Quantcast
Channel: ராம்பிரசாத்
Viewing all articles
Browse latest Browse all 1140

அகப்படாமல் ஒரு கொலை - பகுதி 1 - சிறுகதை

$
0
0
அகப்படாமல் ஒரு கொலை - பகுதி 1 - சிறுகதை


நான் ஒரு கட்டுமான கம்பெனியின் வரவு செலவு கணக்கு பார்க்கும் குமாஸ்தா வேலையில் இருக்கிறேன். என் வேலையெல்லாம் வெறுமனே கணக்கு பார்ப்பது. அவ்வளவுதான். என் வயது 35. திருமணமாகவில்லை. காரணம், திருமணத்தில் பெரிதாக ஈர்ப்பு இல்லை. திருமணம் செய்யும் நிர்பந்தமுமில்லை. அப்பா, அம்மா சின்ன வயதிலேயே போய்ச்சேர்ந்துவிட்டார்கள். என்னை வளர்த்து படிக்கவைத்த அனாதை இல்லத்துக்கு கைமாறாக இந்த உத்தியோகத்தில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் அனுப்பிவிடுகிறேன்.

திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் கடந்த 13 வருடங்களாக இருக்கிறேன். தினம் வேலைக்குச் செல்வது. சாப்பாடு, டீ, காபி, மெடிக்ளெய்ம் மருத்துவக் காப்பீடு எல்லாம் கம்பெனி பார்த்துக்கொள்கிறது. மருத்துவ மற்றும் இதர‌செலவுகள் போக கையில் ஒரு 8000 மிஞ்சும். நாளைக்கென்று சேர்த்து வைக்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏதுமில்லாததால் தோன்றியதையெல்லாம் செய்து பார்ப்பதில்தான் வாழ்க்கை சுவாரஸ்யப்படுகிறது எனக்கு.

'அர்த்த ராத்திரியில் மொட்டை மாடி தண்ணீர் டாங்க்கில் யாருக்கும் தெரியாமல் குளியல், தாம்பரம் காம்ப் ரோடில் தேடிப் போகும் வேசி வீடு, பணிமனைக்குச் செல்லும் மின்சார ரயில் வண்டியில் திருட்டுத்தனமாய் பயணம், கூட்டம் கூடும் சூப்பர் மார்க்கெட்டுகளில் சல்லிசாய் திருட்டு, கொடைக்கானல் சூசைட் பாயிண்டில் அமர்ந்து நாவல் படிப்பது, ஊர் பேர் பார்க்காமல் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டு வெட்டியாய் கடைசி ஸ்டாப் வரை சென்று திரும்புவது இப்படி எத்தனையோ.

தொடக்கத்தில் இப்படியாகத் துவங்கிய என் அட்வென்ச்சர்கள் நாளாக ஆக, போரடிக்கத்துவங்கின. புளித்த அட்வென்ச்சர்கள் போதவில்லை. ஒரு நாள், நள்ளிரவு பன்னிரென்டு மணிக்கு தனியே கடற்கரையில் அழுதுகொண்டிருந்த சுடிதார்ப்பெண்ணை நெருங்கினேன். அவள் துப்பட்டாவைப் பிடித்திழுக்க முயன்றதில் அவள் அலறி ஒட அவளை சும்மா துரத்தினேன். அப்போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பிரிதொரு சமயம், யாருமற்ற கிழக்கு கடற்கரைச்சாலையில் ஒரு மாலை வேளையில் அரிவாளுடன் ஒருவனைத் துரத்தினேன். இன்னொரு முறை, தாம்பரம் ரயில் நிலையத்தை ஒட்டி ஒரு ஒதுக்குப்புரத்தில் ஒரு ஆளும் ஒரு அலியும் தப்பு செய்யும் போது கல் எறிந்தேன். அரைகுறை ஆடையுடன் தலை தெறிக்க ஓடினார்கள்.

'மெரினாவில் சும்மா நின்றுகொண்டிருந்தவனின் தலையில் பாட்டிலில் அடித்தது, எதோவொரு குப்பத்தில் ஒரு குடிசைக்குத் தீ வைத்தது, சும்மா நிறுத்தியிருந்த பைக்கின் ப்ரேக் வயரை கட் செய்துவிட்டது என பிற்பாடு இந்த அட்வென்ச்சர்களும் சலித்துவிட்டன. பிறகுதான் தோன்றியது. மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது.

எண்ணிப்பார்க்கையிலேயே கிளர்ச்சியாக இருந்தது. மற்றவை போலில்லாமல் இந்தக் கிளர்ச்சியை மெதுவாக, மிக மெதுவாக அனுபவிக்கத் தோன்றியது. நிறைய புத்தகங்கள் படித்தேன். ஜெஃப்ரீ டாமர் முதலான சைக்கோ கொலைகாரர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ஒரு கொலையை மிக நேர்த்தியாக, மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு அளிக்கக்கூடிய மோட்டிவ், தடயங்கள், சாட்சிகள் இன்றி சுலபமாக, நொடியில் கொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல வேண்டும். முதலில் மோட்டிவ் இருக்க்க்கூடாது. யாரென்றே தெரியாத, முன்பின் பார்த்திராத ஒருவரைக் கொலை செய்தால் தான் இது சாத்தியம். கையுறை ரேகைகளைப் பாதுகாக்கும். கத்தி வாங்குவதும் பயன்படுத்துவதும் சுலபம். யாருமற்ற மதிய வேளை மிகச்சரி. யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது. போதும் ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது.

முடிவு செய்துகொண்டேன். இரை தேடினேன். அது ஒரு வியாழக்கிழமை. காலை மணி 10. பெரும்பாலான கம்பெனிகளில் வேலை நேரம் என்பதால் தி. நகரின் பனகல் பார்க் கச்சிதமான இடம். இடுப்பில் மறைத்துவைத்த கத்தியுடன் பார்க்கில் நுழைந்தேன். கைகளில் கையுறை. என் உடலில் பெண்கள் பயன்படுத்தும் நிவியா வாசனைத் திரவியம். மெல்ல நடந்து பார்க்கின் மத்தியை அடைந்தேன். காத்திருந்தேன். காலை வெயில் முகத்தில் அறைந்தது. யாருமில்லை. எனக்கு பக்கவாட்டில் ஆறடி தொலைவில் இரண்டு குருட்டுப் பிச்சைக்காரர்கள். ஒருத்தன் தூங்கிக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் கையிலிருந்த பண நோட்டுக்களை தடவித்தடவி எண்ணிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் காத்திருந்தால் இரை கிடைக்கலாம் என்று தோன்றியது. அங்கேயே காத்திருந்தேன். ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.

யாரோ ஒருவர், வயது 50க்கு மேலிருக்கலாம். ஆதாரமாய் நடந்து வந்து எனக்கு முன் பத்தடி தள்ளி பார்க் பெஞ்சில் அமர்ந்தார். ஏதோ ரசீதை நோண்டத் துவங்கினார். நல்ல ஆகிருதி. இவர்தான், இவரே தான். இரை மாட்டிவிட்டது. தானாக வந்து மாட்டிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அவரை மெல்ல நெருங்கினேன். அவர் நிமிர்ந்து என்ன என்பது போல பார்த்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இடுப்பிலிருந்த‌கத்தியை உருவி நெஞ்சில் ஒரே சொருகாய் சொருகினேன். கத்தக்கூட திராணியின்றி சரிந்தார் அவர். திரும்பிக் குருட‌ர்க‌ளைப் பார்த்தேன். விழித்திருந்த‌வ‌ன் அப்போதும் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான். கத்தியை இடுப்பில் மறைத்துவிட்டு விடுவிடுவென மேன்ஷன் திரும்பிவிட்டேன்.

உள்ளூர ஒரு குரூர சந்தோஷம் என்னை ஆக்ரமிப்பதை என்னாலேயே உணர முடிந்தது. கொலை!! அது எத்தனை பெரிய விஷயம்!! தினமும் செய்தித்தாள்களில் எத்தனை கொலைகள். அத்தனையும் கண்டுபிடித்துவிட்டதாய், குற்றவாளியைப் பிடித்துவிட்டதாய் எத்தனை பெட்டிச் செய்திகள், அறிவிப்புகள். ஆனால், இவை எதுவும் என் விஷயத்தில் நடவாது. நான் மாட்டிக்கொள்ளப் போவதில்லை. எந்தக் க்ளூவும் விடவில்லை. அடிப்படையான‌மோட்டிவ் கூட இல்லை. யாரும் பார்க்கவில்லை. ஏழரைக் கோடி ஜனத்தில் என்னைக் குறிப்பிட்டு எவராலும் சந்தேகிக்க முடியாது.

ஹா...ஹா... ஹா...

போலீஸ் தலை முடியைப் பிய்த்துக்கொள்ளப் போகிறது. நாளை செய்தித்தாளில் வரும். தொலைக்காட்சியில் வரும். கமிஷனர் மக்களுக்கு அறிக்கை தருவார். எச்சரிப்பார். எல்லாம் என்னால். எல்லாவற்றுக்கும் காரணம் நான். வாரக்கணக்கில் தேடுவார்கள். பத்திரிகைகள், திறமையான கொலைகாரன் என்று எனக்குப் பட்டம் தரும். என் புகழ் பாடும். நான் ஒரு ஹீரோ. நானும் ஒரு ஹீரோ. ஜெஃப்ரி டாமர் போல.

ஹா...ஹா... ஹா...

தொடரும்...

# நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5936)

Viewing all articles
Browse latest Browse all 1140

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>