Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all 1140 articles
Browse latest View live

கேரள நிர்பயா

$
0
0
கேரள நிர்பயா



கேரளாவின் ஜிஷாவை கேரள நிர்பயா என்கிறார்கள்.

ஜிஷா ஒரு தலித். லா படித்துக்கொண்டிருந்தவர். (லா என்றால் ஷகிலா அல்ல. சிவில் லா, கிரிமினல லா... அந்த லா)

அவர் வீட்டுக்கு அருகாமையில் கட்டிட வேலைக்காய் வந்த அசாமை சேர்ந்த ஒருவனால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கல்லீரல் இருதயம் என சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு உயிரற்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வழமைபோல "ஆண் நாய்கள், ஆணாதிக்கம், பெண் சுதந்திரம்"என்கிற கோணத்தில் பிய்த்து  பீராய்ந்து கொண்டிருக்கின்றன.



2012 ல் நிர்பயா கேஸ் வந்த போதே, தற்காப்புக்காக கராத்தே கற்றுக்கொள்வது, மிளகாய்ப்பொடி தூவுவது, அவசர உதவிக்கென அலைபேசி எண் என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நிலை தான் இருக்கிறது. இந்த முறை சிக்கியிருப்பது ஒரு தலித் பெண் என்கிற தகவல் மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். கேரள நிர்பயா என்கிற tagging கே கூட‌ இவ்விஷயத்தை ஆணாதிக்கம் பெண்ணுரிமை என்கிற கோணத்தில் வழி நடத்தி போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஜிஷா விவகாரத்தில் வேறு சில பக்கங்களும் இருக்கின்றன.  ஜிஷா ஒரு தலித் என்பதே ஒரு மிகப்பெரிய பக்கம் தான். சமூகத்தில் தலித்கள் புறக்கணிக்கப்படுவதால் வரும் பிரச்சனை என்றும் இதை கொள்ளலாம். தலித் என்று தெரிந்தால் வீடு தர மறுக்கிறார்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் தரும் குவார்டர்ஸ் மூலமான ஒரே பொருளாதார பின்னணி, வாழ்க்கைமுறை, கல்வித்தகுதி கொண்ட சக மனிதர்களுடன் பழகக்கூடிய சுற்றுச்சூழல் தானாகவே அமைந்துவிடுகிறது. அரசு வேலை இல்லாத தலித்வகளுக்கு?

அவர்களுக்கு வீடு மறுக்கப்படுகையில், வேறு வழியில்லாமல் கிடைத்த இடத்தில் ஒண்ட வேண்டியதாகிவிடுகிறது. பொருளாதாரம், சிந்தனா முறை, கல்வி போன்ற எந்த வகையிலும் பொறுத்தமில்லாத ஒரு கூட்டத்திற்கு நடுவே வாழ்ந்தபடிதான் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிட்டத்தட்ட எல்லா தலித்களுக்குமே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரியும். பாலியல் தொல்லைகள், குடித்துவிட்டு ரகளை செய்வது, வேண்டுமென்றே படிக்க விடாமல் செய்வது, மீறினால் மூர்க்கமாக தாக்குவது, இது போல் இன்னும் எத்தனையோ தொல்லைகளுக்கு நடுவேதான் ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன் "இட ஒதுக்கீடு"என்கிற ஒரே ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறது. (வன்புணர்வும் கொலையும் நடந்த இடத்தை பார்த்தால் புரியும்)



மற்ற ஜாதிக்காரர்கள் ஒருவரையொருவர் அங்கீகரித்துக்கொள்கிறார்கள் என்னும்போது அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லை. நல்ல சுற்றுச்சூழலே முன்னேறுவதற்கான அடிப்படை தளத்தை உருவாக்கிவிடும். தலித்களுக்கு பெரும்பாலும் அந்த செளகர்யம் கிட்டவே கிட்டாது.

இந்த பின்னணியில் ஜிஷா வன் புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். மாறாக கேரள் நிர்பயா என்று tag செய்வது விவகாரத்த்தை வேறொரு கோணத்தில் திசை திருப்பி கவனங்களை சிதறடிக்க செய்யும் என்றே தோன்றுகிறது.

கட்டிடம் கட்ட, சித்தாள் முதலான கூலி வேலைகளுக்கென தமிழகம் வரும் வெளி  மாநிலத்தவர்களால் நேரும் படுகொலைகள் வரிசையில் கூட ஜிஷா கேஸை அணுக முடியும். எண்ணற்ற நிகழ்வுகளை சொல்ல முடியும் என்றாலும் பெண்களுக்கு எதிராக எனும்போது டி.சி.எஸ் பெணி மகேஸ்வரி கொலையை சொல்லலாம். இதுவும் பாதுகாப்பற்ற மாலை மங்கிய சூழலில் நேர்ந்த குற்றமே.

நடந்த சூழலை கவனித்தால் மகேஸ்வரி கொல்லப்பட்ட சூழல் அப்படியே ஒரு தலித்தின் தினசரி வாழ்க்கையை ஒத்திருக்கிறது. பொருளாதாரம், வாழ்க்கைமுறை, சிந்தனா முறை போன்ற எதிலும் பொறுந்தாத மனிதர்களை எதிர்கொள்ள நேர்கையில் பாதுகாப்பற்ற தன்மை உருவாகிவிடுகிறதுதான்.

ஒரு தலித் இப்படியான சூழலை தினம் தினம் கடக்க வேண்டி இருக்கிறது என்கிற ரிஸ்கை கணக்கில் கொண்டால் தலித்திற்கு வழங்கப்படும் 'இட ஒதுக்கீடு'மிக மிக மிக குறைந்த சலுகை என்றே நினைக்கிறேன்.  எல்லாவகையிலும் ஒதுக்கிவிட்டு இட ஒதுக்கீடு என்ற ஒன்றே ஒன்றால் சமன் செய்துவிட்டதாக ஒரு பக்கம் சொல்லப்படுகிறபோது, இன்னொரு பக்கம் இட ஒதுக்கீட்டை தராதே என்கிற கோஷங்களும் கேட்கின்றன.

இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல்பவர்கள் தங்களுக்குள், தங்களில் ஒருவராக தலித்தை அங்கீகரிப்பார்களா? அது நடக்கவே நடக்காது.

உள்குத்து செய்வார்கள் பாராமுகம் இருக்கும். புத்திசாலித்தனமாக புறக்கணிப்பார்கள். முதுகுக்கு பின்னால் பேசுவார்கள். மீண்டும் செக்கு மாடாக்க முயல்வார்கள். இளவரசன்களும், கோகுல் ராஜ்களும் தொடர்ந்து மர்மமான முறையில் கொல்லப்படுவார்கள். அப்படி கொல்லப்படுபவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்லவும் ஒரு கும்பல் எப்போதுமே தயாராக இருக்கும். இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தான் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அரசு.

மற்ற ஜாதிக்காரர்கள் தலித்களை புறக்கணிப்பதே இட ஒதுக்கீடு என்ற ஒன்று நிலைப்பதற்கு காரணம் என்றே நினைக்கிறேன்.  இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டுமானால், தலித்கள் ஒரு சமூகத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். இரண்டில் ஒன்று தான் நடக்கும் என்றால் அது எது என்பதைத்தான் நாம் முடிவு செய்ய வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை அங்கீகாரம் கிடைக்காது என்கிற அடிப்படையிலிருந்து தான் இடஒதுக்கீடு பிறக்கிறது.

இக்காலங்களில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கோஷம் போடுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதம், இடஒதுக்கீடால் பொறியியல் மருத்துவ கல்லூரிகளிலும், ஐடி கம்பெனிகளிலும் தனக்கு அருகாமையில் அமரும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலான தலித்களை பார்த்துத்தான் கோஷம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.

உண்மையில் இட ஒதுக்கீடால் இப்படி தினம் தினம் பொறுத்தமில்லாத சூழலிலிருந்து விடுபட்டு, தனக்கும் தன் அறிவுக்கும், கல்வித்தகுதிக்கும் பொருளாதாரத்திற்கும் பொறுத்தமான இடங்களை சென்றடைவதின் மூலம் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் தலித்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். இவர்களுக்கு தலித்களின் உண்மையான பிரச்சனைகளான சுற்றுச்சுழலில் பொருளாதாரம், கல்வி போன்ற விஷயங்களில் பொறுத்தமில்லாமை, சரியாக வழி  நடத்தக்கூடிய நபர்கள் குடும்பத்தில் இல்லாமை போன்ற எண்ணற்ற காரணங்கள் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது "தலித்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன?"என்று கேள்வி கேட்பதம் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். உடைந்த டேப் ரெக்கார்டர் போல, "இடஒதுக்கீடால் தூங்கி தூங்கியே மேல வந்துட்டான்"என்பதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எவ்வித புரிதலும் இல்லாதவர்கள் இவர்கள் என்பதை.

இந்த ஜிஷா ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்திருந்தால், மரணத்தை விடவும் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்திருக்கும். நடந்த வன்புணர்விலிருந்து மன ரீதியாக அவர் தன்னை சேகரித்துக்கொள்ள கால தாமதம் ஆகும். அதற்குள் அவரது ஆண்டுத்தேர்வுகள் கடந்து போக நேரலாம். பார்க்கப்போனால் ஒவ்வொரு தலித்திற்கும் இது போல் ஏதாவது ஒரு பேரிடர் வந்து, அதனால் அவனது கல்வியோ, அகமோ பாதிக்கப்படுகிறதுதான். இளவர்சன் மரணத்தின் போது ஒரு கிராமமே எரிக்கப்பட்டது. அந்த கிராமத்திலும் அக்கம்பக்கத்து கிராமத்திலும் எத்தனை தலித் பிள்ளைகளால் அந்த வருடம் பத்தாவது பன்னிரண்டாவது பொதுத்தேர்வு எழுத முடிந்திருக்கும்?  அது அவர்களது குற்றமா? ஒவ்வொரு கிராமத்திலும் தலித் மரணித்தால் பிணத்தை ஊரைச்சுற்றித்தான் கொண்டு போக நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதை கண்முன்னே பார்க்க நேரும் ஒரு பதினைந்து வயது தலித் மீது திணிக்கப்படும் உளவியல் ரீதியிலான மனப்போக்குகள் அவனை அவனது கல்வியிலிருந்து எத்தனை தூரம் விலகிச்செல்ல வைக்கும்? அதை எதிர்த்து போராடித்தான் அவன் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இத்தனை பிரச்சனைகளை மற்ற ஜாதிக்காரர்கள் எதிர்கொள்கிறார்களா? இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் தலித்களுக்கு மதிப்பெண்களில் சலுகை அளிப்பதற்கு பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடையும் இன்னல்களின் மீதான முழுமையான புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் இல்லாதவர்களால் தான் அதை புரிந்துகொள்ள முடியாமல் இடஒதுக்கீடு மீது கோஷம் எழுப்ப முடிகிறது. ஏழாவது எட்டாவது தலைமுறையாக பொறியியல் மருத்துவம் படித்த படிக்கின்ற படித்து செட்டிலான மேட்டுக்குடி மக்களுக்கு கம்ப்யூட்டர் புரிகிறது, சிக்கலான பொறியியல் கணக்கு, ஸ்டேடிஸ்டிக்ஸ் , ஸ்டாக் எக்ஸ்சேன்ச் எல்லாம் புரிகிறது ஆனால் இது மட்டும் புரிய மறுப்பதுவும், புரிந்து கொள்வதையே புறக்கணிப்பதும் தான் உண்மையான உளவியல் பிரச்சனைகள் என்கிற புரிதலில் தான் யாருக்கு உண்மையிலேயே உளவியல் ரீதியிலான மருத்துவம் தேவைப்படுகிறது என்பது இருக்கிறது.





குங்குமம் (20-06-2016) இதழில் எனது 'அப்ளிகேஷன்'ஒரு பக்க கதை

$
0
0
20-06-2016 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் 'அப்ளிகேஷன்'என்ற தலைப்பிலான எனது ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையின் பிரதி கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்..

நாவல் மற்றும் குறுங்கதை

$
0
0
நாவல் மற்றும் குறுங்கதை



150 பக்கங்களோடு நின்றுவிடும் என்றுதான் நினைத்தேன்.

ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்ல ரயிலில் பயணிக்கையில், கொண்டு செல்லும் உணவை சூடு செய்ய காத்திருக்கையில், மீட்டிங்கில் மொக்கையாய் யாரோ மொக்கை போடுகையில், சிக்னலில் காத்திருக்கையில் என்று காலம் நிதானமாய் கடக்கும் போதெல்லாம் ஏதேனும் தோன்றி, அதையும் நாவல் அத்தியாயங்களோடு சேர்க்க சேர்க்க ஒவ்வொரு பக்கமாக அதிகமாகிக்கொண்டே போகிறது, எழுதிக்கொண்டிருக்கும் நாவலில்.

பப்ளிஷரிடம் தரும் நாள் வரையிலும் வளர்ந்துகொண்டே இருக்கும் போல. ஃபிக்ஷன் எழுதினால் இப்படித்தான். இதோடு நிறுத்திக்கொள்ளலாம், இதுதான் கடைசி, இதற்குமேலே கூடாது என்றெல்லாம் எத்தனை முறை நமக்கு நாமே அழுந்த சொல்லிக்கொண்டாலும் ஏதேனும் தோன்றியபடியே தான் இருக்கிறது.

எனது முதல் நாவல் 115 பக்கங்கள் தான் வந்தன. ஆனால், இந்த நாவல் 153 பக்கங்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பார்க்கலாம் இதன் தலையெழுத்து என்ன என்று.

எல்லாம் கல்யாணம் ஆகும் வரை தானே. அதற்கு பிறகு மொத்த நேரத்தையும் அந்த பெண் எடுத்துக்கொள்ளப்போகிறாள். ஆதலால், தனியனாக இருந்து நேரம் கிடைக்கும் போதே எழுதிவிடவேண்டும். இன்னும் சொல்லப்போனால் தனியாக இருக்கப்போய்த்தான் நேரத்தை உருப்படியாக செலவு செய்ய என்ன செய்வதென்று யோசித்து எழுதத்துவங்கியது. யாரேனும் கூடவே இருந்தால் அதிலும் ஒரு பெண், மனைவி என்கிற இடத்தில் கூடவே இருந்தால் இப்படியெல்லாம் எழுத முடியுமா தெரியவில்லை.

பார்க்கலாம்.

நாவல் உருவாகி வளர்ந்திருக்கும் விதம் திருப்தி அளிக்கிறது. இந்த நாவலுக்கென செலவிடும் நொடிகள் இனிமையாக இருக்கின்றன. ஆங்காங்கே அவ்வப்போது காலத்தின் போக்கில் கற்றுக்கொண்ட , கவனித்த விஷயங்களை தூசி தட்டி, நோண்டி ஒரு நாவலுக்கென ஒருங்கிணைப்பதில் பல நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, அந்த நிகழ்வுகள் ஏன் நடந்தன என யோசிப்பதன் மூலம் வாழ்க்கையை இன்னும் விரிவாக நுணுக்கமாக புரிந்துகொள்ள முடிகிறது.

என்னையே மீண்டும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ள முடிகிறது. பல்வேறு கோணங்களில் நான் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடிகிற்து.

வாழ்க்கை என்பதே கூட தேடல் தானே.

இப்போதைக்கு நாவலுக்கு தலைப்பு முடிவாகவில்லை. இரண்டு மூன்று தலைப்புகள் மனதில் இருந்தாலும் அவற்றுள் ஒன்று நாவலுக்கு கருப்பொருளுக்கு பொருந்தும் என்று ரொம்ப நாளாகவே குறித்து வைத்திருக்கிறேன். அதுவே தான் நாவலில் தலைப்பாகிவிட மிகப்பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் Quick Fiction என்பார்கள். மிகச்சுலபமாக எழுதிவிட முடியும். Detailing தேவையில்லை. ஆரம்பித்த உடனேயே க்ளைமாக்ஸ் தான்.

குங்குமம் இதழில் எனது ஒரு குறுங்கதை வெளியாகியிருக்கிறது. இணையத்தில் பார்த்துவிட்டேன். ஆனால் இன்னமும் அதன் பிரதி கையில் கிடைக்கவில்லை. மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் யாருமில்லாதது குறையே. இருந்தால் இப்படியெல்லாம் நேருமா? என்ன செய்ய? வெளி நாடுகளுக்கு இடம்பெயரும் முன் உள் நாட்டில் மனதுக்கு நெருக்கமான நான்கு உறவுகளையாவது அட்லீஸ்ட் நண்பர்களையாவது உருவாக்கிவிட்டு செல்ல வேண்டும். இல்லையெனில் இப்படித்தான். சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட அல்லாட வேண்டி இருக்கும்.

நல்ல நணபர்கள் நான்கு பேர் இருந்தால் கூட யானை பலம் தான். அந்த வகையில் மிகவும் பலவீனமாக உணர்கிறேன்.

நீலம்

$
0
0
நீலம்


நான் இருக்கும் அறைகளில் விவாதங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. அடித்துக்கொள்ள மாட்டோம். ஆனால்,  நிறைய விவாதங்கள் நடக்கும். விவாதம் செய்வதற்கென்றே அடுத்த அறைகளுக்கு போய் வம்பிழுப்பது எந்த அமாவாசை பவுர்ணமி அடர் இருளில் என் ரத்தத்தில் காட்டேறி போல் ஒட்டிக்கொண்டது என்பது தெரியவில்லை.

நான் வசிக்கும் கம்யூனிட்டியில் ஒரு அமேரிக்கர் வசிக்கிறார். பெயர் Travis Dynes. எனக்கு நல்ல நண்பர். அவருக்கு இந்துத்துவா மீது ஆர்வம். ஏனெனில் அவருடையது காதல் திருமணம். இலங்கை தமிழ்ப்பெண்ணை காதலித்து மணந்திருக்கிறார். அந்த தமிழ் பெண் தமிழர் குறித்து என்ன பில்டப் செய்து வைத்திருந்தார் என்று தெரியவில்லை. இவர் என்னடாவென்றால், ராமாயணம், மஹாபாரதம் என்று அடி ஆழமாக களத்தில் இறங்கி பீராய ஆரம்பித்துவிட்டார்.

'நமக்கு ஒரு இரை சிக்கிவிட்டது'என்று நம்பியார் போல வில்லத்தனமாக சிரித்துவிட்டு அவரை என் விவாதத்துக்கு இழுத்துக்கொள்வேன்.

கொஞ்ச நாள் முன்பு அவர் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டார்.

"இந்து மதத்தில் சில கடவுள்கள் ஏன் நீல நிறமாக இருக்கிறார்கள் ?"இதுதான் கேள்வி.




ரஜினியின் கபாலி பற்றி கேட்டிருந்தாலும் வண்டி வண்டியாக கதை சொல்லி அவரையும் ரஜினி போஸ்டருக்கு பாலூற்றும் அளவிற்கு தேற்றியிருக்கலாம். அட, ரஜினி இல்லையென்றாலும் குறைந்தபட்சம் அர்னால்டு போஸ்டருக்காவது பாலூற்ற வைத்திருக்கலாம்.

இப்படி ஒரு சிக்க்லான கேள்வியை கேட்டுவிட்டாரே மனுஷன்? என்ன செய்வது. நான் கூட ஆயிரம் கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். அவர் கேட்ட பின்னால் தான் ராமன், கிருஷ்ணர் சிலைகள் எல்லாம் நீல நிறத்தில் இருப்பதே எனக்கு உறைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ("கோயிலுக்கு போனா சாமி கும்பிடனும்..சைட் அடிச்சா இப்படித்தான்"என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்காமல் இல்லை)

இந்து மதம் குறித்து ஒரு அமேரிக்கர் கேட்கிறார். நான் அவரின் மனைவியை பார்த்தேன். பெரிதாக எடை அதிகமாக சொல்லவில்லையென்றால் அந்த இலங்கை தமிழ் பெண் மனைவி என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாரோ என்று பயம் வந்துவிட்டது.

விடுவேனா? இரை தானாக வந்து வலையில் விழும்போது என்னதான் செய்வது? மூன்று மணி நேரத்துக்கு அவர் காதை அறுத்துவிட்டேன்.

இதிகாசங்களிலும், புராணங்களிலும் சில கடவுளர்களின் உருவங்களை நீல நிறத்தில் நாம் பார்க்கலாம். இராமாயணத்தில் ராமனுக்கும்ம் மஹாபாரதத்தில் ஷிகிருஷ்ணருக்கும் நீல நிறம் பாய்ச்சிய திரு உருவச்சிலைகளும் ஓவியங்களும் இருக்கின்றன. இந்துக்களின் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடவுள்களில் எத்தனை பேருக்கு இப்படி நீல நிறம் இருக்கிறதென்று தோண்டப்போனால், நமக்கு இன்னொரு ராமின்சி கோட் ( டாவின்சி கோட் இருக்கும்போது இதை விவாதப்பொருளாக பேசும் என் பெயரை முன்வைத்து ராமின்சி கோட் இருக்கக்கூடாதா? ) கூட கிடைக்கலாம்.

ஒரு பொருள் மீது ஒளி பட்டு திரும்பி நம் கண்களில் விழுவதாலேயே அதை நம்மால் பார்க்க முடிகிறது. ஐன்ஸ்டைன் வரை இதைத்தான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஐன்ஸ்டைன் தனது ரிலேட்டிவிட்டியில் தான் அந்த அணுகுண்டை தூக்கிப் போட்டார்.

அதாவது பிரபஞ்சத்தில் எல்லாமும் ஒன்றை விட்டு ஒன்று விலகி போய்க்கொண்டே இருக்கிறது அல்லது அன்மிக்கிறது. ஆதலால். எல்லாமே இன்னொன்றை குறித்து நகர்ந்து கொண்டிருக்கிறது என்று. அத்தனை பேரும் கெக்கெபெக்க என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் அறிவியல் பிற்பாடு ஐன்ஸ்டைனை ஜீனியஸ் என்று ஒப்புக்கொண்டது இந்த நீல நிறத்தினால் தான். ஐன்ஸ்டைன் சொன்னது போல் ஒரு கிரகமோ, கோளோ அல்லது ஒரு நட்சத்திரமோ விலகிச்செல்கிறது அல்லது அன்மிக்கிறது என்பதை எப்படி நீரூபிப்பது?

ஒளி.!!

இதுதான் சாவி.

அன்மிக்கும் அல்லது விலகிச்செல்லும் பொருளில் ஒளி பட்டால் அதன் அலைவரிசையில் மாற்றம் வரும். அன்மிக்கும் பொருள் என்றால் இந்த அலைவரிசை மாற்றம் அந்த ஒளியை நீலத்தை நோக்கி தள்ளும். விலகிச்செல்லும் பொருள் என்றால் இந்த அலைவரிசை மாற்றம் அந்த ஒளியை சிகப்பை நோக்கி தள்ளும்.

ராமனும், கிருஷ்ணனும் விஷ்ணுவின் வெவேறு அவதாரங்கள். விஷ்ணு காத்தற் கடவுள். சிவன் தான் அழித்தற் கடவுள். ஆக காக்கிறவன் நம்மை அன்மிக்கிறான் என்கிற அர்த்தத்தில் ராமன் அவதாரத்துக்கும், கிருஷ்ண அவதாரத்துக்கும் நீல நிறம் வந்திருக்கலாம். காத்தற் கடவுள் நம்மை காப்பாற்ற எப்போதும் வருவார் என்கிற அர்த்தத்தில் அப்படி நீல நிறம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அடித்து விட்டேன்.

சத்தியமாக எங்கும் படித்தது அல்ல.

எனக்காய் தோன்றியது. விவாதம் என்று வந்துவிட்ட பிறகு ஒரு வாதத்திற்கு இப்படி இருக்கலாம் என்று சொல்லிவிட்டேன். மனிதர் பீராய கிளம்பிவிட்டார். இனி என்னென்ன குறுக்கு கேள்விகள் கேட்கப்போகிறாரோ தெரியவில்லை. கேட்டால் பதில் சொல்லவென, இப்போது நான் தான் பப்ளிக் எக்ஸாமுக்கு தயார் செய்பவன் போல இணையத்தில் தேடி தேடி படித்துக்கொண்டிருக்கிறேன்.

யாரேனும் இந்த கேள்விக்கு வேறு ஏதேனும் பதில் வைத்திருந்தால் தயவு செய்து காலம் தாழ்த்தாமல் சொல்லிவிடவும். ஒரு இலங்கை தமிழ் பெண்ணிடம் உங்கள் நண்பனை மாட்டிவிட்ட பாவமெல்லாம் உங்களுக்கு வேண்டாம்...

நுங்கம்பாக்கம்

$
0
0
நுங்கம்பாக்கம்


அ:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பல காரியங்களுக்காய் நின்றிருக்கிறேன்.

அம்பத்தூரில் வீடு இருக்கும் எனக்கு நுங்கம்பாக்கம் தி நகரை விட பக்கம் தான். கணையாழியில் எனது கவிதையோ சிறுகதையோ வெளியாகையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள புத்தக கடையில் தான் பிரதிகளை வாங்குவேன். கணையாழி, உயிர்மை எல்லாம் கட்டாயம் வைத்திருப்பார்கள்.

நானும் கேப்ஜெமினிக்காக மஹிந்திராசிட்டியில் வேலை பார்த்தபோது நுங்கம்பாக்கத்தில் பைக்கை போட்டுவிட்டு ரயிலில் தான் அலுவலகம் செல்வது வழக்கம். இப்படி பழக்கப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருப்பது மனவருத்தத்தை தருகிற்து.

எந்த முதலுதவியும் இல்லாமல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பெண்ணின் உடல் அங்கே ப்ளாட்பாரத்திலேயே கிடந்ததாகவும், கத்தியால் குத்தப்பட்டு விழுந்த பெண்ணை காப்பாற்ற , முதலுதவி செய்ய, மருத்துவமனையில் சேர்க்க‌ யாருமே வரவில்லை என்றும் ஆங்காங்கே செய்திகள் கண்ணில் படுகின்றன.

வாஸ்தவம் தான்.

ஆ:.
விபத்துகளும், இது போன்ற குற்றங்களும் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பேதமின்றி, யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழ்க் கூடியது தான். யாருக்கோ எதுவோ நடந்தால் நமக்கென்ன என்று போய்விடும்போது, தனக்கே ஒன்று நடக்கையில் யாரிடமும் உதவி கேட்க உரிமை இல்லாமல் போய்விடலாம் .

இ.கொலை செய்யப்பட்டவர்?
சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரது இரண்டாவது மகள் ஸ்வாதி. மஹிந்திரா சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். அலுவலகம் செய்ய ரயிலுக்காக காத்திருந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.



ஏதாவது புரிகிறதா?

குங்குமம் 27.06.2016 இதழில் எனது ஒரு பக்க கதை

$
0
0

27.06.2016 தேதியிட்ட சென்ற வார குங்குமம் இதழில் பக்கம் 51ல் வெளியாகியிருக்கும் 'அப்ளிகேஷன்'எனது ஒரு பக்க கதை. எனது குறுங்கதையை தேர்வு செய்து வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


சுவாதி கொலை வழக்கு

$
0
0
சுவாதி கொலை வழக்கு


24 வயதில் படிப்பை முடித்துவிட்டு சொந்தக்காலில் நிற்கத்துவங்கி வாழ்க்கையின் அனுபவங்களை சேகரிக்க துவங்கும் போதே மரணம். அதுவும் எவனோ ஒருத்தனின் சண்டித்தனத்திற்கு பலியாக.

6.30க்கு நடந்த கொலை. 8:30 வரையிலும் ரயில் நிலையத்திலேயே கிடந்திருக்கிறது உடல். கொலையாளி குறித்த எவிடென்ஸ் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ஓகே தான். ஒரு பெண்ணின் மானத்தை மறைக்க ஒரு துணியை போர்த்தக்கூட யாரும் முன் வரவில்லை என்பது உண்மையிலேயே நெருடுகிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கண்ணியம் முக்கியம் அல்லவா?

கொலை செய்தவன் ஒரு டிராவல் பேக்கிற்குள் நீளமான அரிவாளை எடுத்து வந்திருக்கிறான். அப்படியானால் கொலை செய்யும் நோக்குடனே திட்டமிட்டே எடுத்து வந்திருக்கலாம் என்று யூகிக்க வைக்கிறது.



மொபைல் ஃபோன்கள், ஐபாட் போன்றவைகளின் வரவால் தான் கொலையாளியை வீடியோ எடுக்க முடிந்தது, அதை வைத்து கொலையாளியை நெருங்கிவிடலாம் என்று யாரேனும் வாதம் செய்யலாம். ஆனால், எல்லோருமே மொபைல் ஃபோனின் திரைக்குள் தலையை விட்டுக்கொள்வதால் தான் ஒரு பெண்ணை ஒருவனால் பல நாட்களாக பின் தொடர்ந்து கவனித்து, திட்டமிட்டு கொலை செய்ய முடிந்திருக்கிறது என்றும் கூட இதை பார்க்க முடியும் என்றே நினைக்கிறேன்.

சுவாதி சமீபமாக இந்த ஆடவன் குறித்து அவரது பெற்றோர்களுக்கு எதையும் சொல்லியிருக்கவில்லையாம். ஒருவேளை தன்னை பின் தொடர்பவன் குறித்து கவனம் கொள்வதிலிருந்து சுவாதியை இந்த மொபைல்களே திசை திருப்பியிருக்கலாமோ? அந்த வகையில் மொபைல் ஃபோன்கள், டேப்கள் எலலாம் வரமா சாபமா என்கிற பட்டிமன்றக் கேள்விக்கு இடமளிக்கிறது தான். தேவையைத்தாண்டிய அதீத வசதிகள் மனித இனத்துக்கு கேடாகவே முடிகின்றன என்றும் இதை பார்க்கலாம்.

பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கொலை தீர்வாகாது. ஏன் காயப்படுத்த வேண்டும்? ஏன் கொலை செய்ய வேண்டும்? ஆண்களை விட பெண்கள் கொலை வரை போவது அரிதாகவே நடக்கிறது. இதையெல்லாம் வைத்து இதை ஆணாதிக்க கொலை என்று சொல்ல முடியுமா தெரியவில்லை.

சுவாதி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.  விசாரணை இன்னும் முடியாத பட்சத்தில் "ஒரு தலைக்காதல்"என்றெல்லாம் கிளப்பி விடுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை. அந்த கோணத்தில் விசாரணையை தொடரலாம் என்பதற்காக அதுதான் காரணம் என்று கிளப்பி விடுவது சமூக நியதிக்கு புறம்பானது. இன்னதுதான் காரணம் என்று முடிவாவதற்கு முன்பேயே, முகம் தலை கால் வைத்து பேசுவது அநாகரீகம். இது இருபாலருக்குமே பொருந்தும்.

அந்த பெண் அவருடைய தந்தைக்கு இரண்டாவது மகள் என்று செய்திகள் சொல்கின்றன. சுவாதிக்கு சகோதரி இருக்கிறாள். குடும்பம் இருக்கிறது. இது போன்ற ஊகங்கள் ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் மன நிம்மதியை கெடுத்துவிடக்கூடும். ஒரு உயிர் செயற்கையாக இந்த மண்ணை விட்டு போய்விட்டது. அந்த உயிருக்கு ஒரு இடம் இருக்கிறது. அதற்கொரு மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதை தர நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.


ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - சில காட்சிகள்

$
0
0
ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை  - சில காட்சிகள்




தொழில்துறை, வணிகம், மருத்துவம் போன்ற பல துறைகளில் கட்டமைப்பு, மதிப்பீடுகளை கைகொள்ளும் அதே நேரத்தில் குடும்பம், உறவுகள், அவைகளை கையாளுதல் போன்ற பல விஷயங்களிலும் கட்டமைப்பையும், மதிப்பீடுகளையும் கைவிடும் காலத்தில், இப்படி ஒரு கதை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.

கட்டமைப்பைப்பற்றி  பிரஞை துளிகூட இல்லாமல் சுற்றும் ஜே.கேயின் வாழ்க்கை குறித்தான பார்வையை ஒரு நாளின் நிகழ்வு புரட்டிப்போட்டுவிடுகிறது. அந்த நாள் வரை அவன் கட்டமைப்பைப் பற்றி அக்கறை கொள்பவனாக இல்லை. ஆனால், அந்த ஒரு நாளின் விபத்தில் பலியான நண்பனின் குடும்பத்தின் நிலை குறித்து வேதனை கொள்கையில் அவனுக்கு கட்டமைப்பின் முக்கியத்துவம் புரிவதாக காட்டியிருக்கிறார்கள்.

நவீனத்துக்கு பிறகான ஒருவர் எழுந்து, இந்த கதையே ஒரு அழுகாச்சி கதை என்று கூட சொல்லலாம். பிற்போக்குத்தனமானது என்று சொல்லலாம். நான்கு பேரின் நலனுக்காக ஒருவர் உழைப்பது, குடும்பம் என்கிற அமைப்பு என்பதெல்லாம் கட்டமைப்பு மற்றும் மதிப்பீட்டு உலகின் கோட்பாடுகளே. ஆங்கிலத்தில் Value System என்பார்கள்.

அந்த நவீனத்துக்கு பிறகானவர் இந்தக் கதையை நவீன உலகிற்கான கதை இல்லை இது எனலாம். தொழில் முனைவதற்கான ஐடியாக்களில் நவீனம் நிறைய கதையெங்கும் உருவாக்கப்பட்டாலும், கதை மாந்தர்களின் நோக்கம் கட்டமைப்பை நிறுவதுதான். சேரனின் எல்லா படங்களின் மையச்சரடும் கட்டமைப்பை நிறுவுவது தான்.

எதிர்பாராத விதமாக இழப்பை சந்திப்பவனிடம், அந்த இழப்பை சந்தித்ததினாலேயே உனக்கு இனிமேல் வாழ்க்கை இல்லை என்று சொல்வது அநியாயம், அதர்மம், அபத்தம். ஆனால், அதற்காக,  வேண்டுமென்றே எல்லோரிடமும் இழப்பை வலுக்கட்டாயமாக திணித்து, அதன் மூலமாக மனிதர்களிடையே ஒரு சமன்பாட்டை உருவாக்க முனைவது என்ன நியாயம்? அது, அதை விட அபத்தமாக மட்டும் இல்லை, இழப்பை சந்தித்தவர்களின் சர்வாதிகாரத்தன்மையாகவே தெரிகிறது.




என்னளவில், இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு சுட்டுப்போட்டாலும் நேர்கோட்டில் சிந்திக்க வராது. ஆனால், வேறு சிலருக்கோ நேர்கோட்டைத்தவிர வேறெப்படியும் சிந்திக்க வராது.

ஆனால், இன்றைய உலகம், இறப்பை மையப்படுத்துகிறது. இறப்பை மையப்படுத்தும் உலகத்தில் கட்டமைப்புக்கு அதிகம் வேலை இல்லை., இதில் கட்டமைப்பு ரீதியாக சிந்திப்பவர்கள், நடைமுறைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நகைப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேலி செய்யப்படுகிறார்கள்.

அவர்களின் கட்டமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்படுகிறது. எள்ளி நகையாடப்படுகிறது. இந்த கேலியும், நகைப்பும் நாளடைவில்'நாம் செய்வது சரிதானா?'என்று ஒரு கட்டமைப்பு சார்ந்து இருக்கும் சிந்தனையாளரை தன் மீதே சந்தேகமும், ஐயமும், கொள்ள வைத்து நம்பிக்கை இழக்க வைக்கின்றன.

இப்படி வழுவிப்போனவர்களால் உருவாக்கப்படும் சமூகம் எண்ணிக்கையில் பெருகுகையில், அச்சமூகத்தில் கட்டமைப்பு சார்ந்து இயங்குபவர்களின் அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகிறது. கட்டமைப்பை வழுவிப்போனவர்களால், மாறுபாடடையும், சமூக மதிப்பீடுகள், வழமைகளில் தனது இருப்பை காப்பாற்றிக்கொள்ள , கட்டமைப்பு சார்ந்து இயங்குபவன் போராட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறான். ஓரளவுக்கேனும் கட்டமைப்பினின்றும் வழுவிப்போதலை அவன் கைகொள்ளாதவரை அவன் தனித்தே இயங்க வேண்டி இருக்கிறது.

சரி கட்டமைப்பை விட்டு வழுவிப்போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால், பதில்கள் ஆச்சர்யமூட்டும். அது கட்டமைப்பை விட்டு விழுவிப்போனவர்கள், தங்களுக்கே தங்களுக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதை பேணுவதில் தங்கள் மீதமுள்ள நாட்களை கழிக்கிறார்கள் என்பது தான் உண்மை.

''ஒரு விஷயத்தை உருவாக்கி பாரு.. அதுல இருக்கிற கஷ்டம் தெரியும்'என்று ஜேகே விடம் சொல்லப்படும் காட்சி, கட்டமைப்பு குறித்த பதிவு.

அந்த ஒரு நாளின் நிகழ்வை, ஜேகே என்கிற பாத்திரம் அணுகும் முறையை கேலி செய்து, 'அவன் தப்பா வண்டி ஓட்டினான்..அதான் விழுந்துட்டான்.. 'என்றும், ஜேகே தனது குடும்பத்திற்காகவும் செத்துப்போன நண்பனின் குடும்பத்திற்காகவும் உழைக்க முடிவு செய்வதை, 'அடுத்தவனுக்காகவா வாழமுடியும்? நம்ம வாழ்க்கையை நம்ம இஷ்டப்படிதான் வாழணும்' என்றும், 'எது நடந்தாலும், அதை அப்படியே ஏத்துக்கிட்டு போகணும்'என்றும் நவீனத்துக்கு பிறகான ஒருவர் எளிதாக சொல்லக்கூடும்.

வாழ்க்கையை நாம் எப்படி மேற்கொள்ள இருக்கிறோம் என்பது, முழுக்க முழுக்க நம் தனிமனித விருப்பம் சார்ந்ததே என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால்,

1. கட்டமைப்பு, இருத்தலியம் போன்றவைகளின் அர்த்தங்களை முழுக்க உணர்ந்தபின்னே ஒரு மனிதன் அந்த முடிவை எடுக்க இயலும்.

2. கட்டமைப்பு என்ற ஒன்றின் இருப்பை பற்றியே தெரிவிக்காமல், ஒருவரை ஒரு சமூகம் வழி நடத்தினால்? இருத்தலியம் மட்டுமே ஒரே ஒரு கோட்பாடு என்று ஒரு சமூகம் அறிமுகம் செய்தால் அவரது தேர்வுகள் எப்படி பாரபட்சமற்றதாக இருக்க முடியும்?? அந்த ஒருவருக்கு வேறு மாற்று சிந்தனைகளை அறிமுகம் செய்தால் தானே, தனக்கான விருப்பம் என்ன, தேர்வு என்ன என்பதை அவர் சிந்திக்க முடியும்? அதற்கு வாய்ப்பளிக்காமலே விடுவது ஏமாற்று வேலை மட்டுமன்றி, தவறாக வழி நடத்துவதுமாகும்.

3. கட்டமைப்பு சார்ந்து மட்டுமே இயங்க கூடிய இயல்புடையவர்களிடம் கூட , இருத்தலியத்தை மட்டுமே ஒரு சமூகம் போதிப்பது எந்த விதத்தில் சரியாகும்?

இன்றைய உலகம் ஏன் கட்டமைப்பை புறக்கணிக்கிறது? ஏன் இறப்பை மையப்படுத்துகிறது என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.

1. கட்டமைப்பினால், விளிம்பு நிலைக்கு தள்ளப்படுபவைகள் மீதான கவனக்குவிப்பு.
2. இன்றைய நவீன வர்த்தக உலகம் இயங்குவதற்கு கட்டமைப்பு ஒரு தடை. வீட்டு சாப்பாடே உசத்தி என்று எல்லோரும் இருந்துவிட்டால், பீட்சாவை யார் வாங்குவார்கள்?
3. இன்றைய கேளிக்கை உலகம் இயங்குவதற்கும் கட்டமைப்பு ஒரு தடை. எல்லோருமே கட்டமைப்புக்குள் இருந்துவிட்டால், கேளிக்கைக்கு யார் வருவார்கள்?

ஆக கட்டமைப்பிலிருந்து வழுவிச்செல்வதற்கான காரணிகளை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இன்றைய நவீன‌ சமூகம் பாவிக்கிறது. நவீன சமூகத்தை உற்றுப்பார்க்கும் எவருக்கும், அந்த சமூகத்தின் என்பது விழுக்காடு மனிதர்களில், கட்டமைப்பை சார்ந்து இயங்கும் இயல்புடையவர்கள், கட்டமைப்புக்கு எதிர் திசையில் இயங்கும் இயல்புடையவர்களின் வழி நடத்துதலில் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்புவதும், கட்டமைப்பு எதிர் திசையில் இயங்கும் இயல்புடையவர்கள், கட்டமைப்பை சார்ந்து இயங்கும் இயல்புடையவர்களின் வழி நடத்துதலில் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்புவதுமான ஒரு குழம்பிய சமூகமாக இன்றைய நவீன சமூகம் இருப்பதை, அவதானிக்க முடியும்.

இந்த படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் கட்டமைப்புக்கு திரும்பிவிட வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்தால் அது இயற்கையின் இயங்குமுறைக்கு முரணாகும். அது நடக்க வாய்ப்பே இல்லை எனலாம்.

நவீனத்துக்கு முந்தைய சமூகம் பிறப்பை மட்டுமே மையப்படுத்தியதால், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் மீதான கவனக்குவிப்பு நிகழ்ந்தது. இலக்கியங்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீது எழுதப்பட்டன. நவீனத்துக்கு பிறகான சமூகம், இறப்பை மட்டுமே மையப்படுத்துவதால், கட்டமைப்பு சார்ந்து இயங்கத்தெரிந்தவர்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவது நிகழ்கிறது. இருந்தும் இல்லாமை போன்ற பேரிடர்கள் நிகழ்கின்றன.

ஏன் ஒரு சமூகம், முட்டாக கட்டமைப்பை சார்ந்தோ, அல்லது முட்டாக கட்டமைப்போ கைவிட்டோ இயங்க வேண்டும் என்பதே என் கேள்வி? மனிதர்கள் இணைந்து உருவாக்குவது தானே சமூகம் என்பது? அங்கே இரு விதமான மனிதர்களில் யாரோ ஒரு வகையினர் எக்காலத்திலும் மட்டுப்படுத்தப்படுவது ஏன்?

கட்டமைப்பு, ஒழுங்கு இவற்றின் மிகப்பெரிய குறை என்னவெனில், அது கட்டமைப்பும் ஒழுங்குமே ஆகும்.

உதாரணமாக‌, கட்டமைப்பை , ஒழுங்கை எக்காலமும் தனது எல்லா படங்களிலும் ஊக்குவிக்கும் சேரன், நல்ல நேரம் பார்த்துத்தான் தனது படங்களுக்கு பூஜை போடுகிறார். ஆனால், ஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அதற்கு அவன் எவ்விதத்தில் பொறுப்பேற்க முடியும்? அவன் எத்தனை படித்திருந்தாலும், எத்தனை சம்பாதித்தாலும் திருமண மேடையில் பின்னுக்கு தள்ளப்படுவதும், செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லாததினாலேயே, ஒரு திறமையும் அற்றவர் மண மேடையில் முன்னுக்கு தள்ளப்படுவதையும் எவ்வாறு நியாயமென கொள்ள முடியும்?

ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை இந்த கேள்விகளை எழுப்பவில்லை. அது தொடர்ந்து கட்டமைப்பை மீண்டும் பரவசெய்வதே நோக்கமென கொள்கிறது. அதை தவறென்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு சமூகத்தில் இரண்டு விதமான மனிதர்களும் இன்புற்ற வாழ‌ வேண்டும் என்கிற அடிப்படையிலிருந்து உலகம் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

பார்க்கப்போனால் சேரனின் எல்லா திரைப்படங்களும் கட்டமைப்பை வலியுறுத்துவன தாம். இவ்வகைப் படங்கள் கட்டமைப்பு சார்ந்து இயங்கத் தெரியாதவர்களுக்கும், கட்டமைப்பினால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுபவர்களுக்கும் , விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலைப்பாட்டிலேயே கட்டமைப்பை கைகொள்ள முடியாதவர்களுக்கும் எதையும் சொல்வதில்லை.

திரைப்படம் C2H தொழில் நுட்பம் மூலமாக மக்களை வந்தடையச் செய்திருக்கிறார் சேரன்.

ஜி.வி.பிரகாஷ் இசை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஜே.கே பாத்திரமேற்றுள்ள சர்வானந்த், அந்த ஒரு நாள் நிகழ்வு வரை, லூட்டி அடிப்பதாக காட்டப்படும் காட்சிகளுக்கு பொருந்தவில்லை. சீரியஸான ஆள், கேர்லெஸ்ஸாக இருக்க நடிப்பது அப்பட்டமாக இருக்கிறது. நித்யா மேனன் வீட்டில், ஜேகே கலைத்துப்போடும் புத்தகங்களுக்காய் நித்யா கோபம் கொள்ளும் காட்சிகள் இயல்பாக இருக்கிறது.

தோத்தாத்ரியாக வரும் சந்தானம் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். கதைக்களம் சீரியஸ் என்பதால், காமெடி எடுபடவில்லை.


 - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

பிரியமின்மை கவிதைகள்

$
0
0
பிரியமின்மை கவிதைகள்

என்னை 
கொஞ்சம் கொஞ்சமாக‌
சிறுகச்சிறுகத்தான்
அழிக்க நினைக்கிறாய் நீ...
நான் தான்
அதை உணர்ந்தது முதல்
மிக வேகமாக 
அழிந்துகொண்டிருக்கிறேன்...
 - ஸ்ரீராம்



உனது ஆகச்சிறந்த‌ ஆயுதங்களுடனும்
என்னை எதிர்கொள்ளும் உன்னை
நிராயுதபாணியாகத்தான்
எதிர்கொள்கிறேன் நான்...

பிணங்களை 
எந்த ஆயுதத்தாலும்
வெல்ல முடியாது 
என்பது நீ அறியாததா?...
 - ஸ்ரீராம்


நானற்ற உன் நொடிகளை
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..
எனக்குள் லேசாக தலைக்கனம்
எழுகிறபோதெல்லாம்...
 - ஸ்ரீராம்


உன் மீதான‌
என் பிரியங்களை
எப்படியேனும் மலடாக்கிட‌
முயல்கிறேன்...
அவைகள் பல்கி பெறுகுவதில் தான்
எத்தனை சிரமங்கள் உனக்கு...
 - ஸ்ரீராம்



ஒரே ஒரு துளி விஷம் தான்...
என் பால் கோப்பையில் கலந்திட‌
உனக்கு எத்தனை நேரமாகும்?
அதை நான் பருகிவிட‌
எனக்கு  எத்தனை நேரமாகும்?
அந்த சில நொடிகளுக்குத்தான்
என் அன்பை காட்ட
வாய்ப்பளிக்கிறாய் நீ...


 - ஸ்ரீராம்

பிரியமின்மை கவிதைகள் - 1

$
0
0
பிரியமின்மை கவிதைகள்


உனக்கும் எனக்கும்
ஆயிரம் உறவுகள் நண்பர்கள் இருந்தாலும்
நமக்கிடையில்
நீ 
ஒரு முழு உலகமாக இருக்கையில்
நான் மட்டும் 
தனியனாகவே இருக்கிறேன்...
 - ஸ்ரீராம்



எனக்கு சற்றும் பொறுத்தமில்லாத‌
உன் கள்ள மெளனங்களில்
நீ நீயாக இருக்கிறாய்.. 
நான் தான்
யார் யாரோவாக இருக்கிறேன்...
 - ஸ்ரீராம்



உன் வார்த்தைகளை
நான் தேர்ந்தெடுக்கவில்லை...
நீயாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில்
நான் மட்டும் 
எங்குமே இல்லை...
 - ஸ்ரீராம்



ஒரே ஒரு புன்னகை தான்
தேவைப்படுவதாக நினைக்கிறாய் நீ...
நமக்கிடையே நம்மை 
இருத்திக்கொள்ள...
 - ஸ்ரீராம்

கபாலி

$
0
0
கபாலி


சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் ஒரு முறை, 'மகிழ்ச்சி'யாக ரஜினி!!

ரஜினியின் கபாலி படத்தின் ஓவியங்கள் தாங்கிய விமானங்கள் பறக்க இருக்கின்றன... சரித்திரத்தில் இதுவரை வேறெந்த நடிகருக்கும் இந்த அங்கீகாரம் தரப்பட்டதில்லை என்கிறார்கள்... படங்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது..

அமிதாபிலிருந்து, சல்மான், ஷாருக், ரித்திக் என்று எல்லார் வயிற்றிலும் புளியை கரைத்துவிட்டு, 'தமிழன்டா'என்று தென்னிந்திய சினிமா கர்ஜிக்க போகிறது..




சில விஷயங்களை எத்தனை பணத்தாலும், பகட்டாலும், அதிகாரத்தாலும் கூட கொண்டு வந்துவிட முடியாது.. அது தானாக நடக்கும்.. தமிழ சினிமா நட்சத்திரம் அப்படி ஒன்றாக இருப்பது குறித்து கபாலி ஸ்டைலில் சொல்வதானால்,

'மகிழ்ச்சி'!!!!..

ஆனாலும் இதை வியாபார உத்தி என்று தான் முதுகின் பின்னால் பேசிக்கொள்கிறார்கள்.. Tony Fernandes,  Time Warner திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவர்.. 1996ல் துவங்கப்பட்டு பிற்பாடு மல்லைய்யாவின் கிங்ஃபிஷர் போல் ஊத்தி மூடிய ஏர் ஏசியா விமான சேவை நிறுவனத்தை 2001ல் வாங்கி பிற்பாடு அதை லாபகரமான விமான சேவை நிறுவனமாக மாற்றிக்காட்டியவர் தான் இந்த டோனி ஃபெர்னான்டஸ்..

லாபத்தை நோக்கி வெற்றி நடை போடும் ஏர் ஏசியாவுக்கு, விமான சேவை சந்தையில் தன்னை இன்னும் ஸ்திரமாக நிலை நிறுத்திக்கொள்ளவும், தனது வியாபாரத்தை விரிவு படுத்தவும் மிக அதிக பயனாளர்கள் தேவைப்படுகிறது. தென்னிந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ரயில்களையே நம்பி இருப்பதை மோப்பம் பிடித்துவிட்ட டோனி அதை குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

முதல் கட்டமாக டாடா சன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்ட டோனி தற்போது தென்னிந்தியாவில் பங்களூரை தலைமை அலுவலகமாக ஆக்கியிருப்பதோடு, ரஜினியின் பெயரை வைத்து தென்னிந்தியாவுக்கு ஏர் ஏசியா குறித்து தெரிய வைக்க நடக்கும் ஸ்டன்ட் என்று தான் தோன்றுகிறது.

எது எப்படியோ...

இதற்கு அப்புறம், தென்னிந்தியாவில் ஒரு மாதம் முன்பே புக் செய்யும் பட்சத்தில் கைக்கு அடக்கமான விலையில், கிட்டத்தட்ட ரயில் கட்டணங்களுக்கு இணையாக விமான சேவை கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால், இதையெல்லாம் ஒரு பக்கம் நடக்கையில் இன்னொரு பக்கம் ரயில் சேவைகளையும் விரிவுபடுத்த  ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்படுவதில் தனியார் சேவையும், அரசின் உள்கட்டமைப்பு விரிவாக்கமும் ஒன்றுக்கொண்டு கைகுலுக்கிக்கொள்ளாமல் அதனதன் போக்கில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாமல் போவதாகத்தான் தெரிகிறது. சில ஆயிரம் கோடிகளை விரிவாக்கம் என்கிற பெயரில் வீணாக்க போகிறார்கள்.

ரஜினியின் ஈர்ப்பு விசை என்பது இது தான் என்று நினைக்கிறேன். பேரை சொன்னாலே 'சும்மா பரவுதில்ல?'. அதுதான் ரஜினி. இங்கே அமேரிக்காவில் நிச்சயம் வெளியாகும். முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடவேண்டும் என்று என் அறையில் நான் உள்பட நான்கு பேரும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். Travis யிடம் இதைப்பற்றி எக்கச்சக்கமாக பிட்டு போட்டிருக்கிறேன். முதல் நாள் முதல் ஷோவில் ரஜினி வரும் முதல் காட்சியில் Travis ஐ விட்டு நான்கைந்து  அமேரிக்க டாலர் ரூபாய் நோட்டுக்களை கிழித்து எறிய வைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். 

ரத்த அழுத்தம்

$
0
0
ரத்த அழுத்தம்



அலுவலகத்தில் லிஃப்ட் ஏற போனபோது ஒருவர் வந்தார். தெரிந்தவர் தான். 'பிங் பாங்'எங்கே இருக்கு என்றார்?

"ஏன்?"என்றேன்.

"ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி வைத்திருக்கிறார்களாம். காலையில் கொஞ்சம் மயக்கமாக இருந்தது. என் ரத்த அழுத்தம் பார்க்கலாமே என்றுதான்"என்றார். மனிதர் பூர்விகாவில் நிற்கும் விற்பனை பிரதி நிதி போல நன்றாக சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.

அவருடன் அலைந்ததில் முதல் மாடியில் டேபிள் டென்னிஸ் அறைக்குள் ஒரு ஓரமாய் வைத்திருந்தார்கள். முதலில் அவருக்கு சோதித்தோம். 140/80 காட்டியது. அவசரமாக தன்னுடைய மொபைலில் ரத்த அழுத்த பட்டியலை தரவிறக்கம் செய்து பார்த்தார். High Normal என்றது. அதாவது "உடனுக்குடன் உடம்பை கவனி"என்றது. அவருக்கு வயது 42 ஆம். அதற்கு பிறகு அவர் சிரித்தார் பாருங்கள். மோனாலிசா புன்னகை கூட புரிந்துவிடும். அவர் சிரிப்பு என்ன ரகம் என்று இப்போது வரை புரியவில்லை.

வந்தது வந்தாயிற்று. நமக்கும் பார்த்துவிடுவோமே என்று எனக்கும் பார்த்தேன். 111/75 காட்டியது. மிக மிக நார்மலாம்.

நான் சொல்லவில்லை. இணையத்தில் சொல்லியிருந்தார்கள்.

"நீங்க என்ன விளையாடுறீங்க?"என்றார்.

"விளையாட்டெல்லாம் இல்லை.. ஆனால் தினமும் ஒரு மணி நேரம் ஜிம்மில் இருப்பேன்"என்றேன். கேட்டது அவர்தான் என்றாலும் எனது பதிலை அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. ஏதோ யோசனையில் எனக்கு காதை கொடுத்துவிட்டு அவர் பாட்டுக்கும் சும்மா நின்றிருந்தார். என்ன சொன்னாலும் அவர் காதில் விழப்போவதில்லை என்று நானும் கப்சிப்பாகிவிட்டேன்

இங்கே அமேரிக்காவில் இந்த ரத்த அழுத்தம் எல்லாம் லேசாக எகிறினாலும் உடனே மருத்துவ காப்பீட்டில் கைவைத்துவிடுவார்கள். ப்ரீமியம் தொகை ஏறிவிடும். சில கம்பெனிகள் மருத்துவ காப்பீட்டையே ரத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

140/90 தான் அதிக பட்சம். இதை தாண்டினால் அதிகமான ப்ரீமியம் தொகைக்கு தயாராகிக்கொள்ளவேண்டும். நான் தங்கியிருக்கும் அறையிலிருந்து ஒருவர் வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக ஒருவர் வேண்டும் என்று கேட்டிருந்தேன். என் அறைக்கு வாடகை 350 டாலர்கள். வந்தவர் ராத்திரி விட்ட கொரட்டையில் யாருமே தூங்கவில்லை. அடுத்த நாளே பத்திவிட்டுவிட்டோம். அனுப்பும் முன் சொல்லி அனுப்பினேன்.

"தனி அறையாக கதவடைத்துக்கொண்டு தூங்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்."என்றேன்.

"அதான் எனக்கு நல்லதுன்னு சொல்றீங்களா?"இது அவர்.

"அதுதான் மத்தவங்களுக்கு நல்லது"இது நான்.

அவர் அடுத்த நாளே வேறு ரூம் பார்த்து போய்விட்டார். வாடகை 700 டாலர்கள். மாதத்திற்கு.

நான் எப்போதும் சொல்வது தான். மிகச்சிறந்த மருத்துவம், சுய ஒழுக்கமே. சுய ஒழுக்கம் எத்தனை பேணவில்லையோ அத்தனைக்கு காசு தண்டம் அழ வேண்டி இருக்கும். உடலில் ஆயிரத்தெட்டு உபாதைகள் வைத்துக்கொள்பவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வது போல் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது. சம்பாதிக்கும் பணத்தில் பாதி வரிக்கும், காருக்கும் , வீட்டு வாடகைக்கும் போகிறது என்றால் மீதி இது போன்ற காரணங்களுக்காய் மருத்து காப்பீடு , மருந்துகள், அதிகபட்ச வாடகை என்று போய்விடும். பிறகு என்னத்தை சேமிக்க? பத்து வருடங்கள் சேமித்தாலும் நயா பைசா தங்காது.

இப்போது கூட இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். வந்த போதே கறாராக சொல்லிவிட்டேன்.

"அறைக்குள் சாராயம், பீர், சிகரெட் என எதுவும் கூடாது.. குறிப்பா பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு வரவே கூடாது.. உறவா இருந்தாலும் கூட..."என்றேன். என்னை வினோதமாக பார்த்துவிட்டு,

"சீட்டுக்கட்டு ஓகேவா?"என்றார்.

அவரை நான் பதிலுக்கு தீர்க்கமாக பார்த்துவிட்டு,

"அது ஓக்கே.. ஆனால், மூணாமவர் ஆபீஸ் போனா நடு ராத்திரி தான் வருவாரு. நான் சீட்டுக்கட்டு விளையாட மாட்டேன்"என்றேன். அறைக்குள் நாம் மூன்று பேர்தான் என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தேன்

கவுண்டமணி ஜோக் ஒன்று அவருக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். எனக்கு என்ன கவலை?

சுவாதி

$
0
0
சுவாதி


சூளைமேடு சுவாதியை கொன்றவனை கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. கொலை செய்ததாக சொல்லப்படும் ராம்குமார் கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே அவன்  தான் கொலையாளியா,  அல்லது கொலையாளியாக அடையாளப்படுத்தப்படுபவனா ? தெரியவில்லை.

அப்படி அவன் தான் உண்மையான கொலையாளி என்று நிரூபனமாகும் பட்சத்தில் நாம் இவ்வாறு யோசிப்பது சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

முதலாவதாக‌, தினம் தினம் எத்தனையோ ஆண்கள் எத்தனையோ பெண்களிடம் காதலை சொல்கிறார்கள். 99 சதம் பெண்கள் நிராகரிக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் கொலை செய்யப்படுவதில்லை. அப்படியானால் அந்த அத்தனை ஆண்களும் இத்தனை மோசமானவர்கள் இல்லை என்று தானே அர்த்தமாகிறது. ஒரு ஆணின் காதலை நிராகரித்துவிட்டு அந்த சுவடே மனத்தின் ஓரத்தில் கூட இல்லாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பெண்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.

இந்த கொலை செய்திருக்கும் ராம்குமார், வினோதினி முகத்தில் ஆசிட் வீசிய ஆண், காதலித்த பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இணையத்தில் பகிர்ந்த ஆண் என ஆங்காங்கே வெளிப்படும் சைக்கோக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால்,  'காதலை சொன்னோம்.. அந்த பொண்ணு ஒத்துக்கலை.. விடு மச்சி... பொழைப்பை பார்ப்போம்'என்று போகும் ஆண்களின் எண்ணிக்கை மிக மிக மிக அதிகமாகத்தான் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். அப்படி இல்லையெனில், தர்க்க ரீதியாக‌ கொலை செய்யப்பட்ட பெண்களை தவிர ஏனைய எந்த பெண்ணையும் யாருமே காதலிக்கவில்லை என்றல்லவா அர்த்தமாகிவிடும்? அப்படி இருக்க முடியாதே? அப்படி இல்லை என்பது ஒவ்வொரு பெண்ணின் மனசாட்சிக்கும் தெரியுமே.

ஆகையால்,   கலாச்சார பாதுகாவலர்கள்,  பெண்ணிய போராளிகளின், "ஒவ்வொரு வீட்டிலும்  ஆணுக்கு பெண் குறித்து பாடம் நடத்தவேண்டும்.. உங்கள் வீட்டு ஆண் சரியாக இல்லை என்று தோன்றினால் நல்ல மன நல மருத்துவராக காட்டுங்கள்"என்கிற ரீதியில் முக நூல் பதிவுகளை பார்த்தால் செம காமெடியாகத்தான் இருக்கிறது.

சுவாதியின் மரணம், எல்லா பெண்களையும் அவர்களிடம் காதலை சொல்லிவிட்டு நிராகரிக்கப்பட்டதால் காணாமல் போன எல்லா  ஆண்களையும் குறித்து மறுபரிசீலனை நிச்சயம் செய்ய வைத்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த வகையில் ராம்குமார் என்கிற அந்த ஆண் ஒரு அடிமுட்டாள். பார்க்கப்போனால் பெண் மீது மூர்க்கம் காட்டும் அத்தனை ஆணுமே முட்டாள் தான். பெண்ணிடம் மூர்க்கத்தை காட்டும் அத்தனை ஆண்களுமே பெண்ணிடம் காட்டும் அந்த முட்டாள்தனத்தால், அந்த முட்டாள்தனத்தை காட்டாத ஒரே காரணத்திற்காய் தன்னை விடவும் மொன்னையான ஏனைய‌ ஆண்களைக்கூட அந்தந்த பெண்களின் மனத்தில் சிம்மாசனம் இட்டு அமர் வைத்துவிடுகிறார்கள் தான்.

ஒரு  பெண் தன் காதலை ஏற்கவில்லை எனும்போது ஒரு புத்திசாலி ஆண், மூர்க்கத்தை காட்டாமல் தன் காரியத்தில் கண்ணாய் கடந்துவிடுவான். ஏனென்றால், அந்த பெண்ணின் மனத்தில் நிற்க விலகிச்செல்வது தான் முதல் வழி.  ராம்குமார் போன்ற முட்டாள்களின் புண்ணியத்தில் அந்த வழி மிக மிக எளிமையாக அடுத்தவர் தவற்றிலேயே கிடைத்தும் விடுகிறது.

இரண்டாவதாக, சைக்கோத்தனம் என்பது ஆண் வர்க்கத்துக்கு மட்டும் என்றெல்லாம் இல்லை. அது பாலின வேறுபாடெல்லாம் பார்ப்பதில்லை. பெண்களிலும் சைக்கோக்கள் இருக்கிறார்கள். சமீபமாக காதல் கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கூலிப்படை வைத்து கொன்ற மனைவி பற்றி செய்தித்தாளில் எழுதியிருந்தார்கள்.  ராம்குமாருக்கு ஒரு குடும்பம் இருந்திருக்கிறது. இரண்டு சகோதரிகள். ஒரு தம்பி என்று செய்தி படித்தேன். ராம்குமார் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை, தங்கைகளின் வாழ்க்கையை, பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரே மகனை நம்பியிருக்கும் பெற்றோர்களை என எதைப்பற்றியும் யோசித்தது போல் தெரியவில்லை. இந்த பின்னணியில் ராம்குமார் வெளிப்படுத்தியதை அக்மார்க் சைக்கோத்தனம் என்று நிச்சயமாக சொல்லலாம். இதை வைத்து ஒட்டுமொத்த ஆண் வர்க்கம் மீதும் குறை சுமத்த வேண்டியதில்லை.  ஏனெனில் நான் சந்தித்த பெரும்பான்மை ஆண்கள் ஒரு மாலை நேர தேனீர் வேளையில், ஒரு பெண்ணிடம் காதலை சொல்லி, அவளால் நிராகரிப்பட்டவர்களாகவே தான் இருக்கிறார்கள். சகோதரிகளுக்கு திருமணம் செய்ய எத்தனை லகரம் தேவை என்ற கணக்கை நெஞ்சிலேயே சுமந்து திரிபவர்களாக இருந்திருக்கிறார்கள். எங்கேனும் ஏதேனும் வேலை பார்த்தால் கல்லூரி கட்டணத்திற்கு சைக்கிள் ரிக்ஷா இழுக்கும் அப்பாவை தொந்திரவு செய்யாமல் இருக்கலாம் என்று எண்ணுபவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

சுவாதி பொறியியல் படித்திருக்கிறார். ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கியிருக்கிறார். பணியிலும் இருந்திருக்கிறார்.  சொந்தக்காலில் நின்று வாழ்க்கையை அணுக துவங்கும் 24 வயதுகளிலேயே மரணம் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவும் ஒரு சைக்கோவால் என்னும் போது கட்டுக்கடங்காமல் கோபம் வருகிறது. இதுபோன்றவர்களை கடுமையாக எப்படியெல்லாம் தண்டிக்கலாம் என்று கற்பனை போகிறது.

இந்த ராம்குமார் சூளைமேட்டிற்கு வேலை தேட வந்தாராம். சுய சம்பாத்தியம் கூட இல்லை. ஆனால் மாதம் ஐந்திலக்கம் ஊதியம் வாங்கும் பெண்ணை காதலிக்க தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று இவர் யோசித்திருப்பது போல் தெரியவில்லை. தகுதிப்படுத்திக்கொண்ட பிறகு காதலை சொல்வோம் என்று காத்திருக்கவில்லை. காதலிக்கும் பெண்ணே ஐந்திலக்கமெனில் ஆறிலக்கம் வரை உயர்ந்த பிறகே காதலை சொல்வது என்று தனக்குள் உறுதி கொள்பவராக அவர் இருந்தது போல தெரியவில்லை. எந்த முறைப்படுதலுக்கு உட்படாதவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.

ஆனால், ஒரு பெண்ணுக்கு தகுதிப்படுத்த்திக்கொள்ள‌ முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் அடையும்  ஆண்களுக்கு திருமணம் செய்யவோ, காதலிக்கவோ பெண்கள் இல்லை என்பதில் தான் சுவாதி கொலைக்கும், ராம்குமார் போன்றவர்களுக்கும் இந்த சமூகத்துக்குமான முரண் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.


Fiction எழுதுவது எத்தனை கடினம்?

$
0
0
Fiction எழுதுவது எத்தனை கடினம்?

இந்த நாள், மூன்று வருடங்கள் முன்பு மேற்கண்ட இந்த செய்தி பத்திரிக்கையில் வந்தது.



விஷயம் இதுதான். 2010ல் ஒரு கதை எழுதினேன். மலேசியா சிங்கப்பூரில் வெளியாகும் 'வல்லினம்'இதழில் இந்த கதையை வெளியிட்டிருந்தார்கள்.


எழுதிய போது Fiction என்று தான் இருந்தது. ஆனால், இந்த தினத்துக்கு பிறகு அது Fiction இல்லை என்றாகிவிட்டது.

வாசித்துப்பாருங்கள். கதை நிஜமான கதை இது.

பெண்களும், பாதுகாப்பும்

$
0
0
பெண்களும், பாதுகாப்பும்


சுமாராக ஒரு வருடம் இருக்கும்.. விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தேன். அப்பா ஒரு வேலையாக பட்டுக்கோட்டை சென்றுவிட்டு திருச்சி வழியாக சென்னை வந்தார்.. அப்பா செல்வதானால், பேருந்தில் தான் செல்வார்... பொதுப்பணித்துறையில் இன்ஸ்பெக்ஷன் , சைட்  வொர்க் என்று பேருந்தில் பயணித்தே பழக்கப்பட்டவர். கோயம்பேடு போய்விட்டு அங்கிருந்து அம்பத்தூர் வர நேரமாகிவிடும்.. தாம்பரம் - அம்பத்தூர் பைபாஸ் வழியாகத்தான் எல்லா பேருந்துகளும் வருகின்றன என்பதால் கார் எடுத்துக்கொண்டு அவரை மதுரவாயல் டோல் கேட்டிலேயே பிக்கப் செய்துகொள்வது வழக்கம்.

ஒரு முறை அப்பா வர நள்ளிரவாகிவிட்டது. மணி பன்னிரண்டு இருக்கும்.. மதுரவாயல் டோல் கேட்டில் அவரை பிக்கப் செய்துகொள்ள என்னுடைய வெர்னாவை எடுத்தேன்.. விட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி ஓரிடத்தில் சாலை சற்று குறுகலாக இருக்கும்.. அதை விட்டால் சுற்றி செல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதிலேயே வண்டியை செலுத்த, எதிரால் ஒரு டாடா சுமோ வந்து நின்றது.. முகத்தில் அடர்த்தியான வெளிச்சத்தை பாய்ச்சினார்கள்.. அதற்குள் நான் முக்கால்வாசி தூரம் ஏறிவிட்டிருந்தேன். நான் பின்னடைவதை விட அவர்கள் பின்னடைந்து சற்று வழி விட்டாலே போதும்.. போய் விடலாம்..

ஹாரன் அடித்தான் டிரைவர்.. நான் கண்ணாடியை இறக்கிவிட்டு கொஞ்சமாய் ஒதுங்குமாறு சைகை செய்தேன்.. டாடா சுமோவிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள்.. கரை வேட்டி சட்டை.. அவர்கள் கிட்டே வரவர சாராய நாற்றம்...

'அடங்கொ....... 'என்றுதான் துவங்கினான். மாதக்கணக்கில் குளித்திருக்கவே மாட்டான் போல. செம நாற்றம். எனக்கு மூச்சையே அடைத்தது. என் காரிலிருந்து வெளியான ஏசி குளிர் வேறு நாற்றத்தை வண்டிக்குள் சுழல துவங்கியிருந்தது. நிதானமே இல்லாமல் இருப்பவனிடம் எப்படி மனிதனுக்கான தர்க்கத்தை எதிர்பார்க்கமுடியும்? நிதானமற்றவனிடம் விலங்குகளுக்கான இயல்பு தானே எஞ்சியிருக்கும்? நாயோடு சேர்ந்து குலைக்க நான் நாய் அல்லவே?

எதுவும் பேசாமல் மெளனமாக வண்டியை ரிவர்ஸ் எடுத்து ஒதுக்கிவிட்டு கார் கண்ணாடி ஏற்றினேன். அந்த டாடாசுமோ வெளிச்சத்தை பாய்ச்சியபடி கடந்து போனது. போகும் வரை எதையோ கத்திக்கொண்டே இருந்தான். சற்று தொலைவில் ஒரு கோயிலில் விழா வைத்திருந்தார்கள். அந்த கோயிலில் பூஜைக்கு பங்கெடுத்த ஜனம் கொஞ்சம் அந்த தெருவிலேயே தான் விழித்திருந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் இருந்ததே ஒழிய குரல் கொடுக்கும் தைரியம் எவரிடமும் இல்லை.

அதற்கு பிறகு வண்டியை மதுரவாயல் டோல் கேட்டுக்கு செலுத்தி அப்பாவை பிக்கப் செய்துகொண்டு வீட்டுக்கு வரும் வரை அதே நினைவாக, யோசனையாக‌ இருந்தது. எழுத வண்டி வண்டியாக முடிகிறது. எப்படியெல்லாமோ கேள்வி எழுப்ப முடிகிறது. வாதம் செய்ய முடிகிறது. இத்தனையும் எதிராளி மனிதனாக இருக்கும் வரை தானே. எதிராளி மிருகமென்றால் எதை பேசமுடியும்? என்ன விவாதிக்க முடியும்? இதை தைரியமின்மை என்று சொல்லலாமா? கோழைத்தனம் என்று சொல்லலாமா? வீரமின்மை என்று சொல்லலாமா?

வீடு வரும் வரை இதே யோசனையாக இருந்தது. வீடு வந்து சேர்ந்து மெயின் கேட் அடைத்துவிட்டு அப்பா சாப்பிட்டபின் கதவடைத்துவிட்டு படுக்கைக்கு சென்ற போது கிட்டத்தட்ட தெளிந்திருந்தேன். அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், இறங்கி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது. முஷ்டிக்கு வேலை கொடுத்து விடுவது. என்னானாலும் பார்த்துக்கொள்வது.
சாவு ஒரு முறைதான். எல்லோருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான். எதற்கு பயம்? துணிந்து விடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அந்த உஷ்ணம், முறுக்கு காலை தூங்கி எழுந்த பின்பும் இருந்தது.

ஆர்வம் தாளாமல் காலை 9 மணிக்கு கார் சாவியை எடுத்தேன். விடிந்துவிட்டதல்லவா? போதை தெளிந்திருக்கும் அவனுக்கு. மனிதனாய் அங்கேயே தான் எங்காவது இருப்பான். காரை ஸ்டார்ட் செய்தேன்.

'கடைக்காப்பா?'அம்மா கேட்டாள். 'ஆமாம்மா..ஒரு ஜேராக்ஸ் எடுக்கணும்'என்றேன். பொய் தான். ஆனால், அந்த உஷ்ணத்துக்கு அப்போதே வேலை கொடுத்துவிட வேண்டும் என்று ஆர்வம். வண்டியை செலுத்தினேன். மீண்டும் அதே குறுகலான சந்து.

சாலை கலாராக கிடந்தது. எங்காவது போயிருக்கக்கூடும். ஒரு அரை மணி பொறுத்து வருவோம் என்று நினைத்து நேரம் கடத்தவென சும்மாவானும், ரெட் ஹில்ஸ் வரை போய் சிக்னலை தொட்டுவிட்டு ஒரு அரை வட்டம் அடித்து, முக்கால் மணி நேரம் கழித்து மீண்டும் அதே வழியில் வந்தேன். இப்போது சிறுவர்கள் இரண்டு பேர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு உஷ்ணம் குறையவில்லை. ஆனால் நிதானம் வந்திருந்தது.

நேரம் என்று ஒன்று இருக்கிறது. முந்தினம் நள்ளிரவு சண்டைக்கான நேரம் வாய்த்தது. அது சண்டைக்கான நேரம். மூர்க்கத்துக்கான நேரம். அது தப்பி விட்டால் அடுத்து நாமே வலிய சண்டைக்கு போனாலும் சண்டை வருவதற்கான சூழல் வாய்ப்பதற்கில்லை என்பது புரிந்தது..

வெறுப்புடன் வீட்டுக்கு வந்து போட்டிகோவில் நிறுத்தினேன். அதன் பிறகு வீட்டு வேலைகளில் அதை மறந்துவிட்டேன். இரண்டு நாள் கழித்து காலை விடிந்தபோது அம்மாவும் அப்பாவும் பரபரப்புடன் வாசலுக்கும் கொல்லைக்கும் நடந்து கொண்டிருந்தார்கள்; பல் விளக்கிவிட்டு தேனீர் டம்ப்ளருடன் என்ன என்று கேட்டேன்.

'அந்த கோடி வீட்டுல இருந்த பையனை கொன்னுட்டாங்களாம்டா.. போலீஸ் வந்திருக்கு'என்றார்கள். அப்போது தான் எட்டிப்பார்த்தேன். போலீஸ் ஜீப் நின்றிருந்தது. அனேகம் பேர் நின்றிருந்தார்கள். சாலையோரம் ஒரு பிரேதம். எங்கள்  வீட்டிலிருந்து சரியாக ஐம்பது அடி தூரம் தான். மண்டையில் பெரிய கல்லை தூக்கி போட்டு கொன்றிருந்தார்கள். மண்டை நசுங்கி மூளை வெளியா வந்திருந்தது. தம்பியை எவனோ அடித்துவிட்டான் என்பதற்காய் நியாயம் கேட்க்கப்போன அண்ணனை க்ளோஸ் செய்துவிட்டிருந்தார்கள்.

தெருவில் சின்ன பசங்க சண்டைக்கே கொலையா? என்று தான் தோன்றியது.

மூர்க்கமான மனிதன் ஒரு முழுமையான முட்டாள். அந்த மூர்க்கத்தில் அணு அளவில் கூட புத்திசாலித்தனமோ, முதிர்ச்சியோ இருப்பதில்லை. அந்த மூர்க்கம் வெளிப்படும் நேரம் கடந்துவிட்டால், நாமாக தேடிப்போனால் கூட அந்த மூர்க்கம் உருவமில்லாமல் போய்விடுகிறது.

சுவாதி கொலைக்கு பிறகு பெண்களுக்கு சமூகத்தில் தைரியமாக இயங்க முடியாத சூழல் உருவாகியிருப்பதாக இணையத்தில், பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்தி போடுகிறார்கள். நான் ஒரு ஆண் தான். கொலை செய்யப்பட்ட அந்த 'அண்ணனும்'ஆண் தான். ஆடி காரை ஏறி செத்துப்போனவரும் ஆண் தான்.

மூர்க்கம் ஆண் பெண் பேதம் பார்ப்பது போல் தெரியவில்லை. இதை சொன்னால் கூட 'ஆணாதிக்கம்'என்று தான் சொல்கிறார்கள்.  பொறுமுகிறார்கள். சண்டைக்கு வருகிறார்கள்.

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி. இரு பாலருக்குமே இன்றைய உலகில் பாதுகாப்பு இல்லை. அதற்கு பல்வேறு காரணங்கள்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஜாதி பாகுபாடு,  டாஸ்மாக், நிறம் சார்ந்த கற்பிதங்கள் மற்றும் அதன் மீது கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள் என்று எல்லாவற்றுக்கும் ஆண் பெண் என்கிற பேதமில்லாமல் மனிதன் இன்னொரு மனிதனால் குறிவைக்கப்படுகிறான். இதுதான் நிதர்சனம். இந்த பிரச்சனைகளையெல்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் அநீதி என்கிற ரீதியில் அணுகினால், அடுத்தடுத்த நிரந்தர தீர்வுகளை நோக்கி செல்லக்கூடிய ஒரு மார்க்கம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

'ஆணாதிக்கம், குறில் நெடில், பெண் சுதந்திரம்'என்றெல்லாம் திசை திருப்புவது தீர்வை நோக்கி செல்லும் காலத்தை நீட்டிக்கும் என்றே நம்புகிறேன்.

இது புரியாமல், பலர், 'ஆணாதிக்கம், பெண் சுதந்திரம்'என்றெல்லாம் குழப்பிக்கொள்வதுடன், விவாதத்தின் மையத்தை சிதறடிப்பதுடன் பிரச்சனையை முற்றிலும் வேறொரு கோணத்தில் திசை திருப்புகிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

மூர்க்கத்தை குறைக்க, அதனால் வரும் மரணம் போன்ற பேரிழப்புகளை தடுக்க‌ அந்த மூர்க்க நேரத்தை கடந்து போக மனப்பயிற்சி தேவைப்படுகிறது. அதை ஆரோக்கியமான வழியில் செய்ய புத்தக வாசிப்பு, பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைத்தல் போன்ற எளிய தீர்வுகளை முன்வைத்தால், பெண்களே "ஆண் நெடில் பெண் குறில், ஐந்திலக்கம் பெண் என்றால் ஆறிலக்கம் ஆண் என்று ஆண் உசத்தி என்று சொல்ல வருகிறீர்களா?"என்று சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.

மூர்க்கம், அதை மட்டுப்படுத்த தீர்வு என்று ஒரு பெரிய பரந்த குடைக்குள் நின்று பேசினால், ஆணாதிக்கம், குறில் நெடில் என்று அதனுள் ஒரு சிறிய குடையை நிறுவி அதனுள் நின்றபடி சத்தம் போடுகிறார்கள். இவர்களின் உணர்வு பசிக்கு  தீனி தருவது போல் இறைவி போல் முதிர்ச்சியற்ற திரைப்படங்களை எடுக்க சில முதிர்ச்சியற்ற இயக்குனர்கள் என்று ஒரு கும்பலே இங்கே இயங்குகிறது. இந்த இயக்குனர் கும்பலுக்காவது சினிமா வியாபாரம் என்கிற இலக்கு இருக்கிறது. இதனால் திசை மாறி பயணிக்கும் போராளிகளுக்கு எந்த இலக்கும் இருப்பதில்லை.

இதனாலெல்லாம் ஒரு சமூகத்திற்கான தீர்வை கொண்டு வந்துவிட முடியாது. இன்றைக்கான தேவை முதிர்ச்சியான அணுகுமுறை மட்டுமே. இதை ஆணித்தரமாக எந்த கோயிலில் வேண்டுமானால் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ய இயலும்.

அந்த முதிர்ச்சியை கைகொள்ளாமல் காலங்காலமாக ஆண் வர்க்கம் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு , எவன் மீதும் நம்பிக்கை இல்லாமல், நல்லவன் யார் கெட்டவன் யார் என்று பிரித்தறிய முடியாமல் எல்லாரையும் கெட்டவன் என்றே நம்பி மேலும் மேலும் வாழ்கிற வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்வதுடன் அடுத்தடுத்த தலைமுறை பெண்களிடமும் ஆண் மீதான எரிச்சலை , துவேஷத்தை , preconceived Image களை கட்டமைத்துத்தான் திரிய வேண்டி இருக்கும்.

எப்படி பயமுறுத்தினாலும், சண்டை போட்டாலும், எதிர்த்து பேசினாலும் என் கருத்து இதுதான். கெட்டவர்கள் ஆண்களிலும் உண்டு . பெண்களிலும் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். சிக்கலாக்கிக்கொள்வதற்கு அல்ல.

சுவாதி - நீடிக்கும் மர்மங்கள்

$
0
0
சுவாதி கொலையை ஆணாதிக்கம் என்று மட்டும் பார்த்தோமேயானால் உண்மையான குற்றவாளி தப்பிவிடக்கூடும்.

வெகு ஜனமும், பத்திரிக்கைகளும், சேனல்களும் ஒரு சென்சேஷனுக்கு வேண்டுமானால் அப்படி சொல்லிக்கொள்ளலாம் ஆனால் ஒரு மனிதன் மீதான வன்முறைக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்கிற ரீதியில் சமூகவியலாளர்களும், எழுத்தாளர்களும் புலனாய்வாளர்களும் யோசித்தால் தான் உண்மையான குற்றவாளியை நெருங்க முடியும்.

1. சுவாதியின் வலது கன்னத்தில் அறிவாள் பாய்ந்திருக்கிறது. அறிவாள் வீசியவன் ஒன்று இடது கை பழக்ககாரனாக இருக்க வேண்டும் அல்லது சுவாதியின் பின்னால் இருந்து வீசியிருக்க வேண்டும். ராம்குமார் இடது கை என்று தகவல்கள் இதுகாறும் இல்லை. பின்னாலில் இருந்து வீசியிருந்தால் ராம்குமார் சட்டையில் சுவாதியின் ரத்தம் தெரித்திருக்க வாய்ப்பில்லை. "சுவாதியின் ரத்தம் தோய்ந்த சட்டை". என்ற ஒன்று எப்படி கிடைத்தது.

2. ராம்குமாரை விட போலீஸ் தான் அதிகம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறது. கொலை நடந்த விதத்தை வைத்து போலீஸ் முதலில் 'தேர்ந்த கூலிப்படை கொலைகாரன் செய்தது போலவே இருக்கிறது"என்றது. ஆனால் போலீஸ் கைது செய்திருக்கும் ராம்குமாரின் பின்னணி ஒரு கிராமத்தானை விட அதிகமாக இல்லை. ராம்குமார் போன்ற ஒரு கிராமத்தானால் எப்படி அத்தனை துல்லியமாக ஒரு தேர்ந்த கொலைகாரன் போல அறிவாளை சுவாதியின் கன்னத்தில் வீச முடிந்தது?

3. ராம்குமாரை கைது செய்தபோது அவன் கழுத்தில் காயத்தால் பத்திரிக்கைகளுடன் உடனடியாக பேச முடியாத சூழல். இது ராம்குமார் தற்கொலை முயற்சியா அல்லது அவன் பேசிவிடக்கூடாது என்கிற யாரோவின் திட்டமா?

4. ராம்குமாரின் குடும்பத்தினரை பத்திரிக்கையாளர்கள் அண்ட விடாமல் காவல்துறை தடுப்பது ஏன்?

5. கொலை நடந்த தினத்துக்கு சில நாட்களுக்கு முன் சுவாதியை ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நபர் குறித்து ஒரு சாட்சியம் இருந்தும், விசாரணை நடத்தப்படாதது ஏன்? யார் அந்த நபர்? ஒரு பெண்ணை பொது இடத்தில் நான்கு பேர் முன்னிலையில் அறையும் அந்த நபர் யார்? என்பது ஏன் மேற்கொண்டு விசாரிக்கப்படவில்லை?

5.1 ரயில் நிலையத்தில் வைத்து அறைந்த நபர் குறித்து சுவாதி ஏன் பெற்றோரிடமோ, தோழிகளிடமோ சொல்லவில்லை? சுவாதி என்கிற 24 வயது திருமணமாகாத பெண்ணை சுற்றி ஏன் இத்தனை ஆண்கள்? இத்தனை வன்முறை? இத்தனை சிக்கல்கள்?

6. சுவாதி கொலையாளி என்று அடையாளப்படுத்தப்பட்ட சிசிடிவி காட்சியில் தோன்றும் உருவங்களுக்குள்ளேயே நிறைய வேறு பாடுகள் இருக்கின்றன. சட்டை நீளம், ஷூ என்று வேறுபாடுகளை பட்டியலிடலாம்.



7. சுவாதியை கொலை செய்ததாக சொல்லப்படும் ராம்குமார் தன்னால் பேசக்கூடிய அளவுக்கு உடல் தேறிய பிறகு சொல்லும் முதல் வரி "உண்மையான கொலையாளி தான் அல்ல"என்பதுதான். இது உண்மையிலேயே அவர் தான் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டாரா என்கிற கேள்வியை எழுப்புகிறது.


இந்த கேள்விகளையெல்லாம் சுவாதி கொலை விவகாரத்தை தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கே எளிதாக தோன்றும் எனும்போது இக்கேள்விகள் முக்கியத்துவம் பெறாதது ஏன்?

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்

$
0
0
எழுதிக்கொண்டிருக்கும் நாவல்



எழுதிக்கொண்டிருக்கும் நாவல் வளர்ந்து வரும் விதம் மிக மிக உவப்பாக இருக்கிறது. இது என் வகையான நாவல். என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. இவ்விதமாகத்தான் எழுத முடிகிறது. இவ்விதமாகத்தான் எனக்கு எழுத வருகிறது. அதை ஒப்புக்கொள்வதில் வருத்தமேதும் இல்லை.

150 பக்கங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது இப்போது 160 தாண்டி விட்டது. முறையாக ஒரு புத்தகமாக்கவென நாவலை format செய்யும் பட்சத்தில், இன்னும் அதிக பக்கங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறேன். எனது முதல் நாவலை விடவும் இது பெரியது தான். எனது முதல் நாவல் ஒரு play school என்றால் இது ஒரு பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி என்று வைத்துக்கொள்ளலாம்.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டே இருப்பேன். திடீரென்று ஏதேனும் தோன்றும். வேலைக்கு நடுவில் நாவலை நோண்டிக்கொண்டிருக்க முடியாது. அலைபேசியில் குறித்து வைத்துக்கொள்வேன். மாலை 4 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிடும். குறித்துவைத்துக்கொண்டதை வார்த்தைகளாக்குவது. அதை சேர்ப்பதற்கு பொருத்தமான இடத்தை நாவலில் தேட வேண்டும்.

Fiction எழுதுவதில் இந்த சிரமம் இருக்கிறது. விவாத பொருளுக்கேற்ப நாமாக உருவாக்கும் கதைக்களம் தானே. திடீரென்று ஒன்றை சேர்ப்பதானால், எந்த இடத்தில் சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்க நாவல் முழுவது மீண்டும் ஒரு முறை கண்களை மேய விட வேண்டும். மீண்டும் மீண்டும் மேய விடுவதால் நாவலுக்குள் இருக்கும் சிறுசிறு எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் கவனத்தில் பதியாது. ஆனால் கவனம், குறித்துவைத்ததை வார்த்தகளாக்குவதிலேயே இருக்கும்.

எழுதுபவரைத்தவிர வேறொருவரிடம் நாவலை வாசிக்க தருவது ஒரு உத்தி. அவர் படிக்கையில் புதியதாக இருக்கும். நம் கவனத்தில் பதியாத தவறுகள் அவருடைய கவனத்தில் பதியலாம். இங்கே அமேரிக்காவில் தமிழ் வாசிக்க தெரிந்த தமிழர்களையே பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. நான்கு வரிகளுக்கு மேல் இருந்தால் 'பாஸ்.... இவ்ளோ பெரிசா இருந்தா எப்படி பாஸ். 'என்பார்கள். அவர்களிடம் 160 பக்கங்கள் கொடுத்தால் என்னாகும்? அறையை காலி செய்துவிட்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. போகும்போது நான்கு பேரிடம் வத்தி வைத்துவிட்டு போய் விடுவார்கள். அப்புறம் ஒரு பயல் அறையை பகிர வரமாட்டான். இதற்கெல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது.

இப்போதுவரை நான் ஒருவனே அதை மீள மீள வாசித்து ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறேன். சமயங்களில் ஆயாசமாக இருக்கிறது. தவறுகளே இல்லாத மாதிரி இருந்து ஏமாற்றுகிறது. நிச்சயம் தவறுகள், எழுத்துப்பிழைகள், ஒற்று பிழைகள் இருக்கலாம். என் கண்ணுக்கு படமாட்டேன் என்கிறது. திரும்ப திரும்ப அதன் முகத்திலேயே விழிப்பதாலா தெரியவில்லை.

யாரிடமாவது தந்து படிக்க சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்பு இதற்கு copyright/patent வாங்க வேண்டும். சென்னையில் நந்தனத்தில் உள்ள நிறுவனத்தை அணுகியிருக்கிறேன். கூகிலில் தேடித்தான் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்தேன். ரூ.8500 ஆகுமாம். நான்கு பிரதிகள் தர வேண்டும் என்கிறார்கள். காப்புரிமை எடுக்க வேறு ஏதேனும் நிறுவனங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் இருந்தால் தெரிவிக்கவும். உதவியாக இருக்கும்.

Copyright க்கு Apply செய்த பின்னரே நண்பர்கள் யாரிடமேனும் நாவலை வாசிக்க தருவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இந்த அணுகுமுறை சரியா தெரியவில்லை. எனக்காய் தோன்றிய ஒன்று தான். வேறு ஏதேனும் உருப்படியான அணுகுமுறை இருந்தால் நண்பர்கள் பகிரலாம்.

நாவல் முழுமையாக தயாராகிவிட்டது என்று  சொல்ல முடியவில்லை. ஏ.ஆர் ரகுமான் சொல்வது போல கடைசி நிமிடம் வரை ஏதேனும் நாவலில் சேர்க்க தோன்றிக்கொண்டே இருக்கிறது. இப்படி தோன்றுவதையெல்லாம் சேர்த்துக்கொண்டே இருந்தால் என்றைக்குமே முழுமை என்ற ஒரு நிலைப்பாடு வராது. ஆதலால் ஒரு கட்டத்துக்கு மேல் தோன்றுவதை அடுத்த நாவலுக்கென்று சேர்த்துக்கொள்ள இருக்கிறேன். ஆதலால் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதென கொள்ளலாம் தான்.

எப்படியாகினும் முதலில் காப்புரிமை அதாவது Copyright. மற்றதெல்லாம் அப்புறம் தான்

காப்புரிமை

$
0
0
காப்புரிமை


எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவலுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்தாகிவிட்டது. கொளுத்துகிற வெய்யிலில் அம்பத்தூரிலிருந்து பைக்கில் நந்தனம் சென்று அலையோ அலையென்று அலைந்து கண்டுபிடித்தே விட்டேன். ரூ7500 பிடுங்கிக்கொண்டார்கள். மூன்று பிரதிகள் கேட்டிருந்தார்கள். கொண்டு போயிருந்தேன். அதற்கே ரூ1500 ஆகிவிட்டது. ஆக மொத்தம் ரூ9000.  

இதற்கு முன் எழுதி வெளியான நாவல் தொகுதிக்கு இத்தனை மெனக்கெட்டு இப்படி காப்புரிமை வாங்கியிருக்கவில்லை. ஆதலால் இப்போது வாங்குவது முதல் அனுபவம் தான். வாய்ப்பு கிடைக்கும்போது இப்படியெல்லாம் செய்து பார்த்துக்கொள்வது தினப்படிக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.

இருப்பினும் நாவலை எந்த பதிப்பாளராவது விருப்பமுடன் வாங்கவில்லையென்றால் பரணில் போட்டுவிட்டு அடுத்த நாவலை எழுத துவங்கிவிட வேண்டும் என்றிருக்கிறேன். புத்தகமாக வெளிவருவதா முக்கியம்? எழுதுவது அல்லவா முக்கியம்? அதில் செலவிடும் நேரம் அல்லவா முக்கியம்? அதனுள் போகும் தர்க்க விவாதங்கள், கேள்விகள், அதற்கான விடைகள் என்று விரியும் தேடல் அல்லவா முக்கியம்? தேவியின் கண்மணியிலோ , ராணி முத்துவிலோ நீட்டினால் 'ஏம்ப்பா, எங்க பத்திரிக்கை சர்க்குலேஷன் பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு? முதல்ல சர்குலேஷன் டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கிட்டு அப்ரோச் பண்ணுப்பா..'என்று நிச்சயமாக சொல்வார்கள். அங்கே போய்விடக்கூடாது என்கிற தெளிவு மட்டும் இருக்கிறது.

எனது முதல் நாவலை அங்கே தான் கொடுத்தேன். உண்மையில் நாவல்கள், புத்தகங்கள், பதிப்பகங்கள், அவற்றின் இயங்குமுறை, கட்டமைப்பு குறித்த எவ்வித புரிதலும் இல்லாமல், நாவல் புனைய மட்டும் முடிந்துவிட்ட தருணத்தில் மிக மிக அமெச்சூர் தனமான முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் சர்குலேஷன் தெரியாமல் அப்ரோச் செய்திருந்தேன். இந்த முறை அதை செய்வதற்கில்லை. அவர்களுக்கு சில பல லட்சங்களை தாண்டக்கூடிய மிகப்பெரிய சர்குலேஷன் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மை.

நாவலின் ஃபான்ட் எல்லாம் குறைத்து ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து 130 பக்கங்கள் வரும் அளவிற்கு கொத்தியிருக்கிறேன். பக்கங்கள் குறைந்தால் புத்தகமாக கொண்டு வரும் பட்சத்தில் விலை குறையும். வாங்குவார்கள். நூறு ரூபாய்க்குள் இருந்தால் , பதிப்பகத்தின் பெயருக்காகவாவது 'போய் தொலைகிறது'என்று வாங்குவார்கள். அந்த ஒரு வாய்ப்பைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதெல்லாம் அந்த நாவலை ஏதாவது ஒரு பதிப்பகம் புத்தகமாக்க முன்வரும் பட்சத்தில் தான். இல்லையென்றால் இந்த கவலையெல்லாம் பட வேண்டியதில்லை. எனது கொள்ளுப்பேரன் என்றாவது பரண் மீதிருந்து கிளம்பும் தூசியில் தும்மிக்கொண்டும், இருமிக்கொண்டும் அதை எடுத்து பிரித்து பார்த்துவிட்டு, 'Mom, What language is this anyway?'என்று கேட்பதில் அதன் ஆயுசு முடிந்துவிடலாம்.

எப்படியாகினும், முன்பே சொன்னது போல, புத்தகம், பதிப்பகம் என்பதெல்லாம் கூட அடுத்தபடி தான். எழுதுவது தான் முக்கியம். அதனூடாக தர்க்க விவாதங்கள், விளக்கங்கள், பார்வைகள், கோண்ங்கள் இவைகள் தான் முக்கியம்.

Theory of Everything - ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஜேன்

$
0
0
அகம் இணைய இதழ் எனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அகம் இணைய இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த கட்டுரை இதோ.

http://agamonline.com/theory-of-everything-by-ram-prasad/


வாசிப்பு

$
0
0
வாசிப்பு


பில் கேட்ஸ் காலத்திற்கு முன் ஒரு பொருளை உருவாக்குவது, பின்  அதை எப்படி சந்தை படுத்துவது, விற்கவைப்பது என்கிற கோணத்தில் தான் போய்க்கொண்டிருந்தார்கள். இவை குறித்து ஆயிரத்து சொச்சம் புத்தகங்கள் எழுதப்பட்டன. அதையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து தள்ளினார்கள். விவாதங்கள் என்கிற பெயரில் அடுத்தவன் தாடையை பெயர்த்தார்கள்.

பிற்பாடு திடீரென பில் கேட்ஸ் வந்தார். அவர் தந்திரமாக, தனது விண்டோஸ் மென்பொருளை இலவசமாக தந்தார். 'அடடே.. பெரிய மனுஷன்யா.. ஃப்ரீயா குடுக்குறானே!!'என்று சொல்லிக்கொண்டே வாங்கிப்போனார்கள். ஆனால் இலவசமாக தந்ததன் மூலமாக ஒரு தலைமுறையையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் கேட்ஸ். எப்படி என்கிறீர்களா? விண்டோசில் பழகியவர்களுக்கு யுனிக்ஸ், மினிக்ஸ் எல்லாம் முகம் சுளிக்கச்செய்யும் வஸ்து ஆகிவிட்டிருந்தன.

பில் கேட்ஸிற்குப் பிறகு மார்கெட்டிங்கிற்கு புதிய பார்வை வந்துவிட்டது.  அப்படியானால் அதுவரை எழுதப்பட்ட ஆயிரத்து சொச்சம் புத்தகங்கள்?!... வேஸ்ட் அல்லது செக்கு மாடாக்கும் களம்.

என்னதாண்டா சொல்ல வர என்கிறீர்களா?

வாசித்தலுக்கு எல்லை இருக்கிறது என்பதே என் வாதம். எல்லாவற்றையும் வாசிப்பதற்கில்லை. நமக்கு துளியும் பொருந்தாத புத்தகங்களை வாசிக்க நேரம் கடத்துவதால் என்னாகிவிட போகிறது? அதை விடவும், நமக்கு தேவையான தகவல்கள் தரும் புத்தகங்களை வாசிக்கும் நேரத்தில் தேவையற்ற புத்தக வாசிப்பு எதற்காகும்?

இணையத்தில் நிறைய நேம் டிராப்பிங் நடக்கிறது. அதாவது புத்தகத்தை படித்துவிட்டார்களாம்... என்னங்கானும் புண்ணியம்? இருத்தலியம், பின்னவீனத்துவம் என்றெல்லாம் பேசிவிட்டு தினப்படி சோற்றுக்கு பெண்டாட்டியின் அஞ்சறை பெட்டியை நோண்டுவதில் இருப்பது ஞானம் அல்ல, முட்டாள்தனம் என்பதை எப்படி புரியவைப்பது? உடனே பெண்ணிய காவலர்கள் எழுந்து "ஏன்!! தினசரி செலவுக்கு ஆணைத்தான் பெண் அண்டி இருக்கவேண்டுமா? என்ன ஒரு ஆணாதிக்கம்? ஆண் நெடில்?"என்றெல்லாம்  High Decibelல் கத்தக்கூடாது.

இந்த செட்டப், சில சோம்பேறி ஆண்களை 'பெருந்தன்மையான ஆணாதிக்கமற்ற முன்னுதாரண ஆண்'என்கிற பட்டத்தை சில பெண்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவதற்குத்தான் பயன்படுகிறது. மற்றபடி உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு புத்திசாலி ஆண் தன் தேவைகளை, தன் சொந்த உழைப்பிலேயே  பூர்த்தி செய்து கொள்ளும்  தூரத்திலேயே நின்றுகொள்வான். மரியாதை என்ற ஒன்று இருக்கிறது.

Purpose of education is to train your brain to think என்பது என் தாழ்மையான கருத்து.

ஒருவரே எல்லா துறைகளையும் நோண்டுவது என்பது சாத்தியமற்றது.  கூட்டாஞ்சோறு போல் தொடர்பற்ற புத்தகங்களால் நேர விரயம் தவிர்க்க முடியாததாகிவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன. நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவு இருக்க வேண்டும். தேவையான தகவல்களை தேடி வாசிக்க வேண்டும்.

சமீபமாக ஒரு டாக் ஷோவில் 140 சொச்சம் டிகிரிக்கள் வாங்கிய மனிதர் பேசிய பேச்சை கேட்க முடிந்தது.

மொன்னையிலும் மொன்னை!!

140 டிகிரி அவரை குழப்ப மட்டுமே செய்திருந்தது. அடிப்படையே இல்லாத எண்ணப்பாடுகளை சிந்தனைகள் கொண்டிருந்தார் அவர். மிதமிஞ்சி இலக்கின்றி வாசிப்பதை ஒரு வியாதியாகவே பார்க்கிறேன் நான். டூ மச் இலக்கியம் தேவையில்லை என்பது என் வாதம். ஏனெனில் அதிகப்படியான தகவல் ஒரு விடயம் குறித்த முன் தீர்மானிக்கப்பட்ட எண்ணப்பாடுகளுக்கு வழி வகுக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.

நான்கு நண்பர்களுக்கு பதில் ஒரு நல்ல புத்தகம் ஓகே தான். நாற்பது இலக்கற்ற புத்தகங்களுக்கு பதில் ஒரு இலக்கு நோக்கிய புத்தகம் பெட்டர். ஆதலால் என்ன தெரியவேண்டும் என்கிற சுய மதிப்பீட்டிற்கு பிறகு புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கலாம்.
Viewing all 1140 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>