latest View live

திணிப்பும் அங்கீகாரமும்

$
0
0
திணிப்பும் அங்கீகாரமும்



  1. எங்களுக்கு சொந்தமான ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடியிருப்பவர் தனது கல்யாண அனுபவங்கள் பற்றி சொல்கையில், திருமண விசேஷத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை இலவசமாக தந்தார்களாம். ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
  2. திரைப்படங்களுக்கு பாடல் எழுதியே பிரபலமான அந்த பாடலாசிரியர், மண்ணின் மைந்தர், வெள்ளை ஜிப்பாக்காரர், காவியமெழுதுபவரை சமீபத்தில் ஒரு கல்லூரியின் கலாச்சார விழாவுக்கு தலைமை தாங்க கூப்பிட்டிருக்கிறார்கள். தனது சமீபத்திய புத்தகத்தை ஐந்நூறு பிரதிகள் வாங்கினால் வருவதாக சொல்லியிருக்கிறார். காவியமெழுதுபவர் வந்தால் நல்ல விளம்பரம் என்று இவர்களுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் மேலும் ஐந்நூறு வாங்கச்சொல்லி சொன்னாராம். ஏற்கனவே ஐந்நூறு வாங்கிவிட்டபடியால், வேறு வழியின்றி இதையும் வாங்கியிருக்கிறார்கள்.
  3. அந்த முன்னணி தொலைக்காட்சியில், பிரபலமான விவாத மேடையின் ஒருங்கிணைப்பாளரும் இதே தானாம். ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, போலிச்சாமியார்கள் மூலம் ஆன்மீக பக்தர்களின் தலையில் கட்டி, இத்தனை லட்சம் பிரதிகள் விற்றிருப்பதாக கணக்கு காட்டுகிறாராம்.


இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் வலிந்து புத்தகத்தை திணிப்பது, பிற்பாடு இத்தனை லட்சம் பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்று போட்டுக்கொள்ளத்தான். இதையே காரணமாக வைத்து ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்தே விருதுகளுக்கு அடி போடுவது தான் ஐடியா.


"சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியை சந்தித்தபோது கடந்த ஓராண்டில் புத்தக விற்பனை நாற்பது சதவிகிதம் வரை சரிந்துவிட்டது என்றார்.நாங்களும் அதை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான புத்தக்கண்காட்சிகள் படுதோல்விகள் என பங்கேற்பாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்."

இது சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முக நூலில் பகிர்ந்தது.


சில பதிப்பகங்கள் தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இசைவாய் எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் ஊக்குவிப்பார்கள்.. நீங்கள் எழுதும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா? சரியா தவறா? என்பதெல்லாம் தேவையில்லை. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்க ஒத்து ஊதுகிறீர்களா இல்லையா? ஒத்து ஊதினால், அந்த பதிப்பகத்தின் பெயரை வைத்து அந்த எழுத்தாளரை முடிந்தவரை உயர்த்தி பிடித்து, ஒரு புகழ் வளையத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்களுக்குள் குழுவாக சேர்ந்துகொண்டு குழுமனப்பான்மை வளர்ப்பார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக கூடி, அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பவர்களை கட்டம் கட்டி காலி செய்வார்கள்.

இந்த பதிவை படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ளட்டும் என்று இதை இதோடு விட்டுவிடலாம்தான். யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஆனால், வர வர,என் கை கூட நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது.. மடிக்கணிணியில் கைவைத்தால் அதுபாட்டுக்கு தானாகவே கிறுக்கி தள்ளிவிடுகிறது..

உண்மையில் தமிழ் எழுத்து மற்றும் பதிப்பக சூழலில் ஒரு புத்தகம் 300 பிரதிகள் விற்றாலே அதிசயம். அதையும் கூட தீவிர இலக்கியத்தில் இயங்கும் சொற்பமானவர்களே கடன் வாங்கி, செலவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு புத்தக கண்காட்சியில் மனைவியின் சம்பளத்தில் அசாதாரணமாய் ரூ.5000 த்திற்கு செலவு வைத்தார் பாருங்கள் ஒரு மனிதர்.. அரண்டே போய்விட்டேன்..

என்னைப்பொறுத்தவரை தமிழ் எழுத்துச்சூழல் அவ்வளவுக்கு Worth இல்லை..

பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு குடும்பப்பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று கடன் வாங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துச்சூழல் வொர்த் இல்லை தான்.

நியாயமான தரமான விருதுகளும் தரப்படுகின்றனதாம். அவரவர் வசதிக்கு ஒரு விருதை உருவாக்கி, கொடுத்துக்கொள்கிறார்கள். அத‌னால் ஒரே குழப்பமாக இருக்கிறது. எது உண்மையிலேயே தரமான படைப்பு? எது இலக்கியம்? என்பதற்கான அளவீடுகள் பதிப்பகத்துக்கு பதிப்பகம் மாறுபடுகிறது.

ஒரு சாமான்யனின் சந்தேகங்களுக்கு எந்த புத்தகமும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்வதே இல்லை. சாமான்யர்கள் இலக்கியம் பக்கம் போகாமல் இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்று நான் சொல்வேன். சில இல்லை, பல விஷயங்களை மூடி மறைத்து தான் சொல்கிறார்கள். பூடகமாக சொல்கிறார்கள். அப்படி சொல்வதைத்தான் இலக்கிய எழுத்தின் அளவீடாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஆக, எழுத்தாளன் தானே தனது எழுத்தை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். அதுதான் அவனை, சாமான்யர்களை விட்டு தள்ளி இருக்க வைக்கிறது.

வாசகனுக்கு திராணி இருந்தால் புரிந்துகொண்டு பின்னால் வரட்டும் என்பது அவர்களது வாதம். வாசகன் முட்டாள் அல்ல. அவன் ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் கட்டம்  கட்டி ஒதுக்கிவிடுகிறான். ஃபிலிஸ்தின் சமூகம் என்று முந்நூறு பேர் 8 கோடி மக்களை சொன்னால், 'மூடர் கூடம்'என்று 8 கோடி பேர்  முந்நூறு பேரை ஒதுக்கிவைக்கிறார்கள்.

எனது நாவல் தொகுதிக்கு இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன...


  1. "முதல் நாவலாவது பரவாயில்லை. இரண்டாவதை வாசிக்கவே முடியவில்லை"என்பது ஒரு விதம்..
  2. "இந்த நாவல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே ஆக்கப்பூர்வமானதாக மாறியிருக்கும்"என்பது இன்னொரு விதம்.. (இப்படி சொன்னவர்கள் பெரும்பான்மை கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல துவங்கி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்தவர்களே)



சாமான்யனின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முயன்றது, இரண்டாவது வகை விமர்சனத்தை பெற்றுத்தந்திருக்கலாம். அதே முயல்வு தான் முதல் வகையான விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.

ஒரு பிரதி எல்லோருக்கும் ஒரே விதமாக தோன்றாது. பிரதியை எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் இறந்துவிடுகிறான் என்கிறார் ரொலாண்ட் பார்தஸ்.


முட்டாள் அரசனின் அரசவையில் கூட, அரசனுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுதப்பட்டன, அப்படி எழுதியவர்களுள் சிலரை முன்னணி எழுத்தாளர்கள் என்று அந்த முட்டாள் அரசன் பிரகடனம் செய்ததும் நிகழ்ந்தது  என்கிற பின்னணியில், 60 வயது கிழவன், 18 வயது இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்து ஆடுவதை ரசித்து கைதட்டும் மக்கள் உள்ள சமூகத்தில் "முன்னணி எழுத்தாளன்" உண்மையில் யார் என்பதெல்லாம் விவரம் அறிந்தவர்களுக்கு தனியாக சொல்லவேண்டியதில்லை.

தெரிந்து கொள்ள மிக பல ஆர்வங்களுடனும், கேள்விகளுடனும் சாமான்யன் கோடிக்கணக்கில் சுற்றிலும் திரிந்துகொண்டே தான் இருக்கிறான். ஆனால், புத்தகங்கள் சாமாண்யனுக்காக எழுதப்படுவதில்லை என்பதுதான், புத்தகங்கள் விற்காத ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை ஆக்கி வைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

அப்படி எளிமையாக சாமாண்யனை சென்றடைய முயன்ற‌ ஒரு புத்திசாலி எழுத்தாளராகத்தான் சுஜாதாவை பார்க்கிறேன். தமிழ் இலக்கிய வரையறைகளை கைகொண்ட கர்வத்தில் தன்னை தொடர்ந்து வர முடியாத சாமாண்யனை ஃபிலிஸ்தின் என்று அவர் சொல்லியிருந்திருப்பாரேயானால், அவரது எழுத்தும் காணாமல் போயிருக்கலாம் அல்லது பத்தோடு பதினொன்றாகியிருக்கலாம். இறுதிவரை எளிமையான மனிதர்களுக்கு புரியக்கூடிய எல்லையிலேயே அவர் தன்னை இறுத்திக்கொண்டிருந்தார். ஏனெனில் , எழுத்துலகில் பிழைத்திருப்பது வாசிப்பவர்களின் தரத்தை பொருத்தே அமைகிறது.

இது நடக்காத வரை, விருதுகளுக்காகவும், அங்கீகரிப்புக்களுக்காகவும் புத்தகங்களை சாமான்யர்கள் மீது திணிக்கும் மனோ நிலை வளர்ந்துகொண்டு தான் இருக்கும்.

 

காதலர் தினம்

$
0
0
காதலர் தினம்


"காதலர் தினத்துக்கு நீங்கள் ஏதும் போஸ்ட் போடலையா பாஸ்"என்று கேட்டார்கள். நான் என்னத்தை போடுவது. காதல் வாய்த்தவன் கொண்டாடும் தினம் இது. நானெல்லாம் சேவல் கும்பலை சேர்ந்தவன். நான் என்னத்தை போட!!

கடைசியாக தாம்பரம் CSC யில் வேலை பார்த்தபோது ஒரு பெண் மீது டிங்கோல்ஃபீ வந்தது..(பெயர் ஊரெல்லாம் வேண்டாம். அந்த பெண்ணுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. எதற்கு வீணாய் பிரச்சனை!!) அழகென்றால் அத்தனை அழகு... உட்கார வைத்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. ஆனால் அவள் என்னடாவென்றால் திரும்பி கூட பார்க்கவில்லை. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன். அந்த கம்பெனியில் வேலை பார்த்த 18 மாதங்களில் ஒரே ஒரு ஹாய் கூட சொன்னதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

என்னை பொறுத்த வரையில், பெண்கள் விஷயத்தில் அப்படி விட்டுவிடுதல் ஒருவகையில் சரியும் கூட. அதை விளக்கவேண்டுமென்றால் ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.

ஒரு கேஸ். பதினெட்டு வயதுப்பெண். கொலைசெய்யப்பட்டுவிட்டார். காதலைச் சொல்லியும் ஏற்கவில்லை என்பதால் கோபத்தில் கத்தியால் குத்திவிட்டானாம் ஒரு தலையாய் காதலித்தவன். முதலில் தற்கொலை என்று முடிக்க பார்த்திருக்கிறார்கள். பெண்ணின் பக்கமிருந்து வலுவாக கேள்வி எழும்பியதால், போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார்கள். முடிவில், பெண்ணுக்கு பாலியல் நோய் இருந்திருப்பது தெரிந்திருக்கிறது.  18 வயதுப்பெண். அவளுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருந்திருக்கிறது. அந்த பெண் வேண்டாம் என்று சொன்னபோதே இவன் நாசூக்காய் ஒதுங்கிப் போயிருந்தால் வேறொரு வாழ்க்கை அவனை சுவீகரித்திருக்கும். புத்திகெட்டு யாருக்கோ எப்படியோ போக வேண்டியவளை கொன்று கொலைகாரனாகிவிட்டான்.

பெண்கள் பெரும்பாலும் மிகவும் நேர்மையானவர்கள். (விதிவிலக்குகள் உண்டு). ஒரு ஆணுக்கு, No சொல்வதற்கு பின்னால், அவன் தகுதியில்லை என்று மட்டும் எல்லா நேரத்திலும் அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது.  அந்த ஆணுக்கு அவள் தகுதியில்லை என்றாலும் கூட அந்த பெண்ணிடமிருந்து No வரலாம். அந்த ஆணை புரியவில்லை என்றாலும் No வரலாம். பெண்ணிடமிருந்து No வந்தால், U டர்ன் அடித்து விடுவது உத்தமம் என்று தான் தோன்றும் எனக்கு.  நான் ஒன்றும் டெஸ்ட் ட்யூப் பேபி அல்ல. நானும் அம்மா என்கிற பெண்ணுடனும், தங்கை என்கிற பெண்ணுடனும் வளர்ந்தவன் தான்.

வளர்ச்சிக்கான ஏணிப்படி நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டே போகிறது. போட்டியில் தேங்கிவிடக்கூடாது என்பது சர்வைவல். ஜாதகத்தில் ஓரளவு நம்பிக்கை உண்டு. நேரம் சரியில்லை என்றால் ஓணானை நாம் வேட்டிக்குள் விடவேண்டாம். ஓணானே ஜம்ப் செய்து சரியாக நம் வேட்டிக்குள் தான் விழும். நேரம் சரியில்லாதவர்கள், இருப்பதையெல்லாம் மூடிக்கொண்டு வாலை சுருட்டிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவது உத்தமம். சனியும் கேதுவும் அத்தனை பயங்கரமானவர்கள்.

ஆதலால், பெண்களை பொறுத்தவரை என் அணுகுமுறை இதுதான். அதிகமெல்லாம் குழப்பிக்கொள்வதில்லை.

அந்தப்பக்கமிருந்து லேசாக ஒரு முகச்சுளிப்போ, பாராமுகமோ வந்தாலும், "இந்த பட்சி வேற எங்கயோ சிக்கியிருக்குது போல"என்று நினைத்தபடி ஜகா வாங்கி என் போக்கில் போய்விடுவேன். அந்த பெண்ணாக மேற்கொண்டு ஆர்வம் காட்டவில்லை எனில், அந்த சாப்டர் அதோடு க்ளோஸ். மங்களம் தான்.

இந்த அணுகுமுறை சரியா தவறா என்பதெல்லாம் தெரியவில்லை. என்னால் இவ்வளவுதான் முடிகிறது. நேரம் வேறு பிறந்ததிலிருந்தே சரியில்லை. ஏதோ கடவுளின் பிச்சை. அமேரிக்காவில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்.

இந்த காரணத்தால் நினைவு தெரிந்து எந்த பெண் பின்னாலும் காதல் என்று போனதில்லை. முதல் ஹாயில் பேச்சு வந்தால் சிக்ஸர்..(நான் சிங்கில்ஸ் கூட‌ அடித்ததில்லை..எல்லாமே டக் அவுட் தான்) இல்லையென்றால் விக்கெட்டையே பறிகொடுத்துவிட்டு டக் அவுட் ஆகி, அப்படியே காணாமல் போய்விடுவேன். நினைவு தெரிந்து இதுதான் நடந்திருக்கிறது.

அந்த CSC பெண் பாராமுகம் காட்டியபோது, ஜகா வாங்கி கம்பெனியை விட்டே வந்துவிட்டேன். எனக்கெல்லாம் இவ்வளவுதான் அதிர்ஷ்டம். அப்பா அம்மாவாக பார்த்து யாரையாவது என் தலையில் கட்டினால் தான் உண்டு.

இந்த லட்சணத்தில் காதலர் தினத்துக்கு போஸ்ட் போடவேண்டுமாம். போஸ்ட். அட போங்கப்பா!!

குறுங்கதைகள்

$
0
0
குறுங்கதைகள்


காதலர் தினத்துக்கு நான் எழுதிய குறுங்கதைகளிலேயே காதல்'என்கிற கதை மிகவும் பிடித்திருந்தது..



காதல் - ஒரு பக்க கதை



நேரான மருவற்ற சாலையில், சாதனா தன் தோழி சரிதாவுடன் எதிர்படுகையில், தடுமாறி அவர்களெதிரே வழுக்கி விழுந்தான் மதன்.

'ஏங்க, மேடு பள்ளம் இல்லாத புது ரோட்டுலகூடவா வழுக்கி விழுவீங்க'என்றாள் சரிதா கேலிச்சிரிப்புடன்.

'ரோட்டுல மேடு பள்ளம் பள்ளம் இல்லதாங்க.. ஆனால் அபாய வளைவு தான் உங்க ஃப்ரண்டு கிட்ட‌ இருக்கே.. அதுதான் வழுக்கிடுச்சு'என்றான் மதன், எழுந்து நின்றபடி.

வெட்கி சிரித்த சாதனா, அணிந்திருந்த சேலை முனையை விரல்களால் இழுத்து தனது இடுப்பை மறைத்துக்கொள்ள,

'எது இருக்கோ இல்லையோ.. வாய் இருக்கு'என்றாள் சரிதா.

அடுத்த நாள், தூரத்திலேயே மதனை பார்த்துவிட்டு, தனது இடுப்பை சாதனா, சேலை முனையால் மறைத்துக்கொள்ள, நெருங்கி வருகையில் மீண்டும் வழுக்கி விழுந்தான் மதன்.

'இப்ப என்னாச்சு சாருக்கு?'என்றாள் சரிதா.

'இப்பவும் அதே அபாய வளைவு தாங்க'என்றான் மதன்.

'ஹலோ.சாருக்கு என்ன எக்ஸ்ரே பார்வையா இருக்கு? அதான் இழுத்து போத்தியிருக்காளே. அப்புறம் எப்படி தெரிஞ்சுதாம்'என்றாள் சரிதா.

'நான் சொன்னது உங்க இடுப்பை தாங்க'என்றான் மதன்.

'அப்போ நேத்து அவ இடுப்புன்னு சொன்னீங்களே?'என்றாள் சரிதா.

'ஐம் சாரி.. நான் நேத்து உங்களை பத்தி அவங்ககிட்ட தாங்க சொன்னேன்..'என்றான் மதன்.

இப்போது சரிதா வெட்கப்பட, சாதனா அதிர்ச்சியானாள்.




 - ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)




இது போன்ற கதைகள் எழுதப்படுவதை ஊக்குவிக்க கொஞ்ச நாள் முன்பு வரை உயிர்மை பதிப்பகத்தின் உயிரோசை இணைய தளம் இருந்தது. வாரம் ஒரு கதை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். அவர்களும் வெளியிட்டார்கள்.

ஒருமுறை கவிஞர் மனுஷ்யப்புத்திரனை அவரது மயிலாப்பூர் அலுவலகத்தில் சந்தித்தபோது, 'யாருமே சரியா எழுத மாட்டேன்றாங்க'என்றார் என்னிடம். அப்போதே நினைத்தேன். அந்த இணைய இதழை நிறுத்தி விடுவார்கள் என்று. நிறுத்தியே விட்டார்கள்.

இப்போது இவ்வகை கதைகளை குங்குமம்,  குமுதம், ராணி போன்ற வெகு ஜன பத்திரிக்கைகள் ஆதரவளித்தால்தான் உண்டு. எழுத்தாளருக்கு சன்மானமும் இந்த பத்திரிக்கைகள் தான் தருகின்றன. கதைக்கு ரூ.300 குறைந்தபட்சம் கியாரண்டி.

இவ்வகை கதைகள் என்னால் அதிகளவில் எழுத முடிகிறது. தோன்றுவதை வேறென்ன செய்ய? ஆங்கிலத்தில் critical thinking, Logical reasoning என்பார்கள்.  இதெல்லாம் சிந்தனா முறையில் இருந்தால், இவ்வகை கதைகள் தண்ணி பட்டபாடு தான் அதைச் செய்கையில் ஒரு சாகச உணர்வு கிடைக்கிறது பாருங்கள்.. அது அலாதியோ அலாதி. இவ்வகை கதைகளில் ஆபத்தும் இருக்கிறது. இலக்கியவாதி இல்லை என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். ஜனரஞ்சக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆணானப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவுக்கே அதுதான் கதி. ஆனாலும் அவருடைய சில கதைகள் இலக்கிய மதிப்பு வாய்ந்தவை தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். எனக்கு இலக்கிய காவலராக இருக்கவெல்லாம் விருப்ப‌மில்லை. அதை ஒரு நோயாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. நான் காணும் உண்மைகளை பதிய ஒரு மார்க்கம். எழுத பிடிக்கிறது. எல்லா வகை எழுத்தையும் எழுதக்கூடியவனாக இருக்கவே விரும்புகிறேன். புத்திசாலித்தனமான எழுத்து. சமூகத்துக்கு எதையேனும் உருப்படியாக சொல்லக்கூடிய எழுத்து.

இலக்கிய வரையரை எது என்று தெரியும். அதை வெளிப்படுத்த நாவல்களும், கவிதைகளும் மட்டுமே எனக்கு சரியான தளமாக படுகின்றன. 'ஒப்பனைகள் கலைவதற்கே'நாவலுக்கு இலக்கிய மதிப்பு உயர் தரம். உயிர்மையின் உயிரோசையில் வெளியான எனது கவிதைகளும் தான். சிறுகதைக‌ள் இலக்கிய மதிப்பு மிக்க ஆக்கத்திற்கு கொஞ்சம் சுருங்கிய வடிவமாகவே பார்க்கிறேன்.

மிகவும் பிடித்த இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதி  Magnolia Review Magazineஎன்கிற சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். இந்த இடத்தில் இந்த சிற்றிதழ் பற்றி சொல்லவேண்டும்.

அமேரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள Bowling Green State University என்கிற பல்கலைக்கழகத்தின் Creative Writing மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிற்றிதழ் தான் Magnolia Review Magazine என்பது. தற்போது Suzanna Anderson என்பவர் இதன் எடிட்டராக உள்ளார்.

இந்த கதையை அனுப்பிவிட்டு மறந்துவிட்டேன். ஆங்கிலத்தில் பல பத்திரிக்கைகளிலிருந்து பதில் வர‌ அதிகபட்சமாக 90 நாட்கள் கூட ஆகும். ஆகையால் அனுப்பிவிட்டு மறந்துவிடுதல் உத்தமம். சமீபமாக Suzanna மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்களது சிற்றிதழில் வெளியிடுவதாக. சொன்னபடி வெளியிட்டுவிட்டார். ஆங்கிலம், தமிழ் இரண்டையும் வாசித்துவிட்டு சொல்லுங்கள். எது நன்றாக இருந்தது என்று. இப்படி வெளியாவது இது வரை எத்தனையாவது முறை என்பது மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.

என்னைப்பொறுத்தவரை, Speculative Fiction களுக்கு சந்தை இருக்கிறது. குறுங்கதைகளுக்கு ஒரு இடம் இருக்கிறது. இனி தாராளமாக தோன்றியதையெல்லாம் எழுதலாம்.

ஒரே கதை. இரண்டு மொழிகளில். எப்படி இருக்கிறது என்பதை வாசித்துப்பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள்..

குறுங்கதைகள் - 2

$
0
0
குறுங்கதைகள்  - 2


இதுவும் ஒரு Drop Out குறுங்கதை. Drop Out என்றால் தேறாது, கடைசி பெஞ்ச், சுமார் மூஞ்சி குமாரு கேஸ்.

எழுதி அனுப்பி மாமாங்கம் ஆகிறது. தமிழில் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்று வெறுப்பாகி, ஆங்கிலத்தில் எழுதி கண்டதற்கும் அனுப்பிவிட்டு மறந்துவிட்டேன். காதலர் தினத்துக்கு தங்கள் சிற்றிதழில் வெளியிட்டிருப்பதாக தகவல் அனுப்பியிருக்கிறார் Yellow Mama எடிட்டர் Cindy Rosmus. Yellow Mama என்பது Black Petals பதிப்பகத்துடன் இணைந்து இயங்குவது.இந்த இடத்தில் Black Petals Publishing பற்றி கொஞ்சம் மேலதிக தகவல்.

நம்மூரில் உயிர்மை, காவ்யா போல் இதுவும் ஒரு பதிப்பகம். இணையத்தில் பத்திரிக்கையும் நடத்துகிறது. அமேரிக்காவின் Kansas நகரத்தில் இயங்குகிறது இந்த பதிப்பகம். என் இடத்திலிருந்து சரியாக இரண்டே மணி நேரம் தான்... ஹிஹி.. விமானத்தில்!!

நம்மூரில் தான் ஓ ஹென்றித்தனமான கதைகளை எழுதினால், தீண்டத்தகாதவன் போல் ஒதுக்குவதெல்லாம். இங்கே அதற்கென ஒரு பெருங்கூட்டமே இயங்குகிறது. அவரவர்களுக்கென பதிப்பகங்கள் துவங்கி எழுத்தை வளர்ப்பார்கள். Black Petals Publishing என்பது அறிவியல் புனைவு, மற்றும் திகில் கதைகளுக்கான‌ பதிப்பகம். ஆங்கிலத்தில் Dark Fiction என்பார்கள். இங்கே இலக்கிய எழுத்தையெல்லாம் நயா பைசாவுக்கு மதிக்க மாட்டார்கள்.. "தம்பி, சில்லறை இல்லை. வேற இடம் பாரு"என்று வாசலுக்கு விரட்டிவிடுவார்கள்.

இந்த இதழுக்குத்தான் எனது இந்த தமிழ் கதையை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தேன். காதலர் தினத்துக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

இரண்டையும் இங்கே தருகிறேன். வாசித்துவிட்டு எது எப்படி என்று எழுதுங்கள். இந்த கதைகள் தமிழில் ஏன் தேர்வாவதில்லை என்பது சுவாரஸ்யமான இரண்டு மணி நேர பேச்சுக்கு நல்லதொரு கச்சாபொருள். அதை வேறொரு சமயம் எழுதுகிறேன்.. இப்போது கதைகள்..

எதையும் ஒரு முறை - ஒரு பக்க கதை



தரணிக்கு எதையும் ஒரு முறை முயன்றுவிட வேண்டும். எதையும் என்றால் எதையும்.

இதோ இப்போது கூட அந்த, நீர் கோர்த்திருக்கும், சுவர்களில் வீர‌ல்களிட்ட, ஆங்காங்கே பீடா குதப்பி துப்பப்பட்ட, முழுவதும் பெயிண்ட் உரிந்த அந்த மூன்றாம் நான்காம் தர லாட்ஜுக்கு அவன் வந்திருப்பதும் கூட 'அதை'முயற்சி செய்துவிடத்தான்.

துண்டு பீடியிலிருந்து பைப் வரை முயற்சித்தாகிவிட்டது. பனங்கள்லிருந்து, மிலிட்டரி ஹாட் வரை விழுங்கியாகிவிட்டது. இரண்டொரு முறை பாங்காக் கூட போயாகிவிட்டது.

'எதையும் ஒரு முறை'முயற்சி செய்துவிடுவது என்பது அவனது அப்பா அவனுக்கு சொல்லிக்கொடுத்த பாடம். வாழ்க்கை ஒரு முறைதான். கலாச்சாரம் பண்பாடு என்பதெல்லாம் மனிதன் மனிதனுக்காக உருவாக்கிய கற்பிதங்கள் தான். ஆசைப்பட்டதை ஒரு முறையேனும் அனுபவித்துவிட வேண்டும். இது தான் தரணியின் அப்பா, தரணிக்கு சொல்லிக்கொடுத்த பல பாடங்களில், தரணியின் மண்டையில் ஏறிய ஒரு எசகுபிசகான பாடம்.

அறைக்குள் நுழைகையிலேயே பின்னாலேயே ப்ரோக்கர் சேகரும் நுழைந்தான்.

'எப்படி வேணும்னு சொல்லவே இல்லையே'என்றான்.

தரணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது புதுசு. எதையும் ஒரு முறை என்று வந்தாகிவிட்டது. முதல் முறைக்கு எதுவாக இருந்தால் என்ன?

'அழகான பொண்ணா....................'என்று இழுத்தான் தரணி.

சேகருக்கு புரிந்திருக்க வேண்டும்.

'என்கிட்ட ஒரு தடவை வந்துட்டீங்கன்னா மறுபடி மறுபடி என்கிட்ட தான் வருவீங்க.. அதான் நம்ம தொழில் திறமை.. உங்களுக்கு ஏத்தா மாதிரி ஒண்ணு அனுப்புறேன் பாருங்க'என்றான்.

'சரி...'என்ற தரணி, நான்கு ஐந்நூறு ரூபாய் தாள்களை சேகரின் பைக்குள் திணித்தான்.

சேகர் வெளியேற, அணிந்திருந்த பாண்டையும், சட்டையையும் கழட்டி அருகிலிருந்த நாற்காலியின் முதுகில் போர்த்திவிட்டு, கைப்பையில் இருந்த லுங்கியை மாட்டிக்கொண்டு, லுங்கிக்குள் கைவிட்டு ஜட்டியை கழட்டி கட்டிலுக்கடியில் எத்தி தள்ளினான்.

இரண்டு கைகளையும் கவட்டைக்குள் நுழைத்து உருவிவிட்டு படுக்கையின் ஓரத்தில் அமர, பர்தாவால் முகத்தை மூடியபடி ஒரு பெண் உள்ளே நுழைந்து கதவை உள்பக்கமாக சாத்தினாள்.

கையும், பர்தாவில் தெரிந்த நெற்றி மற்றும் மூக்கு சதையின் வெண்மை அசரடித்தது. பர்தாவையும் மீறி மார்பின் பருமன் தெரிந்தது. நீண்ட அழகான விரல் நகங்களில் சிவப்பு நிறத்தில் பாலிஷ், கால்களின் அணிந்திருந்த, லேசாக ஹீல்ஸ் வைத்த, தோல் நரம்புகளால் கால்களை பிண்ணிக்கொள்ளும் வகையான செருப்பு என கொஞ்சனூன்டு தெரிந்தாலும் அந்த கொஞ்சனூன்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்யும் வகைக்கு இருந்தாள் அவள்.

இந்த பெண்ணுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்று தோன்றியது.

'வாய் வேலை பண்ணுவியா?'என்றான் தரணி

அவள் சட்டென திரும்பினாள். தரணியையே பார்த்து நின்றாள்.

'என்னா பாக்குற? வேணும்னா அதுக்கு தனியா ஆயிரமோ, ஐந்நூறோ வாங்கிக்க'என்றான்.

'ஏய்? என்னை என்ன ஆயிரத்துக்கும் ஐந்நூறுக்கும் படுக்குறவன்னு நினைச்சியா? ஐம் நாட் தட் கைன்ட். எங்கப்பா எனக்கு சொல்லிக்கொடுத்தது. எதையும் ஒரு முறை ட்ரை பண்ணனும். அவ்ளோதான்'என்றாள் அவள் மிடுக்குடன்.


 - ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)



ரத்தக்காட்டேரி

$
0
0
ரத்தக்காட்டேரி


மிருதன் தமிழ் சினிமாவுக்கு புதுசு. Zombie வகையான கதை. Speculative Fiction ல் ஒரு வகை. நான் இன்னும் பார்க்கவில்லை.

ரத்தக்காட்டேரி கதைகள் தமிழில் ஏதேனும் வந்திருக்கிறதா ??.. பெரிதாக யாரும் முயற்சித்திருப்பது போல் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு டேஸ்ட் வரவில்லை என்று தோன்றுகிறது. சின்னதம்பி போல் படமெடுத்தால், சி சென்டர்களில் நூறு நாள் கியாரண்டி.. போட்ட பணத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கும் சேர்த்து பணம் ரெடி பண்ணிவிடலாம்.

ஒரு வருடம் முன்பு கடைசியாக ஒரு பேய்ப்படம் பார்த்தேன். பெயர் 'சிவி'. அட!! என்று தோன்றியது. ஆனால் பிற்பாடு எச்.பி.ஓ சேனல் காட்டிக்கொடுத்துவிட்டது. ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி அப்படியே வரிக்கு வரி காப்பி அடித்து எடுத்திருந்தார்கள்... ம்ஹூம்... ஒரிஜினலாக முயற்சிக்க சத்யஜித்ரே தான் மீண்டும் வரவேண்டும் போல.

பின்வருவது ஒரு ரத்தக்காட்டேறி கதை. தமிழில் எழுதினால் வெளியாக மாட்டேன் என்கிறது என்று நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவோம் என்று தோன்றி இதை எழுதினேன். Quail Bell Magazine என்பது ரத்தக்காட்டேரி கதைகளுக்கேயென இயங்கும் இணைய பத்திரிக்கை. Feathery Hugs இதன் எடிட்டராக இருக்கிறார். சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நான் எப்படியோ அதை கவனிக்காமல் விட்டுவிட்டிருக்கிறேன்.. (இப்போதுதான் கவனித்தேன். இதுபோல் இன்னும் எத்தனையை கவனிக்க இருக்கிறேனோ தெரியவில்லை).

எழுதிய பிறகு தான் தெரிந்தது, அறிவியல் புனைவு, க்ரைம் அளவிற்கு இது போன்ற கதைகள் எழுதுவதில் அத்தனை சாகசம் இல்லைதான். எழுதுகையிலேயே ரத்த வாடை அடிப்பது போல ஒரு உணர்வு. இதற்கு பிறகு ரத்தக்காட்டேறி கதை எழுத தோன்றவில்லை.

சரி. எதற்கு அதெல்லாம்? கதை இதோ..









கதை

$
0
0
கதை 



நான் எழுதிய கதை ஒன்று இப்படி துவங்குகிறது..

***********************************************


அவள் தேவதை போல் வந்தாள்.

இவ்வளவு சொன்னால் போதுமா? அவள் அழகை துல்லியமாகக் கணக்கில் கொண்டால் மேற்கண்ட இந்த நான்கு வார்த்தைகள் ரொம்பக் கம்மி. உயரம் ஐந்தடி இருக்கலாம். ஒல்லியான தேகம். ஆனால், 'இரண்டு முழு டென்னிஸ் பந்துகளை வைக்க அவளுக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?'என்று சில்மிஷம் பிடித்த என்னைப் போன்ற நான்கு பேர் அவளைப் பார்த்தால் நிச்சயம் சொல்லக்கூடும்.

ஒரு வயது வந்த ஆணின் உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய இடை. அதை இறுக்கிப் பிடித்தபடி அவளுடன் நடந்தது அவள் அணிந்திருந்த ஜீன்ஸ். அதன் மீது ஒயிலாக அமர்ந்திருந்தது ஒரு பெப் டீசர்ட்.

சந்துரு ஏற்கனவே சன்னமாக உருமிக்கொண்டிருந்த‌ கார் கதவைத் திறந்துவிட, ஜோ பின்சீட்டில் ஏறிக்கொண்டாள். சந்துரு சுற்றும் முற்றும் பார்த்தான் . ஒரு பிரபல துணிக்கடையின் கார் பார்க்கிங் ஏரியா. சுற்றிலும் வண்ண வண்ணமாய் கார்கள். சந்துரு காரைச் சுற்றி நடந்து வந்து, இன்னொரு பக்க கதவைத் திறந்து, தானும் பின்சீட்டில் ஏறிக்கொண்டு, கதவை சாத்தினான்.

'ஏய் லூசு.. இங்கயேவா?'என்றாள் ஜோ.

'ஆமாடி.. பிசாசு'என்றவாறே அவளது உதட்டை கவ்வினான் சந்துரு.

கார் மெல்லிய குளிரை தொடர்ந்து பாய்ச்சிக்கொண்டிருந்தது. கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த சன் ஃபிலிம் அவர்களை லாவகமாக மறைத்தது.
தொடர்ந்து  பாய்ச்சப்பட்ட குளிர் கண்ணாடிகளில் குடியேறி, தன் பங்கிற்கு உதவியது.

சந்துருவின் விரல்கள் மெல்ல அவளது ஜீன்ஸ் கவ்விய தொடையில் ஏறி, டீசர்டுக்குள் புகுந்தது. அவள் தடுக்கவில்லை. அவளது கண்கள் செருகின. கன்னங்கள் சிவந்தன. காரில் பரவிக்கொண்டிருந்த குளிரையும் மீறி, உடலில் லேசாக உஷ்ணம் ஏறியது. சந்துருவின் வலது கை அவளது டீசர்ட்டின் உள்ளே பதுங்கியிருந்த டென்னிஸ் பந்துகளை கவ்விப்பிடித்தது. ஜோ லேசாக முனகினாள்.

'சந்த்.......ர்ர்ர்ரூ... இங்க வே....ணாம்.... ப்ளீஸ்'என்றவாறு சந்துருவை தள்ளிவிட்டாள். கார் லேசாக குலுங்கியது.

அப்போது காக்கி சீருடை அணிந்த யாரோ, காரை அணுகுவது தெரிந்தது.

'போச்சு..மாட்டிக்கிட்டோம்.. 'என்றாள் ஜோ, ஆடைகளை சரி செய்தவாறு. சந்துரு அவசரமாக கன்னங்களில் ஒட்டியிருந்த, ஜோவின் உதட்டுச்சாயத்தை துடைத்து அழித்தான். முன்பக்க சீட்களில் ஆள் இல்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். பின்சீட்டில் மணமாகாத ஆணும், பெண்ணும்!  சந்துருவிற்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது.

சீருடை அணிந்த காவலாளி , டிரைவர் சீட்டின் கதவை தட்டினான். சந்துரு பவர் விண்டோவின் பொத்தானை அழுத்த, பின் சீட் கண்ணாடி மெல்ல கீழிறங்க,

'ஏய்.. என்ன பண்ற?'என்று தடுக்க எத்தனித்த‌ ஜோ, கண்ணாடி இப்போது ஓரளவிற்கு இறங்கிவிட்டதனை உணர்ந்து, மெளனமானாள். காவலாளி இப்போது குனிந்து பின்சீட் ஜன்னலின் ஊடாக சந்துருவையும், ஜோவையும் பார்க்க,

'டிரைவர், இதோ வரேன்னுட்டு போனான்..ஆளைக் காணோம்.. இப்போ எடுத்திடுவோம்'என்றான் சந்துரு.

சட்டென பிரகாசமானாள் ஜோ.

'எங்க போய் தொலைஞ்சான் அவன்.. அடுத்த மாசத்துலேர்ந்து வேற டிரைவரை போடுங்க'என்றாள் தன் பங்கிற்கு.

'ஓ...ஓகே சார்.. நிறைய கார் பார்க்கிங்க்கு வெயிடிங்.. உங்க காரை எடுத்திட்டீங்கன்னா...'என்று இழுத்த‌ காவலாளி, விலகி நிற்க,

'இதோ.. நானே எடுத்துடறேன்'என்றுவிட்டு கதவு திறந்து இறங்கிய சந்துரு, டிரைவர் இருக்கையில் அமர்ந்தான்.

கார் சாலையில் விரைந்தது.

'சூப்பர் சந்துரு.. உனது சமயோசித புத்தியை யாம் மெச்சினோம்'என்றாள் ஜோ.


  - தொடரும்....

***********************************************




இப்போதைக்கு இவ்வளவுதான்.. வாசகனை முதல் இரண்டு வரிகளிலேயே ஈர்த்தாகவேண்டும். அட! அவனை ஈர்க்க முடியாவிட்டாலும், யாரேனும் கதை திறனாய்வு செய்பவர்கள் கண்ணில் பட்டால் 'முதல் இரண்டு வரிகளிலேயே ஈர்க்கிறான் இந்த ஆள்.. இவனின் அடுத்ததை நம்பி வாசிக்கலாம்'என்கிற பெயர் நிச்சயம் வாங்கியே ஆக வேண்டும்.. இல்லையென்றால், நாவல் எழுதி கொண்டு போகையில், 'சார் , பிஸியா இருக்காரு'என்று பதில் வந்துவிடலாம்..

இது ஒரு நிர்பந்தம். இந்த நிர்பந்தத்தை பூர்த்தி செய்யவாவது கொஞ்சம் அப்படி இப்படி எழுதித்தொலைக்க வேண்டி இருக்கிறது. நல்ல வேளை!! என் வீட்டில் யாரும் இவன் என்ன பெரிதாக எழுதி கிழித்துவிடப்போகிறான் என்று நினைப்பவர்களாக இருப்பதால் நான் எழுதுவதை யாரும் படிப்பதில்லை.. என் அம்மா சப்பாத்தி செய்ய பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை திருட்டுத்தனமாய் பிய்த்து தின்றது குறித்தோ, தீபாவளிக்கு சாமிக்கு படைக்கும் முன்பே திருட்டுத்தனமாக குலோப் ஜாமூனில் இரண்டை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டது குறித்தோ என் ப்ளாக்கில் எழுதினால் சத்தியமாக என் அம்மாவிற்கு தெரியவராது.. அந்த அளவிற்கு என் ப்ளாக் என் வீட்டில் பரிச்சயம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. அதனால் என்ன கர்மாந்திரத்தை வேண்டுமானாலும் இங்கே கொட்டலாம்.. யாரும் படிக்கமாட்டார்கள்.... ஒரு வகையில் ப்ளாக் என் மனதோடு பேசுவது போல...

சரி விடுங்கள்.. இதான் துவக்கம்.. இதற்கு பிறகு இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கவேண்டும்.. அப்படியே தூக்கம் வந்துவிடும்.. அப்புறமென்ன...

ஒரு காதல் கதை - 1

$
0
0
ஒரு காதல் கதை - 1


குளியலறைக்குள்ளே தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது.

அவதானித்தவரை, திவ்யா குளித்துவிட்டு வர எப்படியும் இன்னும் ஒரு பத்து நிமிடங்களாவது ஆகும். அதற்குள்..... பரபரத்தான் கிருஷ்ணா.

டிவியில் பிரகாஷ்ராஜ் கோபமாக‌ வசனம் பேசிக்கொண்டிருந்தார். முதலில் வால்யூம் ஏற்றினான். சமையலறைக்கு போனான். அலமாறிக்கு மேல், சமையல் மேடையின் கீழ், குளிர்சாதனப்பெட்டியின் பக்கத்தில் என வாஸ்து
பிரகாரம் தேடியதில் வாய் அகலமாக ஒரு பாத்திரம் கிட்டியது. எடுத்து , குழாயை திறந்து தண்ணீர் பிடித்தான். தளும்ப தளும்ப தண்ணீர் நிறைந்தவுடன் குழாயை மூடிவிட்டு, பாத்திரத்துடன் அரவம் கேட்காத வகைக்கு நுனி

காலில் நடந்து நேராக படுக்கையறை வந்தான். பீரோவைத் திறந்து திவ்யாவின் சேலை, நைட்டி, புடவை, ஜாக்கேட் வைக்கப்பட்டிருந்த கப்போர்டில் அப்படியே பாத்திரத்தை கவிழ்த்தான்.

சத்தமில்லாமல் மீண்டும் சமையலறை சென்று பாத்திரத்தை பொத்தினாற்போல் கவிழ்த்து வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையறை வந்தான். குளியலறையில் கொட்டிக்கொண்டிருந்த நீர் நிற்கும் ஓசை கேட்டது.

விளக்கணைத்துவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்யத்துவங்கினான் கிருஷ்ணா.

சற்றைக்கெல்லாம், அடைமழைக்கு நனைந்த சிட்டுக்குருவி, தலையை சிலுப்பிக்கொள்வதுபோல் தலை துவட்டி வந்தாள் திவ்யா. சிவந்த உடல் மேனியெங்கும் திட்டுதிட்டாக நீர் கோர்த்து, அவள் மேனியை பிரிய மனமின்றி
ஒட்டிக்கொண்டிருந்தன‌. ஒரே ஒரு நனைந்த டவல் அவளின் மார்பிலிருந்து, இடுப்புவரை மறைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. விளக்கை ஒளிர விட்டுவிட்டு, பீரோவைத் திறந்தாள். அதிர்ந்தாள்.

நீரில் தெப்பலாய் நனைந்த ஆடைகளை பார்த்துவிட்டு,

"ஹேய்..பக்கி.. இங்க எப்படி தண்ணி வந்துச்சு? என் டிரஸ் எல்லாம் தண்ணி"கிட்டத்தட்ட அலறினாள் திவ்யா.

திவ்யாவின் அலறல் கேட்டு அப்போதுதான் கண்விழிப்பதான பாவனையுடன்,

"எனக்கெப்படி தெரியும்? உன் மேல அதுங்களும் ஜொள்ளு விடுதுங்களோ என்னமோ?"என்றான் கிருஷ்ணா..



"ஐயோ.. தெரியாம குளிச்சி தொலைச்சிட்டேன்.. இப்போ எதை போட்டுக்குறது?"

"இப்ப இந்த ரூம்ல நான் மட்டும் தான் உலர்ந்து சூடா இருக்கேன் திவ்யா... என்னை வேணும்னா மேல போட்டுக்கோயேன்"

"ஐய.. ஆசை!!.. முடியாது போடா"

"அப்போ நான் வேணாமா?"

"வேணவே வேணாம்"

"ஓஹோ.. நான் வேணாம்.. ஆனா என் டவல் மட்டும் வேணுமா?.. குடுடீ என் டவல?"என்றுவிட்டு கிருஷ்ணா திவ்யாவின் நனைந்த உடலை கவ்வியிருந்த ஒரே ஒரு டவலை பிடித்து இழுக்க,

"வேணாம்.. வேணாம்.. உள்ள ஒண்ணும் போடலைடா"என்று திவ்யா டவலோட உடலை இறுக்கமாக அணைத்தபடி திமிறிக்கொண்டே கத்தினாள்.

"ஆங்.. நான் கூடத்தான் போடலை.. அதுக்காக இப்படியா கத்திட்டு இருக்கேன்.. இப்போ நீ கேட்டா கூட அவுத்து குடுத்துடுவேன்.. தெரியுமா?"

"ச்சீ.. கருமம் கருமம்.. உன் டிரஸ் ஒண்ணும் எனக்கு வேணாம்.. "

"எனக்கு மட்டும் என்ன ஆசையா உன் டிரஸ் மேல?"

"அப்புறம் ஏன் இழுக்குற இந்த டவலை?"

"அது ஒண்ணும் டிரஸ் இல்லை.. நம்ம கல்யாணத்துக்கு நான் வாங்கினது"

"அதுக்கு?"

"இப்போ எனக்கு தேவைப்படுது.. குடு"

"அய்யோ ,,படுத்துறானே"

"புருஷனை அவன் இவன்னு மரியாதை இல்லாமையா பேசுற?"

"ஆங்.. அபலை பெண் கிட்ட இருக்குற ஒரே ஒரு துணியையும் புடிச்சி இழுக்குறியே.. நீயெல்லாம் ஒரு கிருஷ்ணனா?"

"நான் ஒரு கிருஷ்ணன் தான் ..பின்ன ஏழெட்டு கிருஷ்ணனா?"

"உன் ஒருத்தனை வச்சே மாறடிக்க முடியலை.. இன்னும் ஏழெட்டா? தாங்காதுடா"

"புருஷனை டா போட்டு கூப்பிடறியே"

"ஆங். என் புருஷன் ..எப்படி வேணாலும் கூப்பிடுவேன்"

"சரி கூப்பிட்டுக்கோ.. இப்போ டவல் குடு"

"எதுக்கு? நீ தான் டிரெளசர், டிசர்டு போட்டிருக்கல... அப்புறம் எதுக்கு டவல் உனக்கு?"

"ஓ.. அப்போ டிரெளசர் டிசர்ட் இல்லைன்னா டவல் குடுத்துடுவியா? அப்போ டிரெளசர் டிசர்ட் கழட்ட சொல்ற? அப்படித்தானே?...அடிக்கள்ளி!!.. என்னையும் பர்த்டே டிரஸ்ல பாக்கணுமா?.. ஆசையை பாரு.."

"இல்லையில்ல.. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.. அட ராமா!!"

"அதுவும் நாந்தான்.. இன்னொரு பிறவி.. அது எதுக்கு இப்ப? ஆசைப்பட்டு பர்த்டே டிரஸ் போட சொல்லி கேட்ருக்க. உன் ஆசையை நிறைவேத்துறதை விட வேற என்ன வேலை? இதெல்லாம் முதல்லயே சொல்லக்கூடாதா செல்லம்."

என்றுவிட்டு, கிருஷ்ணா அணிந்திருந்த டிசர்ட் , ட்ரெளசரை கழற்ற,

"ஐயய்யோ ... ஒண்ணும் தெரியாத அப்பாவி பொண்ணை அதை இதை பேசி, கவுத்து கற்பழிக்க முயற்சி பண்றானே.. யாரும் காப்பாத்திடாதீங்க"என்று திவ்யா தன் இரு கைகளாலும் கண்களை மூடிக்கொள்ள, டவலும் டிரெளசரும்
தரையில் கட்டிக்கொண்டன‌....


தொடரும்....

ஒரு காதல் கதை - 2

$
0
0
ஒரு காதல் கதை - 2



கிருஷ்ணாவும், திவ்யாவும் படுக்கையில் கலைந்து கிடக்க அடர்த்தியான போர்வையொன்று அவர்களிருவரையும் மூடிக்கிடந்தது.

"டேய்.."

"ம்ம்..."

"மணி என்ன இருக்கும்?"

"என்னவா இருந்தா என்ன?"

"இன்னும் குளிக்கலைடா"

திவ்யா இப்படி சொன்னவுடன், திடுக்கிட்டு தலையை தூக்கிப் பார்த்த கிருஷ்ணா,

"ஐயய்யோ.. நான் ஒண்ணுமே பண்ணலயே"என்று அலறினான்.

"என்னது!? ஒண்ணும் பண்ணலையா?! அடப்பாவி.. போட்டு புரட்டி புரட்டி எடுத்துட்டு, ஒண்ணும் பண்ணலைன்னா சொல்ற? அடச்சே.. உடம்பெல்லாம் அசதியா இருக்கு.. சூடா தண்ணியில குளிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்ன்னு சொன்னேன்"

"ஓ..அவ்ளோ தானா.. பயந்தே போயிட்டேன்"

"என்ன பயம்?"

"என்ன பயமா?  ஏதோ சுமாரான ஃபிகரை கட்டியிருந்தாலும் தைரியமா இருக்கலாம்.. உனக்கு வேற ஏகப்பட்ட ஃபேன்ஸ்.. தெருவுல வீடு இருக்கோ இல்லையோ.. உனக்கொரு ஃபேன் இருக்கான்..கேக்கணுமா.. அதான்"

"ஃபென்ஸ்ன்னுலாம் இல்லை.. மரத்துக்கு புடவை கட்டினாக்கூட பாக்கத்தான் செய்யிறானுங்க..அதையெல்லாம் ஃபேன்ஸுன்னு சொல்லிக்க முடியுமா?.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.. உனக்கு என்னை புடிச்சிருக்கு.. அதான் பொய் பொய்யா சொல்லி ஜொள்ளு விட்டு கவுக்க பாக்குற‌"

"ஆமா.. அப்படியே நீங்க பொண்ணுங்க பொய் சொல்லி ஆம்பளைங்களை கவுக்காத மாதிரி தான்"




"ஹேய்.. நாங்க என்ன பொய் சொல்றோம்?"

"சொல்றதே இல்லையா? உங்கள்ல எத்தனை பேரு ஆம்பளை கண்ணத்தை தொட்டு பாக்க ஆசப்பட்டு தொட்டும் பாத்துட்டு, அப்புறம் ஊருக்குள்ள போயி கண்டவ கிட்டயும், 'அப்படியே அறைஞ்சிட்டேன்டீ'ன்னு சொல்லிக்கிறீங்க.. இதனால ஆம்பளைங்க எங்க பேரு எவ்ளோ கெட்டுப்போகுது தெரியுமா?"

கேட்டுவிட்டு கலகலவென சிரித்தாள் திவ்யா.

"என்னால நம்பவே முடியலைடா.."

"என்ன நம்ப முடியலை?"

"உன்னை ஒரு பொண்ணு கூட லவ் பண்ணலன்னு"

"ஏன்?"

"இவ்ளோ நல்லா பேசுற.. எப்படி இந்த பொண்ணுங்க உன்னை விட்டுவச்சாளுங்க?"

"பொண்ணுங்களுக்கு அதான் வேலையா?"

"உனக்கு பொண்ணுங்களை பத்தி தெரியாது... ஆம்பளைங்க எல்லாம் ஜுஜுபி தெரியுமா?"

"பொண்ணுங்களை பத்தி தெரியாது தான்.. காட்டேன்.... தெரிஞ்சிக்கிறேன்"என்றுவிட்டு மீண்டும் திவ்யா மீது கிடந்த போர்வையின் நுனியை பிடித்து இழுக்க,

"ஆரம்பிச்சிட்டியா.. இப்போதானே  முதல் ரவுண்டு முடிஞ்சது"

"அதுக்கு நான் காரணம் இல்லை மேடம்.. நீ தான்"

"ஹேய்.. நான் என்ன பண்ணேன்?"

"ஆங்.. அருக்காணி மாதிரி இருந்திருந்தா எனக்கும் பிரச்சனையே இருந்திருக்காது.. ஒரு ரவுண்டே ஜாஸ்தின்னு விட்டிருக்கலாம்.. மப்பும் மந்தாரமுமா........."

"ச்சீய் வாயை மூடு.. பொறுக்கி மாதிரி"

"ஏய்.. மப்பும் மந்தாரமுமா வானம்  இருக்கு.. மழை வரும் போல இருக்கு... குளிருது.. அதான் குளிருக்கு இதமா போர்வையை போத்திக்கலாம்ன்னு சொல்ல வந்தேன்.. பொண்ணுங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்கீங்க?.. அப்பாவி ஆம்பளைய எப்பவும் குத்தம் சொல்லிக்கிட்டு"

"அடப்பாவி!!"


  - தொடரும்....


ஒரு காதல் கதை - 3

$
0
0
ஒரு காதல் கதை - 3



திவ்யா குளித்துவிட்டு வந்தபோது கிருஷ்ணா, ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து, இடது கையை முதுகில் அணைவாக வைத்தபடி டம்பெல்ஸ் தூக்கிக்கொண்டிருந்தான். தசைகளின் அழகழகான வளைவுகள் வியர்வையில் வழவழத்து ஒளிர்ந்தன. அகண்ட தோள்கள் லாவகமாக இயங்க, நரம்புகள் ஒரு கம்பி இசைக்கருவி போல சருமத்தினூடே நெளிந்தன.

'ம்ம்ஹும்.. எவ்வளவு செஞ்சாலும் எங்காளு சூர்யா மாதிரி உன்னால ஆக முடியாது கிருஷ்ணா'என்றாள் திவ்யா.

'நான் எதுக்கு சூர்யா மாதிரி ஆகணும்? எனக்கு ஜோதிகா மேல எந்த ஆசையும் இல்லை.. என் ஆசையெல்லாம் ஆனந்தி மேல தான்'

'ஆனந்தியா? அது யார்?'

'ஆனந்தி! உடல் பொருள் ஆனந்தி!!.. தெரியாதா'

'தெரியாதுப்பா.. யாரது? வீட்டுல என்டெர்டெயின்மென்ட் போதாதுன்னு ஒரு புது சக்களத்தியா?'

'அது ஒரு சீரியல் கேரக்டர்.. ஆம்பளைக்கு வசியம் வச்சு முந்தானையிலேயே முடிஞ்சு வச்சிருக்கும்'

'ஓ.. அது யார்?'

'நீ தான்டீ..'

'நானா?'

'பின்ன? நீ தானே என்னை முந்தானையில முடிஞ்சி வச்சிருக்க'

'க்கும்.. நீ தினமும் படுத்துற பாட்டுக்கு முந்தானைன்னு ஒண்ணு இருக்குறதே எனக்கு மறந்துரும் போல.. அந்த அளவுக்கு இருக்கு நீ டெய்லி பண்றது? போகுற போக்கை பாத்தா நான் கேரள பெண்குட்டி மாதிரி தான் முந்தானையே இல்லாம திரிவேன் போல‌'

'ஹை..இந்த ஐடியா நல்லா இருக்கே'

'இருக்கும்.. இருக்கும்..'

இதற்குள் கிருஷ்ணா உடற்பயிற்சியை முடித்துவிட, வியர்வை வழிந்தோடும் உடலோடு திவ்யாவை கட்டிக்கொண்டான்.

'ஐயோ..ச்சீ.. ஒரே வேர்வை..'என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணாவை தள்ளிவிட்டாள் திவ்யா.

'ஐய்ய.. ரொம்பத்தான் சலிச்சிக்கிற?'



'யோவ்.. புதுப்பொண்டாட்டியை நாலு சுவத்துக்குள்ளயே வச்சி வயித்த ரொப்பி அனுப்பிடலாம்ன்னு ப்ளானா? நடக்காதுய்யா..'

'அப்படியெல்லாம் யாரு சொன்னா?  இதோ குளிச்சிட்டு வரேன்..வெளியில போலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்'

'என்ன கண்டிஷன்?'

'வீட்டு வாசலை தாண்டினதும் நீ யாரோ, நான் யாரோ'

'ஏன்?'

'சும்மா ஒரு ஜாலிக்கு'என்றுவிட்டு, கிருஷ்ணா பாத்ரூமிற்குள் நுழைந்து அடைந்து கொண்டான்.

சற்றைக்கெல்லாம் அழகான சிகப்பு நிறத்தில் சம்கி வேலைப்பாடுகள் செய்த புடவை ஒன்று திவ்யா சுற்றிக்கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொண்டது.  கிருஷ்ணா கருப்பில் கில்லர் ஜீன்ஸ் பாண்ட் ஒன்றும், சிகப்பு வெள்ளையில் கட்டம்போட்ட சட்டையும் அணிந்துகொண்டு கால்களுக்கு வெள்ளை நிறத்தில் பூமா ஷூவும் அணிந்து இறக்குமதி ஆனான்.

நேராக திவ்யாவிடம் வந்தவன், திவ்யாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு,

'பெட் அனிமல்ஸ் வளர்க்க ஆசை இருந்தா சொல்ல வேண்டியதுதானே. பிரிடிஷ் ஜாதி நாயா பாத்து ஒண்ணு வாங்கிக்கொடுத்திருப்பேன்ல.. முயலெல்லாமா பெட் அனிமல்ஸா வளப்பாங்க? அதை வேற சேலைக்குள்ள மறைச்சு வச்சிருக்க.. மூச்சு முட்டிட போகுது அதுங்களுக்கு'என்றான்.

திவ்யா , கிருஷ்ணாவின் கண்களின் திசையை அவதானித்துவிட்டு,

'அடிபடுவ.. இன்னிக்கு கோட்டா அவ்ளோதான்.. ஒழுங்கா என்னை வெளில கூட்டிட்டு போ'என்றாள்.

கிருஷ்ணா உதட்டை இறுக்கி சுழித்துவிட்டு,

'சரி விடு.. நீ யாரோ நான் யாரோ..'என்றான்.

'ம்ம் ஓகே.. நான் தயார்.. கண்ணாளா.. கூட்டிச்செல் உன் தேரில்..'என்றாள் திவ்யா சில்மிஷமாய் சிரித்தபடி.

'தேரில் என்றால், நீ தான் சாரதி.. ஓகேவா'என்றான் கிருஷ்ணா.

சரியாக ஒரே ஒரு நிமிடம் கிருஷ்ணாவை யோசனையாய் பார்த்துவிட்டு,

'வேணாம்ப்பா... நீ கையை வச்சிட்டு சும்மா இருக்க மாட்ட.. உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு என்னால கார் ஓட்ட முடியாது.. '

'அப்டின்னா என்னாலயும் முடியாது.. பஸ்ஸுதான்.. கூட்டிட்டுலாம் போக முடியாது.. வேணும்னா, சத்யா கமல் மாதிரி இரண்டு கையிலயும் தூக்கிட்டு போகவா?'

'ஏன்? நாலு செவுத்துள்ள என் மானம் போறது போதாதா.. அக்கம்பக்கத்துலயும் போகணுமா? ஒண்ணும் வேணாம்.. நானே நடந்து வரேன்.. எங்க வரணும்னு மட்டும் சொல்லு..'

'திருமங்களம் பஸ் ஸ்டாண்டு'என்றுவிட்டு திவ்யாவிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல், கிருஷ்ணா வாசலைக் கடந்து சாலையில் இறங்கி நடந்தான். லேசாக தலையை இடமும் வலமுமாக ஆட்டிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அவன் பின்னே நடந்தாள் திவ்யா.

திருமங்களம் பேருந்து நிலையத்தில் கூட்டமாக இருந்தது. 47டி வழித்தட பேருந்துக்காய் அனேகம் பேர் காத்திருந்தார்கள். பேருந்து நிழற்குடையின் ஓரம் ஒரு பெண்மணி தோளில் தொங்கும் தோல்பையுடன் நின்றிருந்தாள்.

திவ்யா நேராக அவளுடன் போய் நின்றுகொண்டாள். அந்த பெண்மணி திவ்யாவைப் பார்த்து சினேகமாய் ஒருமுறை புன்னகைத்துவிட்டு பிறகு பஸ்ஸை பார்க்கும் பாவனையில் திவ்யாவின் புடவையை ஓரக்கண்ணால்
பார்த்தாள்.

கிருஷ்ணா தனது கையிலிருந்த மொபைலில் திவ்யாவின் எண்ணை ஒற்றி, அழைத்தான். ப்ளூடூத்தில் திவ்யாவின் அழகான குரல் செவிகளில் இசையென விழுந்தது.

போனை எடுத்துவிட்டு ப்ளூடூத்திலேயே 'பக்கி.. இதான் நீ என்னை வெளியில கூட்டிட்டு போகுற லட்சணமா?'என்றாள் திவ்யா .

'அட.. ஜோடியா போறதுல என்ன த்ரில்? இந்த மாதிரி போனா டிஃபரண்டா இருக்கும்ல?'என்றான்.

'உன் மூஞ்சி'

கிருஷ்ணா திவ்யாவிற்கு ஒரு பத்தடி தள்ளி நின்றுகொண்டு, திவ்யாவையே சைட் அடிப்பதை அந்த பெண்மணியின்  பார்வையில் விழுந்தது. கிருஷ்ணாவை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு, திவ்யாவிடம் திரும்பி,

'ரொம்ப தொந்திரவு ப் பண்றானா?'என்றாள்.

திவ்யா ஒருமுறை அந்த பெண்மணியையும் கிருஷ்ணாவையும் பார்த்துவிட்டு, முகத்தை பாவமாக வைத்தபடி, மேலும் கீழுமாய் தலையாட்டிவிட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

'இவனுங்க எல்லாம் இப்படித்தான்மா.. எவ கிடைப்பான்னு அலையிறது.. பொறுக்கி பசங்க'என்று அந்த பெண்மணி சொல்வது ப்ளூடூத் வழியே கிருஷ்ணாவுக்கும் கேட்டது. கண்களை உருட்டி விழித்துவிட்டு, சில்மிஷமாய்
திவ்யாவை பார்க்க, அவள் பதிலுக்கு,

'ஆமாங்க.. சரியான பொறுக்கி பசங்க'என்றுவிட்டு கிருஷ்ணாவை பார்த்து கண்ணடித்தாள்.

'எங்கம்மா போகணும் உனக்கு?'என்று அந்த பெண்மணி கேட்க, என்ன சொல்லலாம் என்று ஒரு கணம் யோசித்துவிட்டு,

'லயோலா காலேஜு'என்றாள்.

'அந்த பொறுக்கி நீ எப்போ பஸ்ல ஏறுவன்னு தான் காத்துட்டு இருப்பான்.. நானும் அந்த வழியாத்தான் போறேன்... வாம்மா ஆட்டோவிலே போயிடலாம்'என்று அழைக்க, கிருஷ்ணாவை பார்த்து சில்மிஷமாய் சிரித்துவிட்டு அந்த
பெண்மணியுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் திவ்யா.

கிருஷ்ணா தானும் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான். கிருஷ்ணாவை ஆட்டோவில் ஏறுவதையும், தங்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து வருவதையும் திவ்யா திரும்பிப் பார்க்க,

'பின்னாடியே வராணாமா?'என்றாள் அந்த பெண்மணி.

'இல்லம்மா..வராணான்னு பாத்தேன்.. வரலை'என்றாள் திவ்யா.


' 20 வயசுதான்ம்மா இருக்கும் அவனுக்கு.. அப்பன் காசுல படிக்கிறவனா இருப்பான்..கையில காசு இருந்திருக்காதும்மா.. அப்பன் காசுல கூத்தடிக்கிற பயலுவ தானே.. மோசமான பசங்கம்மா.. பொம்பளை முந்தானைய பாத்தா போதும்.. உடனே வந்துடுவானுங்க.. நாலு காசு சம்பாதிக்க துப்பில்ல.. இவனுக்கெல்லாம் பொட்டபுள்ள கேக்குது... கொள்ளையில போக இவனுங்கல்லாம்'என்று இஷ்டத்துக்கு அந்த பெண்மணி வசை பாட,

'பாவம்!! அப்படியெல்லாம் சாபம் விடாதீங்க.. ஏதோ வயசுக்கோளாறு..'என்றாள் திவ்யா.

'பாரு! எவ்ளோ முதிர்ச்சியா பேசுற?.. தங்கமான பொண்ணு'என்று அந்த பெண்மணி திவ்யாவுக்கு சான்றிதழ் அளித்ததை எல்லாம் சிரித்துக்கொண்டே ப்ளூடூத்தில் கேட்டுக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.

  - தொடரும்...

சுஜாதா

$
0
0
சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள் இன்று.

என் குடும்பத்தில் யாருக்கும் இலக்கிய பரிச்சயமெல்லாம் கிடையாது. எழுதத்துவங்கிய இந்த ஆறு ஆண்டுகளில் கூட என் எழுத்து என் குடும்பத்திற்கு ஒரு வீக்கமே.புத்தகங்களை கட்டிக்கொண்டு அழும் பைத்தியக்காரத்தனமெல்லாம் என் வீட்டிலேயே நான் மட்டும் தான்.

சுஜாதா என்கிற பெயரை நான் முதன் முதலில் கடந்தது எனது பள்ளி நாட்களில் தான். என் வீட்டில் அப்போது குமுதம், குங்குமம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், நான் பேருந்து பயணச்சீட்டை கூட விடாமல் படிக்கும் ரகமாக இருந்ததினால், எனக்கே எனக்காக அம்புலிமாமாவும் வாங்கினார்கள்.  எல்லா கதைகளையும் படிப்பேன். பிடித்திருந்தால் எழுதியது யார் என்று பார்த்துவைத்துக்கொள்வேன். சுஜாதா என்கிற பெயரை அப்போதுதான் முதன் முதலில் கவனித்தேன்..

அப்போதெல்லாம் என் குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று கீழே. எத்தனை கீழே என்றால், கேஸ் அடுப்பு கூட கிடையாது. ரேஷன் மண்ணெண்ணை 20 நாட்களுக்கும் எஞ்சியுள்ள 10 நாட்களுக்கு கரியும் தான் எங்கள் வீட்டின் அடுப்பை சூடாக வைக்கும்.

ஆதலால் சவால்கள் துவங்கியது. என் முதல் இலக்கு, பொருளாதார முன்னேற்றமாகத்தான் இருந்தது. ஒரு நாளைக்கு 16-17 மணி நேரங்கள் பாடம் படிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணம் அப்போதெல்லாம். போரடித்தால் குமுதம், குங்குமம். இப்படி ஓடிய நாட்களில், மருத்துவத்துக்கு முயன்று இடம் கிடைக்காமல், பொறியியலில் இடம் கிடைத்தது. 12த்ல் பயாலஜி குருப் எடுத்திருந்தமையால், கம்ப்யூட்டர் ஞானம் இல்லாமலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் எடுத்தாகிவிட்டது. சிக்கல் என்னவென்றால்11, 12த் களில் கம்ப்யூட்டர் படித்தவர்கள் சக்கை போடு போட, எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏதேனும் இன்ஸ்டிட்யூட்டில் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள என் குடும்பத்தின் பொருளாதாரம் இடமளிக்கவில்லை.

அடுத்த சவால்!! பைசா செலவில்லாமல் கம்யூட்டர் கற்பது.

அதுகாறும் பெண்களுடன் பேசி பரிச்சயமே இல்லாதது வசதியாகிவிட்டது. எல்லோரும் கழற்றி விட்டுவிட, நேரம் ஏகத்துக்கும் கிடைக்க, மீண்டும் 16 - 17 மணி நேரங்கள் விதம் விதமான மொழிகள். சீ, சீ++, யுனிக்ஸ், மினிக்ஸ், லினக்ஸ், பாஸ்கல், ஜாவா, சுவிங் என்று பட்டியலின் நீளம் அதிகம்.

கல்லூரி படிப்பிற்குப்பின் வேலையில் சேர்ந்து சொந்தமாக வீடு கட்டி கார் ஒன்று வாங்கி தங்கைக்கு திருமணம் செய்யும் வரை, "பொருளாதாரம்...பொருளாதாரம்...பொருளாதாரம்...பொருளாதாரம்..."மட்டுமே.. வேற எந்த சிந்தனையும் இல்லை.

பணி நிமித்தம் இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே நண்பர்கள் இல்லை. உறைய வைக்கும் குளிர். எங்கும் வெளியில் செல்லவும் முடியாது. பணி நேரம் போக மீதி நேரம் இருக்க, எழுத துவங்கியபோதுதான் சுஜாதா மீண்டும் நினைவுக்கு வந்தார். உயிர்மையின் உயிரோசையில் கவிதைகள் சிறுகதைகள் எழுதியது அப்போதுதான்.

சுஜாதாவின் எழுத்துக்கள் வசீகரமானவை. அவர் எழுத்துக்களை சிலாகித்தே ஒரு முழு புத்தகம் எழுதிவிடலாம். அவர் எழுத்தில் மோகம் கொண்டு கிட்டத்தட்ட அவருடைய எல்லா நாவலகளையுமே வாசித்திருக்கிறேன். குறு நாவல்கள் தொகுப்புகளும் என்னிடம் இருக்கின்றன. நிறைய சொல்லலாம். உதாரணத்திற்கு, ஒரு துப்பறியும் கதையில் கணேஷ் அடிக்க, வில்லன் தலைகீழாக விழுவான். 'விழுந்தான்'என்பது தலைகீழாகவே பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இது ஒரு உதாரணம் தான். ஒவ்வொரு வார்த்தையையும் மிக மிக கவனமாக செதுக்கியிருப்பார். ஆச்சர்யமாக இருக்கும்.



வேலைக்கு சேர்ந்த முதல் கம்பெனி மயிலாப்பூரில் இருந்தது. ஒரு நாள் மயிலாப்பூர் சரவண பவனில் சுஜாதா சாரை கிட்டத்தில் பார்த்தேன். அறிமுகம் இல்லாமல் எப்படி பேசுவது என்று பேச தோன்றவில்லை. அவரை கடந்து போக நேர்ந்த அத்தருணத்தில்  குங்குமம் , குமுதத்தில் நான் வாசிக்கும் பல கதைகளுள் சிலதை எழுதிய எழுத்தாளர் சுஜாதா என்கிற அளவில் மட்டுமே அவர் எனக்கு அறிமுகமாகியிருந்தார் என்பதுவும் அதற்கொரு காரணம். அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு பேசலாம் என்றிருந்தேன். ஆனால், அவருடன் அடுத்தெப்போதும் பேசவே வாய்ப்பிருக்கப்போவதில்லை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அவர் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று பேசியிருக்கலாம்.

அவரின் உரை நடை பிடித்திருந்தாலும், எனக்கு மோகம் அவர் எழுத்தில் உள்ள புத்திசாலித்தனம், Think Big, Abstraction தான்.

சமூக அவலங்களை அதன் ஆழத்தோடு புரிந்துகொண்ட ஒரு மேல் தட்டு மனிதன், தன் அவதானத்தை வார்த்தைகளாக்கினால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அவரது எழுத்து என்பதே எனது அவதானம். ரொம்ப ராவாக இருக்காது. என்னதான் அவர் பாமரனுக்கும் புரியும் வகைக்கு எழுதினாலும் அவரும் கூட, சில விஷயங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவதை தவிர்த்தே இருக்கிறார். அதை ஒரு இலக்கிய குறியீடாகவும் அவர் தகவமைக்கும் வாதங்களை முன்வைக்கச் செய்திருக்கிறார். அந்த வெளிப்பாடுகளின் மீதெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், எனக்கு ஆதர்சம் சுஜாதா தான். எழுத்தை ஒரு ஏகலைவனாக எட்ட நின்று வேடிக்கை பார்த்தே கற்றுக்கொண்டேன். என் எழுத்துக்களில் கருத்தாக்கங்களில் எனக்கு முழு திருப்தி இருந்தாலும், இன்னமும் நான் மெருகேற்ற வடிவம் மற்றும் மொழி சார்ந்த அழகியல்கள் மிச்சமிருந்தாலும், எழுதப்பழக துவங்கிய 2009ம் ஆண்டிலிருந்து வெறும் மூன்றே ஆண்டுகளில் 2012ல் ஒரு முழு நாவலுக்கு நான் தாவியதற்குபல காரணங்களுள் சுஜாதாவும் பிரதானம் என்பது உண்மை.

தமிழ் இலக்கிய எழுத்துலகில் ஒவ்வொரு ஆக்கத்தையும் இலக்கியத்திற்கு வெகு பக்கமாக இல்லாவிட்டால், 'நீ ஆட்டத்திற்கு சேத்தி இல்லை'என்று ஒதுக்கும் ஒரு சூழலில், மிக மிக குறைவாக எழுதி அந்த ஆட்டத்திற்குள் ஒருவனாக தன்னை ஆக்கிக்கொள்வதை, வளரும் எழுத்தாளனின் ஒரு பண்பாக பார்க்கும் போக்கு இருக்கிறது. எனக்கு அது, ஒரு போலித்தனமாகவே படுகிறது என்பதோடு, எழுத்தை விற்க வேண்டிய நிர்பந்தத்தை நோக்கிய முனைப்பு என்றே தோன்றுகிறது.

'இலக்கிய எழுத்தாளன்'என்கிற அடைமொழி, பெயர் பரவ பயன்படும். பெயர் பரவினால் புத்தகம் விற்கப்படும். விருதுகள் கிடைக்கும். இப்படி ஒரு பாதை தமிழ் எழுத்துலகுக்கு யார் தந்தார்கள் என்பதெல்லாம் இலக்கிய பாதுகாவலர்கள் யோசிக்கட்டும். சுஜாதா இந்த ஆட்டத்தை மொத்தமாக சூறையாடியவர். அவர் இலக்கிய ஒழுங்கெல்லாம் பார்க்கவில்லை. அனேகம் அவர் எழுதித்தள்ளினாலும் அவற்றுள் சொற்பமே இலக்கிய வகைமையுள் நுழைய தகுதியானவை. ஆனால் இன்றளவும் Best Seller, சுஜாதா தான்.

தோன்றுவது அத்தனையும் இலக்கியமில்லை என்றால், இலக்கியமில்லாததை வெளிப்படுத்தாமல், இலக்கிய வரையறைக்குள் நுழையும் தகுதி படைத்ததை மட்டுமே எழுதிவிட்டு, 'நானும் துல்லியமான இலக்கியவாதி'என்று சொல்லிக்கொள்வது இலக்கற்றது என்றே நினைக்கிறேன். எழுத்தில், ரஷ்யா, ஜெர்மனி, அமேரிக்க, லத்தீன் அமேரிக்கா என்றெல்லாம் சுற்றிவிட்டு நம்பி வந்த பொண்டாட்டியை நாள் ஜீவனத்துக்கு அடுத்தவர்களிடம் கையேந்த விடும் இலக்கிய மேன்மைத்தனம், இலக்கிய துல்லியம் இலக்கற்றது தான். தன்னை நம்பி வந்த குடும்பத்தையே வாழ வைக்க முடியாதவன் ஊருக்கு என்னத்தை எழுதுவிடப்போகிறான்?

தன்னை நம்பி வந்த மனிதர்களை வாழவைக்கத்தெரியாதவனுள் உறையும் கருத்தாக்கம்தான் அப்பழுக்கற்ற சுத்தம், அவனே பல்லாயிரம் பேருக்கு அறிவுறை சொல்ல தகுதியானவன் என்று நான் நம்பவில்லை. அந்த வகையில் சுஜாதா ஓர் ஒப்பற்றவர் என்றே நினைக்கிறேன். ஒரு சிந்தனையாளன் எழுதும் எழுத்தின் வெற்றி, அவன் தன்னை நம்பி வருபவர்களை எப்படி தன் சிந்தனைகளால் வாழ வைக்கிறான் என்பதில் தான் இருக்கிறது என்பதை திடமாக நம்புபவன் நான். ஒரு சிந்தனையாளன், தனக்கு முன் இருக்கும் சமூகத்தை முழுமையாக துள்ளியமாக புரிந்துகொண்டான் என்பதற்கு அத்தாட்சி, அந்த சமூகத்தினுள் எங்கே புகுந்து எங்கே வந்தால் பிழைக்கலாம் என்பதை புரிந்துவைத்திருக்கிறான் என்பதற்கு அத்தாட்சியாக அவனது வளர்ச்சியை அன்றி வேற எதை பார்க்க இயலும்?

சுஜாதா என்னை, எனது அடிப்படைகளிலேயே கவர்கிறார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அந்த வகையில் சுஜாதா என்னை கவர்ந்தது போல் வேறெவரும் கவரவில்லை.

இன்னும் எத்தனையோ சொல்லலாம். இந்த பதிவு போதாது.

சுஜாதாவின் நினைவு நாளில் அவருக்கு என்னாலான மலர்மாலை இது.

சேதுபதி

$
0
0

விஜய் சேதுபதியின் படங்கள் பல பார்த்திருக்கிறேன்.

ஆனாலும் நான் 'சேதுபதி'பார்க்க காரணம், விஜய் சேதுபதி அல்ல. "பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட"எழுத்தாளர் Vela Ramamoorthy  அவர்கள்..

"நான் நடிகன் அல்ல.... எழுத்தாளனாய் இருப்பதனால், நடிப்பதற்கு, அந்த கேரக்டருக்குள் ஊடுறுவுவதற்கும் சுலபமாக இருக்கிறது.. மனதுக்குள் உருவேற்றி உருவேற்றி நடித்திருக்கிறேன்"




இது Vela Ramamoorthy அவர்களே, மதயானைக் கூட்டம் படத்திற்காக சுலேகாவின் பேட்டியில் சொன்னது.  நாற்பது வருடங்களாக எழுத்தாளராய் இருக்கிறேன் என்று சொல்லும் இவரை படத்தில் பார்த்தால், நடிப்பு தான் இவரது நாற்பது வருட அனுபவம் என்று கூட எவரேனும் சொல்லக்கூடும். அந்தளவிற்கு யதார்த்தமாய் இருந்தது அவரது நடிப்பு..

இந்தியாவில் வாங்கி, விட்டுப்பிரிய மனமில்லாமல் இங்கே அமேரிக்காவுக்கும் கடத்தி வந்திருக்கும் புத்தகங்களில் Vela Ramamoorthy யின் குற்றப்பரம்பரையும் ஒன்று.

'எழுத்தாளன் என்பவன் எழுதுபவன் மட்டுமே என்றிருக்கக் கூடாது, எழுத்தாளர்கள் பன்முகம் காட்ட வேண்டும்'என்பது என் தனியாத விருப்பம்.. அதற்கான எல்லா தகுதிகளும் எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு இருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து..

இப்போது எழுத்தில் இருப்பவர்கள் பலர் சினிமாவில் சோபிப்பது நிறைய நடக்கிறது.. சுஜாதாவில் துவங்கி, சமீபத்திய ராஜு முருகன், வேல ராமமூர்த்தி என்று இந்த பட்டியல் நீண்டு விரிவது சந்தோஷமாக இருக்கிறது... அதிலும் Vela Ramamoorthy நடிகராக சோபித்திருப்பது சூப்பர்..

என் போன்ற ஜூனியர் எழுத்தாளர்கள், பின் தொடர்ந்து வர, பாதச்சுவடுகளை விட்டுப்போகும் சீனியர் எழுத்தாளர்களின் வரிசையில் Vela Ramamoorthy ஐயாவின் பாதச்சுவடுகளும் இன்னும் அழுத்தமாகியிருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

Vela Ramamoorthy ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

கல்லடி - ஒரு பக்க கதை

$
0
0
கல்லடி - ஒரு பக்க கதை



இரண்டு கட்சி ஆட்களும் அந்த அகண்ட சாலையில் 200 மீட்டர் இடைவெளியில் எதிரெதிரே நின்றிருந்தனர். பலரது கைகளில் பெரிய சாக்குப்பை. அதனுள் பெரிய கருங்கற்கள். 

மாநகர பேருந்துகள் வேறு வழியின்றி நின்றுவிட, பயணிகளும் பொதுமக்களும் அலறி அடித்து பேருந்துகளை விட்டிரங்கி அகப்பட்ட சந்துபொந்துகளில் புகுந்து மறையத் துவங்கினர். சாலையோர கடைகளின் ஷட்டர்களை இறக்கிவிட்டு உள்ளுக்குள் ஒளிந்துகொண்டார்கள் கடை முதலாளிகள்..

அபார்ட்மெண்ட் வீடுகளுக்குள்ளிருந்து அவசர அவசரமாக, பேண்ட் அணிந்துகொள்ளும் அவகாசம் கூட தராமல், அணிந்திருந்த கால்சட்டைகளுடன் ஓடோடி வந்து தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையிலிருந்து அகற்றி அபார்ட்மென்டுகளுக்குள் பாதுகாப்பாக நிறுத்தத்துவங்கினர் குடும்பத்தலைவர்கள்..



சுற்றிலும் எல்லா பால்கனிகளிலும், பெண்களும் சிறுவர்களும், கிழவர், கிழவிகளும் என்னதான் நடக்கிறதென வேடிக்கை பார்க்க குழுமி, தங்களுக்குள் 'கலியுகத்தின் பலாபலன்களை'அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர். 

மா நகரின் அத்தனை பிரதான பத்திரிக்கைகளின் ரிப்போர்ட்டர்களும் லைவ் கவரேஜ் செய்ய வந்துவிட்டது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, இரண்டு கட்சி கூட்டத்தினரும் தங்கள் கூட்டத்தலைவன் மூலமாக தலைவருக்கு செய்தி அனுப்பினார்கள்.. பதில் வர சற்று தாமதமானது.

ரேடியோவில், 'எதிர்கட்சித்தலைவர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தால், நகரில் பதட்டமான சூழ் நிலை நிலவுகிறது. பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.......'என்று செய்தி அறிவிப்பாளினி அறிவித்துக்கொண்டிருந்தார்.

சட்டென இரண்டு தரப்பிலும் பதட்டம் கூடியது. பரபரப்பு அப்பிக்கொண்டது. 

எல்லோரும் ஆவேசமாக, சாக்குப்பைக்குள் கைவிட்டு பெரிய பெரிய கற்களை அள்ளிக்கொள்ள, ஆங்காங்கே தெரிந்த காக்கிச்சட்டைகள், லத்தியை ஓங்கியபடியே, தற்காப்புக்கென மரத்தால் செய்யப்பட்ட தடுப்பான்களை தங்களின் முன்னே நீட்டியபடியே எதிர்கட்சி ஆட்களை நேருங்கினர்.

'தப்பு செய்யிறவனுக்கு கல்லடிதான்.. இன்னிக்கு எத்தனை பேருக்கு மண்டை உடையப்போகுதோ!!' வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார் 

அப்போதுதான் சற்றும் எதிர்பாராத விதமாக அது நடந்தது. 

கருங்கற்களை ஏந்தியிருந்த இரு கட்சி ஆட்களும் கற்களை கீழே போட்டுவிட்டு ஓட,  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  சிறியவர்களும், பெண்களும் , பெரியவர்களும் சிரித்தனர். போலீஸ் தங்கள் ஜீப்புக்குள் ஐக்கியமாக, சூடான செய்திக்கு காத்திருந்த ரிப்போர்ட்டர்கள் சலித்தபடி தாங்கள் வந்த செய்தி நிறுவன ஊர்திக்குள் தஞ்சம் புகுந்தனர்.

வானம் கருத்து, மழை பொழிந்தது. கல் மழை.


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@gmail.com)

தாரை தப்பட்டை – விமர்சனம்

$
0
0

தாரை தப்பட்டை – விமர்சனம்

ராம்ப்ரசாத்

விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு…………………………….
முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம்.
ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் நமக்கே காதல் வந்து விடுகிறது. அப்படி காதல். ஆனால், சன்னாசி எவனோ ஒரு டிரைவரை நம்பி சூறாவளியின் காதலை உதாசீனப்படுத்துகிறான். அதாவது சமூகத்தின் படி நிலைகளில் கட்டக்கடைசியாக நிற்கும் ஒருத்தியின் காதலை, அதே படியில் நிற்கும் சன்னாசி புரிந்துகொள்ளவில்லை.. புறம் தள்ளுகிறான். கேட்டால், எங்கோ எவனோடோ சந்தோஷமாக இருக்கட்டும் என்கிற எண்ணமாம். எங்கோ எவனோடோ இருந்தால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா? காதலனுடன் பசியோடே கிடப்பதும் போராடுவதும் கூட சுகம் தானே.. இதை புரிந்துகொள்ளாதவனாக சன்னாசியை ஏன் காட்ட வேண்டும்? அல்லது விளிம்பு நிலை மனிதர்கள் உண்மையிலேயே இப்படித்தான் மந்த அறிவுள்ளவர்களாக, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முட்டாள்தனமாக யோசிப்பவர்களாக  இருப்பார்கள் என்று காட்ட விழைகிறாரா கதாசிரியர்?


தன்னை நம்பாத சன்னாசி, தன் காதலை நம்பாத சன்னாசி மாறாக, எவனோ ஒரு டிரைவரை நம்புகிறான்.
உண்மையில் தாரை தப்பட்டை தமிழ் நாட்டு பெண்களுக்கு ஒரு பாடத்தை சொல்வதாகவே நினைக்கிறேன். அது, முட்டாளை நம்பிச்செய்யும் காதலால் சேற்றில் விழுந்து நாறத்தான் வேண்டியிருக்கும் என்பதுதான் அது.
அந்த வகையில் தாரை தப்பட்டை ஒரு நல்ல கருத்தை சொல்வதாகவே நான் நினைக்கிறேன். ‘ நான் கடவுள்’, ‘பரதேசி’ போன்ற படங்களுக்காவது உழைக்க நிறைய இருந்தது. இந்த ஓட்டை விழுந்த கதையை படமாக்க இரண்டு வருடங்கள் ரொம்ப ரொம்ப அநியாயமாகப்படுகிறது.
விபசாரம் ஆதி தொழில்.
வாடகை தாய்மை, தற்போதைய நவீன யுகத்தின் தொழில். இங்கே அமேரிக்காவில், இதற்கு நல்ல பேமென்ட் உண்டு. எனக்கு தெரிந்து ஒருவர் அம்முறையை பயன்படுத்தி பிள்ளை பெற்றுக்கொண்டார். விலை நூறு ஆயிரம் டாலர்கள்.
இதே போல் முகம் சுளிக்க வைக்கும் வாழ்வியல்கள் இன்னமும் நம்ம சுற்றி அனுமதித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழ்வானேன். ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை சுத்தம் செய்யவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் மனிதர்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகிறார்கள். வேலையை செய்ய ஆள் எப்போதும் இருந்தால், மாற்றத்துக்கான தேவை எப்படி உதிக்கும்? ஒரு மாற்றத்துக்கான விதையை தருவிக்கும் தேவையை உருவாக்க, அந்த வேலையை நிராகரிக்கவேண்டிய பொறுப்பு தங்களிடம் இருப்பதை உணராத அந்த மந்த மூளைகள் மீது வெறுப்பு வருகிறது. எவனாவது கொடி பிடித்து, கோஷம் போட்டு, தொண்டை தண்ணீர் வற்ற கத்தி மாற்றத்தை கொண்டு வந்தால், அங்கே வந்து சப்பனாங்கால் போட்டு உட்கார்ந்துவிட்டு, அடுத்த மாற்றம் வரும் வரை மறுபடி செக்கு மாடாகிவிடுவார்கள்.
இங்கே அமேரிக்காவில் லேபர் பெரும் பிரச்சனை. நான் லண்டனில் வேலை பார்த்தபோது ப்ளம்பர் வேலை செய்பவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள் என்றார்கள். ஒருமுறை வந்தால் சுமார் நூற்றைம்பது பவுண்டுகள். ஒரு மாதம் வேலை செய்தால், நிச்சயம் ஒரு கணிணி பொறியாளரை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் வர மாட்டார்கள். வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே. இதை கருத்தில் கொண்டு தான் அமேரிக்காவில் இந்த வருடத்திலிருந்து அடுத்த பத்து வருடங்களுக்கு லேபர் விசாக்களின் எண்ணிக்கையை நானூறு சதவீதம் அதிகப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் ஆள் கிடைப்பது அத்தனை சுலபமில்லை.
அமேரிக்கா அமேரிக்காவாக இருப்பதற்கும் , ஜப்பான் ஜப்பானாக இருப்பதற்கும், இந்தியா இந்தியாவாக இருப்பதற்கும் ஸ்திரமான காரணங்கள் இருக்கிறது.
விளிம்பு நிலை மனிதர்கள் மாற்றத்தை எதிர் நோக்குகிறார்கள் தான். ஆனால் அந்த மாற்றத்துக்கான தேவையை உருவாக்குவது குறித்தான யாதொரு சிந்தனையும் அற்றுத்தான் இருக்கிறார்கள்.
அதை மறைமுகமாக அதுவும் ஒரு விபத்தாய் குத்திக்காட்டியதற்காய் தாரை தப்பட்டை பார்க்க வேண்டிய படமாக ஆகிறது. நான் அனைவரும் பார்க்க வேண்டிய கதையின் ஓட்டை இது.
– ஸ்ரீராம்


#ந‌ன்றி
திண்ணை(http://puthu.thinnai.com/?p=31513 )

தலித்

$
0
0
தலித் 


இளவரசன் கொலை, கோகுல்ராஜ் கொலை மற்றும் இப்பொது ரோஹித் வெமுலாவின் தற்கொலை என்று தொடர்ச்சியான தலித் மரணங்கள்  நினைவுகளை கிளர்ந்தெழச்செய்கின்றன...

தலித் இனம் ஒரு சமூகத்தால் பன்னெடுங்காலமாய் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதுதான். புறக்கணிக்கப்படுகிறது தான். தொடர்ந்து பன்னெடுங்காலமாய் செக்கு மாடுகளாக அடிமைகளாக பயன்படுத்துவதற்காய் ஆதிக்க சாதிகளால் கல்வி, அறிவு, சிந்தனாமுறை போன்றவைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் தான்.

அரசு தரும் சலுகைகளால் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிப்பு அவர்கள் ரத்தத்தில் ஊறத்துவங்கியிருக்கிறது. அது ஊறி வரவேண்டும். விதையில் முளைவிட்டு வேர்விட்டு விழுதாகி, மரமாகி கிளைவிட்டு பல்கி படரவேண்டும்.



மாற்றத்தை ஒரே நாளில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கு பல காலம் ஆகும். பல நிலைகளை அது கடக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் காலம் ஆகும். அதுவரை பிழைத்திருக்க வேண்டும்..

இளவரசன், கொகுல்ராஜ், இப்பொது ரோஹித் வெமூலா  இப்படி படிப்பு வாசனை ரத்தத்தில் ஊறி, முளைவிடும் முன்னரே அழிக்கப்பட்டால் மாற்றத்துக்கான காலம் எப்படி வரும்? அதற்காகவேனும் தலித் சமுதாய மக்கள் தற்கொலை செய்வதையோ, காதலில் நேரத்தை வீணடித்து உயிரை விடுவதையோ நிறுத்த வேண்டும்.

தலித் இனத்திற்கு நட்புகள் என்னும் அஸ்திரங்களின் துணை இருக்காது. அக்கம்பக்கத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நாள் கிழமைக்கு அழைக்க மாட்டார்கள். பெண் தர மாட்டார்கள். பெண் எடுக்க மாட்டார்கள். கண் இல்லாத காதலுக்கு கூட தலித் என்றால் கண் வந்துவிடும். காதலுக்கு கண் இல்லை என்று சொல்லிக்கொண்டே நைச்சியமாக தலித்களை மட்டும் பார்த்து கவனித்து ஒதுக்கிவிடுவார்கள். அதையும் மீறி காதல் பூத்தால் இருக்கவே இருக்கிறது சாதி அரசியல்? அதை கிளப்பிவிட்டு கிடைக்கிற கேப்பில் போட்டுத்தள்ளிவிடுவார்கள். தனி குவளையில் தேனீர் தருவார்கள். பிணத்தை ஊர் சுற்றி எடுத்துச்செல்ல நிர்பந்திப்பார்கள். நடுரோட்டில் பெண்ணை துகிலுரிப்பார்கள்.

தலித் இன மக்கள் படிக்க வேண்டும். ப‌டிப்பு ஒன்று மட்டுமே பிரம்மாஸ்திரம். நட்புகள் தராத வசதிகள், வாய்ப்புகள், செளகர்யங்களை அடைய படிப்பு மட்டுமே ஒரே பிரம்மாஸ்திரம். படிப்பு முளை விட வேண்டும். ரத்தத்தில் ஊற வேண்டும். வேர் பிடிக்க வேண்டும். விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிழல் தர வேண்டும்.

தலித் இன மக்கள் தங்களுக்கு ஆதிக்க சாதி தரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு படிப்பு ஒரு நல்ல மார்க்கம்.

சவால்களை சமாளிக்க மார்க்கங்கள் உண்டு.  காதல் இப்போதைய தேவை அல்ல. படிப்பு தான் தேவை

1. நட்புகள், சுற்றம் புறக்கணிப்பதால் விவரம் தெரியவில்லையா?

தலித் சமூகம் மறைந்து மறைந்து வாழ்வதால், இன மக்கள் சூழ வாழும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. மற்ற ஆதிக்க சமூகத்தினருடனேயே வாழ வேண்டி இருக்கும். அப்படி வாழ்ந்தால் புறக்கணிப்பு என்றேனும் நடந்தே தீரும். புறக்கணிக்கப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டால், பல விஷயங்கள் தெரிய வராது. தகவல்கள் இல்லாமையால், சிந்தனை வராது. அதுதான் செக்குமாடாவதற்கு முதல் படி. அதை முதலில் அடித்து உடைக்க வேண்டுமன்றால், புத்தகங்கள் வாசிக்க வேண்டும்/ இலக்கியம் படிக்கலாம். அனுபவங்களை எழுத்தாக்குகிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு அனுபவம். ஒரு வாழ்க்கை. அதை படித்தாலே ஆயிரம் பேருடன் பழகிய அனுபவம் கிடைத்துவிடும். சமூக கட்டமைப்பு புரியும். அதில் நீந்தி கரையேறுவது எப்படி என்று யோசிக்க முடியும். நாற்பது நொள்ளை மனிதர்களை காட்டிலும் , நான்கு நல்ல புத்தகங்கள் சால சிறந்தது. விவரம் தெரிந்துகொள்ளுங்கள். நான்கு பேருக்கு விவரம் சொல்லுங்கள்.  தலித் இன மக்கள் படிக்கவேண்டும். புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அது ஒன்றே தான் திறவுகோல்.

2. விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்களா?

தனி நபராக விளையாடலாம். ஜிம் இருக்கிறது. உடலுக்கு வலு சேர்க்கலாம். வியர்வை விளையாட்டில் தான் வெளியேறும் என்றில்லை. ஜிம்மில் கூட வெளியேறும்.

3. வீடு தர மறுக்கிறார்களா?

படியுங்கள். ஒரே மூச்சாக படியுங்கள். படித்து முன்னுக்கு வந்து வீடு கட்டுங்கள். வாடகைக்கு விடுங்கள்.  அடுத்தவர்களுக்கு வீடு கொடுக்கலாம்.

ஆதிக்க சாதிகளின் மீது கோபம் இருந்தால், அடித்து துவைத்தால்தான் கோபத்தின் வடிகால் என்றில்லை. செத்து மடிந்தால் தான் என்றில்லை. தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. எவன் கையிலாவது அடிபட்டு உயிர்விட்டு தியாகி பட்டம் வாங்க வேண்டும் என்றில்லை.

வைராக்கியம் என்றொரு வார்த்தை இருக்கிறது. படிப்பை பாதியில் விடுவது, மாற்றத்துக்கான ஏனைய தலித்களின் உழைப்பை மட்டுப்படுத்திவிடலாம். சோர்வடையச்செய்துவிடலாம். ஒருவரின் தவறால் பிறரது போராட்டம் இலக்கற்று போய்விடவோ, சுணங்கிப்போகவோ கூடாது.


மனம் இருந்தால் மார்க்கமுண்டு.



    - ஸ்ரீராம்

கொலை நகரம்

$
0
0
கொலை நகரம்



ஐடி நகரமான பங்களூரு இப்போது கொலை நகரமாகியிருக்கிறது.. ஒன்றல்ல..இரண்டல்ல‌.... நான்கு கொலைகள்..

1. கோகுல் இப்போது பங்களூரில் அமிதாப் பச்சனை விட மிக பிரபல்யமான பெயர். முன்னாள் காதலியை அடைய தடையாக இருந்த மனைவியை போட்டுத்தள்ளிவிட்டு அந்த கேஸிலிருந்து தப்பிக்க அந்த மனைவியின் கள்ளக்காதலனுடனான நிர்வாண புகைப்படத்தை பயன்படுத்திக்கொண்டது, முன்னாள் காதலியின் கணவனை அப்புறப்படுத்த அவனது பெயரில் சிம் வாங்கி அதன் மூலமாக பங்களூரு ஏர்போர்டிற்கு வெடிகுண்டு புரளி கிளப்பியது என சுஜாதா, ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் கதைகளில் கூட வராத அளவிற்கு கிரிமினலாக யோசித்து மாட்டிக்கொண்டவர். கொலையான அனுராதாவும் சற்றும் சளைத்தவரல்ல போலிருக்கிறது. வேலை பார்த்த கல்லூரியின் மாணவருடனே கள்ளக்காதல். இத்தனை கலவரத்துக்கு இடையிலும் கோகுலுக்கும் அனுராதாவுக்கு ஒரு பெண் குழந்தை வேறு. இதையெல்லாம் செய்கையில், எல்லோரையும் போல‌ அலுவலகத்தில் அரட்டை அடித்து வேலையும் செய்திருக்கிறார் கோகுல் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது.

இனிமேல் ஏதேனும் கம்பெனியின் நேர்முகத்தேர்வில் மல்டி டாஸ்கிங் பற்றி கேள்வி வந்தால், கோகுல் பற்றி பேசலாம் என்று இருக்கிறேன்.. ஒரு உதாரணமாகத்தான் ஹிஹிஹிஹி.... அவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும்.

2. ஷில்பா ரெட்டி தனது கணவனை, போட்டுத்தள்ளிவிட்டு அப்பா அம்மா உதவியுடன் பிரேதத்தை அப்புறப்படுத்தியிருக்கிறார். ஊருக்கு செல்வதாக கிளம்பியவர் வந்து சேர்ந்துவிட்டாரா என்று உறவினருக்கு கால் செய்து கேட்கப்போக, மாட்டிக்கொண்டுவிட்டார். எப்படி என்கிறீர்களா? சாதாரணமாக அப்படியெல்லாம் போன் செய்து கேட்கமாட்டாராம். லவ்வை என்றைகாவது செய்தாலும் பிரச்சனைதான் போல. கன்சிஸ்டென்சி வேண்டுமய்யா...கன்சிஸ்டென்சி..

அந்த உறவினர் செம கில்லாடி. இதையெல்லாம் நோட் செய்திருக்கிறார் பாருங்கள், ஜொள்ளு விடாமல்.

3. விஜயலஷ்மி, கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

4. பிரபலமான நிறுவனத்தில் மனிதவளப்பிரிவில் வேலை செய்பவர் தனது மனைவியை கொலை செய்திருக்கிறார். அந்த பிரபலமான நிறுவனம் இன்__சிஸ் என்கிறார்கள். (சிறிது நாட்களுக்கு முன்பு அந்த நிறுவன கேன்டீனில் வேலை பார்த்த பெண்ணை கேன்டீனிலேயே வைத்து கேன்டீன் ஊழியர்கள் இருவர் மானபங்கம் செய்ததாக தகவல் வந்தது. பிற்பாடு அந்த பெண் அந்த நிறுவனத்தின் பணியாளர் அல்ல என்றும் சொன்னார்கள்.இது நடந்த இடம் புனே.)

வேலை பார்க்கும் இடம் கோயில் என்பார்கள்.. இந்த கோயிலில் மட்டும் ஏன் இப்படி? போகட்டும்...

துணையுடன் வாழ்வது என்பது மிக அதிக அளவில் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிற ஒன்று. எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்றே போல் அமைந்துவிடுவதில்லை. செல்லமாக வளர்க்கப்படும் பலர், வாழ்க்கையின் கஷ்டங்கள் தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். தான் செய்வதன் உண்மையான அர்த்தம் தெரிந்து இவர்கள் காரியங்கள் செய்வது போல் தோன்றவில்லை. பெரும்பாலும், பக்கவிளைவுகள் பற்றி எந்த தெளிவும் இன்றியே பல விஷயங்களை செய்துவிடுவார்கள்.

திருமணத்தில் இவர்கள் துணையாக அமைந்துவிட்டால் பொறுத்துத்தான் போக வேண்டி வரும். மன்னிப்பவர்களால் தான் இந்தியாவில் கலாச்சாரம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. பேசித்தீர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் என்று வந்துவிட்டால் அவர்கள் முன் சண்டையிட்டுக்கொள்ள தயக்கம் வரும். குழந்தைகள் கூட பெற்றோரின் அக மன ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வார்கள். சில பிரச்சனைகளை விட்டுக்கொடுத்தால் கடந்து போய் விடலாம். சில பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலே தானாக கடந்து போய்விடும்.

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கிறது.

அது காதல்!!..

துணையை கன்னாபின்னாவென்று காதலிக்க வேண்டும். துணையாக வருபவருக்கே நம்மை கஷ்டப்படுத்த தோன்றாது. தானே விட்டுவிடுவார்கள். இந்த பிரம்மாஸ்திரம் ஏவி பழக வேண்டும். அவ்வளவே. இதிலும் வழிக்கு வரவில்லை எனில், வேறு என்ன செய்ய? தலை எழுத்து.

இருக்கவே இருக்கிறது, குழந்தைகள். அவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவதில் முழுக்கவனத்தை திசை திருப்பி விட வேண்டியதுதான். எல்லோருக்கும் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைப்பதில்லை. பூரணமான வாழ்க்கை யாருக்குமே அமைவதில்லை. எல்லோருக்குமே ஏதோவோர் குறை இருக்கவே செய்கிறது. எல்லா விதத்திலும் அதிர்ஷ்டசாலி யாருமில்லை. வாழ்ந்தால் கொண்டாட்டமான வாழ்க்கையைத்தான் வாழ்வேன் என்று நமக்கு நாமே முடிவுசெய்துகொள்ளுதல் ஒரு விதத்தில் சுயத்தையே எப்போதும் கொண்டாடுவதன் குறியீடு. சுயநலம். சுயநலம் மட்டுமே. நம்மை பற்றி நாமே எப்போதும் பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பதன் அடையாளம் அது. முதல் ராங்க் வாங்கினாலோ, ஒரு ப்ரமோஷன் வாங்கினாலோ, நம் திறமைக்கு கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுதல். அப்படி நினைத்துத்தான் சகலத்தையும் மண்டையில் ஏற்றிக்கொண்டு திரிகிறோம். தலைகால் தெரியாமல் ஆடுகிறோம். எனக்கு போய் இதுவா? என்று கேட்கிறோம். உண்மையில் நேரம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் தான் அதற்கு அர்த்தம். வேறு ஒரு மண்ணும் கிடையாது.

நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவாவது வேண்டும்.

அதைவிட்டுவிட்டு கொலை, கொள்ளை என்று கிளம்பினால் எதற்குமே முடிவு இருக்காது. நாம் படித்ததும் வேலைக்கு சேர்ந்ததும் கொலை செய்ய அல்ல. தலைக்கு மேல் போனால், எப்படியோ போகட்டுமென விவாகரத்து செய்துவிட்டு அமைதியாக அவரவர் வேலையை பார்க்கலாமே? இரண்டாவதாக திருமணம் கூட செய்யலாம். இன்றைய தேதிக்கு ஏகத்துக்கும் மண முறிவுகள் ஏற்படுகிறது. எல்லாம் இந்த பாழாய்ப்போன ஈகோ, சுய நலம், யார் வெல்வது என்கிற போட்டி, முதிர்ச்சியின்மை.
இரண்டாவது திருமணத்திற்காய் ஏகப்பட்ட பேர் வெயிட்டிங். (இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கெல்லாம், பத்தாவது படிக்கையிலேயே இரண்டாவது காதல் வந்துவிடுகிறது. ஆக முதல் திருமணமே டெக்னிக்கலாக மூன்றாவதோ, நான்காவதோ தான்)

முதல் திருமணத்தில் தான் டெளரி, ஜாதி, ஜாதகமெல்லாம். இரண்டாவதில் எதுவுமே யாரும் பார்ப்பதாக தெரியவில்லை. ஜாதி, ஜாதகமெல்லாம் பணால். மனப்பொறுத்தமுள்ள துணை கிடைத்தால் போதுமென்று சரண்டராகிறார்கள். இதை முதலிலேயே செய்திருக்கலாம். விதி யாரை விட்டது?



அரிதாரம்

$
0
0
அரிதாரம் 


சென்னை மேற்கு மாம்பலம் அனந்த நாராயணன் வீட்டிலிருந்து 62 சவரன் நகையை திருடிவிட்டார்கள். உரிமையாளர் புகார் கொடுத்தவுடன் தெரு முனையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா மூலம் யாரென்று கண்டுபிடித்து அமுக்கிவிட்டார்கள்.

ஹீரோக்களின் படங்களில் தான் போலீஸ் கடைசியாக வருவார்கள் போல.. (அப்படியானால், அனந்த நாராயணன் ஹீரோ இல்லையா? என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக்கூடாது).

கொத்தாக அமுக்கப்பட்ட திருடர்கள் இருவரும், பெண் பார்த்து கல்யாணம் செய்து செட்டிலாக‌ சொந்த வீடு கட்டும் ஆசையில் திருடியதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். என்னத்தை சொல்ல? "கல்யாணப்பெண் வீட்டை மட்டும் தான் பார்ப்பார். வீடு எப்படி வந்தது? அந்த காசு, நல்ல காசா?, கெட்ட காசா? என்று யோசிக்கமாட்டார்"என்று சொல்ல வருகிறார்களோ?

உண்மையில் இப்படியெல்லாம் யாரும் யோசிப்பதில்லையோ என்று தான் தோன்றுகிறது. மெரீனா பீச் போனால் பள்ளிக்கூட சீருடை அணிந்து கொண்டு ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள்.. ஐஸ்கிரீம் பார்லர்களில் இருவராக அமர்ந்து, ஓயாமல் பேசினாலும், ஹேர்பின் விழுந்தால் கூட சத்தம் கேட்கிறது.. ஓசையே இல்லாமல் இவர்களால் எப்படித்தான் பேச‌ முடிகிறதோ தெரியவில்லை.

எதிர்பாலினம் என்பது  உண்மையில் என்ன என்பதை புரிந்துகொள்ள இது போன்ற தோழமைகள் தேவைப்படுகிறது தான். பெண்கள் தனித்து இயங்க இந்த உலகத்தை புரிந்துகொள்ள‌ இது உதவுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஊடாக ஏதோ மிஸ் ஆகிறது. அதை வார்த்தைகளால் விளக்குவது கடினம்.

ஒரு மாதிரி சுற்றி வளைத்து சொல்ல வேண்டுமானால், கண்ட நேரத்துக்கு கண்டதும் தின்று பூஞ்சையாக இருக்கிறது உடல்.  25 வயதுக்குள் ஆண்களுக்கு நரைத்துவிடுகிறது. அதீத தொப்பை. நடந்தால் கூட மூச்சிறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுலோபின் குறைவு. மாத விடாயில் ரெகுலாரிட்டி இல்லை. உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்தம். சைனஸ், தைராய்டு பிரச்சனைகள். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

வேடிக்கை என்னவென்றால், இதையெல்லாம் தடுப்பதான , ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் சார் வாழ்க்கைமுறைக்கு தேவையான புரிதலை அடையத்தான், மேற்சொன்ன ஆண் - பெண் நட்பு பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால், இந்த அத்தனை பிரச்சனைகளும் அடியோடு தீர்ந்திருக்கவேண்டும் தானே? அதுதான் இல்லை. பிரச்சனைக்கு தீர்வு சொன்னால், தீர்வே மேலதிக பிரச்சனையை கொண்டுவந்துவிட்ட கதைதான்.

எதையோ பேச ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன் பாருங்கள்.

மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்சர் பைக்கை மாதம் மூவாயிரம் இன்ஸ்டால்மென்டில் வாங்கி ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இதெல்லாம்,  'Nothing is unfair in love and war'என்கிற வாக்கியத்தை துல்லியமாக தவறாக புரிந்து வைத்திருப்பதன் குறியீடு தான். இந்த வாக்கியம் சரி என்பவர்கள், "நடிக்கத்துவங்கிவிட்டால், நாடகம் , நிஜம் என்பதுவும் கிடையாது."என்கிற வாக்கியத்தையும் சரி என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

எதற்கு இந்த வேகம்? பெண்களிடத்தில் பொய் பிம்பம் காட்டி கவிழ்க்க நினைப்பது, அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றெல்லாம் அட்வைஸ் செய்தால் நாம் பார்த்துக்கொண்டிருந்த ஃபிகரை வேறு எவனாவது தள்ளிக்கொண்டு போய் விடுகிறான்.

மொத்தத்தில், ஒருவருக்கே எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. விரும்பிய பெண் கிடைத்தால் பொருளாதாரம், அடையாளம் எல்லாம் போய்விடுகிறது. பொருளாதாரம், அடையாளம் கிடைத்தால் விரும்பிய பெண் கிடைப்பதில்லை. இரண்டுக்கும் நடுவாந்திரமாக இரண்டையுமே பெற முயற்சித்து, நீங்கள் படித்து, டிகிரி வாங்கி, வேலையில் அமர்ந்து, சம்பளம் வாங்கி, வீடு கட்டி, கார் வாங்கி செட்டில் ஆகிவிட்டு ஒரு பெண்ணிடம் போய் நின்றால் "நீ என்ன வேணா பண்ணியிருக்கலாம்.. ஆனா, ஒரு பொண்ணு உன்னை தேர்ந்தெடுக்கணும்"என்று பெண்களே சொல்கிறார்கள் தான்.

கல்யாணத்துக்கு பெண் பார்க்க போன இடத்தில், நானே இப்படி, ஒன்றல்ல பல‌ பெண்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இவர்களெல்லாம்,  அனந்த நாராயணன் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளையடித்தவனையும், எட்டாயிரம் சம்பளத்திற்கு மூவாயிரம் தவணையில் பைக் வாங்குபவனையும் தவறென்று சொல்லமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 'அது காதலின் குறியீடு'என்று கூட பதில் வரலாம்.

மொத்தத்தில் கலி முத்தி விட்டது.

Freedom 251

$
0
0
Freedom 251



உங்களிடம் ஏற்கனவே நன்கு வேலை செய்யும் அலைபேசி இருந்தால், இந்தியாவின் உள் நாட்டு தயாரிப்பாகவும், இருப்பதிலேயே மிகவும் மலிவு விலையான ரூ.251க்கு கிடைக்கக்கூடியதாக விளம்பரப்படுத்தப்படும் 'Ringing Bells'நிறுவனத்தின் தயாரிப்பான Freedom 251 மொபைல்ஃபோனை வாங்காதீர்கள்.

"மலிவு விலை தானே.. எதற்கும் இருக்கட்டும்"என்று இந்த மொபைலை வாங்கி சேர்க்காதீர்கள்.

இணையத்தில் இந்த மொபைல் ஒரு ஃப்ராடு வேலை, ஒரு சீன நிறுவனத்தின் மொபைலை வாங்கி மாற்றி இந்திய சந்தையில் விற்க முனைகிறார்கள் என்பது பற்றியல்ல நான் சொல்ல வந்தது. அந்தச் செய்திகளை நான் உங்கள் இணைய பசிக்கே விடுகிறேன்.

நான் சொல்ல வருவது வேறு.

சமீபமாக இணையத்தில் இதன் புக்கிங் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. காரணம், சற்றேரக்குறைய ஆறு லட்சம் பேர் இணையத்தின் மூலமாக இதனை பதிவு செய்ய முயன்றதுதான் என்று சொல்லப்பட்டது.

சமீபத்திய தகவல், ஆறு கோடி மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சற்றே கற்பனை செய்து பாருங்கள. இந்த ஆறு கோடி பேருக்கும் இந்த மொபைல் கிடைத்தால் என்னாகும்? சந்தையில் விற்கப்படும் சாம்சங், ஐபோன் பக்கத்தில் கூட இது நிற்காது. எனவே ஒரு ஆறுமாத காலத்தில் தூக்கி எறியப்படும். ஆறு கோடி பேரால் ஆறே மாதத்தில் இப்படி ஒரு மொபைல் ஃபோன் தூக்கி எறியப்பட்டால், இது உருவாக்க இருக்கும் மின்னணு சாதன கழிவுகளின் அளவு என்னவாக இருக்கும்?

இதில் கூத்து என்னவென்றால் Ringing Bells போன்ற நிறுவனங்களிடம் நாம் மலிவு விலையில் மொபைல் எதிர்பார்க்கிறோமே தவிர, அந்த மொபைல்கள் பயன்படுத்தப்பட்டபிறகு அந்த கம்பெனிகள் ஸ்கிராப் செய்ய என்ன கட்டமைப்பு வைத்திருக்கின்றன என்று நாம் யாரும் கேட்பதில்லை. ஒரு மொபைலுக்கு ரூ.31 லாபம் கிடைக்குமென்று சொல்கிறது அந்த நிறுவனம். இந்த மொபைலால் வரக்கூடிய மிண் கழிவுகளால் நாட்டிற்கு ஏற்படும் நஷ்டத்துக்கு எந்த மொபைல் நிறுவனமும் இழப்பீடு வழங்கப்போவதில்லை. அந்த கழிவுகளை பாதுகாப்பாய் அழிப்பது குறித்து அது எந்த கவலையும் படவில்லை. அது குறித்து யாரும் கேள்வி எழுப்பப்போவதுமில்லை.

இன்றைய தேதிக்கு உலகத்தையே அச்சுறுத்தி வருவது மின்னணு கழிவுகள் தான். அமேரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் சேரும் மின்னணு கழிவுகளை மொத்தமாக பார்சல் செய்து கடல் வழியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் குப்பையாக கொட்டுகின்றன.



இந்த கழிவுகள் இந்த உலக நாடுகளால் கடலில் கொட்டப்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கபப்டுவதாக வரும் தகவல்கள் தனிக்கதை.

தில்லியில் ஒரு சராசரி மனிதனின் வருமானம் ரூ.600 ஆக கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு சாதாரண கடை நிலை இந்தியனுக்கும் போய் சேரும் வகையில் மலிவான விலை என்கிற விளம்பரமெல்லாம் கேட்க சுவையாக இருக்கலாம். ஆனால் இது இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக‌ எதிர்காலத்தில் நிச்சயம் உருவாகும்.

ரியல் எஸ்டேட்ஸ் என்கிற பெயரில், ஆறுகளையும், குளங்களையும் மறித்து மண்ணை நிரப்பி பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் 2015ம் வருட முடிவில் இயற்கை பேரிடருக்கு பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் இருக்க முடியாமல் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டார்கள் சென்னை வாசிகள். இது நடந்து மூன்று மாதமாகி, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டாலும், 2016க்கு அப்படியொரு மழை மீண்டும் வந்தால் சென்னை தாக்குப்பிடிக்குமா?  சென்னை நகரை சுற்றிய மூன்று ஆறுகளையும் சாக்கடை கழிவுகளுக்கு தாரை வார்த்துவிட்டோம். இந்த இழப்பை எதை வைத்தும் ஈடு செய்ய முடியாது. இந்த ஆறுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் கஜானா கூட போதாது.

எத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கினாலும் இனி எப்போதும் இந்த சவாலை முழுமையாக இந்தியாவால் தீர்க்க முடியாது.

அதே போன்ற ஒரு தீர்க்க முடியாத சவாலாக‌ மின்னணு கழிவுகளை இந்தியாவுக்குள் கொட்ட இருக்கும் நிகழ்வாகவே இந்த மலிவு விலை மொபைல் இருக்கப்போகிறது.

இந்தியாவின் மொத்த ஜனத்தொகை இருநூறு கோடியை தாண்டிவிடும். இதில் பாதி பேராவது இந்த மலிவு விலை போனை வாங்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு சார்ஜர், ஒரு யு.எஸ்.பி கேபிள், ஒரு ஹேட்போன்ஸ். இது எத்தனை பெரிய அளவினதான கழிவு.

இன்னொரு கோணத்தில் இது ஒரு உத்தி.



ஏர்டெல் , ஏர்செல் போன்ற நிறுவங்கள் மொபைலில் இணைய வசதி அளிக்கின்றன. அதற்கு கட்டணங்களும் விதிக்கின்றன. ஆனால் ஏழைப்பட்ட, நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே உள்ளவர்களையே பெரும்பான்மையினராக கொண்ட நம் சமூகத்தில் பேசிக் மாடல்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமானது. இவர்களும் விண்டோஸ் போன்று பயன்படுத்த துவங்கிவிட்டால் இவர்களிடமிருந்தும் இணைய வசதிகளை அறிமுகம் செய்து அதற்கென கட்டணம் வசூலிக்கலாம். கேட்டால், எல்லோருக்கும் இணையம் என்று சொல்லிக்கொள்ளலாம். பணம் பிடுங்க, வறுமை கோட்டுக்கும் கீழே இருப்பவர்களை இப்போது குறி வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 251 ரூபாய்க்கு மொபைல் தந்தால் நிச்சயம் வறுமை கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள் வாங்குவார்கள் தாம்.

சரி.இதையே இன்னொரு கோணத்தில் யோசிக்கலாம்.

கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்கள், தங்கள் வசதிக்கு வைத்துக்கொள்வது பேசிக் மாடல் வகை போன்களே. ஏனென்றால் இவைகளை வாங்குவது எளிது. அதனாலேயே இவைகளை தூக்கி எறிவதும் எளிது. ஆனால் இத்தகைய பேசிக் மாடல்களில் உள்ள பிரச்சனை இணையத்தை பயன்படுத்த முடியாததே. ஆகையால் ஓரளவுக்கு மேல் சமூகத்திற்கு எதிராக இயங்குபவர்களுக்கு இது காறும் இப்படிப்பட்ட பேசிக் மாடல் போன்கள் பயன்பட்டிருக்கவில்லை.  ஆனால், 251 ரூபாய்க்கு கிடக்கும் ஸ்மார்ட் போனால் ஒரு கொலையை செய்துவிட்டு, இணையத்திலேயே டிக்கெட் புக் செய்து ஒருவர் வெளி நாட்டுக்கே தப்பிச்சென்றுவிட முடியும். கொலை செய்யப்பட்ட உடல் அழுகத்துவங்க இருக்கும் சில மணி நேரங்களுக்குள்ளாக‌ இது சாத்தியம்.

இதையே நீங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கும் பொறுத்திப் பார்க்கலாம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாதிகளால் அதிகபட்சமாக கர்நாடகாவிற்குத்தான் செல்ல முடிந்தது. ஏனேனில் வசதிகள் இல்லை. ஆனால் 251 ரூபாய் மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்கினால், பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம். ஓசாமா பின்லாடனை ஐந்து வருடங்களாக உள் நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு, அமேரிக்காவுடன் தேடுதல் நடத்திய நாடல்லவா? அமேரிக்காவின் ரகசிய கோப்புக்களை அம்பலப்படுத்திய ஸ்னோடென் ரஷியாவில் தான் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் சுற்றிக்கொண்டிருந்த‌ சோட்டா ராஜன் பாலி தீவில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டான்.

காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஒரு நாட்டில், குற்றங்கள் பெருக எல்லா வழிவகைகளையும் செய்துவிட்டு, பத்தாயிரம் பேருக்கு பத்து காவலர்களை நியமித்தால், பூங்காவில் உறங்கிக்கொண்டிருந்தவனை அடித்து துவைத்து திருடன் என்றுதான் கணக்கு காட்டும் மன நிலை வளரும். 'விசாரணை'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வெற்றி மாறன் சொல்ல வருவது, இதன் அடுத்த கட்டம் தான். இப்படி நிஜ குற்றவாளிகள் எல்லோரும் தப்பிவிட்டால், சிறைச்சாலைகளில் கம்பிகளுக்கு பின்னே கிடப்பவர்கள் உண்மையில் யார் என்கிற கேள்வி எழுகிறது

குற்றம் என்றால், கத்தியை சுழற்றுவதும், குண்டு போடுவதும், வன்புணர்வு செய்வதும் மட்டுமல்ல.. இவைகளுக்கான‌ வழிகளை எளிமையாக்குவதும் தான். சில வசதிகள், தகுதியானவர்களுக்கே சென்று சேர்தல் நன்மை பயக்கும். எல்லோருக்கும் எல்லாமும் என்கிற கம்யூனிச சிந்தனைகளையெல்லாம் கண் மண் தெரியாமல் எல்லாவற்றிலும் புகுத்துவதற்கில்லை. அப்படி புகுத்தினால் வீணான சிக்கல்களே மிஞ்சும்.



 - ஸ்ரீராம்

சிராய்ப்புகள், கீறல்கள்

$
0
0
சிராய்ப்புகள், கீறல்கள் 




சென்னை அம்பத்தூர் தான் என் வீடு என்பதால் இன்று தினமலரின் பின்வரும் இந்தச் செய்தி ஈர்த்தது.



இதெல்லாம் 'Anything is fair in love and war'கேஸ் தான்.

இதில் பாதிக்கப்பட்டது மணமகன் என்று நீங்கள் நினைத்தால்.............. So Sad!!

22 வயதிலேயே பிறந்த வீடு, புகுந்த வீடு என இரு வீட்டாரின் எதிர்ப்பையும் சம்பாதித்து எதிரிகளாக்கிகொள்வதால், காதலன் ஒருவனே அந்த பெண்ணின் சகல எதிர்பார்ப்புகளுக்கும் ஒரே இலக்காகிவிடுகிறான். இது ஆணின் பக்கம் ரிஸ்க்.

பெற்றவர்கள், புகுந்த வீடு என இரு குடும்பங்களையும் எதிர்த்து காதலனை நம்பி செல்கையில் , காதலன் உத்தமனாக இருந்தால் தான் போச்சு. இல்லையென்றால், அடுத்த நொடி மும்பையின் சோனாகாச்சிக்கோ, கொல்கட்டாவில் எதோவொருகாச்சிக்கோதான் கொத்தடிமையாக போக வேண்டி வரும். இது பெண்ணின் பக்கம் இருக்கும் ரிஸ்க். உத்தமன் ஏன் ஓடவேண்டும்? காதலியை இன்னொருத்தன் மணம் செய்யும் வரை ஏன் விடவேண்டும்? என்கிற கேள்வியெல்லாம் பகுத்தறிவுக்கானது.

அப்படியானால், சேஃப் யார் என்றால், மணமகன் தான். இந்த இரண்டு ரிஸ்குமே இல்லை. தலை முழுகிவிட்டு அடுத்த மணமகளை தேடி முறையாக செட்டில் ஆகலாம்.

ஆனால், நம்மூரில் வெகு ஜனத்தின் பார்வை என்பது மொன்னையானது. மணமகனை ஏதோ இழந்தவன் போலவும், துர்பாக்கியசாலி போலவும், ஓடியவனை வெற்றியாளன் போலவும், ஓடிய பெண்ணை 'சரியான ஆணை தேர்வு செய்தவள்'போலவும் அர்த்தப்படுத்துவார்கள்.

ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், புதிதாக வரும் பெண்/ஆண், மணமகனின்/மணமகளின் முதல் திருமண கசப்பான அனுபவத்தை புரிந்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருக்க வேண்டும். சொல்வது எளிது.

பெண்களும் இப்போதெல்லாம் அதிகம் சம்பாதிக்கிறார்கள். 'இரண்டாவதாக'செல்ல யோசிக்கிறார்கள். 'நான் ஏன் ஒருத்தருக்கு இரண்டாவதா போகணும்?'என்கிற கேள்வி மேலோட்டமான பார்த்தால் நியாயமாக தெரியலாம். ஆனால், இந்த கேள்வி தான் பெண்களுக்கு வேறு பல பிரச்சனைகளை தந்துவிடுகிறது. 'இரண்டாவது'என்றாலும் மணமகன், பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்தில் அந்த மணமகனை தேர்வு செய்வதால் 'இரண்டாவது'என்பது காலப்போக்கில் ஒரு குறையாவதில்லை. அது ஒரு விபத்தாக ஏற்கப்பட்டு, மறக்கப்பட்டுவிடுகிறது.

மாறாக, பொருளாதாரம், கல்வி, உயரம், வாழ்க்கை முறை, குடும்ப பின்னணி என எல்லாமும் பொருந்துகிற பட்சத்திலும் 'இரண்டாவது'இடத்திற்கு போக மனம் ஒப்பாமல் போவதால்,  பொறுத்தமான வரன்களுக்காய் 30 வயது தாண்டியும் காத்திருக்க வேண்டி வருகிறது. 32 வயது ஆணுக்கு 27 வயது பெண்களே தயாராய் இருக்கும்போதும் ' 27 வயதுள்ள பெண்களே கிடைக்கும் போது நான் ஏன் 30 வயதுப்பெண்ணை தேர்வு செய்ய வேண்டும்?'என்கிற கேள்வியை அவனும் எழுப்புகிறான். இதனால் கால தாமதம் ஆவதுடன், பொறுத்தமான மணமகன்களை இழக்க நேரிடுவதால், 'முதலாவது'என்று பொறுத்தமற்ற மணமகனிடம் சென்று சேர்வதில் முடிகிறது. பிறகென்ன, வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்ட கதைதான்.

'முதலாவது' , 'இரண்டாவது'என்பதெல்லாம் பிரச்சனை இல்லை.

பொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி, சிந்தனா முறை போன்றவைகளிலெல்லாம் பொறுந்துகிற வரன்களின் எண்ணிக்கை குறைவு தான் இது எல்லாவற்றுக்கும் காரணம்.  இதெல்லாம் கணவன் மனைவி உறவில் சந்தோஷத்திற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் மிக மிக பிரதானம். இவைகளை 'இரண்டாம்'/'முதலாம்'இடங்களுக்காக விட்டுத்தருவது பெரும்பாலும் பிரச்சனையில் தான் போய் முடிகிறது.

பங்களூர் கோகுல் போன்றவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இன்றைய அவசர யுகத்தில் நாம் ஒதுங்கி போனாலும், தறிகெட்டு வளர்ந்தவர்களால் நமக்கும் லேசாக சில சிராய்ப்புகள், கீறல்கள் நேரவே செய்கிறது. பொருளாதாரம், கல்வி, சிந்தனாமுறை போன்றவைகளை, இந்த லேசான சிராய்ப்புகளுக்காகவும், கீறல்களுக்காக புறக்கணித்தால் நல்ல வரன்களை மற்றவர்களுக்கு தாரைவார்த்ததாகத்தான் அர்த்தமாகி விடுகிறது.

பொருளாதாரம், கல்வி, குடும்பப்பின்னணி போன்றவைகளுக்கெல்லாம் ஒரு உழைப்பும், அர்ப்பணிப்பும், திட்டமும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. இவைகளை காலத்தே செய்து பெருக்கிக்கொண்டவர்களை அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், எப்போதும் காவல் காக்கும், துணை இருக்கும். இதை இரு பாலரும் புரிந்துகொண்டாலே போதும்.

பாதைகளும், முட்களும்

$
0
0
பாதைகளும், முட்களும்




நாம்
முட்கள் நிறைந்த பாதையில்
பயணிக்கையில்
சில முட்கள்
பாதங்களை பதம் பார்த்துவிடுகின்றன...

சில முட்களை
நாம் மிதித்துவிட்டு
பயணத்தை தொடர்கிறோம்...

முட்களுடனான‌
நம் பரிச்சயங்களைப் பொறுத்து
அவற்றை
ஒரு காயத்துடனோ,
ஒரு அலட்சியத்துடனோ,
ஒரு கவனத்துடனோ,
ஒரு எச்சரிக்கை உணர்வுடனோ
கடந்து போகிறோம்...

முட்களில்லாத பாதைகள்
என்று எதுவுமில்லை...

முட்களின் வகைகள் தாம்
கற்பனைக்கெட்டாவண்ணம்
வலுத்துக் கிடக்கிறது


நம் பாதைகள் எங்கிலும்...

ந‌ம் பாதைக‌ள்

$
0
0
ந‌ம் பாதைக‌ள் 




நம்மில் சிலர்
ஒரே இடத்திலேயே
நம் பயணங்களை
துவக்கினாலும்
நம் அனைவரும்
ஒரே பாதை
தெரிவதில்லை...


ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பாதை
புலப்படுகிறது...


அவற்றில்
நம் பயணங்களை
மேற்கொள்வதற்கான‌
காரணங்களுக்கு
நாம் எப்படியேனும்
பொருந்தியே இருக்கிறோம்...


 - ஸ்ரீராம்
Viewing all 1140 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>