Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all 1140 articles
Browse latest View live

கொண்டாட்டம்

$
0
0
கொண்டாட்டம்


கபாலி - ஏர் ஏசியா விமானம் கபாலி படத்தின் ஸ்டில்களுடன் பறக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸாகும் தேதியில் விடுமுறை அளித்திருக்கிறது. ஐரோப்பா முதலான பல நாடுகளில் முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரிலீஸாகிறது.

இப்படி கபாலி படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால்..................................

சுற்றுப்புறச்சூழல், மரம் வளர்த்தல், நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், சுத்தம் என்பன போன்றவைகளுக்கு கூட வேண்டிய கூட்டம் பொழுதுபோக்கு ஒன்றிற்கு கூடுவதை ரசிக்க முடியவில்லை. சென்ற தலைமுறை, தனக்கு அடுத்த தலைமுறைக்கு வாழ, வளர பூமியை, அதன் ஆதார இயற்கை வளங்களோடு தந்தார்கள். நாம் நமது அடுத்த தலைமுறைக்கு என்ன மிச்சம் வைக்க இருக்கிறோம்?

எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தங்களது திறமையை உழைப்பை காட்டும் சினிமா துறையில், அறுபதை கடந்த மனிதர் இன்னமும் நம்பர் 1 ஆக இருக்கிறார். இது சொல்ல வருவது என்ன? இள ரத்தங்களில் குறையா? அல்லது முதிய ரத்தம் அத்தனை வீரியமாக இருக்கிறதா? ஒரு காலத்தில் இப்படி ஒரு கூட்டம் ஒருவருக்காக கூடியது. அவர் 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அப்படி ஒருவரை நாம் கண்டடைய முடியுமா? இது சொல்ல வரும் செய்தி என்ன?

ஒரு சினிமா உருவாக ஆயிரம் பேரின் உழைப்பு தேவைப்படுகிறதுதான். ஆனால் ஆயிரம் பேரின் உழைப்பை, திறமையை அங்கீகரிக்க வேண்டிய‌ அந்த ஒரே காரணத்திற்காய் அதன் பின்னே ஒளிந்திருக்கும் ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் போகத்தான் வேண்டுமா? கபாலி குறித்து கேள்விப்படுகையில் வானியல், ஜோதிடம், பிறந்த நேரம், அதிர்ஷ்டம் போன்றவைகள் மேல் தீவிர நம்பிக்கை உருவாகிவிடுவதை தவிர்க்கவே முடிவதில்லை. இந்த ஒரு விஷயம், படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஒரே விதமாகத்தான் இயங்க வைக்கிறது எனும்போது, கல்வி என்பதன் உண்மையான நோக்கம் என்ன என்பதன் மீது தீவிரமாக யோசனை வந்துவிடுகிறது.

சுவாதி கொலை வழக்கு, மர்மமான முறையில் மரணித்த ஐ.பி.எஸ் அதிகாரி சசி மற்றும் மருத்துவ மாணவர் சரவணன், பியுஷ் மனுஷ் விவகாரம் உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளை கொஞ்ச கொஞ்சமாக மறக்கவும், தீவிரம் குறைக்கவும் இது பயன்படப்போகிறது.

நூறாண்டுகால இந்திய சினிமாவில் பிரிட்டனின் ஹால் ஆஃப் ஃபேமில் இருக்கும் ஒரே இந்தியர் சத்யஜித்ரே. ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெறும் நான்காவது இந்தியர். இத்தனைக்கும் ஆண்டுக்கு இரு நூறு படங்களுக்கு மேல் தமிழ் சினிமா மட்டும் உற்பத்தி செய்கிறது.  ஹைப், டாக் ஆஃப் த டவுன் , கொண்டாட்டமான வெளியீடு எல்லாம் ஓகே தான். வெற்றிக்களிப்பில் கொண்டாடலாம். என்ன வென்றோம்? எப்படி வென்றோம்? எங்கே வென்றோம்? நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியின் மர்ம மரணம் என்ன விதமான வெற்றி? பியுஷ் மனுஷ் என்கிற மனிதனின் இயற்கை மீதான காதலை சட்டத்தின் போலி கைகளால் நாற்பது முதலாளிகளும், நான்கு அரசியல்வாதிகளும் குற்றுயிராக கிழித்துப்போடுவது என்ன விதமான வெற்றி? என்ன உழைத்தோம்? எந்த களைப்பை போக்க இந்த கொண்டாட்டம்?

எட்டு மாதங்கள் முன்பு பெருவெள்ளத்திலிருந்து மீண்ட ஒரு பெரு நகரத்தின் அடையாளம் துளி கூட இல்லை இந்த கொண்டாட்டத்தில். ஏரிகளை தூர் வார, நதிகளை ஒருங்கிணைக்க, நீர் ஆதாரம் கூட்ட என பெறும் நிதி தேவைப்படும் சூழலில், இந்த கொண்டாட்டம். ஏழு கோடி ஜனம். தலைக்கு நூறு ரூபாய். எழு நூறு கோடி. ஏரி, குளம் குட்டை, ஆறுகளை தூர் வாரி நீராதாரம் பெறுக்கினால், வர இருக்கும் மழைக்காலத்தில் நீர் சேமிக்கலாம். விவசாயத்திற்கு உதவும். முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் ஆயிரம் ரூபாய் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.

ஜெய் ஹிந்த்.

ஜெய் ஹிந்த்.

ஜெய் ஹிந்த்.


வாயடைப்பு

$
0
0
வாயடைப்பு


77000 கோடி வராக்கடனுக்காக மத்திய அரசு வங்கிகளுக்கு 23000 கோடி ஒதுக்கியிருக்கிறதாம்.

அடடா!! இதுதான் மல்லைய்யா. அவருக்கு தெரிந்திருக்கிறது. எப்படியேனும் யாரேனும் வங்கிகளுக்கு திருப்பி தந்துவிடுவார்கள் என்று. இனி அவர் எப்போதும் போல் கவலைகளின்றி, லண்டன் மா நகர தெருக்களில் பிராந்தி பாட்டிலுடன் திரியலாம்.

இனி கபாலி வரும். அதில் வந்த கடன், வராத கடன், வெறும் 1.90 லட்ச ரூபாய் கல்விக்கடனுக்காக ரிலையன்ஸின் அழுத்தத்திற்கு பயந்து தற்கொலை செய்த லெனின் என எல்லாவற்றையும் மறந்துவிட்டு, காகித பேனருக்கு பாலூற்ற கிளம்பிவிடுவோம்.

அதன் பிறகு 2.0 வரும். பிற்பாடு அர்விந்த்சுவாமி எந்த படத்தில் வில்லனாகிறார், நயந்தாரா தனது புதிய காதலில் ஜெயித்தாரா என்கிற ரீதியில் எல்லாமே மறக்கடிக்கப்பட்டுவிடும். மழுங்கடிக்கப்பட்டுவிடும். ஜன நாயகம் என்பது யாதெனில்......................................................................................... சரி விடுங்கள்..

கபாலி என்றதும் நினைவுக்கு வருகிறது. 65 முதியவருக்கு தொடர்ந்து சின்னப்பயல்களின் ஆடைகள் தந்து, சின்ன பெண்களுடன் டூயட் பாட வைத்து, அவரிடம் நூறு ஜிம்பாய்களை உதை வாங்க விட்டு ரசிப்பது என்ன விதமான Sadism? சைக்கோத்தனம்?  யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன். இன்னொன்றும் சொல்ல வேண்டும். பொறியியல் படித்தவன் காதலை சொல்ல வந்தால் 'தேவாங்கு'என்று திட்டலாம். 65 வயது முதியவர் 20 வயது நாயகியிடம் காதலை சொல்லி டூயட் பாடுவதை ரசிக்கும் எட்டு கோடி ஜனத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

ரொம்பவே குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணியம் என்பது உண்மையில் என்ன? யாரேனும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

இன்னொரு கொடுமை நடக்க இருக்கிறது. அதாவது மனனம் செய்து எழுதினால் சதம் கிடையாதாம். மாணவர்கள் மனனம் செய்து quantum numbers ஐயும், Heisenberg's uncertainty principle ஐயும் எழுதி அடிக்கோடிட்டு காட்டினார்கள்.

பேப்பர் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு நாற்பது பேப்பர் என்று வைத்துக்கொண்டு அடிக்கோடிட்ட இடங்களை மட்டும் பார்த்து மார்க் போடுவது எளிதாக இருந்தது. எதை எழுத வேண்டும், எதை அடிக்கோடிட வேண்டும் என்பதையாவது மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். இனி சொந்தமாக எழுத வேண்டுமாம். தெரிந்த கேள்விக்கு பதில் எழுதுவதை விட தெரியாத கேள்விக்கு பதில் எழுதுவதுதான் எளிது. அந்த கட்டுக்கதையையெல்லாம் இனி பேப்பர் திருத்தும் ஆசிரியர் படித்து மண்டை காய்ந்து போய் விடுவார். ஒரு நாளுக்கு நாற்பது பேப்பரெல்லாம் சாத்தயமில்லை. நான்கு பேப்பரே அதிகம். வெறுப்பில் மார்க் குறைத்தால், ரிசல்ட் வந்த பின், மறு கூட்டலுக்கு கோடி பேர் விண்ணப்பிப்பார்கள். ஒரு பேப்பருக்கு நானூறு ரூபாய் என்றால் செம கலெக்ஷன். இனி தேர்வு என்றால் மாணவர்கள் பதட்டப்பட வேண்டியதில்லை. ஆசிரியர்கள் தான் பதட்டப்பட்டு நகம் கடித்து துப்பி, முடிந்தால் ரயில் முன் பாய்ந்து , வீட்டை விட்டு ஓடவேண்டும்.

மல்லைய்யாவையும், அம்பானியையுமே மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது. இனி மல்லையாக்கள் கல்வித்துறையிடமிருந்தே கடன் வாங்கலாம். திருப்பி செலுத்த வேண்டி இல்லை. வேண்டுமென்றால் ஒரு பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம். மொத்த கடனும் வந்துவிடும்.

இதெல்லாம் கதைக்கு ஆகாது. மேலும் மேலும் குட்டையை குழப்புகிறார்கள்.

கல்வித்துறை கிமு கிபியில் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. கல்வித்துறையே இப்படி இருந்தால், மாணவர்கள் நிலைமை? கல்வியின் தரம்? ம்ஹும்...

நாட்டின் வளங்களை, வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி பெற்ற அறிவை வெளி நாடுகளில் தான் பயன்படுத்துகிறார்கள் என்கிற வாதங்களெல்லாம் இனி ஒத்துவராது. துருப்பிடித்த , ஒட்டடை படிந்த கல்வித்துறையில் தனக்கு வேண்டியதை எப்படியோ உருவி பயன்படுத்தி வெளி நாட்டுக்கு தப்பி போனவர்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

ரஜினியை நாம் ஏன் நேசிக்கிறோம்

$
0
0
ரஜினியை நாம் ஏன் நேசிக்கிறோம்


கபாலி நாளை ரிலீஸ்.. தமிழகமே அதிருது என்கிறார்கள். அமேரிக்காவில் என் ப்ராஜெக்டில் வேலை செய்பவன் நேற்று மெசெஞ்சரில் வந்து 'கபாலி முதல் நாள் முதல் ஷோ போறியா'என்றான். இல்லை என்றேன். அந்த பக்கமிருந்து பேச்சே இல்லை.

'1975 லேயே கமல் பெரிய ஆளு.. அவரு நினைச்சிருந்தா இந்த ரஜினிக்கு சான்ஸ் குடுக்காதீங்கன்னு சொல்லிருக்க முடியும்'என்று கமலின் ஐம்பதாண்டு கால விழாவில் ரஜினியே சொன்னார். ரஜினி என்கிற தனி மனிதனின் பின்னால் ஏன் இத்தனை கொண்டாட்டம்? இது என்ன விதமான விசை?

ரஜினி என்கிற விசையை புரிந்து கொள்ள நாம் அவர் வளர்ந்த கால கட்டத்தை கவனிக்க வேண்டும். ரஜினி என்றில்லை. அதற்கு முந்தைய தலைமுறையான எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தை எடுத்துக்கொண்டோமேயானால், புனித பிம்பத்தை கட்டமைத்து கட்டமைத்தே மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் எம்.ஜி. ஆர். அப்போது தொழில் துறை அத்தனை வளராத காலம். தொழிற்புரட்சி வந்த காலம் 1980களில். அப்போது ரஜினி கமல் உருவாகியாகிவிட்டது.

மக்களின் மன நிலையில் பெரிய மாற்றங்கள் வர துவங்கிவிட்டிருந்தன. தனியார் மயம் ஆகத்துவங்கியிருந்தது. அதற்கு முன் வரை அரசு வேலை என்றால் வாழ்க்கை செட்டில். அதை அண்டியவன் வெற்றியாளன் என்கிற ரீதியில் இருந்தது சமூகம். வாழ்க்கை அத்தனை வேகமாக இல்லை. திருச்சியிலிருந்து கடிதம் போட்டால், சென்னை வர ஒரு வாரமாகிவிடும். கடிதத்துக்கு பதில் எழுதி அது திருச்சி வர 15 நாளாகிவிடும். அதிர்ச்சியோ, துக்கமோ மனதை உடனடியாக தாக்கிவிடாத ஆமை வேகத்தில் எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தன. 'நல்லது நடக்கும்'என்கிற புனித பிம்பத்திலேயே இருக்க எல்லோராலும் முடிந்தது. ஆகையால் புனித பிம்பத்தை கட்டமைத்த எம்.ஜி.ஆர் மக்கள் நாயகனாக பார்க்கப்பட்டார்.

1980 களுக்கு பிறகு அப்படி இல்லை. தனியார் உள்ளே வந்தது. சிந்தனை போக்குகள் மாறின. அவசரம் கூடியது. வேகம் கூடியது. செய்த காரியத்தின் பலன் உடனுக்குடன் கிடைத்தது. 'நல்லது நடக்கும்'என்று காத்திருக்க அவகாசமில்லை. முந்தினவன் வெற்றியாளன் என்றானது. முந்த தெரியாத சாமாண்யர்கள் எண்ணிக்கையில் பெருகினார்கள். புனித பிம்பங்கள் ஏமாற்றத்துக்கு இட்டு சென்றன. அதனால் புனித பிம்பங்களுக்கு அர்த்தமில்லாது போனது. புனித பிம்பங்கள் காலாவதியாகின. முதலாளி பலசாலி ஆனான். அவனால் சீண்டப்படும் தொழிலாளியின் மனதுக்குள் முதலாளியை பந்தாடும் வேட்கை வளரத்துவங்கியது. சாமாண்யனிடன் அசகாய சூரத்தனங்கள் இருப்பது வசீகரித்தது.

ரஜினி தனது ஒவ்வொரு படத்திலும் இடைவேளை வரை சாமான்யனின் கஷ்டங்களை தாங்குவார். இந்த இடைவேளை வரை, சாமான்யன் ரஜினியை தனது பிம்பமாகவே பார்த்தான். இடைவேளைக்கு பிறகு ரஜினி விஸ்வரூபம் எடுப்பார். 'பாட்ஷா'படத்தை சொல்லலாம். இடைவேளை வரை நாயடி வாங்கும் ஹீரோ வில்லனிடம் 'டேய், இது நாள் வரை நீ பாத்தது என்னை இல்லேடா.. உண்மையான என்னை உன்னால நெருங்க கூட முடியாது.. எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு'என்பார்.

இதை தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமாக ரஜினி காட்டினார். தர்மதுரை, மாப்பிள்ளை, பணக்காரன், அண்ணாமலை என இந்த பட்டியல் நீளும்.

அதே நேரம் ரஜினியை விடவும் ஒரு படி மேலே இருந்த கமல் என்கிற கலைஞன் கலையில் அடுத்தடுத்த படிகள் தாண்டினார். கலையை புரிந்து கொள்ள அறிவு தேவைப்பட்டது. சாமான்யன் ஒரு கட்டத்துக்கு மேல் தொடர முடியாத ஆளாகிப்போனார் கமல். அது ரஜினிக்கு பெரிதும் உதவியது. எண்ணிக்கையில் மிக அதிகம் உள்ள ஒரு கட்டத்துக்கு மேல் பயணிக்க முடியாத ரசிகர்களின் பேராதரவு ரஜினிக்கு கிடைத்தது. இந்தி, வங்காளம் என்றெல்லாம் பறந்து பறந்து நடித்துக்கொண்டிருந்த போது, ரஜினி தமிழகத்தில் தனக்கென ஓரிடம் பிடித்து வேகமாய் வளர, தனது இடம் குறித்த பதட்டத்துடன் கமல் தமிழ் திரையுலகின் மீது தனது ஒட்டுமொத்த கவனத்தை திருப்பியது ஒரு மோசமான முடிவு. இல்லையெனில், கமல் அமிதாபுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ ஆகியிருக்கலாம்.

அகில இந்திய அளவில் போட்டி போட வட இந்தியர்களின் நிறமும், நடிப்பும், இன்ன பிற திறமைகளும் கமலுக்குத்தான் சாதகமாக இருந்திருக்கும். அப்படியே அவர் அங்கிருந்து ஹாலிவுட் சென்றிருக்கலாம்.

பத்து வருடங்களுக்கு பிறகு ரஜினி போல் ஒருவர் சினிமாவில் நுழைந்தால் ரஜினி அளவிற்கு வெல்ல முடியாது. ஏனெனில் அப்போது காலகட்டம் வேறாகியிருக்கும். ரசனை மாறியிருக்கும். ரஜினி இந்த காலகட்டத்தின் மன நிலைக்கு உவப்பாக இருக்கிறார். கால் நூற்றாண்டுக்கு பிறகும் எம்.ஜி.ஆரை இப்போதும் நாம் நினைவு கூர்வது போல் ரஜினியை கால் நூற்றாண்டுக்கு பிறகு நாம் நினைவு கூர்வோம் என்று எனக்கு தோன்றவில்லை. ரஜினி ஒரு ட்ரண்ட் மட்டுமே. ஆனால் அதே கால் நூற்றாண்டுக்கு பிறகும் கமலை நினைவு கூராமல் நம்மால் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் கமல் தன்னை ட்ரன்டுக்கு எதிராகத்தான் சினிமாவில் பதிய வைத்துக்கொண்டிருக்கிறார். 

லெனின்

$
0
0
லெனின்


லெனின் பொறியியல் படிக்க விருப்பப்பட்டிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த லெனின் தந்தை கதிரேசன் ஒரு கொத்தனார் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகிறது. தனியார் பொறியியல் கல்லூரில் சிவில் இன் ஜினியரிங் சீட் கிடைத்திருக்கிறது. கல்விக்கடனாக எஸ்.பி.ஐ வங்கியில் 1.90 லட்சம் பெற்று லெனின் அங்கே சேர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் சென்ற வருடம் படிப்பு முடிந்திருக்கிறது. லெனின் தற்கொலை செய்து இறந்துவிட்டார். வங்கியின் சார்பில் ரிலையன்ஸ் நிறுவன ஆட்கள் தொடர்ந்து பணத்தை திரும்ப செலுத்தக்கூறி லெனினை மிரட்டியது தான் காரணம் என்கிறார்கள்.

படிப்பு முடிந்த பிறகு ஆறு மாத கால அவகாசம் தருவார்கள். அதற்குள் வேலைக்கு சேர்ந்து, வட்டியையாவது தொடர்ந்து கட்டிக்கொண்டே வந்தால் தொந்திரவு செய்ய மாட்டார்கள். ஆனால் இது நேரடியாக வங்கியுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தான்.

ரிலையன்ஸ் குண்டர்களை வைத்துத்தான் கடனை வசூலிக்கிறது என்கிற தகவலை தமிழகம் முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் உத்தமமான பணியை தனது உயிரை கொடுத்து செய்திருக்கிறார் லெனின்.

இதற்கெல்லாம் capitalism பேசி 'ரிலையன்ஸ் என்கிற அதிகார வர்க்கம்'என்றெல்லாம் கொதித்தெழ வேண்டியதில்லை. அது ஒரு புறம் இருக்கட்டும். லெனினுக்கு சென்ற வருடமே படிப்பு முடிந்துவிட்டது. ஆனால் அவருக்கு இரண்டு அரியர் இருக்கிறது. மாடல் தேர்வுகளில் பெரு மதிப்பெண்கள் வாங்கி யாருமே எதிர்பாராத வகையில் செமஸ்டர் தேர்வில் அரியர் வாங்கிவிட்டார் என்று ஏதும் செய்திகள் கண்ணில் பட வில்லை.

ரிலையன்ஸை மட்டும் குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம்.ஒரு செமஸ்டர் தேர்வுக்கு ஆறு மாத காலம் இருக்கிறது. இந்த ஆறுமாத காலத்தில் ஒரு பாடத்தில் 45 மதிப்பெண்கள் எடுக்க முடியாதவர் ஏன்  கடன் வாங்கி பொறியியல் சேர வேண்டும் என்கிற தர்க்க ரீதியான கேள்வி இருக்கிறது.

படிக்கும் படிப்பு கடன் வாங்கி படிப்பது தான் என்பது லெனினுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஓடக்காரனுக்கு மிதப்பின் மீதுதான் கண் இருக்க வேண்டும். மல்லையாக்கள் 9000 கோடிகளுடன் நாடு விட்டு நாடு தப்பிச்செல்லும் சூழலில் கடன் என்பது எத்தகைய தலைவலி என்பதை உயிரை கொடுத்துத்தான் புரிந்து கொள்வேன் என்று அடம்பிடிப்பது என்ன விதமான உளவியல்? பொறியியல் படிக்கிறார். உண்மையாகவே அந்த பொறியியலுக்கு தகுதி வாய்ந்தவர் எனில் அரியர் என்ற ஒன்று எங்கிருந்து வருகிறது?

இத்தனை கேள்விகளையும் புறக்கணித்துவிட்டு நாம் ஏன் வங்கிகளின் மீதும், முதலாளிகள் மீதும் பாய்கிறோம்? முதலாளிகள் மீது பாய வேறு பல சமூக பிரச்சனைகள் இருக்கின்றன. லெனின் பிரச்சனையில் முதலாளி மீது பாயவேண்டியது இரண்டாம் பட்சம் தான் என்பது என் வாதம்.

Capitalism என்ற ஒன்று தெரிந்துவிடுவதே ஒரு தலை பட்சமாய் முதலாளி மீது பாய வைத்துவிடுகிறதா? அப்படியானால், தனக்கு தெரிந்த தகவலை தனக்கு மட்டுமே என ஒரு முதலாளி மறைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கடன் வாங்கியன், கடன் கொடுத்தவன் இருவருமே ஒரு முறைப்படுதலுக்கு உட்பட வேண்டும். அப்படி உட்பட்டால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாது என்றே நினைக்கிறேன்.

இன்னொரு புறம் கொடுத்த கடனை வசூலிக்க முடியாதவைகளை வேறொரு பொது நிறுவனத்திடம் தந்து வசூல் செய்ய சொல்லும் நடைமுறை அமேரிக்காவிலும் இருக்கிறது. அந்த பொது நிறுவனம், கடனை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு,  கடன் அளித்தவருக்கு நஷ்டமில்லாத தொகையை திருப்பு செலுத்திவிடும். அதாவது வட்டி நீங்கலாக அசல். பிற்பாடு கடன் வாங்கியவரிடமிருந்து பணத்தை வசூலிக்க சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளும். இதுதான் நடைமுறை. கடன் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாத பட்சத்தில், அமேரிக்காவில் ஒரு நடை முறை வைத்திருக்கிறார்கள்.

அமேரிக்காவுக்கு வரும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சமூக பாதுகாப்பு எண் வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து க்ரெடிட் ஸ்கோர் என்ற ஒன்று வைத்திருக்கிறார்கள். இதை விளக்கமாக சொல்லப்போனால் இதற்கு ஒரு புத்தகமே வெளியிட வேண்டியிருக்கும் என்பதால் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். நபரை விட இந்த க்ரெடிட் ஸ்கோர் தான் ஒவ்வொரு அமேரிக்கனுக்குமான அடையாளம். அந்த ஸ்கோர் அதிகம் இருந்தால் 'இந்த ஆளை நம்பலாம்'என்று அர்த்தம். அந்த எண் குறைவாக இருந்தால், 'இந்த ஆளை நம்பாதே'என்று அர்த்தம். இந்த எண் குறைவாக இருப்பவர்களுக்கு எந்த வங்கியும் கடன் தராது. அப்படியே தந்தால், வட்டி நான்கு மடங்கு இருக்கும்.

கடனை திருப்பி செலுத்தாதவர்களின் க்ரெடிட் ஸ்கோர் எண்ணை இந்த பொது நிறுவனம் குறைத்துவிடும். கடனை திருப்பி செலுத்தாதவர் வாடகைக்கு வீடு எடுக்க முடியாது. லோன் வாங்க முடியாது. கேஸ் கனெக்ஷன் பெற முடியாது. கையில் பணமிருந்தாலொழிய அமேரிக்காவில் பிழைக்கவே முடியாது.

நம்மூரில் எல்லாமும் இன்னமும் அமேரிக்கா போல் கணிணி மயமாகவில்லை. ஆதலால் க்ரெடிட் ஸ்கோர் என்பதெல்லாம் இந்தியாவுக்கு வர வெகு காலமாகும். வசூல் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் அதை ஸ்திரம் செய்யாமல்  கடன் தருவதில் இருக்கும் ரிஸ்கை தெரிந்து கொள்ள லெனின் உயிர் தான் விலையா? அரசு ஏன் இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை? பிறகு அரசியல்வாதிகள் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் நோக்கம் தான் என்ன? இந்த கோணத்திலெல்லாம் யோசிக்காமல் உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்ன சாதிக்கிறார் மோடி?



மூர்க்கமும், அதன் விளைவான குற்றமும்

$
0
0
மூர்க்கமும், அதன் விளைவான குற்றமும்

மூர்க்கமும், அதன் விளைவான குற்றமும் எவ்வித நியாயங்களும் அற்றவைதான். அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. மூர்க்கம் கொண்டவர் - மூர்க்கத்தால் பாதிக்கப்பட்டவர் என்று தான் பிரிக்க முடியும். சில இடங்களில் உடன் இருப்பவர்கள் தவறானவர்கள் எனில், பொறுத்து போதல் என்பது நம் நிலைப்பாட்டையே தவறாக சித்தரிக்கவும் செய்யலாம். அனேகம் தருணங்களில் இதுவே நடக்கிறது.

பொறுத்துப்போனால், "தப்பு பண்ணியிருப்பான்..அதான் சைலன்டா போயிட்டான்"என்பார்கள். சொல்பவர்களுக்கு தெரியாது. "பொறுத்து போதல் என்பது நம் நிலைப்பாட்டையே தவறாக சித்தரிக்கவும் செய்யலாம்"என்பது. நிலைப்பாட்டை தவறாக சித்தரிக்கிறதே என்று விசனப்பட்டு எதிர்வினையாற்றுவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதற்கு ஒரு சரியான உதாரணமாக இங்கே அமேரிக்காவில் ஒன்று நடந்திருக்கிறது.

சங்கீர்த் அமேரிக்காவில் எம்.எஸ் படித்துவிட்டு டெக்ஸாஸ் ஆஸ்டினில் வேலை பார்க்கத்துவங்கியிருக்கிறார். அவருடைய அறைக்கு சாய் சந்தீப் என்றொருவரும் ரூம்மேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். பால்கனியில் பீர் அருந்தியபடி சொந்த ஊரான ஹைதராபாத்தில் யாருடைய அப்பா என்ன பிஸினஸ் செய்கிறார் என்கிற ரீதியில் சுய பிரதாப பேச்சு பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் யாருடைய அப்பா பெரியவர் என்கிற கோணத்தில் பேச்சு திரும்பியிருக்கிறது.

அப்பாவை பற்றி பேசினால் கோபப்படாமல் இருக்க முடியுமா? கெட்ட நேரம்!!. நாக்கில் சனி!!

சங்கீர்த் எதையோ பேசித்தொலைக்க பொறுக்க மாட்டாமல், கையிலிருந்த கத்தியை சங்கீர்த்தின் வயிற்றில் இறக்கியிருக்கிறார் சாய் சந்தீப். சங்கீர்த் இப்போது உயிரோடு இல்லை. சந்தீப்புக்கு அமேரிக்க நீதிமன்றம் சுமார் $250000 டாலர் பெயில் தொகை நிர்ணயித்திருக்கிறது. இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே அறுபத்தி ஐந்து லட்ச ரூபாய் வெறும் பெயிலுக்கு மாத்திரம்.

இருவருமே அமேரிக்காவில் எம்.எஸ் படித்தவர்கள். ஒருவனுக்கு வயது 24. இன்னொருவனுக்கு 27. வாழ்க்கை துவங்கும் முன்னரே கம்பிகளுக்கு பின் சென்றாகிவிட்டது. அமேரிக்க நீதிமன்றங்கள் கடுமையானவை. சாய் சந்தீப் தனது எஞ்சிய வாழ்க்கையை கம்பிகளுக்கு பின்னே கழிக்க வேண்டியதுதான்.

இறப்பை மையப்படுத்திய இன்றைய உலகில் அ நியாயங்களும், அதர்மங்களும், சுய நலங்களும் தான் மலிந்து கிடக்கின்றன. தான் வாழ, அடுத்தவனை கெடுப்பதற்குத்தான் கற்று வைத்திருக்கிறார்கள். உழைப்பு, திறமை, தெளிவு, ஒழுக்கம் என்பதெல்லாம் இன்றைய தேதியில் மிக மிக கடினம்.

பல சூழல்களில், நியாயமான காரணங்களுக்காய் எதிர்ப்பொன்றை பதிவு செய்வது கூட தவறில் தான் போய் முடிகிறது. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை என்று எந்த சிந்தனையுமில்லாமல் தொடர்ந்து ஒரு பெண்ணை Stalking மூலம் தொந்திரவு செய்தால், முகத்தில் அறைந்தாற்போல பதில் சொன்னாலாவது விடுவானா என்று ஒரு பெண்ணுக்கு கண நேரம் தோன்றுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை தான். அந்த கண நேரத்தை பொறுத்திருந்தால் சுவாதி இந்நேரம் உயிருடன் இருந்திருக்கலாம். ஆனால், அந்த கண நேரம் பொறுக்காததினால் உயிர் விட்டது சுவாதி என்கிற இளம் பெண் தான். என்னதான் தேவாங்கு என்று ஒருவரின் உருவத்தை கேலி செய்தாலும், அதற்கு கொலை என்பது மிக அதிக பட்சம் தான்.

'தேவாங்கு'என்கிற வசவு அதிகபட்சம் தான். அநியாயம் தான். புற உருவம் சார்ந்த மதிப்பிடல் தான். பொறுத்து போயிருக்கலாம். "தவறான தேர்வு"என்று விலகியிருக்கலாம். வசவு மனதிலேயே நின்றிருக்கும். மனம் மீதான ஆளுமை கொண்ட ஒருவரால் அதை சுலபத்தில் மறந்து அடுத்தடுத்த காரியங்களில் மூழ்க முடியும். எல்லோருக்கும் இது சாத்தியப்பட்டுவிட்டால் இந்த பூவுலகில் கடவுள் மட்டுமே இருக்க முடியும். சாத்தான் இருக்க முடியாது. ஆனால், நகை முரண் என்னவெனில் கடவுள் என்று ஒன்றே சாத்தான் என்ற ஒன்றால் தான் அடையாளப்படுகிறது. ஆக சாத்தான் இருந்தே தீரவேண்டும். சாத்தான் இல்லையென்றால் கடவுளுக்கு வேலை இல்லை.

"துஷ்டனை கண்டால் தூர விலகு"தெரிந்தது தான்.

துஷ்டன் வீசும் சேற்றை கழுவி துடைத்துக்கொள்ளும் பொறுமையும் நிதானமும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.

சூழல்களும் நியாயங்களும்

$
0
0
சூழல்களும் நியாயங்களும்



மணமான முதல் வாரத்திலேயே பெண்ணின் ஒரினச்சேர்க்கை உறவுகள் குறித்து தெரிய வந்து விவாகரத்து செய்துவிட்ட பொறியியல் படித்து அமேரிக்காவில் வேலை பார்க்கும் நண்பர் திருமணத்திற்கு பெண்  பார்த்துக்கொண்டிருக்கிறார்.  திருமணமாகாத‌ பெண்ணாக இருந்தால் பெட்டர் என்பது அவருடைய எதிர்பார்ப்பு.

சில இடங்களில்,

'ஆங்..அதெப்படி? அவரு விவாகரத்தானவரு.. அவருக்கு எப்படி திருமணமாகாத பொண்ணா பாக்குறது? அவர் மாதிரியே விவாகரத்தான பொண்ணா பாக்குறதுதான் கரெக்ட்'என்கிறார்களாம்.

அந்த விவாகரத்தான பொண்ணுக்கு மறுபடி மாப்பிள்ளை பாக்கும்போது அந்த பொண்ணு ஓரினச்சேர்க்கைன்னு உண்மையை சொல்லி மாப்பிள்ளை பாக்க மாட்டாங்க.. பையன் சரியில்லைன்னு பையன் மேல குத்தம் சொல்லித்தான் அவுங்க பொண்ணை நியாயப்படுத்திக்குவாங்க.. இதை கண்கூடா பாத்துட்ட பிறகு இன்னொரு விவாகரத்தான பொண்ணை எப்படி நம்புறது? அதுவும் இதே மாதிரி தப்பு பண்ணிட்டு பழியை அந்த பையன் மேல போட்டிருக்காதுன்னு என்ன நிச்சயம்?

இது அவர் வாதம்.

டெக்ஸாஸ் ஆஸ்டின் சங்கீர்த், சந்தீப், ரோஹித் வெமுலா, டெல்லியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட மருத்துவர் சரவணன், ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்யப்போய் இறந்த மருத்துவர் செந்தில்குமார், இளவரசன், கோகுல்ராஜ் என்று இறந்து போன அத்தனை பேரும் மணமாகாதவர்கள். பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்றவர்கள். கொலை செய்யப்படவில்லை எனில், இத்தனை நேரம் கை நிறைய சம்பாதிக்கும் பொறுப்பான மாப்பிள்ளைகள். இப்படி பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்றவர்கள் தொடர்ந்து இறந்தால், கல்யாணச்சந்தையில் தகுதியான ஆண்களின் எண்ணிக்கை குறையத்தானே செய்யும்?

இந்த பின்னணியில் மெத்தப் படித்த பத்து லகரம் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு மாப்பிள்ளைகள் எப்படி கிடைக்கும்? பிறகு ஏன் பெண்கள் 34-35 வயது வரை மணமாகாமல் இருக்கமாட்டார்கள்? ஏற்கனவே பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கிறது. தவறானவர்களும், மோசமானவர்களும் பாலின வேறுபாடு இன்றி ஆண்கள் பெண்கள் என இரு பாலரிலும் இருக்கிறார்கள் தான். தவறானவர்கள் என்று தெரிந்த பிற்பாடு விலகிச்செல்வதே உசிதம். அப்படி விலகி வரும் தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டால். மென்மேலும் பெண்களுக்கல்லவா மணமகன்கள் கிடைக்காமல் போகும்? இதனால் நஷ்டப்பட இருப்பது உண்மையில் யார்?

இப்படியாக தகுதியான மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டு இறுதியில் வேறு உருப்படியான மாப்பிள்ளைகள் கிடைக்காமல், கிடைத்த மாப்பிள்ளைக்கு கை நிறைய சம்பாதிக்கும்  பெண்ணோடு அதுகாறும் சேர்த்த செல்வத்தையும் தாரை வார்த்தால், ஏன் ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பவன் ஐம்பது பவுன் நகையும், பல்சர் பைக்கும் வரதட்சணையாக கேட்க மாட்டான்? இந்த பின்னணியில் வரதட்ச‌ணையை  ஊக்குவிப்பது ஆண்களா? பெண்களா? என்கிற தர்க்க ரீதியிலான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே distraction நிறைய இருக்கிறது.

நூற்றுக்கணக்கிலான பொறியியல் கல்லூரிகளின் உபயத்தில் தேசமெங்கும் பொறியியல் வல்லுனர்கள் தான். ஆனால் அவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே சம்பளத்திற்கு தகுதியான திறன்களுடன் இருக்கிறார்கள் என்று கணக்கில் கொண்டால் சொற்பமே தேறும்.

இந்த லட்சணத்தில் தகுதியான ஆண்களை இப்படி சில பெண்கள் வீணாக்குவதும், அப்படி ஆனதை காரணம் காட்டியே மற்ற பெண்கள் ஒதுக்குவதால், இறுதியில் பெண்களுக்கே மணமகன்கள் கிடைப்பது அரிதாகிறது. 34-35 வயதில் மணமாகாமலேயே அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் தகுதியான மணமகனுக்காய் காத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

உச்சகட்டமாக இப்படி தகுதியான‌ ஆண்களை புறக்கணித்துவிட்டு , கிடைத்த ஆண்களை அட்ஜஸ்ட் செய்து நிகழும் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்திக்கின்றன. போதுமான புரிதல்களின்றி, இணக்கமின்றி போவதால், கள்ள உறவுகளும் அது சார்ந்த குற்றங்களுமே மிகுக்கின்றன. இதை நிரூபிக்கும் வகைக்கு சென்னையில் சமீபமாக நடந்த‌ ஒன்று தெரியவந்திருக்கிறது. சவுதியில் கம்ப்யூட்டர் பொறியாளராக வேலை பார்க்கும் சரவணன் சமீபமாக சென்னை வந்திருக்கிறார். ஒரு வேலையாக வந்தவரை ஹோட்டல் வாசலில் வைத்து கூலிப்படை ஆட்கள் அறிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்திருக்கிறார்கள். தப்பிவிட்டார்.

தப்பியவர் போலீஸுக்கு போக, ஹோட்டலின் சிசிடிவி கேமராவை வைத்தும், மொபைல் டவர் தகவல்களை வைத்தும் கொலை முயற்சிக்கு காரணமானவர்களை கண்டுபிடித்துவிட்டார்கள். சரவணனின் அன்பு மனைவியும் அவரது மாமியாரும் தான் கூலிப்படைக்கு ஒரு லட்சம் அளித்து கொலை செய்ய சொல்லியிருந்தார்களாம். சரவணனின் மனைவி ராதிகாவுக்கு அவரது பால்ய தோழரான கண்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. தனது மனைவி ராதிகாவுக்கு மாதமொன்றிற்கு செலவுக்கென தந்த ஒரு லட்ச ரூபாயையும் இன்ன பிற நகைகளையும் சரவணன் கேட்க்கப்போக, அது பிடிக்காமல் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

திருமணங்களுக்குள் காலடி எடுத்து வைக்கையில் பலருக்கு குடும்பம் என்கிற அமைப்பு மீது பெரிதாக ஈர்ப்பு இருப்பதில்லை. ஊருக்காகவும், உறவுகளுக்கு கைகாட்டவுமே இவ்வகையான‌ திருமணங்கள் நடக்கின்றன. விவாகரத்தானவர் என்கிற காரணத்திற்காய் தகுதியான ஆணோ பெண்ணோ புறக்கணிக்கப்படுவதால் மட்டும் வாழ்க்கை சரியான திசையில் சென்றுவிடாது. வாழ்க்கை சரியான திசையில் செல்ல தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு தகுதியான ஆணோ பெண்ணோ தேர்வு செய்யப்படாமல் போவது, எங்கோ ஓர் பெண் பாதிக்கப்பட இருப்பதன் அறிகுறியே என்பதை இந்த சமூகம் எப்போதுதான் புரிந்துகொள்ளும்?.


அகம் இதழில் வெளியான கதை

$
0
0
அகம் இதழில் வெளியான கதை

மாலை ஆறு மணி சுமாருக்கு வருண் வீட்டுக்கு வந்தபோது, வர்ஷினி சோபாவில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். அவள் எதிரே இருந்த மேஜையில் மருத்துவ அறிக்கை கோப்புக‌ள் இருந்தது. அதை பார்த்தபடியே,

“வரு.. கொஞ்சம் டீ தாயேன்” என்றுவிட்டு காலணிகளை கழற்றிவிட்டு உள்ரூமுக்குள் குளிக்க போனான்.

வர்ஷினி தேனீர் தயாரித்துவிட்டு, இரண்டு கோப்பையில் ஊற்றி எடுத்து வருவதற்கும், வருண் குளித்து முடித்து உடை மாற்றி ஹாலுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

இருவரும் ஆளுக்கொரு கோப்பை எடுத்துக்கொண்டார்கள். சூடான தேனீரின் ஆவி அவர்கள் முகங்களை மெல்ல வருடிச்சென்றது.

“எப்போ போன?” என்றான் வருண்.

“சாயந்திரமே பர்மிஷன் போட்டுட்டு போயிட்டு வந்துட்டேன் வருண்” என்றாள் வர்ஷினி.

“என்ன சொன்னாங்க டாக்டர்”

“காய்கறி, கீரை நிறைய சாப்பிட சொல்றாங்க.. மாத்திரையும் டானிக்கும் வாங்கி கொடுத்திருக்காங்க.. இப்போதானே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் நாளாகும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் இம்ப்ரூவ்மென்ட் தெரியும்ன்னு சொல்றாங்க..”

“ம்ம்ம்”

“நான் வேலையை விட்டுடவா வருண்?”

“ஏன்?”

“வேலையை விட்டுட்டு முயற்சி பண்ண சொல்லி டாக்டர் இன்னிக்கு சொன்னாங்க.. அகால வேளையில கண் முழிக்க வேண்டி இருக்கு.. சரியான தூக்கம் இல்லை.. உடம்புல எப்பவும் ஒரு சோர்வு இருக்கு.. ஆபீசுக்கு காலை மாலைன்னு ரெண்டு மணி நேரம் ட்ராவல். குண்டும் குழியுமா இருக்குற ரோட்டுல போனா தூக்கி தூக்கி போடுது.. ஒரே பொல்யூஷன்.. இதெல்லாம் கூட எடுத்துக்குற மருந்து மாத்திரைகளை ஒண்ணுமில்லாம பண்ணிடுதோ என்னமோன்னு யோசனையா இருக்கு”

“வீடு லோன்ல போயிட்டு இருக்கு வரு.. மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் அதுக்கே போயிடுது.. நீயும் நானும் சேர்ந்து வேலை செய்யிறதுனால தான் இப்படி லோன் கட்ட முடியுது.. இப்போ நீ வேலையை விட்டுட்டா..”

“விட்டுட்டா என்ன வருண்? நீ தான் எண்பதாயிரம் சம்பாதிக்கிறல?”

“ஹேய்.. டாக்ஸ், பி.எஃப்ன்னு போயி கையில அறுபத்தி அஞ்சு  தாண்டீ நிக்கிது”

“சரி அது போறாதா ரெண்டு பேத்துக்கு..”

“எப்படி போறும்? நாம மட்டுமா இருக்கோம்? அப்பா ரிட்டையர்டு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காசு கொடுக்க வேண்டாமா?”

“அதுக்காக?”

“எனக்கு பிடித்தமெல்லாம் போக கையில அறுபத்தி அஞ்சாயிரம் நிக்கிது வரு.. அதுல அப்பா அம்மா செலவுக்கு பணம் கொடுக்கணும்.. அவங்களுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸும் இருக்கு.. அதுக்கெல்லாம் பணம் கட்டணும்.. இதெல்லாம் யோசிச்சு தான் இப்ப வீடு வேணாம்ன்னு அப்போவே சொன்னேன்.. “

“வருண். நீ சொன்ன தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, இப்ப சூழ் நிலை இப்படி இருக்கே. இப்ப என்ன பண்றதுன்னு தான் கேக்குறேன்”

“உடம்புங்குற கோயில் மாதிரி வரு.. அதை நாம போதறவா பாத்துக்கிட்டிருக்கணும்.. நான் மேற்கொண்டு ஒண்ணும் சொல்ல விரும்பலை வரு.. நம்ம குடும்ப சூழல் உனக்கு தெரியும்.. நீயே யோசிச்சு சொல்லு என்ன பண்ணலாம்ன்னு.. எனக்கு ஆபீஸ் கால் ஒண்ணு கனெக்ட் பண்ணனும்.. மீட்டிங் இருக்கு.. ” என்றுவிட்டு வருண் எழுந்து அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

அமைதியான அந்த வீட்டில், உள் அறையில் வருண் மடிக்கணிணியை சார்ஜரில் போட்டு உயிரூட்டும் சப்தம் கேட்டது.

வருண் என்ன சொல்ல வருகிறான் என்பது வர்ஷினிக்கு புரியாமலில்லை. அந்த அபார்ட்மென்ட் திருமணமான புதிதில் வாங்கியது. வீடு வாங்கி மூன்று வருடங்களாகிறது. வாங்கிய வீட்டுக்கடனுக்கு வட்டியாக மாதாமாதம் முப்பத்தி ஐந்தாயிரம் விழுங்கிவிடுகிறது. வீடு நன்றாகத்தான் இருக்கிறது.

வருண் சம்பளத்தில், அந்த வீடு பொருந்தாது தான்.. தேவையுமில்லை.. ஏனெனில் வருணின் அப்பா அம்மா இருக்கும் வீடு சொந்த வீடு தான். அந்த வீட்டிலேயே இருந்திருந்தால் இப்போது இந்த சுமை இல்லை. தனது சம்பளத்தையும் கணக்கில் கொண்டு தான் அந்த வீடு வாங்கப்பட்டது..

ஆனால் இந்த மூன்று வருடத்தில் வயிற்றில் ஏதும் தங்கவே இல்லை.. முதல் ஒரு வருடம் ஆசைக்காக குழந்தை வேண்டாம் என்று ஒத்திப்போட்டது. இப்போதானால், டாக்டர் பர்வதம்,  வீட்டிலிருந்து நன்றாக சமைத்து சாப்பிட்டு மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் குழந்தை தங்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார். அதை செய்ய வேண்டுமானால், வேலையை விட வேண்டும். வேலையை விட்டால் சம்பளம் போகும். சம்பளம் போனால், எல்லா செலவும் வருண் சம்பாத்தியத்தில் ஒட்டாது. வருண் இதை திருமணமானவுடன் வீடு புக் செய்யும் போதே சொன்னான்தான்.

ஆனால் அவன் சொன்ன முதல் வரி, தான் அவளை அவளது கடந்த கால நினைவுகளை கிளறிவிட்டது.

கல்லூரி படிக்கையில் அவளுக்கொரு காதல் இருந்தது. இலக்கற்ற காதல். அப்படித்தான் துவங்கியது. திருமணத்தில் தான் முடிய வேண்டுமென்கிற இலக்கேதும் தேவைப்படாத‌ நிருணயித்துவிட்டிருக்காத காதல். வயதுக்கோளாறில் பூத்த வசீகர காந்தள் மலர். அவன் பெயர் அர்ஜுன். அவனுடன் முதலில் நட்பு உருவாகி, சினிமா பீச் என்று போய் வந்து அதிகமான நெருக்கம் பிற்பாடு கட்டில் வரை போய்விட்டது. எத்தனை முறை என்பது நினைவில் இல்லை. ஒவ்வொரு முறையும் உறைகள் பயன்படுத்த அவனை நிர்பந்தித்தியதெல்லாம் நினைவுக்கு வந்தது. மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்தியது இல்லை தான்.

இதெல்லாம் வருணிற்கு தெரியாது. மணமான இந்த மூன்று வருடங்களில் அவன் கேட்கவும் இல்லை. ஆதலால் சொல்லவும் இல்லை. அதைத்தான் “உடம்புங்குறது கோயில் மாதிரி” என்று சொல்லிவிட்டு போனானோ என்று தோன்றிய அதே வேளையில், இருக்காது என்றும் தோன்றியது. அதற்கு காரணங்களும் இருந்தன‌. வருண் தினமும் உடற்பயிற்சி செய்பவன். அவனது உடல் வில்லாய் வளைவதை அனேகம் முறை பார்த்தாகிவிட்டது. மருத்துவ சோதனையில் கூட அவனிடம் ஏதும் குறை இல்லை என்றுதான் வந்தது. மணமான புதிதில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் ஏன் இல்லை என்று கேட்டு இரண்டொரு முறை கடிந்து கொண்டதாக கூட நினைவிருந்தது. அதற்குமேல், அதை அவன் தொடர்ந்து வலிந்து அவள் மேல் புகுத்த முயற்சிக்கவில்லை. தொடர்ந்து குறையாக சொல்லவில்லை. உடற்பயிற்சி செய்யாததைத்தான் அப்படி சொல்லியிருகக்கூடும் என்று இப்போதும் ஆணித்தரமாக தோன்றியது.

ஆனால், மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதே.

அர்ஜுனுடன் ஒவ்வொருமுறையும் படுக்கையை பகிர்ந்துகொண்ட போதும் உறை பயன்படுத்தியிருப்பதாலேயே அதனால் உடல் அளவிலும் , மனதளவிலும் இந்த மந்தம் உருவாகியிருக்கலாம் என்று நாளைய அறிவியல் அறிவிக்காது என்று என்ன நிச்சயம்? ஐன்ஸ்டைன் வரை தானே நியூட்டன் செல்லுபடி ஆகிறான்? நியூட்டனின் ஈர்ப்பு விதி ஐன்ஸ்டைனுடன் காலாவதி ஆகிவிடுகிறதே. நாளை இன்னுமொரு ஜோசஃபால் ஐன்ஸ்டைன் காலாவதி ஆகிவிடமாட்டான் என்று என்ன நிச்சயம்? முந்நூறு ஆண்டுகள் முன்புவரை விளக்கு தானே ஒளி தந்தது. அப்போதைய நிலவரப்படி, மின்சாரம் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அது நாள்வரை, செங்கிஸ்கானும், சேர சோழ பாண்டியர்களும், மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும், ஃப்ரஞ்சு , டச்சு, போர்ச்சுகீசியர்களும் நிலத்துக்காக சண்டை போட்டது, சரித்திரத்தின் பக்கங்களில் எடிசனின் வரவை தாமதப்படுத்தத்தானே உதவியது? அதுபோல் அர்ஜுனுடனான உறவு, ஒருவேளை இந்த மந்தத்தை, இப்போதுவரை தாமதமாக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது?

இப்போது டாக்டர் பர்வதம் சொல்லும் ஆரோக்கிய உடலை அடைய தேவையானவைகளை திருமணத்திற்கு முன்பான கால கட்டங்களில் செய்திருந்தால், இப்போது இந்த சூழல் இல்லை என்பதை மட்டும் அறிவியலால் நிராகரித்துவிட முடியுமா? திருமணத்திற்கு முன்பே இந்த முயற்சிகளை கைகொண்டிட ஏகத்தும் காலம் வசமாக இருந்ததே. அப்போதே இதை செய்திருந்தால் இப்போது இந்த தவிப்பு, அவஸ்தை இல்லை என்பதை யாரால் மறுக்க முடியும்? உண்மையிலேயே உடலை கோயிலாக வைத்திருந்து, வருண் சொல்வது போல் தேகப்பயிற்சியெல்லாம் செய்து, கண்டகண்ட பீட்ஸாக்களுக்கு பதிலாய், கீரை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய் என்று உண்டிருந்தால், இப்போது இந்த சூழல் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நவீன உலகின் கோட்பாடுகளால் எப்படி நிராகரிக்க முடியும்?

இன்னொரு கோணத்தில், அர்ஜுனுடன் படுக்கையில் உறவு வைத்துக்கொண்டது, ஒரு வேளை இந்த பிறழ்வுக்கு காரணமாக அமைந்தால், அதற்கான‌ தண்டனையை, வருணுக்கு தருவது போலாகிவிடாதா? ஒரு பெண்ணை தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் கடமையை தட்டிக்கழிக்கும் அர்ஜுன் போன்ற ஆணுக்கு சுகத்தையும், அந்த கடமையை திருமணம் என்கிற பெயரில் ஏற்றுக்கொண்ட வருணுக்கு மருத்துவ செலவுகள் , வீட்டுக்கடன் என்று சுமைகளையும் அள்ளித்தந்ததாக அர்த்தமாகிவிடாதா? வருண் ஒன்றும் குருட்டாம்போக்கில் செயல்படுபவன் அல்ல. எந்த முடிவுகளையும் யோசித்து எடுப்பவன் தான். அவனை தேவையில்லாமல் இந்த செலவுக்குள் இழுத்தது போலாகிவிட்டது.

வருணுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாதெனில், வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். வேலையை தொடர்ந்து செய்தால், உணவுக்கு அலுவலக கேண்டீனைத்தான் நம்பியிருக்க வேண்டி இருக்கும். தரமான வீட்டுச்சாப்பாடு கிடைக்காது. நாளொன்றுக்கு இரண்டு மணி நேர பயணத்தை தவிர்க்க முடியாமல் போகும். எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகமாகலாம். அது குழந்தை பிறப்பை மேலும் தள்ளிப்போடலாம்.

யோசிக்க யோசிக்க தலையெல்லாம் சுற்றியது வர்ஷினிக்கு. தயாரித்து வைத்த கோப்பை தேனீர் ஆறி காய்ந்து ஆடை கொண்டு மூடிக்கிடந்தது. இரண்டொரு ஈக்கள் கோப்பையின் வாயில் அமர்ந்து தங்கள் தலை தெரிகிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன‌.

பெற்றோர் நிச்சயித்த கல்யாணம் தான் என்றாலும் திருமணத்திற்கு பிறகு வருண் மட்டும் தான் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. அவனிடம் இது அத்தனை மன சஞ்சலங்களையும் பகிராமல் இருப்பது எதையோ அவனிடமிருந்து மறைப்பது போன்ற தோற்றம் தந்தது. அந்த நினைப்பே, தனக்குத்தானே போலியாக இருக்க முயல்வது போன்ற ஒரு தோற்றம் தந்தது.

வர்ஷினி எழுந்தாள். உள் அறை கதவை திறந்தாள். உள்ளே வருண் மடிக்கணிணியை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன், வர்ஷினி எட்டிப்பார்ப்பதை உணர்ந்து திரும்பி, வர்ஷினியை உள்ளே வரும்படி சைகை செய்தான். வர்ஷினி உள்ளே சென்று அவனருகில் அமர்ந்தாள்.

“மீட்டிங் முடிஞ்சதா வருண்?” என்றாள்.

“முஞ்சதுடீ.. க்ளையன்ட் வரலை..அதனால சீக்கிரமே முடிஞ்சது” என்றான் வருண்.

“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் வருண்”

“சொல்லேன்”

வர்ஷினி அர்ஜுனுடனான பழக்கம், படுக்கைவரை சென்ற உறவு, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் மனனம் செய்த வாய்ப்பாட்டை சொல்வது போல் சொல்லிமுடித்தாள்.

எதுவுமே பேசாமல், மெளனமாக வர்ஷினி சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தவன், முடிவில்,

“ஐ லவ் யூ வரு” என்றான்.

“எதுக்கு வருண்? உன் வாழ்க்கையை கொஞ்சமா காம்ப்ளிகேட் பண்ணினதுக்கா?” என்றாள் வர்ஷினி.

“இல்லை.. உண்மையை சொன்னதுக்கு.. அதன் மூலமா என் மேல உன் காதலை சொன்னதுக்கு.. என் மேல உன் நம்பிக்கையை சொன்னதுக்கு.. அதன் மூலமா என்னை ஆம்பளையா மதிக்கிறேன்னு சொன்னதுக்கு.. அதன் மூலமா என்னை சரியா மதிப்பிட்டிருக்கன்னு சொன்னதுக்கு.. உண்மையை மறைச்சு நம்ம உறவை அசிங்கப்படுத்தாம, வெளிப்படையா சொன்னதுக்கு.. நீ இதை கல்யாணத்தப்போவே சொல்லிருந்தா கூட நான் உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன் தான் வரு.. நீ என் வாழ்க்கையை காம்ப்ளிகேட் பண்ணினதா நினைக்காத.. உடற்பயிற்சி செஞ்சி உடம்பை பாத்துக்குற நல்லா சமைக்க தெரிஞ்ச, அழகான படிச்ச பொண்ணு ஒருத்திகிட்ட நானும் ஒருமுறை காதலை சொல்லியிருக்கேன் தான்.. உன்னை கல்யாணம் பண்றதுக்கு ஆறு மாசம் முன்னாடி…  ஆனா அவ, தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ண பையன், அதீதமாக சிகரெட்னால‌ நுரையீரல் புற்று நோய்ல செத்துட்டான்..இப்போ இரண்டு குழந்தையோட அவ வாழ்ந்துட்டு இருக்கா..  நமக்கு பொறுத்தமா இருக்கிறவங்க கூட நமக்கு எப்போதுமே வாழ்க்கை அமைஞ்சிட‌றதில்லை வரு…  அது நடந்துட்டா பல பிரச்சனைகள் வராதோ என்னமோ…   நீ என் வாழ்க்கையில வரலைன்னா, வேற ஒருத்தி என் வாழ்க்கையை நீ நினைக்கிறதை விட அதிகமா காம்ப்ளிக்கேட் பண்ணிருக்கலாம் வரு”

“ம்ம்ம்.. நான் வேலைக்கு போறேன் வருண்.. அதுதான் சரிரின்னு எனக்கு தோணுது வருண்” என்றாள் வர்ஷினி.

“வேணாம் செல்லம்.. வேலையை விட்டுடு.. இந்த வீட்டை வாங்கினப்போ இருந்த விலையை விட இப்போ நிலத்தோட விலை ஜாஸ்தி ஆகி இருக்கும்.. அதுனால, நாம லோனுக்கு கட்டின வட்டியை எப்படியும் திரும்ப எடுத்திடலாம்.. சோ இப்பவே இதை விக்க ஏற்பாடு பண்றேன்.. நீ எங்க அப்பா அம்மாவோட தங்கு.. அம்மா நல்லா சமைப்பாங்க.. கீரையை வச்சி ஸ்வீட்டே பண்ணுவாங்க.. அம்மா கையால சாப்பிடு.. வீட்டுல ரெஸ்ட் எடு.. ஜிம்முக்கு போ.. உடம்பை பாத்துக்க.. நான் சம்பாதிக்கிறேன்..  சரியோ தப்போ, இந்த சூழ் நிலைக்கு வந்துட்டோம்.. இங்கிருந்து எப்படி கரை சேர்றதுன்னு பாப்போம்” என்றான் வருண்.

இமைகளை நனைக்கும் கண்ணீருடன் வர்ஷினி, வருணின் தோள்மீது சாய்ந்துகொண்டு,

“ஐ லவ் யூ வருண்” என்றாள்.


  – ஸ்ரீராம்


நன்றி
@அகம் இணைய இதழ்(http://agamonline.com/kuzanthai-by-sriram)

கபாலி

$
0
0
கபாலி


கபாலி படத்தில் ரஞ்சித்தின் குறியீடுகள், சொல்லாடல்கள், ரஜினியின் உடை, ரஜினியின் கேரியரில் கபாலியின் இடம்,  கபாலி ரஞ்சித் படமா, ரஜினி படமா போன்றவை பற்றியெல்லாம் ஏற்கனவே பீராய்ந்து ஆளாளுக்கு எழுதியாகிவிட்டது. ஆதலால் அதை தவிர்த்துவிடலாம்.

வருடம் 2013 இருக்கலாம். நான் வேலை பார்த்த ஐடி நிறுவனத்தில் மலேசியா போகும் வாய்ப்பு வந்தது.

அக்கம்பக்கத்தில் விசாரித்து பார்த்தேன். மலேசியா என்றதுமே வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். பற்பல காரணங்கள். முக்கியமாக பாதுகாப்பு இல்லை என்றார்கள்.

இங்கே அமேரிக்காவிலும் எல்லா இடங்களுக்கும் எல்லா நேரத்திலும் போக முடியாது. கிட்டத்தட்ட இதே சூழல் தான் நான் லண்டனில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த போதும் இருந்தது. ஹாங்காங்கில் தங்கியிருந்த போது கூட சில இடங்களுக்கு அகால வேளையில் வெளியே போக வேண்டாம் என்றார்கள். ஆதலால் எனக்கு அது பெரியதாக தெரியவில்லை. இருந்தும் பாதுகாப்பில்லை என்றால் ஏன் போக வேண்டும் என்று இருந்துவிட்டேன். அப்போது பாதுகாப்பின்மையை, பொருளற்ற வரியவனின், பொருள் வைத்திருப்பவன் மீதான அத்துமீறல் என்கிற அர்த்தத்திலேயே புரிந்து வைத்திருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

கபாலியில் இந்த பாதுகாப்பின்மையைத்தான் இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறார்கள். அதன் ஆதி என்ன, அந்தம் என்ன, தற்போதைய நிலைப்பாடு என்ன,  அதற்கான சமூக, அரசியல் காரணிகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக காட்டியிருக்கிறார்கள்.

இந்த ஏரியாவை தொட்டிருப்பதன் வாயிலாக இதற்கு ஒரு இலக்கிய மதிப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். [மலேசிய வாழ் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து புத்தகங்கள் வந்திருக்கலாம். எத்தனை பேருக்கு பரிச்சயமாகியிருக்கும்? அதை உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்க்க ரஜினி என்கிற விசையை ரஞ்சித் பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம். தவறில்லை. "என்னை வாழ வைக்கும் தமிழ் ரசிகர்கள்"என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கும் ரஜினி அதை செய்திருப்பது ஒரு வகையில் தமிழர்களுக்கு செய்த நன்றிக்கடன் என்று சொல்லலாம். ]

தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் அதற்கு பொருள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆனால், மலேசியாவில் கெளண்டர், வெள்ளாளர் என எல்லா ஜாதிக்காரர்களுமே ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்கிறது கபாலி.

"அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஆதலால் தனியார் கல்லூரிகளில் அதிகம் செலவு செய்தே படிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. வருமானம் இல்லாததால் ரெளடியிசத்தில் போய் சேர வேண்டி இருக்கிறது....."என்கிற ரீதியில் போகிறது படம்.

இதையே பின்வருமாறு மாற்றியும் பார்த்து, இயக்குனர் ரஞ்சித் எந்த இனம் என்பதில் போய் நிற்கிறது ஒரு கூட்டம்.

"ஒடுக்கப்பட்டவன் கல்வி மறுக்கப்படுகிறான். சலுகை என்பதெல்லாம் போய் சேர்வது மிகக்குறைந்த சதவீதத்தினருக்குத்தான்.  தரம்தாழ்ந்த வேலைகள் அவன் தலையில் கட்டப்படுகின்றன. அதனாலேயே மீண்டும் ஒடுக்கப்படுகிறான்."

படம் தெள்ளத்தெளிவாக தமிழர்கள் என்ற ஒரு பரந்த குடையின் கீழ் நின்று பேசுகிறது. தனது வாதங்களை முன்வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சி ஒரு நல்ல குறியீடு. படத்தின் Protagonist க்கு எதிராக வில்லன் பேசும் வசனம் "உன்னையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டதே தப்புடா....."என்கிற வசனத்தை வைத்து கதையின் கருபொருளை வேறொரு திசையை நோக்கி நகர்த்தி ஒரு கூட்டம் இயங்குவது துரதிருஷ்டவசமானது.




அம்பெய்தலும் மாட்டுத்தொழுவமும் - கவிதை

$
0
0
அம்பெய்தலும் மாட்டுத்தொழுவமும் - கவிதை




துல்லியமாய் அம்பெய்ய கற்ற நீ
மாட்டுத்தொழுவத்தில் என்ன செய்கிறாய்?
மாட்டுத்தொழுவத்தில் அடைய நேர்ந்த நீ
அதை விட்டுவர முயலாததேன்?
மட்டுமன்றி,
அம்பெய்ய கற்கும் என்னிடமும்
மாட்டுத்தொழுவத்தின் அருமைகள்
குறித்தே பேசுவதேன்?
அம்பெய்ய கற்ற நீ
சாணி அள்ள நிர்பந்திக்கப்படுவது
ஒரு விபத்து...
விபத்துக்களை துல்லியமாய் செதுக்கி
நிகழ வைப்பதோர் கற்பிதம்...
விபத்துக்களில் சிக்குமளவிற்கு
உனது மூளை நரம்புகளை மழுங்கச்செய்தவர்கள் மீது
இவ்வுலகின் பேரன்பை நீ
எதிர்பார்ப்புகளின்றி செலுத்துவது போல்
ஓர் சுயம் அழிப்பு
இருக்கவே முடியாது...

கதைசொல்லிகளும் குற்றங்களும்

$
0
0
கதைசொல்லிகளும் குற்றங்களும்


கொள்ளையர்கள் ஓடும் ரயிலில் ஐந்தேமுக்கால் கோடி கொள்ளையடித்திருக்கிறார்கள்.அதுவும் வங்கி பணம்.

Die Hard with Vengeance என்று நினைக்கிறேன். போலீஸுக்கு சின்னச்சின்ன வேலைகள் கொடுத்து முடக்கிவிட்டு, பெரிய வங்கியொன்றில் துளையிட்டு நுழைந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து செல்வார்கள்.

படம் பார்த்து கூட ஐடியா திருட மாட்டேன் என்கிறது காவல் துறை. 2010 ல் நான் எழுதிய ஒரு கதை 2013ல் கொல்கத்தாவில் உண்மையிலேயே நடந்தது. 2010ல் படுக்கையறைக் கொலை என்ற தலைப்பில் நான் எழுதிய கொலை கதைக்கும் 2012ன் பிற்பகுதியின் வெளியான 'முரண்'திரைப்படத்துக்கும் ஏகத்துக்கும் ஒற்றுமைகள் இருந்தன.

கதாசிரியர்களின், இயக்குனர்களின், கதை சொல்லிகளின் ஐடியாக்களை, கற்பனைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் ஒரு சமூகம் பயன்படுத்திக்கொண்டால் தான் என்ன? Speculative Fiction என்பதன் கீழ் எழுதப்படும் கதைகளை காவல்துறையும், சட்ட அறிஞர்களும் முறையாக பரிசீலித்து பார்த்தாலே பற்பல குற்றங்கள் நடப்பதற்கு முன்பேயே தடுத்து விடலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

இங்கே அமேரிக்காவில் சில பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவைகள் என் போன்ற கதை சொல்லிகளின் கதைகளை வாங்கிக்கொள்ளும். அதில் தேறும் கதைகளை தனது பத்திரிக்கைகளில் வெளியிடும். அதோடு நின்றுவிடாது. அதை திரைத்துறை சார்ந்த ஒருவர் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று நோண்டி, அதன் தழுவலாக இங்கே ஹாலிவுட்டில் ஏகத்துக்கும் படங்கள் வந்திருக்கின்றன.

நாவலாகவோ அல்லது சிறுகதையாகவோ எழுதப்பட்டு பிறபாடு அதை அப்படியே ஹாலிவுட் படமாக எடுத்த கதைகள் ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். Andy Weir என்பவர் தனது வலைப்பூவில் பகுதி பகுதியாக ஒரு அறிவியல் புனைவுக்கதையை எழுதப்போக, வாசகர் மத்தியில் பெருத்த ஆதரவு பெற்று பிற்பாடு அதுதான் 'The Martian'என்கிற படமாக உருவெடுத்தது. Carl Segan எழுதிய 'Contact'என்கிற நாவலை அப்படியே அதே பெயரிலேயே படமாக எடுத்தார்கள்.

இப்படி இந்த பட்டியல் ஏகத்துக்கு நீளும்.

நம்மூரில் அறிவு சார்ந்த செயல்பாடுகளை பிரச்சனைக்குறியவைகளாக பார்ப்பதற்கான காரணிகளை சமூகத்தின் அங்கமாகவே வைத்திருக்கிறோம். ஆதலால் Prevention is better than cure என்கிற அணுகுமுறை எத்தளத்திலும் இல்லை. இந்த பின்னணியில் படித்தவர்கள், விபரம் தெரிந்தவர்கள் இந்தியாவை விட்டுவிட்டு வெளி நாடுகளுக்கு தப்பிப்போவதற்கு பின் நிராகரிக்கமுடியாத காரணங்கள் இருப்பதாகவே நான் திடமாக நம்புகிறேன்.

ஏனெனில் நான் ஒரு கதையை எழுதி அது  தமிழ் சூழலில்  கண்டுகொள்ளப்பட்டு ஏதேனும் பத்திரிக்கைகள் கண்டெடுத்து வெளியிட்டு, அப்படி வெளியான அதை காவல்துறையோ அல்லது புலனாய்வு துறையோ பயன்படுத்திக்கொள்ளும் coordination நம்மூரில் இல்லை. ஆனால் அந்த coordination இங்கே அமேரிக்கவில் இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் அமேரிக்க 'அண்ணன்'என்றும், அமேரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வாழ்பவர்களை கிண்டலடித்தும் பதிவிடுபவர்களை நிதர்சனம் புரியாதவர்கள் என்றே நான் கொள்ள வேண்டியிருக்கிறது. அமேரிக்கா தேவையில்லாமல் அடுத்தவர் மூக்கில் கைவைக்கிறதுதான். ஒப்புக்கொள்கிறேன். உலக அளவில் பல பிரச்சனைகள் இந்த அண்ணனால் தேவையில்லாமலோ அல்லது ஒரு சர்வாதிகார போக்கிலோ உருவாக்கப்பட்டதுதான். ஈசிஸ், அல்குவைதா என்று எல்லாவற்றின் பின்னும் அண்ணனின் கைங்கர்யம் இருக்கிறதுதான்.

ஆனாலும் இதே அமேரிக்காவில் தான் சட்டம் இரும்பாக இருக்கிறது. இயற்கை வளங்களை அப்படி பாதுகாக்கிறார்கள். விளையாட்டை ஊக்குவிக்கிறார்கள். தனி மனித ஒழுக்கம் இருக்கிறது. செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க மட்டுமே கரப்ஷன். குற்றம் செய்யாவிடில் லஞ்சத்தை பற்றி கவலையே பட வேண்டியதில்லை. கேள்வி கேட்பது தனி மனித சுதந்திரம் தான். ஆனால், கேள்வியில் தர்க்கம் வேண்டும். அறம் வேண்டும்.

ஒரு நாள் கூத்து - விமர்சனம்

$
0
0
ஒரு  நாள் கூத்து - விமர்சனம்


சமீபத்தில் பார்த்த படம். நல்ல படம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. காதல் ஒரு சுகமான அனுபவம்.

படத்தின் இரண்டாவது நிமிடத்தில் ராஜின் நண்பன், தனது தோழியுடன் பேசும் இடம் குறித்து,

"ஹேய். ஏன் கைய எடுக்குற?"

"போன் வருதுடா"

"எந்த கரடி அது?"

"என் ஹஸ்பன்டுன்னு நினைக்கிறேன்"

"என்னவாம்? சும்மாவே இருக்க மாட்டானா அவன்?"

"சும்ம்மா தான் இருக்கான்.. இப்பல்லாம் என் மேல பயங்கர டவுட்"

இந்த ரீதியில் போகிறது டயலாக்.

"இப்படியெல்லாம் நடக்கிறது.. தயாராகிக்கோ"என்கிறார்களா?

இந்த சம்பாஷனைக்கான தேவை குறித்து கதாபாத்திரங்கள் ரீதியாக‌ படத்தில் ஏதும் காட்சிகள் இல்லை.. உதிரியான இந்த காட்சி ஒரு குறியீடு. பெண்கள் மொழி சார்ந்து இயங்குபவர்கள். பெண்கள் அளவிற்கு ஆண்களால் உறவுகளை கையாள முடியாது. உறவுகளிடம் பன்முகத்தன்மை கொண்டிருக்க முடியாது.  டிசைனே வேறு என்கிற உலகார்ந்த உண்மையை  குறிப்புணர்த்தவே இந்த வசனம் என்றே புரிந்து கொள்கிறேன். மூன்று விதமான பெண் நிலைப்பாடுகள் குறித்து படம் பேசுவதால் இந்த குறியீடும் கூட சற்று பொருத்தமாகத்தான் இருக்கிறது.





ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தப்படும் நொடியில் கூட காவ்யா பழைய காதலன் ராஜை மணப்பதை தவிர்க்கிறார். "ராஜ் பேக்கப் இல்லை. அவந்தான் வேணும்னா அப்போவோ போயிருப்பேன். உங்ககிட்ட கேட்டுட்டு இருக்க மாட்டேன்"என்கிறாள் காவ்யா தனது அப்பாவிடம்.

ஒரு நவீன யுகத்தின் பெண்ணாக அழுத்தம் திருத்தமாக இருக்கிறது அந்த கேரக்டர் அந்த இடத்தில். வெளி நாட்டு வரனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகான ஒரு நாளில் பழைய காதலன் ராஜுடன் செல்ல கார் ஓட்டத்தெரியாதென்று காரணம் சொல்வது, அவனது அறைக்கு செல்வது, அவனுடன் தனியே இருப்பது  போன்ற காட்சிகளை இயக்குனர்  தவிர்த்திருக்கலாம். அப்பாவிடம் வெளி நாட்டு வரனுக்கு ஓகே சொல்லிவிட்ட பிறகு இதையெல்லாம் செய்வது ரொம்பவே முரணாகத்தான் இருக்கிறது.


லக்ஷ்மியை பெண் பார்த்துவிட்டு செல்லும் 'வீரமிக்க'ஆண்மகன் போனில் கூப்பிட்டு தன்னை நம்பி ஒரு பெண் பிள்ளையை , அதுவும் அப்பாவுக்கு பயப்பட்டு கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படும் பெண் பிள்ளையை பஸ் ஏறி வரச்சொல்கிறார். பெற்ற தாயை கையாளவே தைரியமில்லாத பிள்ளைக்கு எதற்கு மனைவி? கல்யாணம்?  ப்ஸ் ஸ்டாண்டில் அந்த கதாபாத்திரம் சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்க வெறுப்பாக இருந்தது. லக்ஷ்மி கதாபாத்திரத்துக்கு மியா ஜார்ஜ் கச்சிதமாக பொருந்துகிறார்.

திருச்சியிலிருந்து திரும்பி வரும் லக்ஷ்மி  முகம் கழுவிவிட்டு "ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தேன்"என்று சாதாரணமாக சொல்லும் இடம் பிடித்திருந்தது. செம‌ பஞ்ச்.  பெண் பிள்ளைகளை நான்கு சுவற்றுக்குள்ளே அடைத்து , தன் நியாயமான உணர்வுகளை வெளிக்காட்ட விடாமல், வாயில்லா பூச்சிகளாக நடத்தி தன் முடிவுகளையே திணிக்கும் அத்தனை ஆண்களுக்கான‌ பஞ்ச். இது போன்ற ஆணாதிக்க அப்பாக்களிடமெல்லாம் மரியாதை, மதிப்பு பார்ப்பதெல்லாம் தேவையே இல்லை.

நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. சுசீலா தன் திறமைக்கான வேலையை விருப்பமுடன் செய்யும் பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். திருமணத்திற்கு ஓகே சொல்லும்  பாஸ்கர் பிற்பாடு ஏன் வேண்டாம் என்கிறார் என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. வேண்டாம் என்று சொல்லும் பாஸ்கரை சந்தித்து சுசீலா கெஞ்சுவது, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நின்றால் கிடைக்கும் களங்கமும், கெட்ட பெயருமே என்று தோன்றும் வகைக்கு காட்சிகள் இருக்கின்றன.

இத்னால் தான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மறுமணம், நிச்சயத்துடன் திருமணம் நின்று போதல் போன்றவற்றை நம் சமூகம் திறந்த மனதுடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாது போகையில் தான் விருப்பமில்லா திருமணங்களும் அது சார்ந்த சிக்கல்களும் உருவாகின்றன.

சுசீலா தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆண் தன்னை வேண்டாம் என்று சொல்லும்போது ஏன் கெஞ்சுகிறார் என்று புரியவில்லை. கெஞ்சிவிட்டு, அவனை சமாதானம் செய்ய அண்ணனை அனுப்பிவிட்டு, பிற்பாடு அவன் ஓகே சொல்வதற்குள், அவன் சந்தேகப்படுவது சரிதான் என்று நிரூபிக்கும் வண்ணமே நடந்துகொள்கிறார்.

இந்த மனக்குழப்பத்தில் பாதிக்கப்படும் சுசீலா, தன்னுடன் பணிபுரியும் சதீஷுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது, இந்த இத்துப்போன சமூகத்தின் மீதான‌ தனது எரிச்சலையும் கோபத்தையும் காட்டுவதற்காக என எடுத்துக்கொள்ளலாம். எரிச்சலும் கோபமும் ஓகே தான். அதை  இப்படித்தான் காட்ட வேண்டுமா என்று தோன்றத்தான் செய்கிறது. இதை செய்துவிடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப்போகிறதா? சதீஷுடன் படுக்கை பகிர்தல் எந்த வகையில் தீர்வாகும்? இப்படி எல்லோரும் செய்தால் பாஸ்கரின் சந்தேகங்கள் சரிதான் என்பதாகத்தானே அர்த்தமாகும்?  என்ன சொல்ல வருகிறார்கள்?

சதீஷுடன் படுக்கையில் இருக்கும் சுசீலா "இதுக்கு இவ்ளோ ஆர்பாட்டம். அவ்ளோதான்ல? நல்லாதான் இருக்கு"என்கிறாள். சுசீலாவுமே எல்லாம் செக்ஸுக்காகத்தான் என்று புரிந்து வைத்திருப்பது போல் காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒரு பிரயாணம். மலையளவு நம்பிக்கையுடன் துணையாக பயணிக்க வேண்டிய பயணம். அதில் அனேகம் அனுபவங்கள். அனுபவ சேகரிப்பே வாழ்க்கை. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் வெறும் செக்ஸ் என்று சொல்லும் கதாபாத்திரமாக சுசீலாவை ஏன் சித்தரிக்கிறார்கள்? இப்படி சித்தரிக்கப்படும் பெண், நிச்சயம் நின்றால் நேரப்போகும் களங்கம் குறித்து கவலை கொள்வதாக ஏன் காட்டவேண்டும்? இந்த டயலாக்கை தூக்கியிருக்கலாம்.

நாற்பதாயிரம் பேர் பார்க்கும் திரைப்படம் என்பதால் சுசீலா இந்த கோபத்தை வேறு விதமாக காட்டுவதாக காட்சி வைத்திருக்கலாம்.

அற்ப காரணங்களுக்காய் காதல் என்கிற உன்னத உணர்வை விட்டுத்தருபவர்களாகத்தான் இந்த படத்தின் கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறார்கள்.  காதல் என்று வருகையில் காதல் தான் பிற எல்லாவற்றையும் விட அற்பமாகிவிடுகிறது. இப்படி அற்பமாகி காணாமல் போகும் காதல்களால் தான் படத்தின் இரண்டாவது நிமிடத்தில் பங்குபெறும் அந்த காட்சி உண்மையாகிறதோ என்று தோன்றாமல் இல்லைதான்.



எழுத்தாளர் சுஜாதா

$
0
0

எழுத்தாளர் சுஜாதா


எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாள் அல்லது மறைந்த நாளுக்கு சமீபமாக இந்த பதிவை வலையேற்றினால் உடனே ஆளாளுக்கு 'ஜனனம் மரணத்தில் தான் மனுஷப்பய நினைப்பு வருது பயபுள்ளைக்கு"என்று முகனூலில் ஸ்டேடர் போடக்கூடும். அதனால் காத்திருக்காமல் எழுதிவிடுகிறேன்.

எழுத்தாளர் சுஜாதா மேல் ஒரு தனி ..................... பாசமா, அன்பா, மரியாதையா, க்ரேஸா... என்னவென்று சொல்லத்தெரியவில்லை. அந்த மனுஷன் ஒரு ராட்சஸன்.. ராட்சஸந்தான்.. அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.

இலக்கியம் புரிகிறது. ஆனால் அதை வைத்து புரியாமலே எழுதி எழுதி "நீ நெருங்கவே முடியாத அளவுக்கு நானெல்லாம் பெரிய இலக்கியவாதியாக்கும்"என்று காலரை தூக்கிவிடவில்லை. தனக்கு புரிந்ததை எல்லோருக்கும் புரியவைத்தார்.. காலம் முழுவதும் அதற்கெனவே உழைத்தார்.



அவருடைய பல ஆக்கங்களில் இலக்கிய மதிப்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் இலக்கிய மதிப்புள்ள ஆக்கங்களால் இதுவரை இந்த சமூகத்துக்கு என்ன நன்மை நடந்திருக்கிறது? அட அவ்வளவு ஏன்.. இலக்கிய எழுத்தையே உயிர்மூச்சாய் கட்டிக்கொண்டு அழுதவரெல்லாம் எங்கே என்னவானார்கள்? ஒரு கவிஞர் வருமை காரணமாக இறந்தார்.

குறைந்தபட்சம் ஒரு சுய ஒழுக்கத்தை கூட நிலை நாட்ட முடிந்ததில்லை. கவிஞர்கள் சந்தித்தால் கைகலப்பாகிவிடுகிறது. சாராய பாட்டில்கள் உடைந்து ஒழுகுகின்றன. அறிவு சார் தளம் என்பது உண்மையில் என்ன என்கிற கேள்வி எழுகிறது. அறிவு சார் தளத்தில் இருப்பவனை ஏன் வறுமை நெருங்குகிறது? வறுமை விரட்ட முடியாத ஒரு தளம் எப்படி அறிவு சார் தளமாகிறது? வறுமையை விரட்ட அறிவுக்கு தகுதியில்லை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா? வறுமையையே விரட்ட முடியாத அறிவு இருந்தென்ன? அது எதற்காகும்?

சுஜாதா எனக்கு ஆதர்சம்.

பொறியியல் படித்தார். பொறுப்பாய் வேலை. வயிற்று பிழைப்புக்கு ஒரு வேலை. எஞ்சிய நேரத்தில் அறிவு தேடலுக்கு ஒரு தளம். அதையே சாதனையாக்கிக்கொள்ள துடிக்கும் முனைப்பு. 'எழுத்தால் நாசமானான்'என்கிற பெயர் எடுக்கவில்லை. எழுத்துக்கே ஒரு ஸ்டான்டர்டு சுஜாதாவால் வந்தது. உடனே தீவிர இலக்கிய காவலர்கள் எழுந்து'ஸ்டான்டர்டு'என்றால் என்ன தெரியுமா? என்று முழங்குவார்கள்.

என்னை பொறுத்தவரை வாழவைக்காத ஸ்டான்டர்டு, ஸ்டான்டர்டு இல்லை. அவ்வளவுதான். டாட்.

சுஜாதாவின் அனைத்து ஆக்கங்களும் வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளரின் எழுத்தை அதிகம் வாசிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நமது எழுத்தில் அவரது வாசம் வீசிவிடக்கூடும். அது நடக்கக்கூடாது. நடந்துவிட்டால், 'அவரை காப்பி அடிக்கிறான்'என்பார்கள். எனது ஆக்கங்களை என் வகையிலேயே தான் இதுகாறும் எழுதியிருக்கிறேன்.

நம்மூரில் ஒருவர் மருத்துவராக இருந்தால் பொறியாளராக இருக்க வாய்ப்பில்லை. பொறியாளராக இருந்தால் சார்டர்டு அக்கவுன்டன்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை. அதுதான் பத்தாவதிலேயே பிரித்துவிடுகிறார்களே. ஆனால், எந்த ஒரு விஷயம் குறித்தும் பார்பட்சமின்றி தெளிவாக அறுதியிட எல்லா துறைகள் சார்ந்த அடிப்படை புரிதல் தேவைப்படுகிறது. சுஜாதாவிடம் அது இருந்தது.

ஏன் எதற்கு எப்படியில் ஒரு முறை ஒரு வாசகர் ஜாதகம் குறித்து கேள்வி கேட்கிறார்.

ஜாதகம் சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனித வாழ்வை பிரபஞ்ச இயக்கங்களோடு தொடர்புபடுத்துவது எனக்கு பிடிக்கிறது என்கிற அர்த்தத்தில் அதற்கு சுஜாதா பதில் அளித்திருந்தார்.

உண்மையில் அவர் ஒரு அபூர்வம் தான் எல்லா பொறியியல் பட்டதாரிகளுக்கும் உயிரியலில் ஆர்வம் இருக்காது. எத்தனை மருத்துவர்களுக்கு டையோடு என்றால் என்ன என்று தெரியும்? எத்தனை அக்கவுண்டன்ட்களுக்கு ஒரு செல்லில் இருக்கும் ஏலியன் பற்றி தெரியும்? இப்படி தெரிவது சாதாரண காரியம் அல்ல. ஒரு ஜிம் பாய், படிப்பாளியாக இருப்பதில்லை. ஒரு பொறியியல் பட்டதாரி கவிஞனாகவும் இருப்பது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை.

சுஜாதா ஒரு கலவை. அவருக்கு கணிதமும் வரும். கம்ப்யூட்டரும் வரும். பயாலஜி, இயற்பியல், வேதியியல் கூட வரும். சுஜாதா ஒரு உண்மையான அறிவுத்தேடல்வாதி. இந்த வாதிகளிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது அடுத்தென்ன என்கிற தேடல். சுஜாதா அடுத்தடுத்து என்று போய்க்கொண்டே இருந்தார். நின்று நிதானித்து ஒரு துறையை எடுத்துக்கொண்டு ஆராய்வதில் பல துறை சார்ந்த தகவலகளின் இழப்பு அவரால் கொடுக்க முடியாத விலையாகத்தான் இருந்திருக்க‌வேண்டும்.

அவர் ஒரு துறையில் ஆராய்ச்சி என்று தேங்கியிருந்தால் நிச்சயம் ஏதோவொரு உண்மையை கண்டுபிடித்திருப்பார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அந்த உண்மைக்கு செலவு செய்த காலத்தில் பலவற்றை அவர் இழந்திருக்ககூடும். அந்த உண்மை அந்த இழப்புகளுக்கு ஈடாக இல்லாமல் போக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்பதை அவரது அதீத புத்திசாலித்தனம் முன்கூட்டியே கண்டுகொண்டிருக்கவேண்டும்.  சாதுர்யமாக அந்த ஏரியாவுக்குள் போகாமல் தவிர்த்துவிட்டார் என்றே நான் திடமாக நம்புகிறேன்.

மற்றபடி அவரது சிந்தனா முறை என்பது இலக்கிய மதிப்பீடுகளுக்கு மிக மிக பக்கம் தான். அவருக்கு எதுவோ தெரிந்திருக்கிறது. அது அவரை தீவிர இலக்கியத்தின் பால் நெருங்க அணுமதிக்கவில்லை. அதை அவர் துல்லியமாக உணர்ந்தும் இருந்திருக்கவேண்டும். இதுதான் அவர் குறித்த என் புரிதல்.

அழுது வடியும் இலக்கியவாதியாக இருப்பதா? சிரித்து வாழும் வெற்றியாளனாக இருப்பதா? என்கிற கேள்வி வருகையில்  அவருக்கு தெரிந்திருந்த 'அந்த ஏதோ ஒன்று'அவரை வெற்றியாளனாகவே இருந்துவிட பணித்திருக்கிறது.

அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத என் போன்ற அவரின் தீவிர அபிமானிகளுக்காக அவர் எண்ணற்ற ஆக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய நாவல்களை வாசிக்கையில் அவரே அருகில் இருந்து சிரித்துக்கொண்டே கதை சொல்வது போலிருக்கும். சுஜாதா சுஜாதா தான். சுஜாதாவின் இடம் இனி எப்போதும் யாராலும் நிரப்பப்படபோவதே இல்லை.

நா.முத்துகுமார்

$
0
0
நா.முத்துகுமார்





கதைகளை பேசும் விழியருகே..எதை நான் பேச என்னுயிரே .. காதல் சுடுதே..காய்ச்சல் வருதே.. இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே. - அங்காடி தெரு..

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியிது இரவு.. - வெய்யில்

இது அன்பால் வருகிற அவஸ்தைகளா இல்லை உஇதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன் - கல்லூரி...
ன் மேல் வருகிறா ஆசைகளா..

உன் கண்கள் பார்க்கும் திசையோடு காரணமின்றி திரிகின்றேன்.. உந்தன் பார்வை என் தன் மீது விழ ஏனோ நானும் காத்திருப்பேன்.. - கல்லூரி

வெளியே சொல்லா ரகசியமா என் நெஞ்சில் உருத்துகிறாய் நீ.. சொல்லாமல் யார் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னை காட்டிவிடும் - கல்லூரி..

இரவும் விடியவில்லையே..அது விடிந்தால் பகலும் முடிவதில்லையே, பூந்தளிரே.. - மதராசபட்டினம்

நேற்று தேவையில்லை.. நாளை தேவையில்லை.. இன்று இந்த நொடி போதுமே - மதராஸபட்டினம்

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா - கற்றது தமிழ்

என் வரையில் இந்த வரிகளுக்காகவென்றே ஆயிரம் முறைகளேனும் நான் கேட்ட பாடல்களில் வெகு சில இவைகள்.

நா.முத்துகுமாரின் மரணம் உண்மையிலேயே இழப்பு தான்.

திறமைகள் மிகப்பல இருக்கும் நபர்களை அத்திறமைகளுள் ஏதோவொன்று தன் வசப்படுத்திக்கொள்ளும். அப்படி வசப்படுத்திக்கொள்கையில், அந்த திறமை தரும் வாய்ப்புகளினூடே நாம் பயணிக்க நேரும். ஆன்மாவின் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. நமக்கிருக்கும் திறமைகள் எல்லாவற்றுக்கும் நம் ஆன்மாவோடு உள்ள‌ தொடர்பில் சதவிகித வித்தியாசங்கள் இருக்கலாம்.

நாமும் கவிதைகள் எழுதிகிறோம். கவிதைகளின் கட்டமைப்பு, குறியீடுகள், உருவகங்கள் நமக்கும் வசப்படுகின்றன. அதற்கும் நம் ஆன்மாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆனால், நம்மை வசப்படுத்திக்கொள்ளும் திறமை என்பது பொருண்மை உலகில் பிழைப்பதற்கென நாமாக வலிந்து நமக்குள்ளே தினித்துக்கொள்ளும் திறமை தான்.

எவ்வித காம்ப்ரமைஸும் இல்லாமல் நம் ஆன்மாவோடு தொடர்புடைய ஒரு திறமையை ஒட்டியே நமது பொருண்மை உலகின் பிழைத்திருக்கும் வழியையும் உருவாக்கிக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. கவிதைகளில் அப்படி சாத்தியப்ப்பட்டவர்கள் வாலி, கண்ணதாசன் என்று நிறைய சொல்லலாம். சமகாலத்தில் அப்படி இருந்தவர் தான் நா.முத்துகுமார். ஆன்மாவுக்கு நெருக்கமான திறமையிலேயே தனது பொருண்மை உலகின் பிழைத்திருத்தலுக்கான பாதையையும் உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்று தான் நான் அவரை பார்க்கிறேன்.

பொருண்மை உலகின் முந்தீர்மானங்களில் விவரம் தெரியவரும் முன்பே எனது மூளையை கம்ப்யூட்டருக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட துர்பாக்கியசாலி நான் என்கிற எண்ணம் எனக்குள் எப்போதுமே உண்டு. அதை மிக தீவிரமாக நம்பவும் செய்கிறேன் நான். அதில் மறைக்க எதுவும் இல்லை. எனது ஆன்மா எந்த இழப்பை குறித்து தவிக்கிறது என்பதை உணர்வதிலிருந்து இந்த கம்ப்யூட்டர் தினமும் என்னை தந்திரமாக திசை திருப்பிக்கொண்டே இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.  அந்த இழப்பு குறித்து நான் வருத்தப்ப்படும் காலத்தை அது வெகுவாக தாமதப்படுத்துகிறது என்பது நிஜம்.

நா.முத்துகுமாரின் 41வயதில் மரணம் என்பதை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. கண்ணதாசன் வாலி போல் இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் என் போன்ற துர்பாக்கிய ஜீவன்கள் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள இன்னும் இன்னும் பல வரிகளை அவர் எழுதியிருக்கலாம்.

ஆன்மாவோடு எப்போதும் தொடர்பிலிருந்த ஒருவரை மிகவும் பிடித்துப்போய் ஆன்மா தன்னுடனேயே அவரை அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதோ என்னமோ? நா.முத்துகுமாரின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்...

அரசு பள்ளிகள்

$
0
0
அரசு பள்ளிகள்


"வேலையில்லா பட்டதாரி" படம் வந்தபோது கூடவே ஒரு சர்ச்சையும் வந்தது.

ராமகிருஷ்ணா பள்ளியில் படித்ததால் தான் வீணாய் போக நேர்ந்ததாக அர்த்தம் தருவது போல் படத்தின் ஹீரோ பேசுவது போல் இருந்த டயலாக்கை சுற்றி தான் சர்ச்சையும். அதெப்படி ராமகிருஷ்ணா பள்ளிகள் பற்றி அப்படி சொல்லலாம் என்று கொந்தளித்தார்கள்.

நான் படம் பார்த்தபோது அப்படி ஒரு டயலாகை கவனித்ததாக நினைவில் இல்லை... (எப்படி இருக்கும்? அமலா பாலை சைட் அடித்தால் எப்படி ஐயா இருக்கும்? என்று நீங்கள் முனகுவது கேட்காமல் இல்லை... ஹிஹிஹி)

உண்மையில் ராமகிருஷ்ணாமிஷன் பள்ளிகள் வேறெந்த அரசு பள்ளிகள் போலத்தாம் இயங்கும். ட்யூஷன் வந்து சேரவைக்க, கடனே என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தேர்வுக்கு மாணவர்களை எப்போதும் தயாராய் வைத்திருக்க மாடல் தேர்வுகள் மற்றும் சிறப்பு பாடவேளைகள் என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இருப்பது என்று நிறைய சொல்லலாம்.



ஆனால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இரண்டு பீரியட் ப்ரேயர் இருக்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரின் துதி பாட வைப்பார்கள். ஆன்மீக வகுப்புகள் என்று பெயர். முக்கால்வாசி பேர் சும்மா குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க என்னைபோல் அப்பிராணிகள் புதிதாய் ரத்தம் ஏற்றப்பட்ட போர் வீரர்கள் போல் ஒரு அர்த்த புஷ்டியோடு துதி பாடிக்கொண்டிருப்போம்.

குசுகுசுவென்று தங்களுக்குள் முனகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் எங்களை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதுவும் சொல்ல மாட்டார்கள். (தேர்வுக்கு காப்பி அடிக்க பேப்பர் தர நாங்கள் தேவை அல்லவா?) அந்த பயம் இருக்கட்டும் என்று நாங்களும் கடமையே கண்ணாய் துதி பாடிவிட்டு அதே உயர் ரத்த வெப்பத்துடனும், புத்துணர்ச்சியுடனும் பள்ளி லைப்ரரிக்கு போய் ஏதேனும் மொக்கை புத்தகத்தை அதீத கடமை உணர்ச்சியுடன் எடுத்து படித்துக்கொண்டிருப்போம்.

அப்போதெல்லாம் பனகல் பார்கில் அமர்ந்து தான் தேர்வுக்கு தயார் செய்வேன். பத்து மணி தேர்வுக்கு 8 மணிக்கு பார்க் போனால் நிழலான எல்லா புதர்களுக்கும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். இடமே கிடைக்காமல் வெய்யிலில் அமர்ந்தே படித்த நினைவும் உண்டு.

நான் பாட்டுக்கும் வளவள என்று பேசிக்கொண்டே செல்கிறேன் பாருங்கள்.... சரி கதைக்கு வருவோம்..

ஆறாவதிலிருந்து பன்னிரண்டாவது வரை தி நகரில் இப்போதிருக்கும் பனகல் பார்க் எதிரால் இருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் நான். அப்படியொன்றும் மோசமான பள்ளி அல்ல அது. நியாயமாய் வகுப்புகள் நடத்துவார்கள்.

"அறியாமை களைய படிக்க வைக்கிறார்கள். சல்லிசான ஃபீஸில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்"என்கிற எண்ணப்பாடு கொண்ட எல்லாருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளில் தேவைக்கும் அதிகமான வசதிகள் இருக்கின்றன தாம் என்பதை என்னால் ஆணித்தரமாக கூற முடியும்.

நம்மூரில் எந்த உருப்படியான தொழில்துறை வேலைக்கு விண்ணப்பிக்கவும் பத்தாவது பன்னிரண்டாவது பாஸாவது செய்திருக்கவேண்டும் என்கிற போது, கொஞ்சம் முக்கினால் தான் படிப்பு வரும் போன்ற மாணவர்களையும் படிப்பே வராத மாணவர்களையும் எப்படியேனும் பத்தாவது பன்னிரண்டாவது பாஸ் செய்ய வைக்க வேண்டிய முழு பொருப்பையும் ஆசிரியர்களிடமே விட்டுவிடுவது பலன் தரக்கூடியது அல்ல.

ஏனெனில் அரசு பள்ளிகள் என்பது "எல்லோருக்கும் கல்வி"என்கிற அடிப்படையிலிருந்து இயங்குபவை. நன்றாக படிக்கும் மாணவர்கள் இந்த பள்ளிகளில் படிக்க நேர்வது சமூக நிர்பந்தம். படிப்பே வராத மாணவர்கள் இந்த பள்ளிகளில் படிக்க நேர்வது அரசாங்கத்தின் சமூக பார்வை.

பாங்க் உத்தியோகக்காரன், அரசு உத்தியோகக்காரன், ரிக்ஷா தொழிலாளி, மூட்டை தூக்குபவன் என எல்லோரின் பிள்ளைகளும் படிக்க வருவார்கள். படிப்பே வராத, முக்கினால் தான் படிப்பு வரும் என்கிற அளவுகோல்களில் அடங்குபவர்கள் தரும் தலைவலிகளிலேயே நாற்பதுகளில் உள்ள ஆசிரியர்களின் தாவு முதலிரண்டு பீரியடுகளுக்குள்ளே முடிந்துவிடும். மதியம் உணவு உண்டால் பிற்பகுதியில் உடல் மயக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க துவங்கிவிடும்.

என்னை பொருத்த வரையில், அரசு பள்ளிகள் தனியார்களுக்கு எதிராக மக்களுக்கேயென அரசு உருவாக்கி நடத்தும் கல்வியகங்கள். தனியாரிடம் பண பலம் இருக்கிறது. அது இல்லாத இடத்தில் வசதிகள் கூட குறைச்சலாக இருப்பினும் அடைப்படை வசதிகள் நிச்சயம் இருக்கும்.

லாபில் பிப்பட்டில் ஓட்டை, நூலகத்தில் புத்தகம் கிழிந்திருக்கிறது என்பதெல்லாம் சும்மா நம் தவறுகளை மறைக்க சொல்லிக்கொள்ளும் வெற்று வாசகங்கள் என்பதை ராம கிருஷ்ணா பள்ளியின் முன்னாள் மாணவன் என்கிற முறையில் என்னால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியும்.

ராம கிருஷ்ணா பள்ளியில் தான் பன்னிரண்டாவது வரை சுமார் 7 வருடங்கள் படித்தேன். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஃபிக்ஷன்கள் இங்கே ஆங்கில பதிப்பகங்களின் பத்திரிக்கைகளிலேயே வெளியாகின்றன. நான் இப்போது வசிப்பதும் அமேரிக்காவில் தான். அமேரிக்கர்களுடன் தான். அவர்களுடன் அவர்களது மொழியில் தகவல்கள் பரிமாறிக்கொள்வதில் எனக்கு எவ்வித சிக்கல்களும் இருந்ததில்லை. மேலும் ஆங்கிலமே மொழி தானே. அறிவு அல்லவே.

என்னாலேயே இது முடிகிறது என்றால், ராமகிருஷ்ணாமிஷன் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவராலும் இது முடியும் என்றே எந்த கோயிலிலும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யத்தயார். தேவைப்படுவதெல்லாம்  "அறியாமை களைய படிக்க வைக்கிறார்கள். சல்லிசான ஃபீஸில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்"என்கிற எண்ணப்பாடு நமக்குள் இருந்தால் போதுமானது.

கல்வி என்பது ஒரு வியாபாரமாக, தொழிலாக ஆகிவிட்ட பிறகு ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அரசு பள்ளிகள் தான் உண்மையான சமூக கடமையுடன், மக்களுக்காக இயங்கும் பள்ளிகள். ஆனால் நாம் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளைத்தான் மரியாதையுடனும் மதிப்புடனும் பார்க்கிறோம்.

வித்தியாசம் பள்ளிகளில் அல்ல, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடமும், அவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதிலும் தான் இருக்கிறது. படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்.

காதல் கதைகள் - 1

$
0
0
காதல் கதைகள் - 1


அண்ணா நகர் ஆர்ச் சிக்னல் அருகே தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கைகளில் அணிந்திருந்த வெள்ளை நிற கையுறையை இழுத்துவிட்டுக்கொண்டாள் ஸ்வேதா. அருகாமையில் வந்து நின்ற கருப்பு நிற ஹோண்டா அக்கார்டின் கண்ணாடி வழியே ஒரு ஜோடி கண்கள் ஸ்வேதாவின் பார்வையில் விழ முயற்சித்துக்கொண்டிருந்தன.

ஸ்வேதா தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டவளாய் அதை அதிகம் வெளிக்காட்டாதவள் போலொரு நடிப்பை வெளிப்படுத்தத்துவங்கியிருந்தாலும் அவளது புலன்கள், கண்ணாடி திரைகளுக்கப்பால் அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் குறித்த மனப்பிம்பங்களை ஒரு ஏவாளின் ஆர்வத்துடன் மனத்திரையில் வரைந்து வரைந்து அழித்துக்கொண்டிருந்தன.



சிக்னல் விழ நேரமிருந்தது. வாகனங்கள் யாருக்கோ அஞ்சி செயற்கையாய் புகையை உருவாக்கி அதனுள் மறைந்துகொள்ள முயன்று கொண்டிருந்தன. ஒன்றிரண்டு அல்ல. கிட்டத்தட்ட அத்தனை வாகனங்களுமே. அவைகளுக்கு நடுவே ஆங்காங்கே பொருத்தமில்லாமல் சைக்கிள்களும், மூன்று சக்கர வாகனங்களும், மாட்டு வண்டிகளும்.

அக்கார்டின் இமை திறந்தது. உள்ளிருந்து கூலர் மறைத்த கண்களுடன் சரவணம் சிரித்தான். அக்கார்டின் உள்ளுக்குள் பரவிக்கொண்டிருந்த ஜில்லென்ற காற்று மெல்ல ஸ்வேதாவின் சருமத்தை வாஞ்சையுடன் தடவ, ஸ்வேதா திரும்பினாள்.

"வாங்களேன்.. கார்ல போகலாம்"என்றான் சரவணன்.

"எக்ஸ்க்யூஸ்மீ"என்றாள் ஸ்வேதா, ஒரு போலி ஆச்சர்யத்துடன். அவளிடம் நெருங்கி யாரேனும் அதட்டி கேட்டால் கூட அந்த ஆச்சர்யத்தை  உண்மையென்றே அவள் சாதிக்கவும் கூடும். அதை ஸ்தாபிக்கும் பொருட்டு தன்னிச்சையாக அவளது நா உடனே ஆங்கில பேச்சுவழக்குக்கு தாவிவிடவும் கூடும். வெள்ளை என்பதை பரிசுத்தத்துடனும்,  ஆங்கிலம் என்பதை துல்லியத்துடனும் பொருத்திப்பார்க்கும் கற்பிதம் தவறு  என்பதை வழமை போல அவளுக்குள்ளும் கூட மரபணுவினுள் ஆதியிலேயே புகுந்து கொண்ட பேக்டீரியா போல ஒரு கற்பிதம் யாரும் கற்றுத்தராமலே புகுந்துகொண்டிருந்தது.

"வெய்யில் ஜாஸ்தியா இருக்கேன்னு சொன்னேன்"என்றான் சரவணன்.

ஸ்வேதாவிற்கு சிரிப்பு வந்தது. ஆயினும் அவள் சாலையில் கடக்க நேரும் அன்னிய முகங்களுடன் சிரிக்கக்கூடாதெனவே முன்பே முடிவு செய்துவைத்திருந்தாள். அதற்கு முன் பார்க்க நேர்ந்த எந்த ஆணின் முகத்துடனும் சரவணனின் முகம் ஒத்துப்போயிருக்கவில்லை. அவன் சரியானவனாக இல்லாமலும் இருக்கக்கூடும்.

பூமியின் அந்த பகுதி நிலப்பரப்பை சார்ந்த ஆண்களுக்கு பெண் நெருங்க கடினமானவளாக தோற்றம் தரவேண்டியது அவசியம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.  அவனுக்கு யாரெல்லாம் நண்பராக இருக்கக்கூடும் என்பது வண்ணத்துப்பூச்சி விளைவை சோதிப்பது போன்றது. "அதையெல்லாம் நான் ஏன் கணக்கிடவேண்டும்? வேண்டுமென்றால் தொடர்ந்து வரட்டும்"என்பது அவளது எண்ணமாக இருந்தது. .அவனுக்கு தனக்கு தெரிந்த யாரேனும் தெரிந்திருக்குங்கால், அவர்களிடம் அவன் தன்னை குறித்து நல்லவிதமாகவே சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, அந்த நேரத்தில் சிக்னல் பச்சைக்கு தாவியதை அனுமதியாகக்கொண்டு, அவள் தனது ஸ்கூட்டியை விரட்டினாள்.

அக்கார்டின் கண்ணாடி மீண்டும் உயர்த்தப்பட்டு கார் அவள் ஸ்கூட்டியை தொடர்வதை சிலர் சுவாரஸ்யமுடன் கவனித்தார்கள். பலர், "எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்"என்று சலித்தபடியே தங்கள் பாதையில் தொடர்ந்தார்கள். ஸ்வேதா தனக்குள் அந்த கார் தன் பின்னால் வருகிறதா என்று கவனிக்க வேண்டுமா என்று ஒரு கணம் நினைத்து பார்த்துவிட்டு "It is too early"என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லுக்கொண்டவளாய் சாலையை பார்த்து ஸ்கூட்டியை விரட்டினாள்..


தொடரும்....

காதல் கதைகள் - 2

$
0
0
காதல் கதைகள் - 2


அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்துவிட்ட பின்னும் அந்த கூலர் முகத்துக்கு உள் மனம் வரைந்து வரைந்து களைத்த சித்திரங்கள் எதுவுமே பொருந்தாதது பாடாக இருந்தது. அரை நொடி நேரம் தான். அந்த கூலருக்குள் தெரிந்த பட்டு ரோஜா. அந்த பட்டு ரோஜா தன் முகம் தான் என்பதை ஊர்ஜிதம் செய்வதற்குள்ளாகவே முடிந்துவிட்டிருந்தது அந்த அரை நொடியும்.

வேலையில் மனம் செல்லாததினால் வராந்தையில் சற்று நேரம் நடை பயின்றாள். கண்கள் எப்போதும் போல மதில் சுவரோரம் வளர்ந்திருந்த அழகான ரோஜாச்சேடியின் மீது படிவதை தவிர்க்க முடியவில்லை. அன்றைக்கும் ஒரு புதிய பூ.. அதன் செவ்விதழ்கள் காற்றோடு சேர்ந்துகொண்டு ஆடுவது மோகினி ஆட்டமா அல்லது பாலேவா என்கிற சந்தேகம் அன்றைக்கும்  அவளுக்குள் மிகுத்துக்கொண்டிருக்கையிலேயே கடந்த போன இருவருள் ஒருவன் அந்த  ரோஜாவை அருகாமையில் தனது மொபைலில்  படமெடுத்தான். அவன் போன பிறகு இன்னொருவன் இடமும் வலமும் திருட்டுத்தனமாய் பார்த்து விட்டு ரோஜாவை பறிக்க முற்பட்டான். ரோஜாவின் கூர் முட்கள் குத்த, வெறுப்புடன் ரோஜாவை கசக்கி பிடுங்கி சாலையில் வீசியெறிந்துவிட்டு நடக்கும் காட்சி அவள் மனத்தில் விடிகாலை பனிபோல் அடர்த்தியாய் படிந்தன. அதிர்ச்சியுடன் அவள் நீரில் சுகித்துக்கொண்டிருக்கும் மண்ணில் வீழ்ந்து கிடக்கும் அந்த பூவிதழ்களையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.





ஒரே ஒரு டிஃபக்ட், ஒரு மணி நேர மீட்டிங், கொஞ்சம் மதிய உணவு, கொஞ்சம் அரட்டை, இயந்திரம் தயாரித்துத்தந்த கச்சடா தேனீர் இப்படி காம்போவாக கடந்த தினத்தின் முடிவில் ஸ்வேதா கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் விட்டு வெளியே வந்து பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை தேட, வாங்கி ஒரு வாரமே ஆன புத்தம் புதிய ஸ்கூட்டியின் பின்பக்கத்தை எதுவோ எக்கச்சக்கமாக நசுக்கியிருக்க கண்டு அதிர்ந்தாள் ஸ்வேதா.

அதிர்ச்சி விலகாமலே சுற்றுமுற்றும் கோபமாக பார்க்க சற்று தள்ளி ஒரு அக்கார்டு. பக்கத்தில் சிரித்தபடியே அதே கூலர். காலையில் பார்த்த ரோஜாவின் நினைவு வந்தது. கசக்கி எறியப்பட்டு, நீரில் சுகிக்கும் மண்ணில் வீழ்த்தப்பட்ட அதே  ரோஜா.

அதே வெறுப்புடன்  "நீங்கதானா?"என்றாள்.

"ஐ அம் சாரி.. ரிவர்ஸ் எடுக்கும்போது மோதிடிச்சு.. கவலைப்படாதீங்க.. எவ்ளோ செலவு ஆகுமோ அதை நானே குடுத்துடறேன்..அதை சொல்லத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"என்றான் சரவணன்.


"நானே ரிப்பேர் பண்ணி தரேன்னு ஸ்கூட்டி வாங்குவீங்க..அப்புறம் ஸ்கூட்டிக்காக நான் உங்ககிட்ட என் நம்பரை தருவேன்.. ராத்திரி 10 மணிக்கு மேல கால் பண்ணுவீங்க.. அதானே?"என்றாள் ஸ்வேதா அசுவாரஸ்யமாய்.

"கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..அதேதான்"என்ற சரவணனின் முகத்தில் இளமை நரம்புகளின் முடிச்சுகள்.

ஒரு அழகான ரோஜா கசக்கி வீசப்படும் காட்சி மீண்டும் அவளது நினைவுக்கு வந்தது.

"அழகா இருக்கிறதுதான் ரோஜாப்பூவோட தப்பா?"என்றாள்.

"என்ன சொன்னீங்க?'என்றான் சரவணன் கவனப்பிசகடைந்தவனாக. அந்த இளமை நரம்புகள் ஆங்காங்கே அறுபட்டு மீள வழியின்றி விழுந்தன‌

"ஒண்ணுமில்லை.. இந்த வண்டிக்கு இன்ஷூரன்ஸ் இருக்கு.. நான் பாத்துக்குறேன்"என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து, ஸ்டார்ட் செய்து சாலையில் விரையத்துவங்கினாள்.

எங்கிருந்தோ தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் பிடிபடுவதற்குள் பறந்துவிடும் அவசரத்துடன் ஸ்வேதா சாலையில் விரைவதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டே நின்றான் சரவணன்.

*****************************

அதற்கடுத்த இரண்டு நாட்களும் அலுவலகம் வருகையில் கூலரின் நினைவே வரவில்லை என்பதும், அங்கு இங்கு என எங்குமே ஒரு அக்கார்டு அவள் கண்ணில் படவில்லை என்பதும் உறக்கம் வராத பின்னிரவுகளில் அவளின் நினைவுகளில் ஓரிருமுறை மட்டுமே வந்து சென்றன.

மூன்றாம் நாள் அலுவலக‌ம் முடிந்து மாலையில்  அவள் தனது ஸ்கூட்டியை நெருங்கி, சாவியிட்டு நிமிர்த்தி அதில் அமருகையில்

"ஹலோ "என்ற ஆணின் குரல் கேட்டு திரும்பினாள் ஸ்வேதா. சரவணன் நின்றுகொண்டிருந்தான். கையில் இரண்டு அழகான ரோஜாக்கள் வைத்திருந்தான். ஸ்வேதா என்ன என்பது போல பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, இரண்டு பூக்களையும் ஒன்றாகச்சேர்த்து, ரோஜாவின் இதழ்கள் காம்பை விட்டு பிரிந்து உதிரும்வண்ணம் கசக்கி சாலையோரம் வீசினான். அவன் வீசிய இடத்தில் மாட்டுச்சாணத்தில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

ஸ்வேதா அந்த பூவிதழ்கள் கசங்கி உயிரற்று வீழ்வதை அதிர்ச்சியுடன் பார்த்தாள். சரவணன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். எதுவும் பேசாமல் ஸ்வேதா தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சாலையில் விரைய சரவணன் பின்னாலிலிருந்து தன்னையே பார்த்தபடி நிற்பதை ரியர் வ்யூ கண்ணாடியில் பார்த்தபடி ஓட்டினாள் ஸ்வேதா. எவருக்கும் கேட்காமல் தனக்கு மட்டுமே கேட்கும் படிக்கு 'திமிர் பிடிச்சவன்'என்று சொல்லிக்கொண்டாள் ஸ்வேதா.

அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் கூட சரவணன் அதே போல் மாலையில் அவள் ஸ்கூட்டியை எடுக்க வருகையில் இரண்டு ரோஜாக்களை கசக்கி வீசுவதையே தொடர்ந்து செய்தான். மூன்றாம் நாளின் முடிவில்  பொறுக்கமாட்டாமல் ஸ்கூட்டியை விட்டிறங்கிய ஸ்வேதா,

"ஹலோ மிஸ்டர்.. அழகான ரோஜாவை வச்சிக்க புடிக்கலைன்னா அதுக்காக கசக்கி எறியணுமா?  ஒரு ரோஜாவுக்கு தகுதியில்லைன்னா எதுக்கான அதை தொடணும்? வலுக்கட்டாயமா பறிக்கணும்? அதை வாழ விடுங்களேன்"என்றாள் கடுப்புடன்.

"காலையிலேயே பூத்தாச்சி இந்த ரோஜா.. அழகான ரோஜா.. இதுக்கு மேல விட்டா வாடி வதங்கிடும். ஒரு வயசு வந்த பொண்ணுக்கு இருக்கிற 420 முட்டைகள் மாதிரி இதுக்குள்ள போலன் இருக்கு.. அதை ஆண் ரோஜாவோட மகரந்தத்தோட சேர்த்தா இதே மாதிரி அழகான ஆயிரம் ரோஜா நமக்கு கிடைக்கலாம்..  ரோஜா வாடி வதங்கி கிடக்குறதை பாக்கவே முடியலை.. ஒரே ஒரு ரோஜாவை ஆசைக்குன்னு வச்சிக்குறது தப்புங்க..அதோட போலன் ஆணோடதோட சேரலைன்னா அந்த போலன் எல்லாமே வீண் தான்.  எதுக்கு வீணாக்கணும்? இந்த ரோஜாவே இவ்வளவு அழகுன்னா, இதுக்கு பொறக்குற ரோஜாக்கள் எத்தனை அழகா இருக்கணும்? அதை ஏன் வீணாக்கனும்?"என்ற சரவணனின் வார்த்தைகளை ஏன் தன்னால் உடனுக்குடன் நிராகரிக்க முடியவில்லை என்று புரியாமல் குழம்பி நின்றாள் ஸ்வேதா.

"அழகை மட்டும் பார்க்காதீங்க..அந்த அழகுக்கு பின்னால ஒரு இயக்கம் இருக்கு.  அந்த அழகை இயக்குகிற இயக்கம்ன்னு ஒண்ணு இருக்கு.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. இந்த உலகத்துல இருக்கிற எல்லா ரோஜாக்களையும்அழகை ரசிக்கிறேன் பேர்வழின்னு தலையில வச்சிக்கிறது. தலையில வச்சிக்கிறதுனாலேயே அதை வண்டு, பூச்சிங்க‌ அண்ட விடாம பண்றது, தொட்டி வச்சி அதை சுத்தி வலை கட்டுறதுன்னு செஞ்சா அந்த பூவினம் எப்படி மகரந்த சேர்க்கை செய்யும்? ஒரு பொண்ணை வயசுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்காம அவளோட அழகை ரசிக்கிறேன் பேர்வழின்னு வச்சி வச்சி பாத்துக்கிட்டே இருக்கிறதை எப்படி நியாயம்ன்னு வாதம் பண்ண‌முடியும்?" என்றான் சரவணன்.

ஸ்வேதாவுக்கு சரவணன் தனது கண்ணத்தில்  ப‌ளார் என்று அறைந்தது போலத்தான் இருந்தது.



தொடரும்....

ரியோ ஒலிம்பிக்ஸ்

$
0
0
ரியோ ஒலிம்பிக்ஸ்


"ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்திருக்கிறது. மல்யுத்தத்தில் சாக்ஷி.. பேட்மின்டனில் சிந்து. "

இதை எப்படி எடுத்துக்கொள்வது?

"பெண்கள் சாதித்துக்காட்டியிருக்கிறார்கள்.."என்று சொல்லி பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொள்ளலாமா? மேல் ஷாவனிசம் என்கிற சொல்லில் இருந்து தப்பிவிடலாம்.

"இந்திய விளையாட்டு சம்மேளனம் சரியான ஆட்களை நேரத்துக்கு சென்று சேர்க்கவில்லை.. நரசிங் யாதவ் ஒரு உதாரணம்"என்று சேற்றை வாரி இரைக்கலாமா?

"இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு விளையாட்டு. அது கிரிக்கெட் தான்"என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளலாமா?

"மற்ற விளையாட்டுக்களுக்கு பெரிதாக ஸ்பான்சர், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இல்லை"என்று வாதம் செய்யலாமா?




இதுதான் உண்மையான காரணமா?

சென்ற ஆண்டு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தா சாய்னா நேவால் இந்த ஒலிம்பிக்ஸில் என்ன ஆனார்? அவருக்கு ஏகோபித்த ஆதரவும், பொருளாதாரமும், ஸ்பான்சரும் இருந்ததே. அபினவ் பிந்த்ரா பணக்காரர் தானே. தொழிலதிபர் வேறு. யோகேஸ்வர், ககன் நரங போன்றவர்களுக்கு என்ன? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்பான்சர் இல்லை, சப்போர்ட் இல்லை என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. ஸ்பான்சர் , சப்போர்ட் இத்தியாதிகளுடன் தான் சாந்திக்களும், குற்றாலீஸ்வரன்களும் சாதித்தார்களா? ஸ்பான்சர், சப்போர்ட் இரண்டுமே இருந்த நர்சிங் யாதவின் கதி என்ன? அவரால் விளையாடவாவது முடிந்ததா? ஸ்பான்சர் சப்போர்ட் எதுவுமே இல்லாமல் 1983ல் இந்தியா உலகக்கோப்பை வாங்கிய பிறகு உலகின் பணக்கார கிரிக்கேட் வாரியமாக வளர்ந்த இந்திய கிரிக்கேட் வாரியத்தின் சப்போர்ட்டுடன் இந்தியா அடுத்த உலகக்கோப்பை வெல்ல 28 வருடங்கள் எடுத்துக்கொண்டதை எப்படி நாம் கணக்கில் எடுக்காமல் விட முடியும்? டென்னிஸுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு லியாண்டர் பேஸையே நம்பி இருப்பது?

இரு நூறு கோடி மக்கள் இருக்கிறார்கள். எத்தனை பதக்கங்கள் உருப்படியாக வெல்கிறோம் நாம்? இந்த ஒலிம்பிக்கோடு ஏற்கனவே அமேரிக்கா தனது 1000 ஒலிம்பிக் பதக்கங்களை பூர்த்தி செய்து உலக சாதனை செய்திருக்கிறது. மைக்கேல் பெல்ப்ஸ் மட்டுமே 23 தங்கங்கள்.  தங்கம் என்றால் இந்த மனுஷன் ஃப்ரீயாய் கிடைத்தால் மட்டுமே வாங்குவார் போல. ஜமைக்காவின் உசைன் போல்ட் ஹாட்ரிக் தங்கம் வாங்கி அசத்தியிருக்கிறார். நமக்கு எப்போதுமே பொருளாதாரத்தில் போட்டியாக இருக்கும் சீனா அமேரிக்காவுடனே போட்டி போடுகிறது பதக்கப்பட்டியலில். சீனா 65 பதக்கங்களுடம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

200 கோடி மக்கள். என்னதான்யா பிரச்சனை?

விளையாட்டு சம்மேளனம், வாரியம் என்பதெல்லாம் இந்தியாவில் பணியிடம் ம‌ட்டுமே. இல்லையெனில் சாந்தி, குற்றாலீஸ்வரனெல்லாம் எங்கே? இந்த இருவர் வெறும் பெயர்கள் தான். இதுபோல் எண்ணற்ற பெயர்களை சொல்ல முடியும். இதையெல்லாம் வைத்து நல்ல திறமையும் தகுதியும் ஆர்வமும் கொண்டவர்களை உண்மையில் இந்தியா மழுங்கடிக்கிறது என்று சர்வ நிச்சயமாக சொல்லலாம்.

ஜாதி என்கிற பெயரால். கலாச்சாரம் என்கிற பெயரால்.

மனசாட்சியுடன் பேசலாம். குடும்பம் என்கிற பெயரால். மக்கள் தொகையில் பாதிக்கு பாதி இருக்கும் பெண்கள் திறமைசாலிகளாக இருந்தால் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது நடக்கிறதா இல்லையா?. பொறியியல் மருத்துவம் என்று படித்துவிட்டு எத்தனை பெண்கள் சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, அமேரிக்கா போன்ற நாடுகளில், அட அவ்வளவு ஏன், இந்தியாவிலேயே குடும்பப்பெண்களாக குழந்தைகளை பேணும்படி அறிவுருத்தப்பட்டு, குடும்பம் என்கிற அமைப்பின் அருமை பெறுமைகள் குறித்து ஓதப்பட்டு திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு கிடக்கிறார்கள்? நம்மூரில் ஒரு பெண்ணால், ஒரு நாவல் புத்தகத்தை எடுத்து பெற்றோர் முன்னிலையில் நான்கு வரி வாசிக்க முடிவது எத்தனை வீடுகளில் நடக்கிறது? எத்தனை வீடுகளில் பெண்கள் எல்லோரும் உறங்கிய பிறகோ அல்லது தோழிகள் வீட்டுக்கு சென்றோ மறைத்து மறைத்து தனது இலக்கிய தாகத்தை தணித்துக்கொள்ளும் அவலம் நடக்கிறது? கலையில் ஆர்வம் இருப்பவனை நாம் எப்படி அணுகுகிறோம்? "இதெல்லாம் குடும்பத்துக்கு ஒத்துவராது"என்று தானே. சீரியலை விடாமல் பார்க்கும் தமிழ் சமூகம் தான் சீரியல் நடிகர்கள் யாருக்கும் வீடு தரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

பேமின்டன், செஸ், கவிதை எழுதுதல் போன்றவற்றில் திறமைகள் இருக்கும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்களா? "இன்னுமா கல்யாணம் ஆகலை? இன்னுமா குழந்தை இல்லை? வீட்டை பாரு முதல்ல.. பொண்ணுக்கு அதான் முக்கியம்"என்று அறிவுருத்தப்படுகிறார்களா இல்லையா? ஆண்களிடம் "பன்னிரண்டாவது பாஸ் பண்ணி டிகிரி படிச்சிட்டு வேலைல உக்கார பாரு.. அதான் குடும்பத்துக்கு ஆகும்"என்று சொலல்ப்படுகிறதா இல்லையா? விளையாட்டிலோ, கலையிலோ உற்சாகமாக இயங்கும் ஆணை "இந்த வரன் வேண்டாம்ப்பா.. எதுக்கு வம்பு"என்று புறக்கணிப்பது நடக்கிறதா இல்லையா? "அவன் ஏதோ சினிமாவுல இருக்கானாமே.. அவிங்களை எப்படிப்பா...வேணாம்"என்று சொல்கிறார்களா இல்லையா?

அதற்காக குடும்பமாவது மண்ணாவது? அந்த இழவை விட்டு வெளியே வா... விளையாடு பதக்கம் வாங்கு.. பிள்ளைகள் , குடும்பமெல்லாம் தானாக வரும் என்று சொல்லவில்லை.  அது என் நோக்கமும் இல்லை. எனது நோக்கம் குடும்பம் என்கிற் வாழ் நாள் பத்திரத்தை இழக்காமல் ஒருவருக்குள் இருக்கும் திறமைகளை எப்படி மீட்டெடுத்து வெளிக்கொணர்வது எனபது மட்டும் தான். ஏனேன்னில் பதக்கப்பட்டியலில் இருக்கும் பெயர்கள் எல்லாமும் அப்படி வந்தவையே என்று சொன்னால் மிகையாகாது தோழர்களே.

ஸ்டெஃபி க்ராஃப், ஆந்த்ரே அகாஸி தம்பதிகள் ஒரு உதாரணம். இருவருமே டென்னிஸ். இருவருமே விளையாட்டுக்கென உழைத்தவர்கள். ஒரே விதமான ஆர்வங்கள். ஒன்றாக இயங்க முடியும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்ள முடியும். லைலா அலி - கர்டிஸ் கான்வே தம்பதி போல் ஏராளம் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் இங்கே அமேரிக்காவில் நான் வழமையாக செல்லும் ஜிம்முக்கு காதலர்களாகத்தான் வருகிறார்கள். தம்பதிகளுமாகத்தான். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக வாழ்வில் இணைய நேர்வதே அமேரிககவின் பதக்கப்பட்டியலுக்கு காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

நம்மூர் இதற்கு நேரெதிராக இயங்கும் தன்மையது. முக்கிய காரணம்  ஜாதி. ஜாதகம்.

கிரிக்கெட்டில் பார்ப்பனர் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. அன்றைய ஸ்ரீகாந்த் முதல் இன்றைய அஸ்வின் வரை பட்டியலிடலாம். ஒரு வீஜே திருமணமான பத்தே நாளில் விவாகரத்து செய்தார் என்கிறார்கள். இத்தனைக்கும் ஜாதி என்பதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்.

1. ஜாதி என்பதெல்லாம் முதல் மணத்திற்குத்தான் செல்லுபடியாகிறது. விவாகரத்தாகி மறுமணமென்றால் ஜாதிக்குள்ளேயே ஒதுக்கிவிடுகிறார்கள். ஒரு திருமண தகவல் மையத்துக்கு போய் பாருங்கள். மறுமணத்திற்கு வரும் பெண்களோ, பையன்களோ ஜாதி பார்ப்பதே இல்லை. ஏனெனில் ஜாதிக்குள் மறுமணம் என்பதே கிடையாது. கஷ்டமோ நஷ்டமோ சகித்து வாழ் இல்லையென்றால் செத்துப்போ. இதுதான் எழுதப்படாத விதி. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் "தலையெழுத்து"என்ற ஒற்றை வார்த்தையோடு நின்றுவிடுவார்கள்.

2. நீதிமன்றங்களுக்கு சென்றால் பெரும்பான்மை விவாகரத்துகள் ஒரே ஜாதிக்குள் நடந்த திருமணங்களாகத்தான் இருக்கின்றன. தனது ஜாதி குறித்து  சுய தம்பட்டம் அடிப்பவர்கள் ஒரு முறை நீதிமன்றங்களுக்கு விசிட் அடிப்பது நல்லது. ஜாதிக்குள்ளேயே பார்க்கிறேன் பேர்வழி என்று பெண்ணின் 31 வயது வரை வைத்திருந்துவிட்டு 31 தாண்டியபிறகு  எந்த ஜாதியானாலும் பரவாயில்லை என்கிற அளவிற்கு கீழிறங்கினால் உருப்படியான மணமகன்கள் அப்படியும் கிடைக்காமல் திண்டாடுவதில் தான் போய் முடிகிறது.

ஒத்த கருத்துடையவர்கள், ஒரே விதமான ஆர்வங்கள் உடையவர்கள் என்னும்போதும் மனப்பொருத்தமே தம்பதிகளுக்குள்ளான இணக்கத்தை அதிகப்படுத்துவதுடன், வாழ்க்கையில் ஒரு முழுமை கிடைக்க வழி செய்கிறது. ஒரே விதமான ஆர்வங்கள் இல்லாமல் போகையில் பொருளாதாரம், சுகாதாரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டி வருகிறது. இது பெரும்பாலும் வாழ்க்கையின் முழுமையை அடைய அனுமதிப்பதே இல்லை. இதை நம்மூரில் சொன்னால் "நீ என்னவா வேணா இருக்கலாம். ஒரு பொண்ணுக்கு உன்னை புடிக்கணும்"என்று பெண்களே பேசுகிறார்கள் தாம். இப்படி இருந்தால் எங்கே ஐயா பதக்கம் வெல்வது?

சச்சின் இது போன்ற நிர்பந்தங்களுக்கு பணிந்து ஒதுங்கிவிட சச்சினின் ஒட்டுமொத்த பலத்தில் பத்தில் ஒரு பங்கே உள்ள ஒருவர் சச்சினானால் எப்படி இருக்கும்? கற்பதை செய்து பாருங்கள். என் பார்வையில் சிந்து, சாக்ஷி, அபினவ் போன்ற எல்லோரையுமே ஒரிஜினலில் பலத்தில் பத்தில் ஒரு மடங்கு கொண்டவர்களென்றே நான் பார்க்கிறேன். சச்சினையே நான் அப்படித்தான் பார்க்கிறேன்.சத்தியமாக இதுதான் என் பார்வை. இந்த என் பார்வையை நான் எப்போதும் எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ள போவதில்லை.. ஏனெனில் அத்தனை ஆழமாக இந்த பார்வை மீது எனது நம்பிக்கைகளை கட்டமைத்திருக்கிறேன். வேண்டுமானால் இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் இந்த எனது பார்வையை தவறு என்பதாக நிரூபிக்க போதுமான சான்றுகளும் விளக்கங்களும் தரலாம்.

இங்கே அமேரிககவில் அது போல் எண்ணற்ற தம்பதிகளை பார்க்கலாம். ஒருங்கே பயணம் செல்பவர்கள், ஒருங்கே ஆராய்ச்சி செய்பவர்கள், ஒருங்கே விளையாட்டில் ஈடுபடுபவர்கள், ஒருங்கே திரைத்துறையில் இருப்பவர்கள் என்று ஏகத்துக்கும் காட்டலாம். புரிதலை சார்ந்தே துணைகளை தேடிக்கொள்கிறார்கள் என்பதையே வெவ்வேறு வார்த்தைகளில் நான் புரியவைக்க விரும்புகிறேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அமேரிக்கா அமேரிக்காவாய் இருப்பதற்கும், சீனா சீனாவாய் , இந்தியா இந்தியாவாய் இருப்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. புரிதலை சார்ந்து உருவாகாத ஒரு சமூக அமைப்பில் கூச்சலும் குழப்பங்களும், அதன் விளைவாக நிம்மதியின்மையும் விரயங்களும் மிகுக்கத்தான் செய்யும்.

இந்த கட்டுரையின் 2, 3, 4, 5வது பாராக்களை நான் அவ்விதமான கூச்சலாகவும், குழப்பமாகவுமே பார்க்கிறேன். இந்த கருத்தையும் நான் எக்காலத்திலும் மாற்றிக்கொள்ள போவதில்லை என்றே நம்புகிறேன்.



காதல் கதைகள் - 3

$
0
0
காதல் கதைகள் - 3


"ஈவ் டீசிங்ன்னு போலீஸ்ல புடிச்சு கொடுத்திடுவேன்... இடியட்.. பெரிய ஜீனியஸ்ஸுன்னு நினைப்பு.."

சட்டை செய்யாமல் ஸ்வேதா தன் போக்கில் ஸ்கூட்டியை முறுக்குகையில் அந்த வார்த்தைகளை அத்தனை கோர்வையாய் பிசகில்லாமல் எப்படி சொன்னோம் என்பது வெகு நேரமாய் அவளது மனதோரம் பருக்கை சோற்றோடு அகப்படும் சிறு கல்லாய் உறுத்தியபடியே இருந்தது.

"பெரிய்ய்ய்ய இவன்.. செஞ்ச வேலைக்கு விளக்கம் வேற"




தனக்குள் வந்து விழும் அந்த வார்த்தைகளில் ஒரு பழக்கப்பட்ட உணர்வின் ஆதிக்கம் இருப்பதை அவளால் உணர முடிந்ததே அன்றி அது என்ன உணர்வு என்பதை அவளுக்கு தெரியப்படுத்த அவளது முதல் ஆண் மகன் பூப்படையும் பருவம் வரை காலம் அவளை காத்திருக்க வைக்குமென்பதை அப்போது அவள் உணரவில்லை.. 'இந்த ஓவரா ஃபீல் பண்றவய்ங்களே இப்படித்தான்டீ.. தேவையில்லாததுக்கெல்லாம் ஃபீல் பண்ணி கொல்லுவாய்ங்க'என்றோ ஒரு தோழி ஒரு பேருந்து பயணத்தில் பகிர்ந்துகொண்டபோது சொன்னது நினைவுக்கு வந்தது. அறிவைக்குறித்து தேவன் சொல்லிக்கொண்டிருந்தபோது செந்நிற ஆப்பிளைக் காட்டி ஏவாளின் கவனத்தை பிசகச்செய்த சாத்தானின் கைங்கரியமே அறிவின் மீதான, அது விளைவுகளை குறித்து முதல்களை தெரிவு செய்யும் இயல்பின் மீதான ஏவாளின் மழுங்கிய மூளை நரம்புகள் என்பதை ஸ்வேதாவோ, அவளது தோழியோ அந்த பேருந்து பிரயாணத்தில் உணர்ந்திருக்க நியாயமில்லை.

ஒரு பேரழகியை அணுகி அவள‌து நட்பை பெற முதலில் ஆராதிப்பவனின் ஆடைகளை ஆண் பூண வேண்டும் என்கிற ஏவாளின் ஆப்பிள்க‌ள் விதித்த விதிகள் ஏதும் அறிந்திராத‌ சராசரி சரவணன் மிகத்துல்லியமாக தான் உதிர்த்த வார்த்தைகளில் தான் எங்கோ பிழையென தவறாக கணித்திருந்தான்.

அவன் அவளிடம் அணுகியதையும் எதுவோ சொன்னதையும், அதை அவள் மட்டுருத்தி அலட்சியமாக கடந்து போனதையும் அந்த சாலையின் அந்த நேரத்து மனித முகங்கள் ஒரு கேலிச்சிரிப்புடன் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்த மாத்திரத்தில் அவனது உள்ளங்கைகள் வியர்த்தது. அகத்தின் நிலைப்பாட்டை எட்டப்ப நரம்புகள் காட்டிக்கொடுக்க தேர்வு செய்த அவனது முகம் ஓரு மோசமான தேர்வு.

அந்த முகங்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்குமென்கிற கற்பனை போனது. அந்த முகங்களில் எதேனும் ஒன்றோடு பின்னாளில்  ஒரு சந்திப்பு நிகழுங்கால், ஸ்வேதாவின் புறக்கணிப்பின் பின்னணியில் அந்த முகத்தின் முன் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது என்கிற மனக்குழப்பம் வந்தது. அதே நேரம், ஸ்வேதா உடனான அடுத்தடுத்த அணுகல்களை ந்டந்த புறக்கணிப்பின் பின்னணியில் நியாயப்படுத்திக்கொள்ளும் நிர்பந்தமும் சேர்ந்து கொள்ள, அந்த கலவையான குழப்பத்தை புன்சிரிப்பால் மறைக்க முயன்றான் சரவணன்.

'இவள் இவனுக்கு பழக்கமானவள் தான்..ஏதோ கோபம்'என்றோ, 'இது அவள் மீதான இவனது வெற்றிக்கான முதல்படி'என்றோ, 'அந்த பெண்ணே மதிக்கும் ஆடவன் தான் இவன்.. இன்று ஏதோ மனத்தாங்கல்'என்றோ, 'பணக்காரன்... இதெல்லாம் பணக்காரனின் அந்தப்புற‌ விளையாட்டு'என்றோ தன்னை காண நேர்ந்த முகங்கள் தங்களுக்குள் அனுமானித்துக்கொள்ள வேண்டுமே என்று உள்ளூர விரும்பினான் சரவணன். அந்த நான்கு அர்த்தங்களில் கடைசி அர்த்தத்திற்கே அந்த இனிய மாலை பொழுதின் அவளது நிராகரிப்பு பொருத்தமாக இருக்குமென்பதை உணர்ந்த நொடியில் சற்று கலங்கியும் போனான். ஸ்வேதா மீதான தன்னுடைய அணுகுமுறையை உள்ளது உள்ளபடி அர்த்தப்படுத்த வேண்டிய பொருப்பை ஸ்வேதா அத்தனை அலட்சியமாய் தட்டிக்கழித்து சென்றது உள்ளுக்குள் எங்கோ நறுக்கென்று குத்தியது.  தன்னைக்குறித்து பிறமுகங்கள் மத்தியில் தனக்கு சற்றும் பொறுத்தமில்லாத அர்த்தங்களை ஸ்வேதாவின் பதில் கற்பிக்க முயல்வது குறித்து துல்லியமாய் அவனது வேட்டை ஆண் மனம் விழிப்புடன் கிரகித்தது. தனக்கு சற்றும் பொருந்தாத அர்த்தங்களை வலுக்கட்டாயமாக தன் மீது திணிக்கும் ஸ்வேதா குறித்து லேசாக கோபம் வந்தது.

கலவையான எண்ணங்களாலும், உணர்வுகளாலும், கொந்தளிப்புடன் குழம்பிய மனத்தை மறைத்த போலி புன்னகையுடன் நடந்த அவனை எப்போதும் போல‌ உள்வாங்கி உருமி எழுந்து நான்கு கால் பாய்ச்சல் காட்டி ஓடியது அக்கார்டு.

காதல் கதைகள் - 4

$
0
0
காதல் கதைகள் - 4



வீட்டுக்கு வந்ததும் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு ஆடைகள் களைந்து ,  ஷவரில் நின்றான். தன் நிர்வாண உடலை நீர் தொட அனுமதித்தான். அந்த நீரில் தான் இருளடைந்த கருவறையில் பத்து மாதம் நீந்திக்களித்திருந்தான் என்பதால்.

ஆடைகள் அணிந்துவிட்டு மடிக்கணிணியுடன் அம்மா தந்த தேனீருடன் மொட்டை மாடியில் மங்கிக்கொண்டிருக்கும் நீல வானத்தை குடையாய் பிடித்து நின்றான்.

மாலையில் நடந்தவைகள் நினைவுக்கு வந்தன.

மடிக்கணிணியை நீள் உறக்கத்தினின்றும் எழுப்பி முக நூலை திறந்தான். ஸ்வேதாவின் கணக்கை தெரிவு செய்தான். அவள் விளையாட்டு, ஆடல், பாடல், கவிதைகள், இலக்கியம், சமையல், திரைப்படங்கள் என எவ்விதமான குழுமத்திலும் தன்னை இணைத்திருக்கவில்லை. அவனது கணக்கில் இருந்த நவீன உலக திரைப்படங்கள் , ஓவியம் போன்ற எதுவும் அவளது கணக்கில் இருக்கவில்லை.

ஏதேனும் அறிவுப்பூர்வமான தளத்திலோ, குழுமத்திலோ தன்னை இணைத்திருப்ப்பின், அதில் தனக்கும் ஆர்வமிருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதின் மூலமாக அவள் தன்னுடன் எத்தனை சதவீதம் ஒத்துப்போவாள் என்று ஓரளவுக்கேனும் ஊகிக்க வாய்ப்பிருந்திருக்கும். அப்படியேதும் இல்லை எனும்போது, நாகரீகமான முறையில் ஒரு முதல் அறிமுகம் கொள்ள மார்க்கமேதும் இல்லாதிருப்பது தன் வேலையை மென்மேலும் கடினமாக்குவதாக உணர்ந்தான் சரவணன்.

மறு நாள் அவன் அவளுடன் எப்படியேனும் ஓர் அறிமுகத்தை செயற்கையாக வெற்றிகரமாக உருவாக்கிவிடுங்கால் கூட வேறு யாரேனும் அண்டி ஏதேனும் கேட்டால், அவளுடனான தனது அணுகுமுறையை எவ்விதம் நியாயப்படுத்திக்கொள்வது, தனது நிலைப்ப்பாடாய் எதை கொள்வது என்கிற பெரும் குழப்பம் அவனுள் பூதகாரமாய் நின்றது.


அவளுடன் நட்பேற்படித்திக்கொள்ள தன்னிடமிருக்கும் ஆர்வம் போல அவள் தரப்பில் ஏன் இல்லை என்கிற யோசனை வந்து, இறுதியில் ஆண் பெண் வேதியியலில் பெண்ணுக்கு சாதகமாய்  அழகையும் வனப்பையும் பெண்ணிடமே தந்து தொலைத்திருக்கும் இயற்கையை கடிந்து கொள்ள நேரிட்ட எத்தனையோ ஆண் மகவுகளில் அவனும் அந்த நொடிப்பொழுதில் சேர்ந்துகொண்டான்.

ஸ்வேதா எந்த குழுமத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளாதிருப்பது, அவளுக்கு எது குறித்தும் தனிப்பட்ட பார்வை இல்லாததை அப்பட்டமாய் குறிப்புணர்த்த, அவளை குறித்து செய்யப்படும் ஓப்பீடுகளில் அவள் தன்னையும் விட தாழவே இருக்கையில் எதன் பொருட்டு அவளிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது என்கிற கேள்வி எழுப்பும் ஆழ்மனத்திற்கு பதிலேதும் தரமுடியாதவனாய் அந்த பரந்த வானத்தின் கீழ் ஒரு துரும்பென நின்றான் சரவணன்.

பொதுவான அறிவுப்பூர்வமான ஆண் பெண் உறவாக ஸ்வேதாவுடன் ஒரு நட்பை உருவாக்க விரும்பும் தனது விருப்பம் ஒருபக்கம் இருக்க, அவளோ தன்னை நெருங்க நினைக்கும் எந்த ஆடவனுக்கு இலக்கற்ற, தலைப்பற்ற, அறிவுக்கு எவ்வித வேலையும் அற்ற காமத்தை மட்டுமே மையப்படுத்தக்கூடிய கீழ்த்தரமான ஓர் வழிசலுக்கு  மட்டுமே ஸ்வேதா இடம் அளித்திருப்பது ஸ்வேதா குறித்து மிகவும் தாழவே ஒரு மதிப்பீட்டை சரவணனுக்குள் உருவாக்கியிருந்தது.

அறிவுப்பூர்வமான ஆண் பெண் உறவாக ஸ்வேதாவுடன் ஒரு நட்பை உருவாக்க விரும்பும் ஆடவனாக தான் இருக்க, தனது நடத்தையை நான்கு பேர் முன்னிலையில் பணக்காரனின் அந்தப்புர விளையாட்டென ஓர் பொருந்தாத அர்த்தத்திற்குள் திணிக்க முயலும் ஸ்வேதா எவ்வகையில் பிற்காலத்தில் தன்னில் பாதியாய் இருக்கப்போகிறாள் என்கிற பெருங்குழப்பம் அவனுள் வந்திருந்தது.

தன் மேல் ஆர்வம் கொண்டு தன்னிடம் நட்பு நாடி வந்த சரவணன் என்கிற ஆண் மீது, தகுதி வாய்ந்த நேர்மையான ஆணின் நோக்கங்களை, இலக்குகளை, அர்த்தங்களை புறக்கணித்துவிட்டு, அந்த ஆணின் தரப்பிலொரு குறுகிய கீழ்மையான தட்டையான ஒற்றை பரிமாணம் மட்டுமே கொண்ட ஓர் அர்த்தத்திற்குள் அவனை புகுத்தி தன்னை அண்டுமாறு நிர்பந்திக்கச்செய்யும் விதத்தில் தான் தனது அணுகுமுறை இருந்திருக்கிறது என்கிற புரிதலேதும் அவள் வயதொத்த எல்லா பெண்பிள்ளைகளைப்போலவும் ஸ்வேதாவிடமும்அ இருந்திருக்கவில்லை.

'வேண்டுமென்றால் தொடர்ந்து வரட்டும்'என்கிற ஒற்றை சாளரத்தை மட்டுமே அவனுக்காக அவள் திறந்து வைத்துவிட்டு ஏனைய அனைத்து சாளரங்களையும் அவள் மூடியே வைத்திருந்தாள் அல்லது சாளரங்களின் இருப்பையே உணராதவளாய் அவள் இருந்தாள்.


 - தொடரும்...

காதல் கதைகள் - 5

$
0
0
காதல் கதைகள் - 5


அந்த மாலை வேளையில் ஸ்வேதா எப்போதும் தனது ஸ்கூட்டியை நிறுத்திமிடத்தில் வந்து ஸ்வேதாவின் வருகைக்கென‌ காத்திருந்து சரவணன் தனக்குள்ளாகவே முரண்பட்டுப்போனான்.

"இப்படியெல்லாம் பண்ணா வேலைக்காவாது மச்சி..  அவனவன் பிக்கப் பண்ண என்னென்னவோ பண்ணிக்கிட்டு இருக்கான்..  நீ என்னடான்னா குற்றம் நடந்தது என்னன்னு பேசிக்கிட்டு இருக்க.. போ மச்சி..பொழைக்கிற வழியைப் பாரு"

சற்றேரக்குறைய இப்படித்தான் சொல்பவர்களாக எல்லா ஆண்களும் இருக்கிறார்கள் என்பது சரவணனுக்கு ஜீரணிக்க கடினமாக இருந்தது. அக மனத்தின் ஒரு பக்கம் அங்கு வந்து நின்றதற்காய் அவனை சாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் இன்னொரு பக்கம் அதுதான் அப்போதிருந்த ஒரேயொரு வழியென சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தது.



யாரேனும் கொஞ்சம் தைரியப்பட்டு ஏதேனும் கேட்குங்கால் "உன் வேலையை பாருடா"என்று சொல்ல வேண்டுமென்று முடிவு செய்த வேளையில் அந்த வாக்கியத்தில் திமிருக்கான அத்தனை சாயல்களும் அட்சரம் சுத்தமாக பொருந்தியிருப்பதை அவன் உணராமல் இல்லைதான். யாரும் எதுவும் கேட்காமல் போனால் நன்றாக இருக்குமென்று உள்ளூர தோன்றியது.

அக்கார்டு மீது சாய்ந்து நின்றவன், எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தபடி தன்னை சேகரித்துக்கொள்வதை தொலைவிலிருந்தே பார்த்தும் பாராதவள் போல் வந்துகொண்டிருந்தாள் ஸ்வேதா.

அவள் பின்னே சுற்றிய சில பத்து பேர்கள் போல் அவன் இருக்கவில்லை என்பதாக அவளுக்கு பட்டது. அக்கார்டு யாருடைய பணம் என்று பின்னெப்போதாவது நெருங்கிவருகையில் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். இயல்பான பரிச்சயம் உருவாவதற்கான வெளிக்கு அப்பால் வெகு தொலைவில் இருக்க நேரும் ஒரு தகுதியான ஆணைக் குறித்து எடுத்தவுடனே முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் நெருங்கி பேசியதை ஒருவாறு அவள் புறக்கணிக்க மனதளவில் தயாராகிவிட்டிருந்தாள்.

ஸ்வேதா என்கிற தவளை வாழும் கிணற்றுக்கு வெளியே சரவணனின் முக நூல் பக்கம் இருந்தது யாருடைய துரதிருஷ்டம் என்பதை தெரிவிக்கும் காகிதத்தை காலம் தனது உள்ளங்கையில் மூடித்தான்வைத்திருந்தது. அந்த காலத்தை சற்றே சுருக்கி எட்டிப்பிடிக்கும் திறனற்றவளாகத்தான் ஸ்வேதா இருந்தாள் என்கிற மாபெரும் பிழையை கண்டெடுப்பதிலிருந்து, பெண் குறித்த, அவளின் புழங்கு வெளி குறித்த, அதீத பரிதாப உணர்ச்சி சரவணனின் கண்களை மறைத்ததில் ஆச்சர்யமொன்றும் இருக்கவில்லை.

அவனின் உயரம், ஆடை தேர்வு, அக்கார்டு கார், எல்லாவற்றையும் விட‌, தன் மேல் அவனுக்கிருக்கும் ஆர்வத்தையே அவள் அதிகமாக மதிப்பிட்டாள்.


அவனை இன்னும் கொஞ்சம் அலைய விட்டு பார்ப்போம் என்று முதலில் தோன்றியதை ஒரு அதீத நடுவு நிலை மனப்போக்கில் நிராகரித்துவிட்டு பிற்பாடு ஆதி ஏவாளின் ஆலோசனையின் பேரில் ஏற்றுக்கொண்டாள். சாலைக்கு மிக அருகாமையில் வந்துவிட,

"ஹலோ"என்றான் சரவணன்.

ஸ்வேதா பார்த்தும் பாராதவள் போல நேராக தனது ஸ்கூட்டியை நெருங்கினாள்.

"என்னங்க? எனி ப்ராப்ளம்?"என்ற கரகரப்பான கடுமையான ஆண் குரல் கேட்டு இருவருமே திடுக்கிட்டு திரும்பினார்கள்.


 - தொடரும்



Viewing all 1140 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>