எங்கும்,
எதிலும்,
நாம் ஓவியங்களையே கற்றாலும்,
நம் ஓவியத்தைப்
பிறர் ஓவியங்களுடனேயே
நாம் எப்போதும்
ஒப்பிட்டுக்கொள்கிறோம்...
ஒப்புமைக்கான
சாத்தியக்கூறுகளையே
எப்போதும்
கவனத்தில் கொள்கிறோம்...
இப்படித்தான்
நாம் எல்லோரும்
ஓர் ஓவியத்தின்
காரணிகளைப்
புறக்கணிக்கிறோம்...
#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5883)