மாலை நேரத்து மயக்கம் - விமர்சனம்
வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அது சந்தோஷம். அனுபவம் சேகரித்தல். வாழ்ந்து பார்த்தல். சுக துக்கங்கள் பகிர்தல்.
பிரச்சனை எதிர்பார்ப்புகள் தான்.
சுருக்கமாய் சொல்வதானால், ஹ்ரித்திக் ரோஷன் போல் கணவன் வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கலாம். ஹ்ரித்திக் ரோஷன்களின் எதிர்பார்ப்பில் அந்த பெண்களும் பொருந்திவிட வேண்டும் அல்லவா?
ஆனால்,மனோஜாவின் மனதுக்கு பிடித்தமான பாய்ஃப்ரண்ட் தருண் மனோஜாவிடம் எதிர்பார்த்தது வேறாகத்தான் இருக்கிறது. அப்படியானால், பிரச்சனை , எதிர்பாலினத்தை மதிப்பிடுதல் என்பதில் தான் வந்து நிற்கிறது.
இக்காலத்தில், ஆண் பெண் சோஷியலாக பழகும் நட்பு என்கிற அடையாளத்தை தவறாக பயன்படுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆண்கள் தான் என்றில்லை. பெண்களுள் சிலரும் இதை தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்..
எனக்கு தெரிந்து ஒரு பெண், திருமணமான முதல் வாரத்திலேயே பழைய ஆண் நண்பருக்கு கல்மிஷ மின்னஞ்சல் தட்டி கட்டிய கணவரிடம் கையும் களவுமாக மாட்டினார். கேட்டதற்கு, 'அந்த ஆண் தான் அனுப்பினாராம் இவர் இப்படி செய்யாதே என்று தான் பதில் அனுப்பினாராம்'. எடுத்துப் பார்த்தால், ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களுக்கிடையே இது நடந்திருக்கிறது. 'இப்படி செய்யாதே'என்று சொல்ல ஒரு வருடம் ஆகுமா? அப்படி ஒரு நட்பு கண்டிப்பாக தேவையா? அந்த நட்பின் நோக்கம் என்ன? வாழ்க்கையின் இலக்கிற்கு இந்த நட்பு எவ்வாறு உதவுகிறது? என்கிற எந்த சிந்தனையும் இல்லை.
ஆக, ஆண் பெண் என்று இருபாலருள் சிலர் தெரிந்தே இது போன்ற தவறுகளை மறைமுகமாக செய்துகொண்டுதான் முதுகில் குத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். குத்துபட்டவனின் தைரியத்துக்கு ஏற்ப தண்டனையாகவோ, சகிப்புத்தன்மையாகவோ மாறிவிடும். ஆக சோஷியலிசம் என்கிற பெயரில் ஆண், பெண் இருவரில் எல்லோரையுமே கண்ணை கட்டிக்கொண்டு நம்புவதற்கில்லை. சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆரோக்கியமான அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, ஓரளவுக்கேனும் மதிப்பீடுகளில் கறாராக இருக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் மனோஜா போல் ஓரளவுக்கு நியாயமான சிந்தனைகளை கொண்ட பெண்ணை தருண் நிராகரிப்பதற்கு தருணின் பெண் உடல் மீதான வேட்கைதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உண்மையான காரணம், மனோஜாவின் எதிர்பார்ப்புகளே.
எப்படி என்றால், "அவ கூட செக்ஸ் வச்சிக்கணும்னா அவளுக்கு மனசார புடிக்கணும்.. அதுல அவ தன்னை பரிபூரணமா உணரனும்.. அப்படி யார்கிட்ட அவ உணர்கிறாளோ அவன்கிட்ட தான் தன்னை தரணும்ன்னு அவ ஆணித்தரமா இருக்கா"என்று மனோஜாவின் நண்பன் கிருஷ்ணாவிடம் சொல்கிறான்.
இன்றைய நவீன உலகம் என்பதே கட்டமைப்பை முட்டாக மறுப்பதுதான்.. டான்ஸ் ஆடுறவனுக்கு டான்ஸ் ஆடுற பொண்ணை பாத்தா சண்டைதான் வரும் என்று நினைக்கக்கூடிய இச்சமூகத்தில், ஒரே விதமான எண்ணப்பாடுகள் கொண்டவர்கள் ஒன்றாக சேர்வதில்லை.. ஆணுக்கும் பெண்ணுக்கு எந்த விஷயத்திலும் புரிதலில் மிகப்பல வேற்றுமைகள் இருக்கின்றன.வேற்றுமைகளைத்தாண்டி உருவாவதுதான் காதல் என்பது வெகுஜன நிலைப்பாடாக இருக்கிறது.
அப்படி இருக்கையில், ஆணை பெண்ணோ , பெண்ணை ஆணோ பரிபூரணமாக உணர வைப்பது எல்லையற்ற, நிபந்தனைகளற்ற, எதிர்பார்ப்புகளற்ற, சரணாகதியடைவதையொத்த அன்பு வைப்பதால் மட்டுமே சாத்தியமாகும். இப்படி சொல்வதன் மூலம் பெண், தனக்கான சரணாகதியடைவதையொத்த அன்பை தரச்சொல்லி நிர்பந்தப்படுத்த முனைகிறாள். "அது ஒன்று இருந்தால் போதும், எப்பேற்பட்ட மொக்கையன் கூடவும் என்னால் வாழ முடியும்"என்பதே அவளது வாதம். இதுதான் "நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.. ஒரு பெண் உன்னை தேர்வு செய்ய வேண்டும்"என்கிற பெண்களின் வாதத்திற்கு அடிப்படை. பார்க்கப்போனால் பெண்கள் எல்லோருமே இப்படி ஒரு எதிர்பார்ப்பை கைகொண்டவர்களாகவே இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
ஏனென்றால், ஆணை பொறுத்த வரை, பெண்களின் இந்த வாதம், பாதுகாப்பற்ற , பத்திரமற்ற, பற்றுகோல் இல்லாத ஒரு வாதம். ஆணும் மனிதன் தானே. அதே சரணாகதி அன்பை எதிர்பார்ப்பவன் தான். அதிலும் தருண் போன்ற, பெண்மைத்தன்மை சரிபாதி கொண்ட அழகான சென்ஸிபிள் ஆண், பெண்ணுக்கு சமமாக சரணாகதி அன்பை எதிர்பார்ப்பவனாகத்தான் இருக்கிறான்.
மேலும் சரணாகதி என்பது ஒருவிதமான மயக்க நிலை வெளிப்பாடு. மயக்கம் என்பது தற்காலிகமானது. உதாரணத்திற்கு, காதலித்த பெண் காதலனை நம்பி ஓடிவந்துவிடுகிறார் என்று வைத்துக்கொண்டால், பத்திரமற்ற தன்மை உருவாகிவிடுகிறது. காதலன் பிடிக்காமல் அந்த பெண் வேறொரு நபருடன் ஓடிவிட்டால், காதலர் யாரிடமும் போய் கேட்க முடியாது. ஏனென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்த திருமணம் இல்லை அல்லவா? காதலன் திருமணத்திற்கு பிறகு பொறுக்கி என்று தெரியவந்தால், ஓடிவந்த காதலியால் ஒன்றும் செய்ய இயலாது. பெற்றவர்களை விட்டுவிட்டு வந்தாயிற்று அல்லவா? காதலித்த கணவர் இறந்துவிட்டால், சரணாகதி நிலையில், கூடவே செத்துவிட தோன்றும் தான். பிள்ளைகளை யார் பார்ப்பது? காதலித்த கணவன் குடித்துவிட்டு அடித்தால், சரணாகதி மனைவி, காதலின் பெயரால் பொறுத்துக்கொள்ளலாம் தான். ஆனால், நான்கு சுவற்றுக்குள் ஆணிடம் அடிவாங்கும் பெண்ணை பார்த்து வளரும் பிள்ளை எப்படி வளரும் என்று யோசனை வேண்டாமா? இந்த லாஜிக்குகளையெல்லாம் யோசிக்கவில்லை என்றால் சரணாகதி வெளிப்பாடு வரும் தான். சரணாகதி வெளிப்பாட்டிற்கு தர்க்கரீதியிலான இருத்தல் இதுதான். லாஜிக் புரியக்கூடாது. அது தற்காலிகம் தான்.
இந்த மயக்கத்தை மனோஜா தருணிடம் எதிர்பார்ப்பதாலும், கிருஷ்ணா மனோஜாவுக்கு தந்து மனோஜாவை வெல்வதாலும் தான் படத்துக்கு 'மாலை நேரத்து மயக்கம்'என்று டைட்டில் வைத்தார்களோ என்னவோ.
ஆண்கள் பெரும்பாலும் சமூகம் சார்ந்து யோசிப்பவர்களாக இருப்பினும் இளம் வயதில் முதிர்ச்சி இன்மை, அவர்களை மயக்க நிலையில் பிதற்றுபவர்களாக வைக்கிறது. அதனால், ஈசல் போல பெண்களை அடைகிறவர்களாக நாம் பார்க்கிறோம். ஆனால் அது மயக்க நிலையில் தான் நிகழ்கிறது என்கிற ஒன்றை குறித்துக்கொள்ள வேண்டும். மயக்க நிலை தற்காலிகம் தான் என்பதால் எது என்றாவது தெளிகையில், முதிர்ச்சி வருகையில் ஆண், தன் உண்மையான தேடலை கண்டடைகிறான். அந்த தேடலை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்கிறான்.
பிரச்சனை, மயக்க நிலையில், வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுப்பதே.
மனோஜாவும் தருணும் சம அளவிலான அறிவுத்திறன் உடையவர்கள் என்னும்போது, சரணாகதி அன்பை இருவருமே எதிர்பார்த்து, அது கிடைக்காத போது விட்டு விலகுகிறார்கள்.
ஆனால், கிருஷ்ணாவுக்கு பெண் வாடையே துவக்கித்திலிருந்து இல்லை என்பது பெண் குறித்த குறை அறிவாகப்போய், மனோஜா போல் ஒரு பெண் கிடைத்ததும் சரணாகதி என்கிற மயக்க நிலைக்கு அமிழ்த்துகிறது. அப்போது அவன் மனோஜாவின் எதிர்பார்ப்புகளுக்கு பொறுந்திவிடுகிறான். பார்க்கப்போனால், அதுதான் நிஜத்திலும் நடக்கிறது.
தெளிவான ஆண்கள் கருமமே கதியென்று திரிய, சரணாகதி அன்பை வெளிப்படுத்துபவர்கள் தான் பெசன்ட் நகர் , ஈ.சி.ஆர் என்று காதலிகளோடு தூள் பரத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பலருக்கு காதலில் வெற்றியடைவது கூட இலக்கில்லை. சரணாகதி அன்பை சுவைக்க வேண்டும். அந்த நிமிடத்தை வாழ்ந்துவிடவேண்டும். சூப்பர் ஃபிகருக்கு சப்பை காதலன் அமைவதெல்லாம் இந்த லாஜிக் தான். சரணாகதி அன்பு. அதை ஒரு பெண் மேல் வைக்கத் தெரிந்தால், காதல் கியாரண்டி.
வாழ்க்கை கியாரண்டியா இல்லையா என்பதெல்லாம் அவரவர்களின் சொந்த ரிஸ்க் தான். இந்த ரிஸ்கில் தான் சப்பை காதலனை கழற்றிவிட்டுவிட்டு சூப்பர் ஃபிகர் அமேரிக்காவில் செட்டில் ஆவதெல்லாம் நடக்கிறது. காதலை, மயக்க நிலையில் மேற்கொண்டதால் இந்த செட்டில்மென்டை தவறென்று பார்க்க முடியாது. ஏனெனில் , மயக்க நிலை தெளிந்த ஆண்கள் கர்ப்பமான காதலியை கழற்றிவிட்டு தலைமறைவாகிவிடுவது இல்லையா? அதுபோலத்தான்.
சிலருக்கு இயல்பிலேயே முதிர்ச்சி இருக்கும். அவர்களால் சரணாகதி அன்பை வெளிப்படுத்த முடியாது. பெண்களால் ஏன் ஆண்களுக்கு தாஜ்மஹால் கட்ட முடிந்ததில்லை என்பதற்கு இதுதான் பதில் என்று நான் நினைக்கிறேன். முதிர்ச்சியானவர்கள் ஆண்களிலும் உண்டு. ஆனால் அவர்களால் காதல் செய்ய முடியாது என்றெல்லாம் இல்லை. எல்லாம் புரிந்த பிறகும் காதல் வரும். அவர்களுக்கான மதிப்பீடுகளுக்கு உட்பட்டு, அறிவுக்கு உட்பட்டு காதல் நிச்சயம் வரும். 'மெளன ராகம்' மோகன், 'காதல்'படத்தில் சந்தியாவின் கணவர் கேரக்டர், ஹம் தில் தே சுகே சனம் அஜய் தேவ்கன் கேரக்டர், போன்றவைகள் அப்படியான காதல்களை பேசுவன தாம்.
சரணாகதி அன்பு நிலைப்புத்தன்மை அற்றது. மயக்க நிலை நீடிக்கும் கால கட்டம் வரைதான் அந்த மயக்க நிலைக்குள் எடுக்கப்பட்ட முடிவுகளும் நீளும். சிலருக்கு சில நாட்களே நீடிக்கும். சிலருக்கு காலம் முழுவதும் மயக்க நிலை தொடரும். முதிர்ச்சியே வராது.
நீங்கள் செய்தித்தாள்களில் பார்க்கலாம். 'கர்ப்பமாக்கிவிட்டு, காதலர் தலைமறைவு', 'காதல் கணவரின் கள்ளக்காதலி கொலை'என்றெல்லாம். எல்லாம் மயக்க நிலையின் பக்க விளைவுகள் தாம்.
எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இந்த விஷயங்களை இன்னும் தெளிவாக பேசியிருக்கிறேன். நாவலின் டைட்டில் 'உங்கள் எண் என்ன?'.. இந்த டைட்டில் ஓகே வா? நண்பர்கள் ஆலோசனை சொல்லலாம்.. சுடச்சுட தயாராகிக்கொண்டிருக்கிறது இந்த நாவல். கடந்த வருடம் இரண்டு குறு நாவல்கள் எழுதினேன். இரண்டுமே திருப்தியாக இல்லை. ஆனால் இந்த நாவல் 150 பக்கங்கள் தாண்டி திருப்திகரமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. புத்தகமாக வெளிக்கொணர ஒரு பதிப்பகம் பிடிக்கவேண்டும்.